Sunday, March 13, 2022

கொத்தமல்லிப் பொடி

 கொத்தமல்லிப் பொடி 

🍱 தேவையானவை: 

பச்சை கொத்தமல்லி – ஒரு கட்டு
உளுத்தம்பருப்பு – 100 கிராம்
காய்ந்த மிளகாய் – 4
புளி – பெரிய நெல்லிக் காய் அளவு
உப்பு – தேவையான அளவு

🍴 செய்முறை: 

வெறும் வாணலியில் எண்ணெய் விடாமல் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை  வறுத்துக் கொள்ளவும். 

புளியை தனியாக வறுக்கவும் (நன்கு உலர்ந்துவிடும் வரை). கொத்தமல்லியை ஆய்ந்து, கழுவி, ஒரு துணியில் பரவலாகப் போட்டு உலரவிடவும்.

 வறுத்த உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், புளியை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி, உப்பு சேர்த்து, கொத்தமல்லியை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு பொடிக்கவும்.

🍱 குறிப்பு: 

இது தயிர் சாதத்துக்கு சிறந்த காம்பினேஷன்.

கொத்தமல்லி இல்லாத நாட்களில், அதற்குப் பதிலாக இந்தப் பொடியை குழம்பில் சிறிதளவு சேர்க்கலாம்.



No comments:

Post a Comment