இருமல் குணமாகும்
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அவற்றில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும், தண்ணீர் நன்கு கொதித்ததும், பொடிதாக நறுக்கிய வெற்றிலை, பொடிதாக நறுக்கிய இஞ்சி மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்றாக 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பின் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைத்து வடிகட்டி அருந்த வேண்டும்.
சிறிதளவு கொள்ளு எடுத்து வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். அதனுடன் மிளகு, புண்டு மற்றும் சுக்கு மூன்றையும் பொடி செய்து கொள்ளவும். சிறிது உப்பு சோ்த்து நன்கு கொதிக்க வைக்கவும். இரண்டு நாள் தொடர்ந்து இம்மருந்தை சற்று சுடாக குடித்து வந்தால் வறட்டு இருமல் என்ன எந்த இருமலும் வந்த வழியே ஓடிவிடும்
இஞ்சி, வறண்ட இருமலை எளிதில் நீக்கக்கூடியது. ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்து, அதில் சிறிது உப்பைத் தூவவும். உப்பு கலந்த இஞ்சியை சில நிமிடங்களுக்கு நன்கு மெல்லவும். இஞ்சியோடு துளசி இலையையும் சேர்த்துக்கொண்டால், சளி, இருமலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
No comments:
Post a Comment