Wednesday, August 12, 2020

மாஞ்சி

85. மாஞ்சி (சிசீ6) #ganeshamarkalam

இந்த ஆர்கியாலஜி டிபார்ட்மென்டில் ஒரு சௌக்கர்யம். யாரும் பாக்க முடியாத இடமெல்லாம் போய் பாத்துட்டு வரலாம். என் தொழில் ரீதியில் பல இடங்களுக்கு ஆய்வுக்காகப் போயிருக்கேன். ஆனால் மறக்க முடியாத ரெண்டு இடங்களை சொல்லியே ஆணம்.

ஒண்ணு தஞ்சாவூர் பெரிய கோவிலின் கோபுரத்துக்குள் ஏறி 3ஆம் நிலைவரை அதனுள் இருக்கும் பிரஹாரங்களை, - அதைப்பத்தி தெரிந்தவர்கள் டிப்பார்ட்மென்ட் மட்டுமே – அதிலுள்ள ஓவியங்களை ஆய்வு செய்யும் பணியில் போனது. அத்தனை அழகா சிவபுராணமும் சோழ சாம்ராஜியத்தின் அருமை பெருமைகளை அத்தனை உசரத்தில் ஓவியங்களா, இன்னும் தெளிவா வண்ணமயமா இருப்பது ஆச்சர்யம். மூலவர் விக்ரஹம் எத்தனை உயரமோ அதுக்கும் மேலே சுத்திண்டு வரலாம். ஆனா ஒரு தளம் வந்ததும் சிவலிங்கத்துக்கு நேர் மேல் கால் வச்சு நிப்பம்னு போக வழியில்லை. தஞ்சை பெரிய கோவிலுள் அமிழ்ந்து கிடக்கும் அற்புதங்களில் ஒன்று.

ரெண்டாவது பாப்ரி மஸ்ஜித் இடிபடாம இருந்தப்போவே எங்களை அனுப்பிச்சு அதனடியில் ஹிந்துக் கோவில் ஏதாவது இருந்ததற்கு சாட்சியங்கள் இருக்கான்னு கண்டறிய அனுப்பப்பட்ட குழுவில் நானும் சப்டீம் லீடராப் போனது. ரெம்ப கான்ட்ரோவெர்ஷியல் அசைன்மென்ட். கண்டு பிடிச்சத டிபார்ட்மென்ட்டுக்கு மட்டுமே சொல்லணும், அதை வச்சிண்டு என்ன செய்யன்னு பொலிடிக்கல் லீடர்ஷிப் பாத்துக்கும்னு. ஆரம்பத்தில் நாங்க பாத்துச் சொன்னதை அப்படியே அமுக்கிட்டா. அங்கே பாத்ததை என்னைக்கும் மறக்க மாட்டேன்

பேர் சுந்தரமூர்த்தி. “சுந்தர்”னு கொலீக்ஸ் கூப்பிடுவா. இல்லை “மதராஸி”. தில்லீலே செட்டில் ஆகி 23 வருஷமாச்சு. நன்னா ஹிந்தி பெசுவேன். 50% பஞ்சாபியும். மதராஸீங்கர டேக் ஒட்டிண்டு விடலை. 38 வருஷ செர்வீஸ். ஆரம்பத்தில் கர்நாடகா. கொஞ்சநா தமிழ்நாட்டில். ஒவ்வொரு அசைன்மென்டையும் ரஸிச்சுப் பண்ணினேன். 3 வருஷத்தில் ரிடயர் ஆணம். அதுக்குள்ளே யுனெஸ்கோலேந்து ஃபீலர்ஸ் வரது. கான்ட்ரேக்ட் போட்டுக்கரியா, 10 வருஷத்துக்கு ஈஜிப்ட் போணம், வியட்னாமில் அங்கோர்வாட். ஆசை காட்டரா. 2 மாசம் டயம். இந்தியாவுலேயே நோண்டன்னு ஆரம்பிச்சா இன்னும் 1000வருஷத்துக்கு ஜோலியிருக்கு. 60 ஆச்சுன்னா என்னை சேர்த்துக்க மாட்டா. யோசிக்கணும். டாலரில் சம்பளம்.

“ஹாலண்ட்லேந்து ஒரு ஆர்கியாலகிஸ்ட் இந்தியாவுக்கு சுற்றுப் பயணமா வந்திருக்கா, அவரை ஆக்ரா, மதுரா சுத்திக் காமிக்கணும், முடியுமா?” டயரக்டர் கேட்டார். 2 நா வெளிநாட்டுப் பொண்ணோட சுத்தப் போரேன்னு ஆத்தில் பெர்மிஷன் வாங்கிண்டு “சரீ”ன்னேன். டிபார்ட்மென்ட் தந்த இன்னோவாவில் காலங்கார்த்தாலே டாஜ் ஹோட்டலுக்குப் போய் கேதிய பிக் செஞ்சுண்டு பயணிக்க ஆரம்பிச்சாச்சு. 4 மணி நேரத்தில் போயிடலாம். காளிந்தி குஞ்ச் பாலத்தில் யமுனையை கடந்து யமுனா ஆக்ரா எக்ஸ்ப்ரெஸ்வேயில் கச்சிதமான ஒரு ஸ்பீடில் போரம். இது நேர ஆக்ரா. ரிடெர்னில் மதுரா பாத்துக்கலாம். கேதிகிட்டே சொன்னப்போ “ஐ ஏம் அட் யுவர் டிஸ்போசல்”.

“இந்தியப் பாரம்பர்யம் சிலதுதான் இந்த ட்ரிப்பில் பாக்கலாம், முக்கியமா மொகல் சாம்ராஜ்ஜியத்தின் சில துகள்களை, உண்மையான இந்தியா இது இல்லை” விளக்கம் தரேன். கேட்டுக்கரா. அவளுக்கு தாஜ் மஹால் பாத்தே ஆணம். சொச்சமெல்லாம் அப்பரத்துக்கு அப்பரமாம். கிருஷ்ணர் பொறந்த இடம், கோபிகைகள் வாழ்ந்த இடம் காட்டினா ருஸிக்காதோன்னு பட்டது. சமாதிய காமிச்சுட்டு நல்ல சாப்பாடா வாங்கித் தந்துடலாம். ஆக்ராவில் தங்கிக்க “தாஜ்வ்யூ ஆக்ரா”வில் புக் செஞ்சாச்சு. 1030க்கு ஹோட்டலில். 2 மணிநேரம் சிரம பரிகாரம்னுட்டு என் ரூமில் போய் காலை நீட்டிண்டு படுத்துண்டாச்சு. அவள் ரூமில் கேதி ஜன்னல்லேந்து தெரியும் தாஜை வாயப் பொளந்துண்டு பாக்கட்டும்.

தெரிஞ்சவருக்கு போன் போட்டு “ஸ்பெஷல் விருந்தாளி. 2 மணிக்கு வருவம். கேட்டில் மீட் செஞ்சு அழைச்சிண்டு போணம்”. “ஹோஜாயேகா சார். ஃபிக்கர் மத் கரோ.” ஆகஸ்டானதால் செம மழை பெஞ்சுட்டு வெதர் நன்னா இருக்கு. இன்னைக்கு தாஜ் பாத்துட்டு, ஆக்ரா ஃபோர்ட். நாளைக்கி ஃபதேபூர் சிக்ரி. மதுரா. திரும்ப ஆக்ரா. பௌர்ணமீயானதால் சாயங்காலம் தாஜ் பை நைட். அடுத்தநா கார்த்தாலே தில்லி. ராத்திரி ஃப்ளைட்டாம். கேதிய டிஸ்போஸ் செஞ்சுடுலாம்.

டாஜ் மஹால் எப்பப் பாத்தாலும், எத்தனை தடவை பாத்தாலும் அழகு. நிலா வெளிச்சத்தில்தானு இல்லை. முதல் வாயிலில் நுழஞ்சதும் எதிரே பரந்து விரிந்திருக்கும் மொகல் கார்டென் பின்னாட்டி தூரக்க பிரம்மாண்டமா பளிங்கு கொளாசஸ் கண்ணைப் பறிச்சு உணர்வுகளில் செய்யும் தாக்கம் அனுபவிச்சாத்தான் தெரியும். வெளிப்படையா தெரிவதும் தெரியாத ரகசியங்களும் எழும்பிவிட்ட வதந்திகளும் ஆச்சர்யமான செய்திகளைத் தரும். ஆர்கியாலஜி டிப்பார்ட்மென்டுக்கே நிறைய தெரியாது. என்னெல்லாம் இருக்குன்னு பாக்கணும்னா சில இடங்களில் தோண்டணும், இடிக்கணும், அதெல்லாம் செஞ்சா கட்டடம் பாதிக்கப்படும், ப்ரிசெர்வ் செய்வது மட்டுமே எங்கள் வேலைன்னு ரகஸியங்களை கோஜ் பண்ண அனுமதிக்கலை.

கேதிகிட்டே பேசிண்டே பளிங்கு படிகளில் ஏத்தி அழைச்சிண்டு போரேன். தில்லி சஃப்தர்ஜெங்க் டூம்பில் சமாதிக்கு கீழே புதைக்கப்பட்ட இடத்துக்கே இறங்கிப் போலாம், வௌவால் நாத்தம் சகிக்காது. இங்கேயும் கீழே போக ஸ்பெஷல் கெஸ்ட்டுன்னதுனால் விட்டா. இவள் பார்வை கீழே போரப்போல்லாம் “மேலே பாருங்கள். அபூர்வமான கற்கள் பதிச்சிருக்கா, நூதன வேலைப்பாடு” கவனத்தை ஈர்க்க முயற்சி பண்ரேன். ஒரு வழியா தாஜை காமிச்சுத் தந்தாச்சு. சகட்டு மேனிக்கு செல்ஃபீயும் போட்டோக்களும் எடுத்து வச்சிண்டா. சாயங்காலத்துக்குள் ஆம்படையானுக்கு அனுப்பிச்சுடுவாளாம். தாஜ் பத்தி ஒர் ஃபேமஸ் பலான வாக்கியம் உண்டு, தில்லீலே பிரஸித்தம். அதை கேதிக்குச் சொல்லித்தந்து ஆத்துக்காரருக்கு சொல்லுன்னு சொல்லத் தோணித்து. சொல்லலை.

அப்பத்தான் யமுனையில் ஒரு போட் போயிண்டிருப்பதைப் பாத்தம், “அதில் போய் தாஜை படம் எடுக்கணும்!” சொல்ல, கூட வந்தவர் “ஏற்பாடு செய்யரேன்”. சுத்தி வந்து தௌஜி மந்திர் தஸரா காட் வந்தம். அங்கே எங்களுக்காக ஒரு மாஞ்சீ “வா சாப், ஏக் சக்கர் காட்டேங்கே”.

நதீலேந்து தாஜ் இன்னும் அற்புதம். படகோட்டி ஹிந்தி ஆங்கிலம் ரெண்டும். கேத்தி கேக்கரத்துக்கெல்லாம் அவனே பதில். நான் ஃப்ரீ! மணி 330. கிட்டத்தட்ட தாஜுக்கு பின்பக்க சுவர் கிட்டக்க வந்தாச்சு. மழைக் காலமாச்சே! சுவத்தை தழுவிண்டு யமுனை., “அதோ பாருங்க சதுரமா ஒரு கதவு. நதி மட்டத்துலேந்து 3 அடி உசரக்க. அதுக்குள் எட்டிப் பாக்கணுமா? காட்டரேன்”. போட்டை ஆடாம நிறுத்த, தோள் உசரத்துக்கு ஜன்னல் மாதிரி, கட்டை வச்சு அடிச்சு மூடி. “இது எதுக்கு?” “சீக்ரெட் வழி, எழுந்து நின்னு உள்ளே டார்ச் அடிச்சுப் பாருங்க”. அவனே டார்ச் தரான். கேதி பாத்துட்டு, ஒண்ணுமில்லைன்னு உக்காந்தா. நான் பாத்தது ஆச்சர்யத்திலும் பரமாச்சர்யம்!

டார்ச் வெளிச்சத்தில், கட்டைகளுக்கு இடையே இருந்த விரிசலில் அயோத்தியில் பாத்தது போல் கட்டுமானம். நம்மூர் கோவில் தூண்கள்போல் அமைப்பு. கிட்டத்தட்ட வரிசையா 20 தூண்கள் தெற்கேயும் வடக்கேயுமா தாஜ்மஹால சுத்தி தாங்கிண்டிருக்காப்போல். கண்ண கசக்கி விட்டுக்கரேன். மாஞ்சீ சொல்ரான், “மின்னே இருந்த கிருஷ்ணர் கோவில். அதுக்கு மேலேதான் ஷாஜஹான் கட்டியிருக்கான். நிறைய பேருக்குத் தெரியாது. உங்களுக்கு தெரியட்டும்னு. எனக்கென்னமோ உங்களுக்கு காமிக்கணும்னு தோணிச்சு”.

தில்லிக்குப் போனதும் ஆக்ரா போன் பண்ணி ஆதிகார பூர்வமா கேக்கணும். ஆனா மாஞ்சி “மதுராவில் கிருஷ்ண ஜன்மஸ்த்தான் பாத்திருக்கீங்களா?” “நாளைக்கு போரம்”. “ஏன் இப்பவே போகப் பிடாது? போட்லேயே அழைச்சிண்டு போரேன். மோட்டர் இருக்கு மாட்டிக்கலாம். 90 நிமிஷத்தில் மதுரா, அங்கேந்து ஆட்டோவில் 15 நிமிஷம், நானே உங்களுக்கு கிருஷ்ணர் பிறந்த இடத்தையும் காமிக்கரேன். கொடுப்பதை கொடுங்க”. கேதிக்கு இந்த மாதிரி அட்வென்ச்சர் பிடிக்குமோ! போலாம்னு குதிக்க வேற வழியில்லாம “சரீ”ன்னுட்டேன். ரிஸ்க், வெளிநாட்டுக் காரிய யமுனையில் கிட்டத்தட்ட 90 கிமீ இழுத்தடிச்சு. பகவான் கிருஷ்ணர்தான் காப்பாத்தணும்.

சொன்னாப் போல் வந்துட்டம். மாஞ்சி சாமர்த்தியசாலி. நதியில் ஆழம் மிகுந்த இடத்தை தெரிஞ்சிண்டு படகின் வேகம் குறையாம பாத்துண்டு 1மணி 20நிமிடங்களில் பங்காலி காட்டில் வந்து ஸ்டைலா நிறுத்தினான். நேரம் போனதே தெரியலை. யமுனையை சின்ன வயசுலெந்தே இந்தண்டையும் அந்தண்டையும் நீந்தி விளையாடினவன் போல் அசாத்திய துணிச்சல். சிரிச்ச முகம். முண்டாசு அவன் முகத்தின் கம்பீரத்தை மறைக்கலை. பல்கி என்ஹேன்ஸ் பண்ணிக் காட்டித்து. மேலே சுத்திண்ட போர்வைக்குள் நல்ல வலுவான உடம்பு. அகண்ட நெத்தி. பேசரப்போ கேதியையே பாத்துப் பெசினது மட்டும் சுத்தமா பிடிக்கலை. அவனே கூட வந்து ஆட்டோ பெசி தானும் ஏறின்டான்.

தரேஸி ரோட்டில் நேர வந்து இடக்கைப் பக்கம் திரும்பினா ஜன்மஸ்தான். தூரக்கலேந்தே கோவிலும், அந்தண்டை ஷாஹி மசூதியும். கிருஷ்ணலாலா தரிசனம் முடிஞ்சதும் “வாங்கோ பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த கம்ஸன் கட்டிவச்ச ஜெயில் ரூமைக் காமிக்கரேன்.” சுத்தி மசூதிக்கு பின்புறமா அழைச்சிண்டு போரான். மசூதிக்கு நேர் பின்னாடி ஒரு படிக்கட்டு கீழே இறங்கிப் போரது, ஆனா அது போகும் இடமோ மசூதிக்கு நேர் கீழே, இருட்டா ஒரு ரூம், 8க்கு 10 இருக்கும், கம்பிக் கதவு போட்டு மூடி, வரவா போரவா ஏத்தி வச்ச சூடம், தூவின மாலை, புஷ்பங்கள்னு. ஹ்ருதயம் அடிப்பது பட்டுமே காதில் கேட்டது.

லோகத்தையும் அதில் இருக்கும் மனுஷாளையும் ரக்ஷிப்பதற்கும், ‘அதர்மம் எப்பெல்லாம் தலை தூக்குமோ அப்பெல்லாம் வருவேன்’னு வந்த மஹானுபாவன், கீதோபதேசம் தந்தவன், பாலக் கண்ணன் பொறந்த இடம் பாத்ததும் மனசைப் பிசைஞ்சது. நமக்காக நாமெல்லாம் தர்ம நெறியைக் கடைப் பிடிச்சு நன்னா வாழணும்னு இந்த பிராஞ்சத்தையே சிருஷ்டித்த பெருமாள் அவதரிக்க தேர்ந்தெடுத்தது இப்படிப்பட்ட இடத்தையா?

“பாத்துட்டீங்களா?” மாஞ்சி கேக்கரான். என்னன்னு சொல்ல! தில்லீலே இத்தனை வருஷம் இருந்தவன் இதைப் பாக்க இப்பத்தான் வந்திருக்கேன்னு சித்தே வெக்கப் பட்டதால் தலைய தூக்கி ஆமாம்னு சொல்லக் கூடத் தோணல. கேதிக்கு இங்கே இவன் என்னத்தை காமிச்சான்னு இந்த ஆள் இப்படி கண்கலங்க நிக்கராரேன்னு வியப்பு. என்னை நன்னா பாத்த படகோட்டி “திருப்த்திதானே?” கேக்கரான். மதுராவில் பிறந்து அத்தனை அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டின பகவானுக்கு ஆக்ராவில் அவர் நீந்திக் களித்த யமுனை நதிக் கரையில் கோவில் இல்லாமலா? அயோத்யாவிலும் மசூதி, அங்கேயும் ஒரு முசோலியம், ரெண்டையும் பாதுகாத்து வச்சிண்டு ஒரு அரசாங்கம், இதுக்கு ஒரு ஆர்கியாலாஜி டிப்பார்ட்மென்ட், அதுக்கு ஒரு ஆசாமி சம்பளத்துக்கு என்னைப்போல்! நினைச்சுண்டேன்.

அன்னைக்கு அயோத்தியில் என்ன இருந்துதுன்னு அடிச்சுச் சொல்லியதால் இப்போ ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டியாச்சு. இப்பவும் நீ ரிடயர் ஆரத்துக்கு மின்னாடி அதேபோல் இன்னொரு உண்மையையும் எல்லாருக்கும் எடுத்துச் சொல்லுனு அந்த படகோட்டி எனக்கு கட்டளை இட்டாப்போல் பட்டது. இப்பத்தான் நிமுந்து அவனை முழுசாப் பாக்கரேன்

என்னை பாத்துண்டே இருந்த மாஞ்சி சிரிச்சிண்டே “அப் மேன் சல்தாஹூன். பகுத் காம் படாஹைன்.” சொல்லிண்டே கிளம்ப, “காசு வாங்கிக்கோ!” பேன்ட் பாக்கெட்டில் கையை விட என் கண்முன்னாடி மாஞ்சி ரூபத்தில், அன்னைக்கு அர்ஜுனனுக்கு தேரோட்டியா வந்த அவர், இன்னைக்கு எனக்கு படகோட்டியா வந்து என்னை அலைக்கழிச்சு காட்ட வேண்டியதை காட்டிட்ட நவநீத கிருஷ்ணர் க்ஷணத்தில் பாத்துண்டிருக்கச்சேயே கண்முன்னாடி காத்தில் மறைஞ்சே போனார்.

No comments:

Post a Comment