Tuesday, August 18, 2020

இதுதான் பக்தி..

இதுதான் பக்தி..                                                                                                                                                                       சிவ வழிபாட்டு குடும்பம். ஆனால், சைவ உணவு மட்டும்தான் என்ற கட்டுப்பாடு இல்லை. பண்டிகை காலங்களில் அசைவ உணவும் உண்டு.

மகனுக்கு கல்யாணம் ஆயிற்று. ஏராளமான பரிசு பொருள்கள் வந்தன.

விருந்து - மறு விருந்து என்று ஏக தடபுடல்.

பெண்ணை கொடுத்த சம்பந்தி குடும்பத்தினருக்கு விருந்து ஒரு நாள்.

சைவச் சமையல்!

சம்பந்திக்கு கொஞ்சம் திடுக்கிட்டது. அவருடைய வீட்டில் அவ்வப்போது அசைவம் உண்டு. பெண்ணும் அப்படியே வளர்ந்தவள். இந்த வீட்டில் அசைவமே இல்லை என்றால் பெண் ஏங்கியே போய்விடுவாளே... கல்யாணத்துக்கு முன் பேசிய பேச்சுகளில், இங்கே அசைவம் உண்டு என்ற மாதிரி தானே பேச்சு வந்தது...

"என்ன சம்பந்தி.. சாப்பாட்டிலே ஸ்பெஷல் ஆயிட்டமே இல்லை?" என்று கேட்டேவிட்டார்.

சம்பந்தி பதில் சொன்னார், "முன்னேயெல்லாம் நீங்க கேட்கிற அயிட்டம் இருந்தது. இப்போ கல்யாணத்திலே ஒரு சிநேகிதர், காஞ்சி பெரியவா படம் - அழகா, சட்டம் போட்டு ப்ரெசென்ட் பண்ணிட்டார். அதோ மாட்டியிருக்கேன் பாருங்கோ...

அவங்க பார்த்துகிட்டு இருக்கும் போது நாம எப்படிங்க அதெல்லாம் சாப்பிடறது? அதனாலே நிறுத்திட்டேன்.."

பக்தி... பக்தி... இதுதான்!

சுவாமிகள் படமாக இல்லை; பிரத்யட்சமாக பார்த்து கொண்டிருக்கிறார்கள்...

கண்ணப்பன்கள் இன்றைக்கும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment