Friday, August 28, 2020

பாண்டிய நாட்டுத்திருப்பதிகள்பகுதி..25

பாண்டிய நாட்டுத்திருப்பதிகள்பகுதி..25
(சுஜாதா&வெங்கடேசன்6381369319)

உள்ளூரில் ஒரு ஆட்டோவில் சொன்னால் வரலாற்று ஆதாரங்களோடு கூடிய இடங்களுக்கு அழைத்து செல்கிறார்கள்...

முதலில் இராமானுஜர்....

ஒரு சமயம் ராமானுஜர் தனது பிரதம சீடன் நம்பியுடன் திருவனந்தபுரம் சென்று அனந்தபத்மநாபனை தரிசித்தார். அங்கும் வைணவ சம்பிரதாய பூஜை முறையை நடைமுறைப்படுத்த நினைத்தார். அதற்காக அத்தலத்தில் தங்கினார். அவரது செயல்முறைகளையறிந்த அக்கோயிலில் பூஜிப்பவர்கள். தங்கள் பாரம்பரியமான பூஜைமுறைகளை மாற்றாமலிருக்கும்படி பெருமாளிடம் வேண்டினார்கள். அவர்களுக்கு இரங்கினார் பெருமாள். அன்றிரவு ராமானுஜர் தன் சீடருடன் ஒரு மண்டபத்தில் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது பெருமாள் கருடனை அழைத்து ராமானுஜரின் உறக்கம் கலையாமல் தூக்கிச் சென்று திருக்குறுங்குடியில் விடச்சொன்னார். அப்படியே செய்தார் கருடன்.

காலை கண்விழித்தபோது ராமானுஜர் தான் திருக்குறுங்குடி தலத்தில் இருப்பதை அறிந்தார் எல்லாம் பகவான் செயல் என்று பெருமாளை வணங்கினார். தன்னுடன் படுத்துறங்கிய சீடன் வடுக நம்பியும் அங்குதான் இருப்பான் என்றெண்ணிய ராமானுஜர் வடுகநம்பியை அழைத்தார். அப்போது, திருக்குறுங்குடி அழகியநம்பி பெருமாள், சீடர் உருவத்தில் வந்து ராமானுஜர் முன் கைகூட்டிப் பணிந்து நின்றார். நாட்கள் நகர்ந்தன. ஒருநாள் ராமானுஜர் நீராடி வந்தபின் வழக்கம்போல் சீடனுக்கு திருநாமம் இட்டு, அவன் முகத்தைப் பார்த்து நம்பி உன்முகம் தெய்வாம்சம் பொருந்தித் திகழ்கிறது உன்னில் நான் பெருமாளையே காண்கிறேன். இன்று நான் உனக்கிட்ட திருநாமம் மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது என்றார். பின்னர், கூடையிலிருந்த மலரையெடுத்து வடுகநம்பியின் காதுகளில் வைத்தார் நம்பி இப்பொழுது உன் அழகு மேன்மேலும் சிறந்து காணப்படுகிறது என்று மகிழ்ந்தார்.

இருவரும் கோயிலுக்குப் புறப்பட்டார்கள். கொடிமரம் அருகே சென்று கொண்டிருக்கும் போது, சீடரான நம்பி திடீரென்று மாயமாகி விட்டார். மூலஸ்தானம் சென்ற ராமானுஜர் அழகிய நம்பி பெருமாள் நெற்றியில், வடுக நம்பிக்கு தானிட்ட திருநாமமும், காதுகளில் வைத்த பூவும் அழகாகத் திகழ்வதைக் கண்டார். அப்போதுதான் தன் சீடன் வடுகநம்பியாக வந்தது பெருமாளே என்பதையறிந்து சிலிர்த்தார். பெருமாளே, இத்தனை நாட்களாக எனக்கு சீடராக வந்து தொண்டு செய்தீரே என்று மனமுருகி வழிபட்டார். பெருமாளை ராமானுஜ நம்பி என்று பெயரிட்டு அழைத்தார். பெருமாளும் யாம் ஏற்றோம் என்றார். குரு சிஷ்ய பாரம்பரியம் உலகில் பரவ வேண்டுமென்றே யாம் சீடனாக வந்தோம் என்று அருள்வாக்கு மொழிந்தார் பெருமாள் சிலநாட்கள் கழித்து உண்மையான சீடன் வடுகநம்பி ராமானுஜர் இருப்பிடம் தேடி வந்துசேர்ந்தார்.

ராமானுஜரை கருடன் திருவனந்தபுரத்திலிருந்து தூக்கிவந்து கிடத்திய பாறை திருப்பரிவட்டப்பாறை என்று போற்றப்படுகிறது. திருக்குறுங்குடி கோயிலிலிருந்து சுமார் பன்னிரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இப்பாறை உள்ளது. தகுந்த குருவைத்தேடி அலையும் அன்பர்கள் இங்குவந்து ராமானுஜரை தரிசித்தால் குருவின் திருவருள் கிட்டும் என்பர்.ராமானுஜர் ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் தங்கியிருந்தபோது ஸ்ரீரங்கநாதர் கோயிலில் நடைபெறும் பூஜைமுறைகளில் சீர்த்திருத்தம் செய்தார். அதுவே இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகிறது.
 படம் திருப்பறிவட்டப்பாறை
தொடர்ந்து வயல் நடுவே  திருமங்கை ஆழ்வார்  திருவரசுக்கு ஆட்டோ சென்று நிற்கிறது.போகும் வழியில் ஐந்தாறு கிளைகளோடு பனை மரத்தைகாட்டி போட்டோ எடுக்க சொல்றார் ஆட்டோ டிரைவர். டிவிஎஸ் குடும்பத்தின் ஊர் என்பதால் அனைத்து இடங்களும் நல்ல பராமரிப்பில் உள்ளது.  அடுத்து  திருப்பாற்கடல் நம்பி கோயிலும் சுழித்தோடும் ஆற்றங்கரையில்.... பக்தி உணர்வை பரவசப்படுத்துகிறது... தொடர்வது மலை நம்பி




No comments:

Post a Comment