சத்து மாவு :
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு – 50கி
கம்பு – 50கி
சோளம் – 50கி
கோதுமை – 50கி
புழுங்கல் அரிசி – 50கி
பார்லி – 50கி
ஜவ்வரிசி – 50கி
பச்சை பயறு – 50கி
சோயா பீன்ஸ் – 50கி
கருப்பு சுண்டல் – 50கி
மக்காச்சோளம் – 50கி
வேர்க்கடலை – 100கி
பொட்டுக்கடலை – 50கி
முந்திரி – 50கி
பாதாம் – 50கி
ஏலக்காய் – 50கி
கொண்டைகடலை -50கி
நாட்டு சக்கரை - 500கி
செய்முறை:
மேலே குறிப்பிட்டுள்ள மூல பொருட்களை வாங்கி காயவைத்து நன்கு சுத்தம் செய்து அரைத்து வைத்து கொள்ளவும்.
காற்று புகாத இடத்தில் வைத்து கொள்ளுங்கள்
சாப்பிடும் முறை:
200ml பாலில் 1 ஸ்பூன் பவுடரை கலந்து குடிக்கவும்,குந்தைகளுக்கு பால் கலந்து குடிக்கலாம்.
பயன்கள்:
1. ரத்த ஓட்டம் சீராகும்.
2. ரத்த அணுக்கள் அதிகரிக்கும்.
3. நரம்புகள் பலம் பெறும்.
4. உடல் எடை அதிகரிக்கும்.சதை கூடும்.
5. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
6. மாதவிடாய்,வயிற்று வலி போன்றவை சரியாகும்.
7.குழந்தைகளின் வளர்ச்சிக்கு உகந்தது.
8. தோல் சுருக்கம் மறையும்.
9. உடல் சோர்வு முற்றிலும் நீங்கும்.
10.கர்ப்பிணிகளுக்கு மிகவும் சிறந்தது.
சித்த மருத்துவர். சந்திரசேகர்.
Ph. 9600278549.
No comments:
Post a Comment