ராமாஞ்சநேயர் (சிறுகதை சீசன் – 3)
#ganeshamarkalam
இவன் குரோம்பேட்டையில் இருக்கான், பக்கத்தில் ராமாஞ்சநேயர் கோவில் இருக்கு, அதை வச்சு ஒரு கதை சொல்ரான்னு நீங்க யோசிப்பேள். சரி, அந்த கோவிலும் வரும். போதுமா?
நான் கோபாலன். ஸ்டேட் கவர்னமென்ட் ஜாப். வயசு 32. எங்கப்பா அங்கேதான் இருந்தர். ஏக்ஸிடென்டில் போயிட்டர். அந்த வேலையை எனக்குத் தந்துட்டா. ஏத்துண்டே ஆணம்னு கட்டாயமில்லை. நானும் படிச்சிருந்ததுனாலே உனக்கு ஃபர்ஸ்ட் ப்ரிஃபரென்ஸ் அப்படீன்னா. எனக்கும் அப்படி ஒண்ணும் நல்ல வேலை இல்லை. சரீன்னுட்டேன். அம்மாவுக்கு ஏக சந்தோஷம். குடும்பம் பிழைச்சுடும்.
என்ன வேலைன்னு கேளுங்கோ. இவனே சொல்லுவான்னு இருக்கப்பிடாது. ஸ்டேட் PWD. கான்ட்ராக்டெல்லாம் தர டிபார்ட்மென்ட். நினெச்சா கையில் காசு புரளும். அப்பா அப்படி இல்லை, என்னையும் அப்படி வளக்கலை. வரவன் போரவான்னெல்லாம் ஃபைலில் 2000த்துக்கு குறையாம வச்சு நகத்துவா. ஒருநாளைக்கு 50 ஃபைல் என் டேபிளை கடக்கும். அம்மாவுக்கு மாசத்துக்கொண்ணு வைர அட்டிகை வாங்கித்தரலாம். அதுக்கெல்லாம் அவள் ஆசைப்படலை. வரப்போர ஆத்துக்காரிக்கு சேர்த்து வைக்கலாமேன்னு படும். வாங்கரதில்லைன்னு வைராக்கியமா இருக்கேன்.
பின்னாடி எந்த ஒரு கஷ்டம் வந்தாலும் மனசு மாறிடப்பிடாதுன்னு ஆஞ்சநேயரை வேண்டிப்பேன்.
உடனே அஞ்சநேய பக்தன் போலேருக்கு, கல்யாணம் செஞ்சுக்க மாட்டன், இந்த கதையில் இவன் வயசொத்த பொம்மனாட்டியே வரமாட்டா, போரடிக்கும்னு படிக்காம இப்போவே கழண்டுக்கரவா போலாம்.
கூட வேலை பாக்கரவா கேலியும் கிண்டலும். அது என்னமோ ஆண்கள்தான் லஞ்சம் வாங்கறதா ஒரு அபிப்ராயம். அது எத்தனை அப்பட்டமான தப்புன்னு எங்காபீஸுக்கு வந்தா தெரிஞ்சுடும். என் சீட்டுக்கு பக்கத்துலேயே சாந்தி குமரேசன். குமரேசன் ஸ்கூல் டீச்சர். வசதி இருக்காதுன்னு நினைப்பேள். ஆனா இவள் குறைஞ்ச பக்ஷம் தினம் ஆத்துக்கு 30ஆயிரம் கேஷ் – அதான் மேஜைக்கு கீழே வாங்கினதை – கொண்டு போவா. வலசர்வாக்கத்தில் காஸாகிரான்டில் ரெண்டு அப்பார்ட்மென்ட் வாங்கி வாடகைக்கு விட்டிருக்கா. செங்கல்பட்டுலேந்து மஹாப்ஸ் போர வழீலே ஒரு ஃபார்ம் ஹவுஸ் இருக்கு.
ஆனா கோடம்பக்கத்தில் கீக்கிடமா ஒண்டு குடுத்தனம். வாங்கினது தெரிஞ்சுடப்பிடாதாம். என் பேரைச் சொல்லியும் நிறைய வாங்கியிருக்கான்னு தெரிஞ்சுபோச்சு. திட்டினேன்.
சித்தே கண் கசக்கரா மாதிரி பாவ்லா செஞ்சுட்டு, “உனக்கு சமத்துப் பத்தலை, நாங்களாவது பிழைச்சுக்கரோம்.”
ஆபீஸ் வேலையில் பிர்ச்சனைன்னா என்னைத்தான் டைரெக்டர் ஜகன்னாதன் கூப்பிட்டனுப்புவான். சிக்கல் வந்திருக்கும். ஃபைல் காணாமப் போகும். மினிஸ்டெர் மீட்டிங்கு கூப்பிட்டிருப்பான். அங்கே போய் மாட்டிக்காம என்ன பெசணும்னு சொல்லித்தரணும். இப்படிக் காரியங்களுக்கு கோபால்தான் சரீன்னு. ப்யூன் வந்து சொல்ரான், “சார் உங்களை கேபினுக்கு வரச் சொல்ரார்.”
“வாங்கோ கோபாலன், உங்கள் முகத்தைப் பார்த்தா மகிழ்ச்சியா இருக்கு. என்ன அழகா திருமண் இட்டுண்டு தெய்வீகக் களையோட!” ஐஸ் வைக்கரான். “நாமம் போட்ட தயிர்சாதம்” இவனே கேலி செஞ்சான்னு அப்பா ஒருக்கா சொல்லி வருத்தப் பட்டர். இப்போ திருமண் அப்படீன்னு கொஞ்சரான்? சீக்கிரமா முடிச்சுக் கொடுக்க வேண்டிய வேலை வந்திருக்கும். “என்ன விஷயம் சார்?” கேக்கரேன். இதே பன்னாட்டு நிறுவனமா இருந்தா வாட் கேன் ஐ டூ ஃபார் யூ ஜாக்ஸ்?” கேட்டிருப்பேன்.
“சேம்பரம்பாக்கம் தூர் வாரணுமாம். எஸ்டிமேட் போட்டு எடுத்துண்டு நாளைக்கு மினிஸ்டரை பாக்கணும். போட்டு தரமுடியுமா?” பூ இவ்ளோதானா! “தரேன். எப்போ வேணும்?” “சாயங்காலத்துக்குள்ளே. அப்போதான் ராத்திரி வீட்டுக்கு எடுத்துண்டு போய் படிச்சு புரிஞ்சிண்டு நாளைக்கு மீட்டிங்கில் பெச முடியும்”. “நானும் கூட வரட்டுமா?” சித்தே யோசிச்சவன், சரின்னுட்டான்.
சென்னைகிட்டே இருக்கும் ஏரி எல்லாத்துக்கும் தூர்வார 6 மாசத்துக்கு மின்னாடி போட்ட எஸ்டிமேட் ரெடியா இருக்கு. 10% எஸ்கலேஷன் பண்ணினா ஆச்சு. இது இவனுக்கும் தெரியாது, மினிஸ்டருக்கும் தெரியாது.
சில திருத்தங்கள் செஞ்சு புதுசா ப்ரின்ட் போட்டு கொண்டு போய் தந்தேன். மத்தாநா நேர மினிஸ்டர் ஆபீஸுக்கு போயாச்சு. மீட்டிங்க் இருக்குன்னு சொன்ன மந்திரி வேர வேலையாப் போயிட்டாராம். செக்ரடரி இருந்தர். எல்லா விவரத்தையும் கேட்டுட்டு டெண்டெர் விட்டு வேலையை சீக்கீரம் ஆரம்பிச்சுடணும்னு. ஒரே மாசத்தில் வேலை ஆரம்பிக்கணும், ஆனா நியமப்படி கான்ட்ராக்ட் தரணும்னுட்டர்.
நியமப்படித்தான் எல்லாம் நடந்தாறதுன்னு நினெச்சுண்டேன். சொல்லலை. நமக்கேன் வம்பு. வந்த வேலை முடிஞ்சதுன்னு கிளம்பிட்டேன்.
ஃபைலெல்லாம் என் டேபிள் வழியாத்தான் போணம். 30பேர் டெண்டெர் கொடுத்தா. ஃபைல்ஸ் மேலேயும் கீழேயும் 4 தடவையாவது போகும். நான் இஷ்டப்பட்டா நிறுத்திவச்சு எல்லாரையும் கஷ்டப்படுத்தி ஒவ்வொரு தடவை ஃபைல் நகர 2000 வாங்கலாம். எனக்கே அத்தனைன்னா மேலே இருக்கரவாளுக்கும் அரசாங்கத்தில், மந்திரி, கட்சிக்காரன் சிபாரிசு பண்ணன்னு எத்தனை பணம் கை மாறும்? டெண்டெர் மதிப்பில் ஒரு 25%.
கவனிச்சிண்டிருந்த சாந்தி “உங்களுக்கு உதவியா நானும் இதில் வேலை செய்யட்டுமா கோபால்?” புதிய பறவை சரோஜாதேவி மாதிரி குழைஞ்சா.
ஒரு ஐடியா தோணித்து. நாமளும் ரெண்டு கையாலும் வாங்கிப் போட்டு சேர்ர பணத்தை சானடோரியம் ராமாஞ்சநேயர் கோவிலுக்கு நன்கொடையாத் தந்துட்டா என்ன? எப்படியும் மேலே தந்து கான்ட்ராக்ட்டை வாங்கிடுவன். எல்லாம் கருப்பு - போன வருஷம் கிடெச்ச வேலையைச் செய்யாம அடிச்ச பணம். நாம அத்தை அடிச்சு ராமருக்கு தந்துட்டா தப்பில்லையே. நாமளே வச்சுண்டு ஆண்டு அனுபவிச்சாத்தான் பாவம். அப்பா இருந்தா அவர்கிட்டே இப்படி செய்யறது சரியான்னு கேக்கலாம்.
சட்டைப் பையில் ரெண்டு ரூ காயின் இருந்தது. டாய்லெட்டில் போய் நின்னுண்டு சுண்டிவிட்டேன். பூ விழுந்தா லஞ்சம் வாங்கப்பிடாதுன்னு. விழுந்தது தலை. மின்னப்பின்னே செஞ்சதில்லை. சாந்தியை “கேன்டீனுக்கு வரியா?” அழைச்சிண்டு போய் டீ வாங்கித் தந்துட்டு மொள்ள தயங்கித் தயங்கி விஷயத்தை சொல்ல, “என்கிட்டே விட்டுடு கோபால், பாத்துக்கரேன். சாயங்காலம் ஆத்துக்கு போரச்சே ஞாபகமா உன் பங்கு கேஷ் வாங்கிண்டுபோ”.
மேட்டர் அத்தனை சுலபமா தீர்மானம் ஆனது ஆச்சர்யமா இருந்தது.
எல்லாம் நல்லபடியா டெண்டெர் பாஸ் ஆகி கான்ட்ராக்டரும் அமைஞ்சுடுவா, ஆனா சேம்ப்பரம்பக்கம் ஏரி மட்டும் அப்படியே இருக்கும்னு பட்டது. அப்படியே இருந்தாத்தான் அடுத்த வருஷமும் தூர் வாரலாம். சிம்பிள் லாஜிக்.
இந்த பணிக்கு இன்னும் ஃபைல் வர ஆரம்பிக்கலை. ஆனா தினம் என் கையில் குறைந்த பக்ஷம் 60ஆயிரம் வந்தது வழக்கமா நடக்கர பணிகளுக்கு. “ஒரு ரொட்டீன் செட் ஆகட்டும்னு இப்பவே உங்களையும் விளையாட்டில் சேர்த்துண்டுட்டோம்.” சாந்தி சொல்ல என்னவோ பண்ணித்து.
இவளொட இப்படி ஒரு விளையாட்டு ஆடுவேன்னு நினெச்சுப் பாக்கலை. பணத்தை எண்ணித் தரச்சே அப்பப்போ லெசா விரல் உரசறதும் நடக்க ஆரம்பிச்சது.
“வர சனிக்கிழமை நீங்க ஃப்ரீயா?” ஒருநா கேக்கரா. “என்ன விஷயம்?” ஒரு கம்பேனி பேரைச் சொல்லி, “அவுங்களும் டெண்டெர் தந்திருக்காங்க, ECR பண்ணை வீட்டில் ஒரு வீகெண்ட் பார்டீ ஏர்பாடு செஞ்சிருக்காங்க போணம், உங்களையும் கூட்டிட்டு வான்னு சொன்னாங்க.” விபரீதமா பட்டது. விரலை உரசினதுக்கும் இதுக்கும் ஏதாவது சம்பந்தமோ? வரலைன்னுட்டேன். “சரி உன் இஷ்டம் கோபால்”.
சனிக்கிழமை ராத்திரி பூரா தூக்கமில்லை. திங்கட்கிழமை ஆபீஸுக்கு போனாத்தான் பார்டீயில் என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்கலாம். ஏன் கார்த்தாலே எழுந்துண்டதும் சாந்தியை போன் போட்டுக் கேக்கப்பிடாது? அது சரியா இருக்காது. ஆத்தில் ஆத்துக்காரர் கூட் இருப்பர். தப்பில்லையோ?
ஆனா பாருங்கோ ஞாயித்துக்கிழமை கார்த்தாலே 9 மணியிருக்கும் சாந்தியே போன். “நீங்க வந்திருக்கணும் கோபால். பார்டீ நல்லா இருந்தது. எனக்கு ரெண்டாவது, போன வாட்டியை விட இந்த வாட்டி பெட்டர். டிவி நடிகைகள் 4 பேர் வந்திருந்தா. கும்மாளம்தான். ஜகன் சார் அப்படியே மட்டை. இன்னும் விவரங்கள் சொன்னா –அதெல்லாத்தையும் இங்கே சொல்லமுடியாது.
நாமும் போயிருக்கணும்னு பட்டது. “அடுத்த பார்டீ எப்போவாம்?” “வேணும்னா உங்களுக்காக ப்ரைவேட்டா ஒண்ணு அரேஞ்ச் செய்யச் சொல்லட்டுமா?” “அப்படிக்கூட செய்வாங்களா?” “ஏன் மாட்டாங்க?” “சரி சொல்ரேன்”.
டக்குன்னு போனை வச்சுட்டேன். படபடன்னு வந்துடுத்து.
“ஏன்டா எப்போ குளிச்சுட்டு வரப்போராய்? சாப்பாடு ரெடீ!” அம்மா சொல்ல, சரி, ஒரு குளியல் போட்டுடலாம்னு பாத்ரூமுக்குள் ஒளிஞ்சிக்கரேன். குளிச்சுட்டு வந்து திருமண் இட்டுண்டு சின்னதா ஒரு ஸ்லோகம் சொல்லிட்டு சாப்பிடலாம்னு உக்காரரச்சே வாசலில் யாரோ ராம பஜன் உரக்க சொல்லிண்டு. கூடவே ஜால்ரா சத்தமும் மிருதங்கம் மாதிரியும் கேக்கறதே?
உஞ்சவிருத்தியோன்னு அம்மா எட்டிப்பாக்கரா. நானும். அங்கே எங்காத்துக்கு மின்னாடி ராமரும் ஆஞ்சநேயரும்.
24 வயசில் கட்டுமஸ்தான தேகத்தொட நீலமேக ஷ்யாமளனா ராமர், கையில் வில்லும், தோளில் அம்புராத் தூளியும், ஜடா முடி தரிச்சிண்டு. கூடவே 35க்கு மேல் கருத்த ஆனா சிருத்த உருவமா, இடுப்பில் வரிந்து கட்டின வால் பின்னாடி சுழள, உதடும் மூக்கும் சிவப்பு வர்ணம் பூசி ஆஞ்சநேயர். கையில் கதாயுதம். பின்னாடி ரெண்டுபேர் ஜால்ராவும் மிருதங்கமும் வாசிக்கரான்னு பாத்தா யாரையும் காணலை, ஆனா இவா பாட்டுக்கு பக்கவாத்தியம் கேட்டது. அப்புரம்தான் பாக்கரேன் ஆஞ்சநேயர் தோளில் டேப் ரிகார்டரும் ஸ்பீக்கரும்.
கதவை தொறந்ததும் காம்பவுண்டுக்குள் சுவாதீனமா வந்து நின்னுண்டு பஜனையை முழுசா பாடி முடிக்கவும் அம்மா உள்ளேந்து 20ரூ தாளை எடுத்துண்டு வரவும் சரியா இருந்தது.
இப்படி ராமரையும் ஹனுமாரையும் பிச்சை எடுக்க வச்சுட்டானுவன்னு பட்டது.
சும்மா இல்லாம “சீதை எங்கே?” கேக்க, ராமர் சொல்ரர், “எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை, இவர் ஊர்க்காரிதான் ஒருத்தி சீதை வேஷம் கட்டுவா. போர இடத்தில் சிலர் போடோ எடுக்க வற்புருத்தவே அவளுக்கு வெக்கமா போக இப்போ வரதில்லை”.
“இப்படி வேஷம் போட்டுண்டு வீடு வீடா போணுமா?” “நாங்க கையை நீட்டறதில்லை, பஜனைதான், பாட்டு கேட்டுட்டு தானா தரவா கிட்டே வாங்கிப்போம்”. ஒரு எடிக்குயிட் புரியவச்சான்.
“ஒருநாளைக்கு எத்தனை கிடைக்கும்?” “நூறு அல்லது நூத்தைம்பது”. “பத்துமா?” “பத்தாதுதான். வயலுக்கு வேலைக்குப் போவோம். இப்போ கிடைக்கறதில்லை”. சுர்ருன்னு மண்டையில் உரைச்சது. தண்ணி எங்கே, இவா உழுது சம்பாதிக்க?
உள்ளே போய் அம்மாவுக்குத் தெரியாம ஒளிச்சு வச்ச காசிலேந்து ஒரு கட்டு எடுத்துண்டு வந்து அம்மா பாக்காதபோது தந்தேன். “இவ்வளவா?” வேண்டாம்னுட்டா. ஒரே ஒரு 2000 தாள் மட்டும் அவசரத் தேவைக்குன்னு வச்சுக்கரோம்னு ரொம்பவே தயங்கித் தயங்கி எடுத்திண்டு போனா.
சாயங்காலமே எல்லாப் பணத்தையும் ராமாஞ்சநேயர் கோவில் உண்டியில் செலுத்தினேன். ஒரு வாரத்தில் 7லக்ஷத்துக்கு மேல் சேர்ந்தது. திங்கட்கிழமை ஆபீசுக்கு போனதும் அங்கே நடப்பதை CVCக்கு ஒரு கடுதாசில் எழுதி போட்டுட்டு வேலையை ராஜீனாமா செஞ்சேன்.
இரு பிராம்ணன் நல்லவனா இருக்கறது இந்த காலகட்டத்தில் கஷ்டம்தான். எத்தனை ஆப்பர்ச்யூனிடீஸ் வந்தாலும் கெட்டவனாக மாறுவதும் இந்த பிராம்ணணுக்கு அத்தனை சுலபம் இல்லை. ராமர் இல்லைன்னா ஒரு ஆஞ்சநேயர் நேரில் வந்து தடுத்துடுவா.
நான் செய்யப்போர பாதகத்தின் பிரம்மாண்ட அளவைப் பாத்துட்டு ரெண்டுபேரும் ஒட்டுக்க வேஷம் கட்டிண்டு வந்தாளோ!
No comments:
Post a Comment