ஆளின்றிக் கைவிளக்கு அன்பரின் வீடுவரை சென்ற அற்புதம்...
மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள நல்லத்துக்குடி என்னும் சிற்றூரில்,
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் கிருஷ்ணசாமி என்னும்
அம்பிகை பக்தர்.
அந்தணர் குலத்தில் தோன்றிய அவர், சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார். அம்மாவை இழந்த போது துக்கம் தாங்காமல் துடித்து அம்மா அம்மா என்று அழைத்து அழுதார்.
மயிலாடுதுறையில் எழுந்தருளியுள்ள அன்னை அபயாம்பிகை,ஓர் அந்தண
மாதாகத் தோன்றி,உணவளித்து ,தன் ஆலயத்தில் விட்டு மறைந்தாள்.
அப்போதிருந்து அம்பிகையைத் தரிசித்து வளர்ந்தார்.கோயிலும்
வீடுமாக வாழ்ந்தார்.
ஒருநாள் அபயாம்பிகையைத் தரிசித்து வணங்கிவிட்டு, இல்லம் கிளம்பும் போது, கோபுர வாயிலில் உள்ள கல்லில் இடித்துக் கொண்டு,வலி தாங்காமல்,
அம்மா என்று அலறினார்.
அபயாம்பிகை திருவருளால்,ஆளின்றி,ஒளிகாட்டி,கைவிளக்கு வந்தது
வீடுவரை.கண்ட மக்கள் அற்புதம் என்று வியப்படைந்தனர்.
அன்னையின் கருணைக்கு மனம் உருகிய அன்பர்,அம்பிகை கருணைக்கு
என் செய்வேன் என்றார்.பாடுமாறு கூறிப் பாடும் திறனளித்தாள் அன்னை.அப்போது அவர் பாடியது அபயாம்பிகை சதகம்.
சாக்தோபாசனை ரகசியங்கள் நிறைந்த பனுவல் அது.அவர் வாழ்வு குறித்த
செய்திகள் அதில் உண்டு; இலக்கியச்சுவையும் உண்டு.
அருள்வாழ்வு வாழ்ந்த அன்பர்,ஒருநாள், அர்த்தயாம ப் பூசையில் அன்னையைத் தரிசித்து வழிபட்டுக் குங்குமப்பிரசாதம் வாங்கி அணிந்தார்.அணிந்தபோது, இவர் உருவம் பிறர் காணாவண்ணம்
மறைந்தது.அபயாம்பிகை தாள் மலரில் கலந்து முத்தி பெற்றார் அன்பர்.
மயிலாடுதுறை ஆலயத்தில் அவர்தம் நூல் கிடைக்கிறது. வாய்ப்புள்ளோர் வாங்கிப் பாராயணம் செய்து அன்னை அருள் பெறுக.
— முருகன் அடிமை ந.முருகேசன்
No comments:
Post a Comment