Sunday, August 30, 2020

பாண்டிய நாட்டுத்திருப்பதிகள் பகுதி 27

பாண்டிய நாட்டுத்திருப்பதிகள் பகுதி 27 
சுஜாதா&வெங்கடேசன்...

திருக்குறுங்குடி திவ்யதேசம் சேவிச்ச திருப்தியுடன் வானமாமலைக்கு பஸ் ஏறரோம். இது திருநெல்வேலி நாகர்கோவில் ரோட்லயே இருக்கு
ஸ்ரீவரமங்கையாக இந்த க்ஷேத்திரத்தில் வளர்ந்து திருமாலை மணந்ததால் 'ஸ்ரீவரமங்கை' என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள திருக்குளம் முற்காலத்தில் நான்கு ஏரிகளாக வெட்டப்பட்டிருந்ததால் நாங்குநேரி (நான்கு ஏரி) அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. சிந்து தேசத்து அரசன் குசாஸன மகரிஷியால் சபிக்கப்பட்டு நாய் உருவமாக மாறினான். இங்குள்ள புஷ்கரணிக்கு வந்து நீராடி தனது சாபம் நீங்கப் பெற்றான்.

ஸ்வயம் வ்யக்தேஷூ ஸர்வேஷூ தோதாத்ரி ஸ்தலம் ( சுயம்பு அதாவது மூலவர் மண்ணுக்கு அடியில் இருந்து வந்தவர்) என்ற பெருமையையும் தன்னகத்தே பெற்று பெருமையுடன் விளங்கக் கூடிய பெருமாள் கோவிலில் இதுவும் ஒன்று.
தோதாத்ரி நாதர், தனது இடது காலை மடித்துக்கொண்டும், வலதுகாலை தொங்கவிட்டு தரையில் படும்படியும் ஆதிசேஷன் குடைபிடித்த வண்ணத்தில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் கூடிய திருக்கோலத்தில் வீற்றிருக்கிறார். அவ்வாறு வீற்றிருக்கின்ற காரணத்தினாலேயே, இக்கோவில் பூகோள வைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது. ஊர்வசி, திலோத்தமா ஆகிய இருவரும் சாமரம் வீசுவது போலவும், மேலும் சூரியன், சந்திரன், ப்ருகரிஷி, மார்க்கண்டேய ரிஷி முதலானோரும் மூலவர் தோதாத்ரி நாதரின் இருபுறமும் வீற்று இருக்கிறார்கள்.
மூலவருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்வது இக்கோவிலின் சிறப்புகளுள் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

இக்கோவில் கிமு 1ooo -ல் தோன்றி இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படுகிறது

இக்கோவிலின் உற்சவராக தெய்வநாயகன் காட்சி அளிக்கிறார். ஸ்ரீவரமங்கை தாயார் வட வேங்கடத்தில் வீற்றிருந்தார். வெங்கடேசப் பெருமாளுக்கு திருமண உற்சவம் செய்ய வேண்டும் என்று எண்ணிய போது, ஸ்ரீ ராமானுஜ ஜீயரின் கனவில் ஸ்ரீவரமங்கைக் காட்சி அளித்து, தான் இறைவனைக் கைபிடித்து விட்டதாகத் தெரிவித்தார். ஆகையால் தான் இங்கு வானமாமலைப் பெருமாள் தெய்வ நாயகனாக காட்சி அளித்தார். அதன் படியே இங்கு தெய்வநாயகனுக்கும் ஸ்ரீவரமங்கைக்கும் திருமண உத்சவம் நடக்கின்றது.

நான்கு ஏரிகள் சூழ்ந்த பகுதியில் அமைந்ததால் இவ்வூருக்கு நான்குநேரி என்ற பெயர் வந்தது.
கோயிலின் அமைப்பு:

கோவிலின் முகப்பில் ஏழு அடுக்குகளைக் கொண்ட கோபுரம் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோவில் உள் பிரகாரம், வெளி பிரகாரம் என இரு பிரகாரங்களை உள்ளடக்கி  உள்ளது. கோவிலில் நுழைந்தவுடன் வலது பக்கம் மணவாள மாமுனிகள் சன்னதி அமைந்துள்ளது. சற்று உள்ளே சென்றவுடன் கொடிமரம் உள்ளது. உள் பிரகாரத்தில் ஸ்ரீவரமங்கை தாயார், ஆண்டாள் சன்னதி, ஸ்ரீ ராமர் சன்னதி, ஆழ்வார்கள், கருடன், உடையவர், பிள்ளை யோகாச்சாரியார், வேணு கோபாலன், லக்ஷ்மி நரசிம்மர், சக்கரத்தாழ்வார், லக்ஷ்மி வராகர்,விஷ்வக் சேனர், மற்றும் சில தனி தெய்வங்கள் சன்னதி அமைந்துள்ளது.

வெளிபிரகாரத்தில் தான் எண்ணெய்க்கிணறு உள்ளது. தினந்தோறும் எண்ணெய்காப்பு (அபிஷேகம்) செய்கிற எண்ணெய்யை இக்கினற்றில்தான் சேமித்து வைப்பார்கள். இந்த எண்ணெய், சர்வரோக நிவாரணியாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள்  செல்வது வழக்கம். எண்ணெய்க் கிணறு அருகில் அகத்தியர் சிலை உள்ளது.

நம்மாழ்வார் 11 பாசுரங்கள் பாடியள்ளார். காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 9 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்.
படம் கோயில் கோபுரம், உற்சவர்
          தொடரும்


No comments:

Post a Comment