Thursday, August 27, 2020

பாண்டிய நாட்டுத்திருப்பதிகள் பகுதி 24

பாண்டிய நாட்டுத்திருப்பதிகள் பகுதி 24
நம்பாடுவான்
பாணர் குலத்தின் திருமால் பக்தர் நம்பாடுவார் என்பவர் திருக்குறுங்குடிதிருத்தலத்தில் திருக்குறுங்குடிக் கோயிலில் குடிகொண்டுள்ள நம்பிப்பெருமாளை வழிபட கார்த்திகை மாதம், வளர்பிறை ஏகாதசி அன்று கைசிகப் பண் இசைத்துக் கொண்டு கிளம்பினார். வழியில் ஒரு பிரம்ம ராட்சசன் "எனக்கு இன்று நீ உணவாக வேண்டும்" என்று பிடித்துக்கொண்டான். நம்பாடுவார், “ என் உடல் உனக்கு உணவாகும் என்றால் அதைவிட வேறு என்ன மகிழ்ச்சி எனக்கு இருக்க முடியும்?" ஆனால் நான் போய்ப் பெருமாளைப் பாடிவிட்டு வந்து விடுகிறேன். அதன்பின் என்னை உணவாகக் கொள்ளலாம்”.என்றார்.

பிரம்ம ராட்சசன் மறுத்துக் கூறினான், “ நீ மனிதன். மனிதர்கள் பெரும்பாலும் சொன்ன சொல்லை மறந்துவிடுவார்கள். உன்னை எப்படி நம்புவது? “ என்று அப்போது நம்பாடுவார், தான் திரும்பி வராவிட்டால் அடையப்போகும் நரகங்களைச் சொல்லி்ப், பயங்கரமான சத்தியங்களைச் செய்ததால் அதனை நம்பி. பிரம்ம ராட்சசன் பாணர் நம்பாடுவாரை விட்டு விட்டான்.

நம்பாடுவார் மகிழ்ச்சியோடு பெருமாள் சந்நிதிக்குச் சென்று மிக மிக உருக்கமாக ஒரு கைசிகப்பண்ணைப் பாடினார்.. அவ்வாறு பாடிவிட்டு திரும்ப வரும்போது பிரம்ம ராட்சசனுக்கு அதுவரை இருந்த பசி மறைந்து விட்டது.. எனவே நம்பாடுவாரை உண்ண மறுத்தான். மேலும், தன்னைச் சாப விமோசனம் செய்ய வேண்டினான். நம்பாடுவார் தான் பாடிய கைசிகப் பண்ணின் புண்ணிய பலத்தைத் தந்து பிரம்ம ராட்சனனின் சாபத்தை நீக்கினார்.
இந்த சம்பவத்தை விளக்கும் நாடகம் கைசிக ஏகாதசியன்று விடிய விடிய நடக்கிறது. 
படம் நம்பாடுவானுக்காக நகர்ந்த த்வஜஸ்தம்பம்


No comments:

Post a Comment