Thursday, August 27, 2020

பாண்டிய நாட்டுத்திருப்பதிகள் பகுதி..23

பாண்டிய நாட்டுத்திருப்பதிகள் பகுதி..23
(சுஜாதா&வெங்கடேசன்6381369319)...
திருக்குறுங்குடி
திருநெல்வேலி பஸ்ஸ்டாண்ட்டில் நாகர்கோயில் பஸ் ஏறி அரை மணியில் ஏர்வாடி இறங்கி அங்கிருந்து 100/_க்கு  ஆட்டோவில் கொண்டு விடுகிறார்கள் ..தங்கறதுக்கு சத்திரங்கள் இருக்கு. 

மிக அழகான சிற்பங்கள் நிறைந்த இயற்கையான பொதிகை மலை சாரலில் ஆறுகள் வளம் கொண்ட சூழலில் கண்டிப்பாக காணவேண்டிய கோயில்...
திருமங்கையாழ்வார் பரமபதித்த ஸ்தலம். தனிக் கோயில் நாச்சியார்களின் உத்ஸவர்கள் பெருமாளுடன் ஏகாஸனத்தில் இருப்பதால் தாயார் ஸந்நிதிகளில் அர்ச்சனை கிடையாது. நின்ற நம்பி, கிடந்த நம்பி இவர்களுடைய ஸந்நிதிகளுக்கு நடுவில் சிவன் ஸந்நிதியும் பைரவர் ஸந்நிதியும் உள்ளன. பெருமாள் மடைப்பள்ளி பிரஸாதங்களே சிவனுக்கும் நிவேதனம் செய்யப்படுகின்றன. "இருந்த நம்பி" ஸந்நிதியிலுள்ள பெருமாளை வைகுந்த நாதன் என்கிறார்கள். 
வராஹ வடிவத்தில் ஸ்ரீ லட்சுமி தாயாருடன் தங்கியிருந்து சிறிய குடிகை என்று பொருள்படும் இடமாதலால் குறுங்குடி எனப் பெயர் பெற்றது

வாசலுக்குள் போறோம்.  சின்ன மண்டபம் அதுக்கடுத்துக் கொடிமரம் ஜொலிப்புடன் நிக்குது.  கொஞ்சம்  நமக்கு வலப்பக்கமாத் தள்ளி இருக்கோ?  அந்தாண்டை மூலவர் சந்நிதிக்கான  கருவறை வாசல்.

நின்ற கோலத்தில் ஸேவை சாதிக்கிறார் நம்பிராயர்!  இங்கேயே நின்ற இருந்த கிடந்த ன்னு மூணு கோலம்  காமிக்கிறார் வெவ்வேற சந்நிதிகளில்.  ஹான்னு  வாய் பிளந்து நின்னேன், ஒரு இடத்தில்.

வைணவக் கோவிலுக்குள்ளே   சிவனுக்கும் பைரவருக்கும் சந்நிதிகள் இருக்கே!  ஓ....  அதனால்தான் அழகியநம்பிக்கு வைணவநம்பின்னும் ஒரு பெயர் இருக்கு போல!

சைவ, வைணவ ஒற்றுமைக்கு இதைவிடப் பெருசா என்ன உதாரணம் சொல்ல முடியும் சொல்லுங்க?  தன்னுடைய கோவிலில் இடங்கொடுத்ததும் இல்லாம,  சிவன் சந்நிதியில் பூஜை முடிஞ்சதான்னு பெருமாளே கேட்டுத் தெரிஞ்சுக்குவாராம். தனக்குப் பூஜை நடக்கும் சமயம், (அங்கே) குறை ஏதும் உண்டான்னு  ஒரு கேள்வியும், குறை ஒன்றும் இல்லை(மறை மூர்த்தி கண்ணா!) என்ற பதிலும்  தினப்படி நடக்கும் விஷயமாம்!

இவருக்கு தயாரிக்கும் நைவேத்யங்கள்தான்  அவருக்கும் ! அதானே ஒரே இடத்தில் இருக்கும்போது ரெண்டு சமையலா?

நாங்க போன சமயம் காலை நேர பூஜைகள் எல்லாம் முடிஞ்சு 'எல்லோரும்' கொஞ்சம் ஓய்வாத்தான் இருந்தாங்க. கோவிலில் கூட்டமே இல்லை. பட்டர்ஸ்வாமிகளுடன் சேர்த்து  நாங்க நாலே பேர்தான்.  தீபாராதனை காமிச்சுத் தீர்த்தம் சடாரி கிடைச்சது!
படம் திருக்குறுங்குடி
         தொடர்வது  நம்பாடுவான்




No comments:

Post a Comment