பாண்டிய நாட்டுத்திருப்பதிகள் பகுதி 19
மத்யானம் சதுரகிரி மலை பற்றி சொல்றார்..
சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்று பட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சதுரகிரி சென்று வந்தால் உடல் நோய் மட்டுமல்ல மன அழுத்தம், மன பாரம் கூட நீங்குகிறது என்பது இந்த கோவிலுக்கு சென்று வந்தவர்களின் அனுபவம்.அதனால் ஸ்ரீவில்லிப்புத்தூர் பஸ் ஏறி கிருஷ்ணன் கோயில் போறோம். அங்கிருந்து வத்திராயிரப்பு பஸ். பஸ்ஸில் ஒரு போலீஸ்காரருடன் பேச்சுக்கொடுத்துண்டு வரார். அவர் மலை ஏறுவது மிக ஆபத்தான விஷயம் என்றும் சமீபத்தில் காட்டாற்றில் பலர் அடித்துச்செல்லப்பட்டதாகவும் அடிவாரம் வரை பார்த்து திரும்ப ஏற்பாடு செய்வதற்காக சொல்லி வத்திராயிருப்பு ஆட்டோ ஸ்டாண்டில் பேசி ஒரு ஆட்டோ போக வர ஏற்பாடு பண்ணி தரார். அருமையான இயற்கை சூழலில் ஆட்டோவில் அடிவாரத்தை(தானிப்பாறை முடுக்கு) அடைகிறோம். அங்கங்கே சாமியார்கள் குரங்குகள் மற்றும்வன மரங்கள் .
மேலே செல்ல அனுமதி இல்லை என்று வனத்துறை அறிவிப்பு. அடிவாரத்தில் சிவலிங்கத்துக்கு நைவேத்யம் செய்து நெற்றியில் விபூதி பூசி விடுகிறார் ஒரு சாமியார்.
மீண்டும் வனப்பகுதி யில் ஆட்டோவில் வந்து வத்திராயிருப்பு பஸ் ஏறி கிருஷ்ணன் கோயில் அடைகிறோம்.பசுமையான வனமும் மேற்குத்தொடர்ச்சி மலை அணில்களும் கொட்டப்போகும் மழையை கட்டியங்கூறும் இருண்ட வானமும் கூடவே வருகிறது. அந்தக்கோயிலிலும் காலை ஒரு வேளை மட்டுமே அர்ச்சகர் வந்து திறந்து பூஜையாம். வெளியிலிருந்தே பெருமாளை சேவிக்கிறோம்....
மீண்டும் ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்து மெஸ்ஸில் அடுக்கு தோசை சாப்பிடுகிறோம்.ராத்திரி ஏகாந்த சேவை முடிந்து பிரசாதங்கள் ஏலம் விடப்படுகிறது. அதிரசமும் வடையும் வாங்கறோம்.
படங்கள்(1)வனத்தின் நடுவே2)மலை அணில்3,4 கிருஷ்ணன் கோயில்
No comments:
Post a Comment