Sunday, August 30, 2020

"பிராம்பனன் "

இந்தோனேசியாவின் மாபெரும் இந்துக் கோவில் "பிராம்பனன் "(Prambanan).

இக்கோவிலானது மத்திய ஜாவாவின் யோக்யாகர்தா வரை 17 கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது. இந்தக் கோவில் "மும்மூர்த்தி " என அழைக்கப்படும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோருக்கு ஒரே இடத்தில் வெவ்வேறு கோவிலை ஏற்படுத்தியுள்ளனர். இதில் கம்பீரமாக காட்சியளிக்கும் 6 ஆலயங்களில் மத்தியில் மிகப் பெரியதாக இருப்பது சிவன் கோவில். 

இதுமட்டுமின்றி இக்கோவில்களை சுற்றி  240 க்கும் மேற்பட்ட சிறு சிறு கோவில்களும் உள்ளன. UNESCO இக்கோவிலை உலக புராதனமிக்க சின்னமாக அறிவித்து பாதுகாப்பினை ஏற்படுத்தியுள்ளது.

  வரலாறு :
9ம் நூற்றாண்டில் இந்தோனேசியாவின் மத்திய ஜாவா (Central Java) பகுதியில் சைவ கடவுள் சிவபெருமானுக்கு மிகப் பெரிய கோவில் எழுப்பப்பட இருந்த நிலையில் சைவ வைணவ சமயங்களை ஒருங்கிணைக்கும் விதமாக "மும்மூர்த்தி " கோவில் எழுப்பபப்பட்டது. 9ம் நூற்றாண்டில் பிராம்பனன் என்ற இந்தக் கோவிலானது மன்னன் ராகாய் பிகாதா (Rakai pikatha) கட்டத் தொடங்குகிறார். 

இவர் இறக்கவே  அவருக்கு பின் வந்த வழித்தோன்றல்கள் லோகபாலா அந்த பணியை மேற்கொள்ளும் போது புத்த மத மன்னர்களால் பணிகள் சீர்குலைக்கப் படுகின்றது. மிகப் பெரிய இடைவெளிக்குப் பிறகு இந்தக் கோவிலின் பணியை மாதாரம் அரசன் சஞ்சயா பணியை செம்மையாக முடித்து வேதங்கள் முழங்க குடமுழுக்கு விழா நடத்தப்பட்டு பூஜிக்ப்பட்டுள்ளது.

  அழிவுகள் :
நாளடைவில் "புத்த மதம் "வருகையினால் இந்து அரசர்கள் ஆட்சி வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் மக்கள் இடப்பெயர்வு ஏற்பட்டு பிராம்பனன் கோவில் பூஜையின்றி கைவிடப்பட்டுள்ளது.

 15 ம் நூற்றாண்டில் இஸ்லாம் மத வருகையினால் நிலைகுலைந்த இந்துக்கள் துன்புறுத்தப்பட்டு செல்வங்கள் கொள்ளையடிக்கப் பட்டு இந்துக்களை கொன்று குவித்து கட்டாய மதம் மாற்றியுள்ளனர் "சுல்தானியர்கள் ". கோவிலிலுள்ள விலை மதிப்பில்லாத பல பொருள்களை கொள்ளையடித்து கோவிலை சேதப்படுத்தியுள்ளனர்.

16 ம் நூற்றாண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தாலும் இயற்கையின் ருத்ர தாண்டவத்தினாலும் கோவில் முற்றிலும் சேதமடைந்துள்ளது. காலப்போக்கில் அடர்ந்த காடுகள் அடைத்து கோவில் மறைந்துள்ளது. 
 அங்கேயுள்ள மக்களுக்கு (இக்கோவிலின் வரலாறு சரியாக தெரியவில்லை காரணம் சொற்ப இந்துக்களே உள்ளனர் பலர் இன்று முஸ்லீம்) 

கண்டுபிடிப்பு :
 இந்தோனேசியா 19 ம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களின் கீழ் வரவே தாமஸ் ஸ்டீம்போர்ட் என்பவர் எதேச்சையாக இப்பகுதிக்கு வந்த போது மாபெரும் கட்டிடக் குவியலை கண்டு அதிர்ந்துவிட்டார். பல கிலோமீட்டர் வரை பரவி கிடந்த கட்டிடக் குவியலுக்கிடையே விலை உயர்ந்த சிற்பங்கள், மர வேலை பொருள்கள், தங்கக் குவியல்கள் என பல விலை மதிப்பிடமுடியாத பொருள்களை அள்ளிச் சென்றுள்ளனர். டச்சுக் காரர்கள் இவ்வளவு மிகப் பிரம்மாண்டமான கோவில் எப்படி அழிந்தது என வரலாற்றை ஆராய்ந்து மீண்டும் இக்கோவிலை எழுப்பத் திட்டமிடடனர்.

  1895 ம் ஆண்டு நில அளவைகள் மேற்கொள்ளப்பட்டு மறுஆய்வுப் பணிகள் ஏற்படுத்தப்பட்டது. 1918 ல் புதர்கள் அகற்றப்பட்டு 1930 ல் மதில்கள் மற்றும் மீள் அமைப்பினை ஏற்படுத்தியுள்ளனர்.

1935 ம் ஆண்டு முதலில் மத்தியில் இருக்கும் சிவன் கோவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது(154 அடி). முழுக்க முழுக்க கட்டிட இடிபாடு கற்களை கொண்டே 75% பணிகளை மேற்கொண்டுள்ளனர். சிறு சிறு ஆலயங்களை கட்ட எந்த திட்டமும் இல்லாமல் கைவிட்டுள்ளனர்.

 பாலி மற்றும் ஜாவா இந்துக்களின் வேண்டுகோளினால் 1990 ல் இந்தோனேசியா அரசால் அனைத்து ஆலயங்களும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
     2006 ல் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது (சுனாமி) . 2009 ல் நந்திக் கோவில் சீரமைக்கும் பணி முடிவடைந்து கோவில் பணி முழுமை பெற்றுள்ளது. 

இராமாயண, மகாபாரத காவிய நாடாகங்கள் இன்றுவரை நடித்து காட்டி கொண்டாடுகின்றனர் இந்தோனேஷிய இந்துக்கள்.

  இந்தோனேசியா அரசிற்கு மிகப் பெரிய சுற்றுலா வருமானத்தை தருகின்றது பிராம்பணன் கோவில். ஆண்டிற்கு சுமார் 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.

No comments:

Post a Comment