Wednesday, August 26, 2020

பாண்டிய நாட்டுத்திருப்பதிகள்பகுதி..22

பாண்டிய நாட்டுத்திருப்பதிகள்பகுதி..22
(சுஜாதா&வெங்கடேசன்6381369319)
திருநெல்வேலி...திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' எனச் சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' எனச் சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி, ...விடிகாலம் ஸ்டேஷனில் எறங்கறோம்.  வெளியே நிறைய ஆட்டோக்கள். லாட்ஜ் எதுவும் புக் செய்யவில்லை என்பதால் ஆட்டோக்காரர்களை நம்பி ஆக வேண்டும் என்பதால் விஜாரித்த ஒருவரிடம் (முருகன்) மீடியம் லாட்ஜில் கொண்டு விடச்சொன்னோம். இரண்டு கிமீல் நல்ல லாட்ஜ் குறைந்த செலவில் கிடைக்கும் ஆட்டோவுக்கு 100/- ஆகும் என்றவுடன் மதுரை அனுபவத்தில் தயக்கத்துடன்தான் ஏறிண்டோம். ஈனால் சகுந்தலா லாட்ஜ். ரூ650/- க்கு தாமிரபரணி அருகில் பிடித்து போனது. 
சிரம பரிகாரம் செய்துகொண்டு லாட்ஜுக்கு பின்புறம் தாமிரபரணியில் குளிக்க கிளம்பரோம். 
பல்வேறு மினரல்களை உள்ளடக்கிய நோய் தீர்க்கும் தீர்த்தமாகும். ஆற்றின் இருமருங்கிலும் காணப்படும் நாணல்களை அரவணைத்தோடும் தாமிரபரணி பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கியது.

நாணல் பல்வேறு விஷத்தன்மைகளை முறியடிக்கும் சக்தி வாய்ந்தது. தவிர பெரிய அளவிலான வெள்ளப்பெருக்கையும் தாங்கி நிமிர்ந்து நிற்கும் தன்மை கொண்டது. கோவில் கொடிமரங்கள் கோபுர கலசங்கள் மற்றும் வழிபாடு நிகழ்வுகளில் முக்கிய அங்கம் வகிக்கும் நாணல் தாமிரபரணியில் பரவி கிடக்கிறது. இந்த நாணலை தழுவி வரும் தண்ணீர் மிகவும் சுத்திகரிக்கப்பட்டு சுத்தமான குடிநீராக மாறி நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களின் தாகம் தீர்க்கும் தாயாய் விளங்கி வருகிறது...
திருச்சி காவிரி,கொள்ளிடம் முதல் கங்கை வரை ஆறுகளில் குளிக்கும் அனுபவங்கள் எங்களுக்கு நிறைய உண்டு! ஆனால் முற்றிலும் மாறுபட்டது தாமிரபரணி அனுபவமாகும்! இங்கு பாறைகள் அதிகம். சுழற்சியும், நீரோட்டத்தின் வேகமும் அதிகமாக இருக்கும். 
அயிரை மீன்கள் உள்ளங்கால்களை கடிக்க குதூகலமாக இருந்தது!இலவச pedicure...

ஒருபக்கம் கொக்குகள், பறவைகள் வீற்றிருந்தன. நீரோட்டம் வேகமாக இருந்தது. செடி, கொடிகள் படகுகளைப் போல மிதந்து சென்றன! அது நதிக்கு அழகு சேர்த்தது.
மீண்டும் லாட்ஜ் வந்து உடை மாற்றி பக்கத்திலேயே பாலத்திற்கு அடியில் ஓட்டலில் சுவையான ராகி பணியாரம் சாப்பிட்டு திருக்குறுங்குடி செல்ல பஸ்ஸ்டான்டுக்கு டவுன் பஸ் ஏற்றோம். 
படம் ...தாமிரபரணி

No comments:

Post a Comment