திருக்கார்வானம் உலகளந்த பெருமாள் திருக்கோயில்.
ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் ஸமேத ஸ்ரீ கார்வானப் பெருமாள் {ஸ்ரீ கள்வர் பெருமாள்} திருக்கோவில்,
திருக்கார்வானம் திவ்யதேசம், காஞ்சிபுரம் மாவட்டம்.
திருக்கார்வானம் உலகளந்த பெருமாள் திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருக்கார்வானம் எனும் ஊரில் அமைந்துள்ளது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 54 வது திவ்ய தேசம் ஆகும். 'கார்வானத்துள்ளாய் கள்வா' என இத்தலத்து பெருமாளின் பெயரையும் சேர்த்து திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது இத்தலம்.
மூலவர் – கார்வானப்பெருமாள், கள்வர் பெருமாள்
தாயார் – கமலவல்லி நாச்சியார்
தீர்த்தம் – கவுரி தீர்த்தம்
பழமை – 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் – திருக்கார்வானம்
ஊர் – காஞ்சிபுரம்
மாவட்டம் – காஞ்சிபுரம்
மாநிலம் – தமிழ்நாடு
“கார்வானத்துள்ளாய் கள்வா” என இத்தலத்து பெருமாளின் பெயரையும் சேர்த்து திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது இத்தலம். உலகளந்த பெருமாள் கோயிலுக்குள் இருக்கும் திருநீரகம், திருக்காரகம் ஆகிய இரண்டிற்கும் இல்லாத தனிச்சிறப்பு பெற்றது இத்தலம். “நீரகத்தாய்“, “காரகத்தாய்” என திவ்ய தேசத்தை மட்டும் மங்களாசாசனம் செய்த திருமங்கையாழ்வார், இதை மங்களாசாசனம் செய்யும் போது மட்டும் பெருமாளின் பெயரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்து விட்டார். திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்ய இங்கு எழுந்தருளிய போது இந்தக்கோயிலில் உள்ள திருநீரகம், திருக்காரகம் ஆகிய இந்த மூன்று தலங்களும் “திருஊரகத்துடன்‘ வந்து விட்டதா?. அல்லது வெவ்வேறு இடங்களில் இந்த திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்தாரா? அல்லது எந்த காலச்சூழ்நிலையில் இந்த மூன்று திவ்ய தேசங்கள் இங்கு வந்தது என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.

No comments:
Post a Comment