பாண்டிய நாட்டுத்திருப்பதிகள் பகுதி12
(sujatha&venkatesan)6381369319
நாயக்கர் மகால் காட்சி கான்சலானதால எங்க போகலாம்னு கூகுள் நோண்டறார். கள்ளழகர்தான் போக முடியல் மதுரை வந்தா அழகர் தங்கும் பெருமாள் கோயில் ஒன்னு வண்டியூர் தாண்டி இருக்குன்னு டவுன் பஸ்ல அழைச்சிண்டு போறார். பஸ் இறங்கின ஒடனே மழை கொட்ட ஆரம்பிக்கறது. சின்ன கோயில்னாலும் பெருமாள் மழைக்கு ஒதுங்க எடம் கொடுத்ததுக்கு தேங்ஸ் சொல்லி சேவிக்கிறோம். அங்கேர்ந்து வண்டியூர் மாரியம்மன் கோயிலுக்கு ஒரு ஆட்டோ பிடிச்சி வரோம்.
இடக்காலின் மீது வலக் காலைப் போட்டபடி இந்த அம்பிகை அமர்ந்திருப்பது அபூர்வ திருக்கோலம். போருக்குச் செல்லும் முன்பு வெற்றியை வேண்டி மன்னர்கள் வழிபட்ட மாரியம்மனை, தேர்வுகளிலும் விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டி வழிபட்டுச் செல்கிறார்கள் பக்தர்கள். அரசமர விநாயகர், பேச்சியம்மன் ஆகியோரும் இங்கே காட்சி அருள்கின்றனர்.
மழை நிக்கல.நல்ல பசி வேற. கோயில் பிரசாதம் நாங்க வரதுக்குள்ள தீர்ந்துடறது…
எதிரே தெப்பக்குளம்.
திருமலை நாயக்கர் அரண்மனை கட்டுவதற்காக வேண்டிய மணலை மதுரை மன்னராக இருந்த திருமலை நாயக்கரால் இங்கு தோண்டப்பட்டது. மணல் தோண்டியதால் பள்ளமாக இருந்த அப்பகுதியை சீரமைக்க எண்ணிய மன்னன் அப்பகுதியை சதுர வடிவில் வெட்டி, 1645ல்தெப்பக்குளமாக மாற்றி அதன் நடுவே வசந்த மண்டபம் ஒன்றினையும் கட்டினார்.
இருட்டு மழைல நாங்க தங்கியிருந்த லாட்ஜ்க்கு எப்படி வழி கேக்கறது எங்க சாப்பிடறதுன்னு தெரியல. டவுனுக்கு போகிற எதோ ஒரு பஸ்ல ஏறி எதோ ஒரு வாசல்கிட்ட எறங்கிக்கறோம். ஓட்டல் விஜாரிச்சு டிபன் முடிச்சிக்கறோம். நல்ல வேளையா லாட்ஜ் சாவியில் கூடலழகர் தெப்பக்குளம் எதிரில்னு போட்டிருந்தது. ஆனால் லாட்ஜுக்கு எதிரே தெப்பக்குளம் எதையும் பார்ததா நினைவில்லை. எப்படியோ ஒரு ஆன்டோ பிடித்து ஊரெல்லாம் சுத்தி லாட்ஜ கண்டு பிடிக்கறோம். தெப்பக்குளத்தை சுத்தி ஆக்ரமிச்சு கடை கட்டியிருக்காங்காங்க அதான் தெரியல.
கார்த்தால கூடலழகர் கோயில் திருப்பள்ளி எழுச்சி சேவிச்சிட்டுதான் மத்த கோயில் ப்ளான் பண்ணனும்னு இவர்ட்ட சொல்லி அலாரம் வைக்கறேன்.
கார்த்தால நான் தயாரானாலும் இவர் தூங்கிண்டு இருக்கார். எழுப்பி கோயிலுக்கு வரச்சொல்லிட்டு
நான் தனியா போறேன். திருப்பளி எழுச்சி முடிஞ்சதும் பொங்கல் சூடா தரா. பாதி சாப்பிட்டு இவருக்காக வச்சிண்டு வரசொல்லி போன் பண்றேன். இவர் வந்த உடன் மறுபடி தரிசனம் பண்ணிட்டு பத்து ரூபாய் கட்டி மேலே ஏறி விமானம் பாக்கறோம்.
பெரியார் பஸ்ஸ்டாண்ட் போய் திருமோகூர் போக வழி கேக்கறோம். மாட்டுத்தாவணி போய் அங்கேர்ந்து ஒத்தக்கடை போய் பஸ் மாறனுங்கறா..
மாட்டுத்தாவணியிலேர்ந்து டவுன் பஸ்ல போய் ஒத்தக்கடை எறங்கறோம். இவர் கூகுள் பார்த்துட்டு ஒத்தக்கடை நரசிம்மர் ஃபோமஸ் அவர தரிசனம் பண்ணலாம்கறார்.
…
சமணம், சைவம், வைணவ வழிபாட்டுத் தலங்களைக் கொண்ட மலை, இயற்கையில் யானை வடிவில் அமைந்த அழகிய மலை, பாண்டியர், சோழர், நாயக்கர் என பலரும் திருப்பணி செய்த ஆலயம், குடவரை கோவில்கள் அமைந்த மலை, திருமோகூர் பெருமாள் கஜேந்திர மோட்சம் நிகழ்த்தும் தலம் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாக விளங்குவது, மதுரை மாவட்டத்தில் உள்ள, யானை மலை யோக நரசிம்மர் ஆலயம்.
யானை மலை எனும் இந்த மலையில் சமணம், சைவம், வைணவம் முதலிய மூன்று ஆலயங்களின் வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளன. நடுநாயகமாக யோக நரசிம்மர் அமர்ந்துள்ளார். அருகில் லாடர் கோவில் எனும் முருகன் ஆலயம், உச்சியில் சமணர் குகைகள், யானைமலையின் வடகோடியில் வேத நாராயணப் பெருமாள் கோவில் என பக்தி மணத்தோடு இந்த மலை விளங்குகிறது.
கி.பி. முதலாம் நூற்றாண்டு முதல் நாயக்கர் காலம் வரை பல்வேறு காலகட்டங்களில் இங்கு திருப்பணிகள் செய்யப்பட்டிருக்கின்றன. தமிழ்பாடல், தமிழ் வட்டெழுத்துக்கள், பாறைச் சிற்பங்கள், குடவரைக் கோவில்கள், கட்டிடக் கோவில்கள் இந்த மலையில் நிறைந்து காணப்படுகின்றன. இந்தப் பகுதியில் சமணர் வாழ்ந்ததை, திருஞானசம்பந்தர் தமது தேவாரப் பதிகங்களில் குறிப்பிட்டுள்ளார்.
முதல் வரகுண பாண்டிய மன்னன் அரசவையில் அமைச்சராக விளங்கிய மாறன்காரி மற்றும் அவனது தம்பி மாறன் எயினன் ஆகிய இருவரால், குடவரைக் கோவில் மற்றும் முன்மண்டபம் எழுப்பப்பட்டதை வரலாறு எடுத்துக்காட்டுகிறது.
மதுரையில் இருந்து இத்தலம் வரும் போது, பிரமாண்ட மலை நம்மை வரவேற்கும். அங்கு யானை ஒன்று முன்புறம் துதிக்கையை நீட்டி அமர்ந்த கோலத்தில் இருப்பதைக் கண்டு வியக்கலாம். இதன் காரணமாக இம்மலை ‘யானை மலை’ ஆனது.
மிகவும் புராதனமான கோவில் இந்த யானைமலை ஒத்தக்கடை யோகநரசிம்மர் திருக்கோவில். குடைவரை கோவில்களை கட்டுவதில் கைதேர்ந்த பல்லவர்கள் இக்கோவிலை கட்டியதாகவும், பிற்காலத்தில் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் பலர் இக்கோவிலை நன்கு பராமரித்து வந்ததாகவும் வரலாறு கூறுகிறது. இக்கோவிலின் இறைவனாக ஸ்ரீ யோக நரசிம்மரும், இறைவியாக நரசிங்கவல்லி தாயாரும் இருக்கின்றனர். நரசிம்மர் கோவில்களிலேயே மிகப்பெரும் நரசிம்மரின் மூலவர் விக்கிரகத்தை கொண்ட கோவிலாக இந்த யானைமலை ஒத்தக்கடை யோக நரசிம்மர் கோவில் இருக்கிறது.
பிரதோஷம் என்பது சிவபெருமானுக்குரிய தினமாகும். ஆனால் தேய்பிறை பிரதோஷ காலத்தில் மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்ததால் இக்கோவிலில் தேய்பிறை பிரதோஷ தினத்தில் மிக சிறப்பான பூஜைகள் செய்யப்படுகின்றன. இச்சமயத்தில் நரசிம்ம மூர்த்தியை வழிபட்டால் கல்வி பயலும் மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். தொழில், வியாபாரங்கள் நன்கு விருத்தியாகும். துஷ்ட சக்திகளின் தாக்கம் மற்றும் மரண பயம் நீங்கும். இச்சமயத்தில் நரசிம்மரோடு நரசிங்கவல்லி தாயரையும் வணங்க திருமண தடை தாமதம் போன்றவை நீங்கும்.
மேலும் கொடூரமான, கோபக்கார கணவர்களை அடைந்த பெண்கள் இங்கு வேண்டினால், அவர்களின் கணவர்களின் கோப குணங்கள் மாறி, மனைவி மற்றும் பிள்ளைகளிடம் அன்பாக நடக்கும் நபராக மாறுவார்கள் என்பது அனுபவம் வாய்ந்த பக்தர்களின் நம்பிக்கை…..அப்படின்னு படிச்சி சொல்றார். நான் என்ன வேண்டிக்கனும்னு பயந்துண்டே இவர கேக்கறேன்.. முறைக்கிறார் ..,
படம்(ஆனைமலை நரசிம்மர் கோயில்,மூலவர்)
தொடரும்……


No comments:
Post a Comment