ஆயர்வேதத்தின்படி, உடலின் இடது மற்றும் வலது பக்கங்கள் வேறுபட்டவை.
அவற்றின் செயல்பாடுகளும்மாறுபட்டவை. உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கு இடதுபக்கமாக உடலை சாய்த்தபடி தூங்கவேண்டும் என்று ஆயுர்வேதம் அறிவுறுத்துகிறது.சுகாதார நிபுணர்களும் அதை
பரிந்துரைக்கிறார்கள்.
இடது புறமாக ஒருக்களித்து தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள்:
செரிமானம்: வயிறு மற்றும் கணையம் இடது பக்கத்தில் அமைந்திருப்பதால், அந்த பக்கத்தில் தூங்குவது அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்த உதவும். கணைய நொதிகளும் தேவைப்படும்போது சுரப்பதும் எளிதாகும்.
உணவு கழிவுகளை அகற்றும் நடைமுறையும் சுலபமாக நடக்கும். செரிமானம் ஆகாத உணவுகள் மற்றும் நச்சுகள் சிறுகுடலில் இருந்து பெருங்குடலுக்கு நகர்ந்து காலையில் மலமாக வெளியேற்றப்படுகின்றன. இரவில் இடது பக்கத்தில் தூங்குவது இந்த நடைமுறையை எளிதாக்கும்.
சிறு குடலில் உற்பத்தியாகும் மலப்பகுதிகள், இலியோசீக்கல் வால்வு எனும் பகுதி வழியாக, வலதுபகுதியில் அமைந்துள்ள ஆரம்ப நிலையான பெருங்குடலில் சேர்த்து, வலது குடல்வழியாக, வயிற்றின் குறுக்கே நகரும் பெருங்குடல் மூலம், இடது பக்கம் அமைந்துள்ள இறங்கும் பெருங்குடலில் நகருவதால், புவி ஈர்ப்பு சக்தியின் மூலமாக, மலமானது எளிதில் நகர்வதற்கு உதவுகிறது. இதனால் மறுநாள் காலை, மலக்கழிவானது எளிதில் ஏற்படும்.
#இதய #ஆரோக்கியம்: இடது பக்கத்தில் இதயம் இருப்பதால் இடது பக்க
மாக தூங்குவது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் ஈர்ப்பு விசையால் இதயத்தை நோக்கி ரத்த ஓட்டம் சிறப்பாக நடைபெறும். இது இதயத்திற்கு சுமையை குறைத்து உடல் நன்றாக ஓய்வெடுக்க உதவும்.
கரியமில வாயுவானது இன்பீரியர் வீனேகேவா எனும் மெல்லிய சுவருடன் கூடிய குழாய்மூலம் கீழ் உடலில் சேர்ந்து ரத்தத்தில் சேகரிக்கப்பட்டு, உடலின் வலதுபக்கத்தில் நகர்ந்து இதயத்தை வந்தடைவதால், இடது பக்கம் சரிந்து படுப்பதன்மூலமாக, உடல் உறுப்புகள், இடது பக்கம் சரிவதன் விளைவாக, இந்த ரத்தக்குழாயில் அழுத்தம் தவிர்க்கப்பட்டு, அதன் தொழிலை சிறப்பாகச் செய்யமுடிகிறது. இதயமும் கரியமிலவாயுவை நன்றாக உள்வாங்கி, வலது கீழ் பக்கத்திலுள்ள அறைக்குக் கொண்டு சென்று, நுரையீரலுக்கு எளிதாக எடுத்துச் செல்ல முடிகிறது. இதனால் இதயத்தின் செயல்பாட்டில் தொய்வு ஏற்படாமல், அதன் வேலைப்பளுவும் எளிதாகிறது.
இதயத்தின் இடதுகீழ் பக்கம் அமைந்துள்ள வெண்டிரிக்கல் எனுமிடத்திலிருந்து பெரும் தமனி வழியாக, ரத்தத்திலுள்ள பிராண வாயுவானது, இடதுபக்கம் படுக்கும்போது புவியீர்ப்பு சக்தியினால் எளிதாக எடுத்துச் செல்லப்படுகிறது. இதயத்தினுடைய சுருங்கும் தொழிலானது
#கர்ப்பிணிகள்: கர்ப்பிணிப் பெண்கள் இடது புறமாக ஒருக்களித்து
தூங்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதன் மூலம் கருப்பை மற்றும் கருவுக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். முதுகில் ஏற்படும் அழுத்தத்தையும் குறைக்கும். குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு நஞ்சுக்கொடிக்கு போதுமான ஊட்டச் சத்துகளை வழங்கவும் உதவும். இடதுபுறமாக தூங்கும்போது முழங்கால்களை சற்று வளைத்து கால்களுக்கு இடையே தலையணையை வைத்துக்கொள்ளலாம்.
#குறட்டையை தடுக்கும்: இடதுபுறமாக திரும்பி தூங்குவது குறட்டையை
நிறுத்துவதற்கும் உதவும். அப்படி தூங்குவது நாக்கையும் தொண்டையையும் நடுநிலையான நிலையில் வைத்திருக்கவும் உதவும். அதனால் சுவாசம் சீராக நடைபெறும். சுவாசப்பாதைகளுக்கும் எந்த இடையூறும் ஏற்படாது.
#மண்ணீரல் இடதுபக்கம்அமைந்துள்ளது. பெரிய நிணநீர் க்ரந்தியானது இது, நிணநீரை சுத்தப்படுத்துவதுடன் ரத்தத்திலுள்ள சில கசடுகளையும் சுத்தப்படுத்துகிறது. இடது பக்கம் படுப்பதால், நிணநீர் மற்றும் ரத்தம் ஆகியவை அதனுள் எளிதாக நுழைகின்றன. இதனால் மண்ணீரல் தன்தொழிலை சிறப்பாகச் செய்ய முடியும். இதய சுருக்கத்தை விட, தசை சுருக்கத்தின் மூலமாகத்தான் நிணநீரிலுள்ள அணுக்கள் விரைவாக நகருகின்றன என்பதால் இடது பக்கம் படுப்பதன் மூலம், தசை சுருக்கத்தின் செயல்பாடும்
#கல்லீரலும், #பித்தப்பையும் வலது பக்கம் வயிற்றில் அமைந்துள்ளன. இடது பக்கம் படுப்பதால் அவை மேலே வந்து விடுவதால், பித்தநீரானது, உணவுப்பையின் நடுப்பகுதியில் எளிதாக வந்து சேர்ந்து, நெய்ப்புப்பொருட்களைச் செரிப்பதற்கும், அமிலங்களைச் சமன்படுத்துவதற்கும் பெரிதும் உதவுகிறது. உணவின் சீரான செரிமானத்தால், அதன் சத்து முழுவதும் உடல் எளிதாக பெறும் என்பதால், சோர்வு எனும் நிலை தவிர்க்கப்படுகிறது. சுறுசுறுப்பாக உடல் இயங்கவும்
படுக்கையிலிருந்து எழும் போது இடதுபக்கம் சரிந்து வலதுகையால் படுக்கையை அழுத்தி எழுந்துகொள்வதால், இடுப்பு எலும்பு மற்றும் கழுத்து எலும்புகளில் வலி ஏற்படாமல் தவிர்க்கலாம்.
காலையில் எழும்போது சுறுசுறுப்பாக இல்லாமல் சோர்வாக உள்ளதாகச் சிலர் உணர்வார்கள். இது உண்ணும் உணவின் செரிமானத் தாமதத்தால் வயிற்றில் வாயு நிறைந்து ஏற்படக்கூடும். முன் குறிப்பிட்ட வகையில், வாழ்க்கை முறையை மாற்றி அமைப்பதால், காலையில் சோர்வை தவிர்த்திடலாம்.
இரவு முழுவதும் இடது பக்கம் படுக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. மலர்ந்தும் கிடக்கலாம். வலது பக்கம் படுப்பதையும், குப்புறப்படுப்பதையும் பெருமளவு தவிர்க்கலாம். வயிற்றிலுள்ள க்லேதகம் எனும் கபம், உணவை திரவ நிலைக்கு மாற்றுகிறது. பாசகம் எனும் பித்தம் உணவினுடைய செரிமானத்தை செய்து சத்தான பகுதியையும் உணவினுடைய கழிவுகளையும் பிரித்து பெருங்குடல் பகுதிக்கு அனுப்புகிறது. சமானன் எனும் வாயு உணவை பாசக பித்தத்திற்கு அருகில் எடுத்துத் சென்று செரிமானத்திற்கு உதவுகிறது. பெருங்குடல் பகுதியிலுள்ள அபானன் எனும் வாயு உணவுச் சக்கையிலிருந்து நீரைப் பிரித்து குடல் வழியாக உறிஞ்ச உதவுகிறது. இவை அனைத்தும் இடதுப் பக்கமாக படுப்பதன் மூலமாக விரைவாகச் செயல்பட
உதவுகிறது.
▁ ▂ ▄ ▅ பகிர்வு ▅ ▄ ▂ ▁
☆அறிந்ததும்🌹அறியாததும்☆
꧁༺ ࿇༲࿆༫࿆࿂࿆༗ ༻꧂
🌹🅨 🍃 🅤 💝 🅥 🌺 🅐 💝
🏵️🏵️⊰⊹⊱🏵️🏵️
🌹•¨•.¸👉🌺👈 ¸.•¨•🌹
🌹வாழ்க தமிழ் வளர்க தமிழ்🌹
No comments:
Post a Comment