Thursday, August 13, 2020

மகாபாரதம் பகுதி- 91

🚩மகாபாரதம் பகுதி- 91

குருஷேத்திர      போர்...!

சூரியன் மறைந்து விட்டதாக நம்பி, கௌரவப்படை மகிழ்ச்சி குரல் எழுப்பினர்.ஆனால் கிருஷ்ணன் தனது கையால் சூரியனை மறைத்ததைச் சொன்னவுடன் அருச்சுனன் உத்வேகம் கொண்டான்.இருளிலும் சப்தம் வரும் இலக்கை நோக்கி அம்பு எய்யும் அருச்சுனன் தனது காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு கௌரவப்படையில் ஜயத்திரதனின் குரல் சத்தம் வரும் திசையை நோக்கி காத்திருந்தான்.சூரியன் மறைந்துவிட்டான் என துரோணர் அறிவிக்கவே கௌரவப்படைகளுக்கு நடுவே ஜயத்திரதன் ஓங்கி சத்தமிட்டு சிரித்தான்.இந்த நேரத்திற்காகக் காத்திருந்த கிருஷ்ணர் அர்ஜுனா அதோ தெரியுது பார் ஜயத்ரதனின் தலை அருச்சுனன் குரல் வந்த திசையில் அம்பை விட்டான்.அம்பு சரியாக ஜயத்திரதனை தாக்கியது.சூரியன் மறைந்த பிறகு தாக்குவது அதர்மம் என துரோணர் கூச்சலிடும் போதே கிருஷ்ணன் உடனே சூரியனை மறைத்திருந்த தனது கையை எடுத்தார்.சூரியன் மீண்டும் வானில் பிரகாசித்தது. ஜயத்திரதனின் தலையைத் துண்டித்த அம்பு அதைச் சுமந்து கொண்டு விருத்தாக்சத்ரனின் கையில் விழச்செய்தது திடுக்கிட்டு விருத்தாக்சத்ரனன் எழவே ஜயத்திரதன் தலை உருண்டு தரையைத் தொடவே ஆயிரம் துண்டுகளாக வெடித்துச் சிதறியது
இரவிலும் போர் தொடுத்த " கிருஷ்ணன் பகலை இரவாக்கலாம் என்றால் நாம் ஏன் இரவைப் பகலாக்கக் கூடாது",என்று போரை சூரியனின் மறைவிற்குப் பிறகும் நடத்தக் கட்டளையிட்டார். போர்க்களம் இருள் சூழ்ந்தது வீரர்களுக்கு வெளிச்சம் தெரிவதற்காக சில வீரர்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு விளக்குகளைப் பிடிக்க துரியோதனன் கட்டளை இட்டான்.அந்த விளக்கு ஒளியில் துரோணர்,துரியோதனன் மற்றும்கிருபர் தனது படைகளுடன் பாண்டவர்ப் படையை நோக்கி நகர்ந்து அழிக்க முற்பட்டனர்,சோர்ந்து போயிருந்த பாண்டவர்ப் படை இதை எதிர்பார்க்காததால் பலத்த சேதம் அடைந்தது.அந்த இரவில் பாண்டவர்களின் மாமனார் துருபதனையும்,பாண்டவர்களுக்கு கடைசியில் அடைக்கலம் கொடுத்த மத்ஸ்ய நாட்டு அரசன் விடாரனையும் துரோணர் கொன்றார். ஒரு பக்கம் கடோத்கஜன் கௌரவபடைகளை அழித்து கொண்டு இருந்தான்  இதை பார்த்து கொண்டு இருந்த துரியோதனன்  கர்ணா அதோ அந்த கடோத்கஜனினால் நம் படைக்கு பெரும் இழப்பு நீ அவனை எதாவது செய்ய வேண்டும் உடனே கர்ணன் தனக்கு இந்திரன் தந்த வேலை கடோத்கஜனை நோக்கி விட்டான்...!

குருஷேத்திரம் நாளை தொடரும்...!

ஶ்ரீராம ஜெயம்🙏

No comments:

Post a Comment