Thursday, August 13, 2020

பாண்டிய நாட்டுத்திருப்பதிகள் பகுதி 09


பாண்டிய நாட்டுத்திருப்பதிகள் பகுதி 09

by (sujatha&venkatesan)6381369319…திரு மெய்யம்….

இது ஒரு முத்தரையர் காலத்திய குடைவரைக் கோவிலாகும். திருமயம் மலைச் சரிவில் ஒரே கல்லினால் அமைந்த அதிசயிக்கத்தக்க குடைவரைக் கோவிலில் இரண்டு பெருமாள் சன்னதிகள் உள்ளன. வேலைப்பாடமைந்த கற்றளியான சத்தியமூர்த்தி கோயில் அவற்றுள் ஒன்று. இக்கோவிலுக்கு ஒரே ஒரு சுற்றுச்சுவர் மட்டும் உள்ளது. எனவே இந்த சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலை தனியே திருச்சுற்று சுற்றி வரமுடியாது. காரணம் மூலவர் சந்நிதி குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளதேயாகும்.

ஆதிரங்கம். ..
சதுர் யுகம் என்பது ஒரு யுகம் முடிந்து மறு யுகம் பிறக்கும் காலச் சக்கரத்தைக் குறிக்கும் அளவு. இந்த அளவின் படி திருவரங்கத்து பெருமாள் 64 சதுர் யுகங்களுக்கு முன்னால் தோன்றினார். ஆனால் திருமெய்யம் சத்யகிரிநாதன் (அழகிய மெய்யன்) 96 சதுர் யுகங்களுக்கு முன்னரே தோன்றியவராதலால், திருமெய்யம் திருத்தலம் ஆதிரங்கம் என வழிபடப்படுகிறது.

இரண்டு மூலவர்கள்....

இத்தலத்தில் சோமச்சந்திர விமானத்தின் கீழ், நின்ற கோலத்தில் சத்தியமூர்த்தி எனும் நாமம் தாங்கி ஒரு கரத்தில் சங்குடனும் மற்றொரு கரத்தில் பிரயோகச் சக்கரத்துடனும் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு என்றும் சத்தியமாகத் துணை நிற்பேன் என்று இத்தல இறைவன் வாக்குறுதி தந்ததால் இவருக்கு ’சத்தியமூர்த்தி’ என்ற திருப்பெயர் வந்தது.

மூலவர் திருமெய்யர்    

இக்குடைவரைக் கோவிலின் மூலவர் ‘யோக சயன மூர்த்தி’யான ’திருமெய்யர்’ உருவம் ஸ்ரீரங்கத்தை விட மிகப்பெரிய உருவம் தாங்கியவர். திருமெய்யத்தின் பள்ளி கொண்ட பெருமாள் உருவம் இந்தியாவிலேயே மிகப்பெரியது. சுற்றிலும் தேவர்கள், ரிஷிகள், பெருமாளின் நாபிக் கமலத்திலிருந்து புறப்படும் தாமரை மலரில் பிரம்மாவும், மார்பில் குடியிருக்கும் மகாலட்சுமியும் எழுந்தருளியுள்ளார்கள். திருமெய்யத்தின் பள்ளி கொண்ட பெருமாள் உரு வம் இந்தியாவிலேயே மிகப் பெரியது. 

சுற்றிலும் தேவர் கள், ரிஷிகள், பெருமாளின் நாடிக் கமலத்திலிருந்து புறப்படும் தாமரை மலரில் பிரம்மாவும், மார்பில் குடி யிருக்கும் மகாலட்சுமியும் எழுந்தருளியுள்ளார்கள். மூலவரான பெருமாளுக்கு 12 வருடங்களுக்கு ஒருமுறை தைலக்காப்பு இடப்படுகிறது. ‘மது’ ‘கைடபர்’ என்னும் இரு அசுரர்களிடமிருந்து பூமி தேவியையும், தேவர்கள், கின் னரர்களையும் காப்பாற்றி அருள்கிறார் என்கிறது தல வரலாறு.

இத்தலத்தின் தாயார் உஜ்ஜீவனத்தாயார் (ஸ்ரீஉய்ய வந்த நாச்சியார்) எனும் திருநாமம் தாங்கி எழுந்தருளியுள்ளார். இத்தாயாரை வழிபட்டால் குழந்தைபேறு நிச்சயம்; பல வாழ்க்கை நலன்களும் விளையும்; பேய், பிசாசு பிடித்தவர்கள், நரம்புத் தளர்ச்சி நோயில் துன்புறுபவர்கள் நன்மை பெறுவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் மனநிலை பாதிப்புகளுக்கு உடனடியாக பலனளிக்கும் பரிகாரத் தலம் இத்தாயாரின் சந்நிதி. இவர் படிதாண்டா பத்தினி என்பதால், வீதிஉலா வருவது இல்லை. தரிசிக்க திருக்கோயிலுக்குச் சென்றால் மட்டுமே முடியும்.

பழங் காலத்தில் தினமும் இரவில் தாயாருக்கு புட்டும் பாலும் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்து வரும் வழக்கம் இருந்து வந்தது. பின்னர் பண வசதி இன்மையால் இது நின்றுவிட்டது.

குழந்தைப்பேறு இல்லாதோர், பேய் பிசாசு பிடித்தவர்கள், நரம்புத்தளர்ச்சி நோயில் துன்புறுபவர்கள் நலம் பெற தாயாரிடம் வேண்டுதல்கள்

தசாவதார மண்டபத்தில் உள்ள தூண்களில் உள்ள சிற்பங்கள் சிறப்பானவை. தூண்களில் உள்ள தசாவதார திருக்கோலங்கள் மற்றும் துவஜஸ்தம்பத்திற்கு அருகில் உள்ள தூணில் உள்ள ராமாவதாரம் மற்றும் வாமன அவதாரம் சிற்பங்கள் அழகு வாய்ந்தவை.

திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். அந்த பாசுரத்தை உரத்து சொல்கிறோம்.  

மையார் கடலும் மணிவரையும் மாமுகிலும் கொய்யார் குவளையும்
காயாவும் போன்று இருண்ட மெய்யானை மெய்ய மலையானைச்
சங்கேந்தும் கையானை கைதொழாக் கையல்ல கண்டோமே.

…..பாண்டிய நாட்டு திவ்ய தேசங்களில் இராமநாதபுரம் சென்று திருக்கோஷ்டியூர் பின் வரும் வழியிலுள்ள திருக்கோஷ்டியூர், திருமயம்சேவித்தோம்.

அடுத்து மதுரை சுற்றியுள்ள ஐந்து தலங்களையும் திருநெல்வேலி சுற்றியுள்ள 10 தலங்களையும் ஒரே பயணத்தில் கார்,வேன் மூலமாக அல்லது யாத்ரா சர்வீஸ் மூலமாக பார்க்கலாம். நாங்கள் இருவர் தனிப்பட்டு பஸ் மூலமாக பயணித்தமையால் இதனை தனித்தனி பயணங்களாக மேற்கொண்டோம். 
எனவே அடுத்து மதுரைப்பயணம் தொடரும்.



No comments:

Post a Comment