🕉️🚩🕉️🚩🕉️🚩🕉️
அடியவர் துயர்நீக்க சிதம்பரம் அம்பலவாணர் காட்டிய சித்தர்
🕉️🚩🕉️🚩🕉️🚩🕉️👌
💗சிங்கம்பட்டி ஜமீன் பலரும் அறிந்தது.சிங்கம்பட்டி ஜமீனை நிர்வகித்த
ஜமீன்தார் ஒருவருக்கு மகோதரம் என்ற நோய் வந்தது. அவர் தாங்க
முடியாமல் துடித்தார்.மருத்துவர்கள் கைவிட்டனர்.தில்லை நடராஜப்
பெருமான் துயர் நீக்குவார் எனக் கருதிச் சிதம்பரம் சென்றார் ஜமீன்தார்.
💗சிவகங்கையில் நீராடி,திருநீறு பூசி, பக்தியுடன் ஆறுகாலப் பூசையிலும், இறைவனைத் தரிசித்துத் துயர்நீக்க வேண்டினார்.
💗பஞ்சாட்சரத்தை நன்கு ஜெபம் செய்தார்.ஆனால் நோய் நீங்கவில்லை.48 நாட்கள் கடந்தன.தூக்கம் வரவில்லை.” நோய் நீங்காமல் ஊர் சென்றால் ,என்னை மட்டுமன்று,உன்னையும் கேலி பேசுவர்.எனவே,நாளை காலைக்குள் இந்த நோய் நீங்கவில்லை எனில் உன் திருவடி சாட்சியாகச் சிவகங்கையில் விழுந்து உயிர் துறப்பேன்”என்று அழுதபடி உறங்கி விட்டார்.
💗ஜமீன்தார் கனவில் அம்பலவாணன் தோன்றி “என்னால் உன் நோயைத் தீர்க்க முடியாது.தெற்கே பசுவந்தனைஎன்ற ஊரில் சங்கு சுவாமி என்ற என் அன்பன் இருக்கிறான்.அவனைப் போய்ப்பார்.அவன் நோயை நீக்குவான்.”என்றுகூறி அருளினான்.
💗விடிந்ததும் இறைவனை வணங்கிப் பசுவந்தனை (தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டிக்கு அருகில்)கிளம்பினார்ஜமீன்தார்.போய் விசாரித்தார்.அப்படியாரும் இல்லை என்றனர் ஊரார்.பிறகு ஒரு பித்தன் தான் அந்தப் பெயரில் இருக்கிறான் என்றனர்.ஒரு பாழ்மண்டபத்தில் போய்த் தரிசித்தார்.கொண்டுபோன பழத் தட்டை வைத்து வணங்கிக் கண்ணீர் விட்டார்.
💗சங்குசுவாமிகள் நிட்டையில் இருந்து, இயல்பு நிலைக்கு வந்து “என்ன ,
நடராஜப் பெருமான் தன்னால் தீர்க்கமுடியாது என்று அனுப்பினாரா? அழகு! இதைச் சாப்பிடு!” என்று கூறிப் பழத்தட்டில் இருந்து ஒரு பழத்தை எடுத்துக்கொடுத்தார்.உண்டவுடன் ஜமீன்தார் நோய் உடனே நீங்கியது. ஜமீன்தார்ஆனந்தக் கூத்தாடினார்.பல்லக்கில்சுவாமிகளை வைத்து ஊர்வலம் வந்தார்.அப்போதுதான் சுவாமிகள் பெருமையை
ஊரும் உலகமும் அறிந்தன.
💗நடராஜப் பெருமானால் நோயை நீக்க முடியாதா?சங்கு சுவாமிகள் பெருமையை உலகறியச் செய்த நாடகம் அது.
💗பசுவந்தனையில் அவர்தம் சமாதி உள்ளது.தரிசித்து அருள்பெறலாம்.
🙇♀️🙏🏻🙇♀️
திருச்சிற்றம்பலம்

No comments:
Post a Comment