Tuesday, July 21, 2020

காலதேவிதிருக்கோவில்

🙏 வாழ்கவளமுடன்👩‍👩‍👧‍👧
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
 காலதேவிதிருக்கோவில் 

🔯இராசி 12,நட்சத்திரங்கள் 27,
நவக்கிரகங்கள் 9 அமைந்துள்ள காலதேவி அம்மன் சிலை  zoom செய்து பார்த்தால் தெளிவாக தெரியும்:

🔯இரவு முழுவதும் நடை திறந்து இருக்கும் அதிசய ஆலயம்:

ஒருவனின் நேரத்தை விஞ்ஞானத்தால் கணிக்கவே முடியாது: அப்படிபட்ட நேரத்திற்காக ஒரு கோயில் இருக்கிறது!அதுவும் நம்ஊரில்
அக்கோயில் மதுரை மாவட்டம் சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார் பட்டி என்ற கிராமத்தில் உள்ளது:கோயிலின் கோபுரத்தில் எழுதப்பட்ட வாசகம் #நேரமே உலகம்

🔯புராணங்களில் வரும் காலராத்திரியைதான் இங்கு காலதேவியாக கருதப்படுகிறாள்: இவள் இயக்கத்தில் தான் ஈரேழு புவனங்களும்
இயங்குகின்றன: காத்தல்,அழித்தல்,,பஞ்ச பூதங்கள்,,கிரகங்கள்,
நட்சத்திரங்கள், என முப்பத்து முக்கோடி  தேவர்களையும் இயக்கும் சக்தி காலதேவிக்கு உண்டு:

நேரத்தின் அதிபதியான காலதேவியால் ஒருவரது கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்ற முடியும் என்பது தான் இக் கோயிலின் 
தத்துவமாகும்:,

🔯சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நடை திறக்கபட்டு  சூரிய உதயத்திற்கு முன் நடை சாத்தபடுகிறது: இரவு முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக  இங்கு நடை திறந்திருக்கும் ஒரு கோயில் என்றால் உலகிலே இது ஒன்று தான்: பெளர்ணமி,அமாவாசை தினங்களில் இங்கு பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்: காலதேவிக்கு உகந்த நாட்களாக இவை கருதப்படுகிறது:

🔯கோயிலை 11சுற்றுகள் வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் சுற்றி வந்து காலசக்கரத்தின் முன் அமர்ந்து 11விநாடிகள் 
தரிசித்தாலே போதும்:""எனக்கு எது நல்லதோ அதைக் கொடு "என வேண்டினால் போதும்:

#செல்லும்வழி 

மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்தில் ஏறி,எம்  சுப்பலாபுரம் மெயின் ரோட்டில் இறங்கி கோயிலுக்கு நடந்தோ அல்லது ஆட்டோக்களிலோ செல்லலாம்;தெரியாதவர்கள் சாதரண நாட்களில் செல்வதை விட பெளர்ணமி அமாவாசை நாட்களில் செல்வது சிறப்பு:
இரவு நேர கோயில் என்பதால் கோயிலுக்கு வசதியாக செல்லும் வழி கிடையாது:🙏🌹🌈

No comments:

Post a Comment