♦#வெர்டிகோ (Vertigo)
என்ற தலைசுற்று??♦
பெண்கள் மற்றும் ஆண்கள்
பல பேருக்கு வெர்டிகோ (Vertigo) பிரச்னை இருப்பதைப் பார்க்கிறோம்.
ஏன் பெண்களுக்கு ஆண்களைவிட வெர்டிகோ பிரச்னை அதிகமாக வருகிறது என ஆதாரம் பூர்வமாக எந்த ஆய்வுகளும் எடுக்கவில்லை. ஆனால், ஆணோ பெண்ணோ வெர்டிகோ பிரச்னையுடன் வந்தவர்களில் 50% சதவிகித்தினர் தலை, கழுத்தில் அடிபட்டதாகவோ, பந்து தலையில் அடிபட்டது, கணவர் தலையில் அடித்த பிறகிலிருந்து என பலவாறும் பலவித காரணங்களைச் சொல்கின்றனர். ஆனால், இதில் ஒற்றுமை என்னவென்றால் தலை அல்லது கழுத்தில் அடி என்பது பரவலாக கேட்க முடிகிறது.
♦இது மட்டும் காரணமா?
இல்லை…
பல காரணங்களும் சேர்ந்துதான் வெர்டிகோ பிரச்னை உருவாகிறதா…
#மூளை_நரம்புகளில் பாதிப்பு இருப்பதால் கூட வெர்டிகோ வரலாம். கவனிக்காமல் அலட்சியமாக விட்டுவிட கூடாது.
♦#வெர்டிகோ (Vertigo)
தடுமாற்றம் ஏற்பட்டு கீழே விழுந்து விடுவது போன்ற நிலை ஏற்படலாம்.
உங்களைச் சுற்றி எல்லாமே சுற்றுகின்றது போன்ற உணர்வு.
அடிக்கடி மயக்கம் வரும்.
தன் எதிரே உள்ளவை, அருகில் உள்ளவை அனைத்தும் சுழலுகின்ற மாதிரி தெரியும்.
இந்த பிரச்னைகள் இருந்தால் அதை வெர்டிகோ எனச் சொல்லப்படுகிறது.
யாருக்கெல்லாம் வெர்டிகோ வரும்?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை.
♦#அறிகுறிகள்
vertigo-symptoms♦
சுழலும் உணர்வு
கவிழ்பது போன்ற உணர்வு
ஊசலாடுவது போன்ற நிலை
தடுமாற்ற உணர்வு
கண்களுக்கு இரண்டாக தெரிவது போன்ற உணர்வு
ஒரு பக்கமாக தன்னை இழுத்து செல்லுதல்
குமட்டல், வாந்தி உணர்வு
கண்கள் சொருகுதல்
தலைவலி
வியர்வை வருதல்
காது கேளாமை
♦#வெர்டிகோவுக்கு மற்றவைக்கும்
சில தொடர்புகள்…
தலை அல்லது கழுத்து விபத்து
மூளை பிரச்னை
ஸ்ட்ரோக் அல்லது மூளையில் கட்டி
சில மருந்துகளின் பக்க விளைவால்
காது கேளாமை பிரச்னை,
♦வெர்டிகோ வருதல்
ஒற்றைத் தலைவலி
எப்போதெல்லாம்
வெர்டிகோ மயக்கம் வரும்?
அதிக சத்தம் கேட்டால்…
இரைச்சலான இடத்தில் இருந்தால்…
வேகமாக வண்டிகள் தன் கண் முன்னே நகரும்போது…
ரயில் அல்லது பேருந்து போன்ற வண்டிகள் வேகமாகக் கடந்து சென்றால்…
கழுத்தைத் திருப்பி திரும்பி பார்த்தால்…
மாடியிலிருந்து கீழே எட்டிப்பார்த்தால்
உயரமான இடத்தில் இருந்தால்…
தலையை தூக்கி மேலே பார்த்தால்
எஸ்கலேட்டரில் பயணித்தால்
இப்படிப் பல நேரங்களில் தலைசுற்றல், மயக்கம் வந்தால் உங்களுக்கு வெர்டிகோ இருக்கலாம்.
No comments:
Post a Comment