ஸ்ரீமதே ராமாநுஜாய நம
" திருமழிசை ஆழ்வாரின்.... சொற்சிலம்பம்"
திருமழிசை ஆழ்வாரின் திருசந்த விருத்தம் ஓசை நயம் உடையது மட்டுமல்ல.... பொருள் நயமும் மிக்கது.... இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கும் ஓர் பாசுரமும்... அதன் பொருளைக் காண்போம்.....
ஆழ்வார்.... தம் திருச்சந்த விருத்தப் பாசுரம் ஒன்றில் .... புள் என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு சொற்சிலம்பம் சுழற்றுகிறார்....
புள் என்ற வார்த்தை பொதுவாக பறவையைக் குறிக்கும் .... எம்பெருமானுடன் சம்பந்தப்பட்ட... பறவைகளையும்... ஒரே பாசுரத்தில்.... குரிப்பிட்டுக்காட்டும் விதம்... இலக்கிய ரசனையின் உச்சகட்டம்....
திருக்கரத்தில்.... ஜொலிக்கும் கக்கரத்தாழ்வானை வைத்திருக்கும் எம் பெருமானே.... அன்னப்பறவையாக... அவதாரம் செய்து நான்கு வேதங்களையும் உபதேசித்தாய்....
கிருஷ்ணாவதாரத்தில் கொக்கு வடிவத்தில்... உம்மைக் கொல்ல வந்த பகாசுரனின் வாயைக் கிழித்து அழித்தாய்...
பெரிய திருவடியாகிய கருடன் உமது வாகனமாகவும்.... கொடியாகவும் கொண்டிருக்கிறாய்... இத்தனை பறவைகளுடன் தொடர்புடைய.... நீர் கருடனுக்கு பகையாகிய ஆதிசேஷசன் மீது பள்ளி கொண்டிருப்பது ..... மிகுந்த ஆச்சரியத்தை தருகிறது என்பதை....
"புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய் அதன்றியும்
புள்ளின்வாய் பிளந்து புட்கொடிப்பிடித்த பின்னரும்..
புள்ளைஊர்தி ஆதலால் ஆவதென் கொல் மின் கொள் நேமியாய்
புள்ளின் மெய்ப்பகைக் கடல் கிடத்தல் காதலித்ததே...?"
என்று இப்பாசுரத்தில் தம் அழகான புலமையை வெளிப்படுத்துகிறார்....
அடியேன்
வகுளாபரணராமாநுஜதாசன்
No comments:
Post a Comment