உங்களுக்கு தெரியுமா ?
அண்ணாமலையார் திருவடி சரணம்🙏🌹🌷🏵️🙏
திருவண்ணாமலையில் முதல் வணக்கம் முருக பெருமானுக்கு தான் வழங்கப்படுகிறது என்பது பலர் அறியாத தகவல் .
பொதுவாக நாம் ஓர் ஆலயத்திற்குள் நுழைந்தால் முதல் சன்னிதியாக விநாயகர் சன்னிதி இருக்கும் . அவரை முழு முதல் கடவுள் என்று வணங்கி மற்ற தெய்வங்களை வணங்கிச் செல்வோம் .
ஆனால் நீங்கள் திருவண்ணாமலை இராஜகோபுரத்தின் வழியாக நுழைந்து பாருங்கள் . நமக்கு எதிரே வரும் சன்னிதியே முருகனின் கம்பத்து இளையனார் சன்னிதி தான் .
முதல் தனி சன்னிதியாக தமிழ் கடவுள் முருகப் பெருமான் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார் .
நீங்கள் கேட்கலாம் , செல்வகணபதி இராஜகோபுரத்தில் இருக்கிறாரே என்று .
சன்னிதி என்று நாம் பார்த்தால் திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் முருகப் பெருமான் தான் நம்மை முதலில் வரவேற்கிறார் .
எனவேதான் முதல் வணக்கம் முருகப் பெருமானுக்கு என்று சொல்வார்கள் .
மற்ற தலங்களில் திருவண்ணாமலை திருத்தலம் மிகவும் விசேஷமானது .
சிவ பெருமான் ஜோதி வடிவாக தோன்றி காட்சி தந்த தலம் .
விநாயகர் தோன்றிய காட்சி தந்த தலம் .
சிவனின் வாகனம் நந்தி உயிர் பெற்ற தலம் .
அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த தலத்தில் முருகன் தோன்றாமல் இருப்பாரா ?
இரண்டு முறை முருகப் பெருமான் திருவண்ணாமலை தலத்தில் தோன்றி பக்தர்களுக்கு காட்சி தந்து இருக்கிறார் .
அந்த வரலாறுகள் அருணகிரிநாதருடன் தொடர்புடையது .
அருணகிரிநாதர் வாழ்க்கை வரலாற்றை நாம் படித்திருப்போம் . தன் மனம் போன போக்கில் வாழ்ந்த அருணகிரி நாதர் கடைசியில் தன் உயிரை மாய்த்துக் கொள்வதற்காக வல்லாள மகாராஜா கோபுரத்தில் கீழே குதித்தார் . அப்போது முருகப் பெருமான் தோன்றி அவரை தாங்கி பிடித்துக் கொண்டார் .
அந்த கோபுரத்தின் வலது புறத்தில் கோபுரத்து இளையனார் சன்னிதி என்று ஓர் ஆலயம் உள்ளது .
கம்பத்து இளையனார் சன்னிதியில் முருகப் பெருமான் அருணகிரிநாதருக்காக மயிலோடு தோன்றி காட்சி தந்ததால் கம்பத்து இளையனார் சன்னிதி என்று இன்றும் பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது .
திருவண்ணாமலை தலத்தில் முருகப் பெருமானுக்கு உரிய அனைத்து விழாக்களும் சிறப்பாக நடைபெறும் .
அறுபடை வீடுகளில் காவடி எடுத்து கொண்டாடுவதைப் போல இங்கும் பக்தர்கள் கொண்டாடுவதை நீங்கள் பார்க்கலாம் .
நட்புடன்
ச.கணேசன். மதுரை🙏🙏
No comments:
Post a Comment