Friday, July 31, 2020

மலை நாட்டு திவ்யதேச யாத்திரை பகுதி 5

அடியேனுடைய மலைநாட்டு திவ்ய தேச யாத்திரை
( இரண்டு வைதீக/ லௌகீகர்களின் அனுபவங்கள் )
 By புடவூர் எஸ் விஜயராகவன்
ஐந்து தேசம்                  திருகாட்கரை

அடுத்து ஆளுவா பஸ்ஸில் போகிறோம். அரை மணியில் கொண்டு தள்ளி விடுவான். மணி இப்போ எட்டரை. ஆலுவாயில் இருந்து வேறொரு பஸ் பிடித்து எடப்பள்ளியில் இறங்குகிறோம்.
எடபள்ளியிலிருந்து ஆட்டோ ரூ.5௦/- கேட்டான் திருக்காட்கரை-ல் இறக்கிவிட திவ்ய. காலை 1௦-15 மணிக்கு கோவிலுக்குள் சென்று பெருமாளை சேவித்தோம்.

அங்கிருந்த நம்பூத்ரி உங்கள் நம்மாழ்வார் “உருகுமால் நெஞ்சம்” னு தொடங்கி பத்து பாட்டு இந்த பெருமாள் மீது பாடியுள்ளார் என்றபோது எனக்கே ஆச்சரியமா யிருந்தது. (பராவாயில்லையே இவர்களே பாசுரத்தை எடுத்து கொடுக்கும்படி தெரிந்து வைத்திருக்கிறார்களே)  நான் சொன்னேன் இங்கே உட்கார்ந்து அதை பாடத்தான் வந்தோம்” என்று சொல்லி சேவித்தோம். அதற்கு முன்பாக இரண்டு அர்ச்சனை செய்தோம்.

உருகுமால் நெஞ்சம் உயின்பரமன்றி,
பெருகுமால் வேட்கையும்என் செய்கேன் தொண்டனேன்தெருவெல்லாம் காவிகமழ்திருகாட்கரை மருவியமாயன்தன் மாயம் நினைதொரெ
   
பின்பு பிரதக்ஷணமாக வந்து நமஸ்கார மண்டபத்தில் அமர்ந்து திருவாய்மொழி, ஒன்பதாம் பத்து 6-ம் பதிகம் திருகாட்கரை பாசுரங்கள் “உருகுமால் நெஞ்சம்” தொடங்கி பத்து பாசுரங்களையும் சேவித்து நமஸ்கரித்து எழுந்து கோவிலுக்கு வெளியே வரும்போது ஒரு பெரிய கல் கோவில் நுழை வாயிலில் இருக்க அது என்ன என்று கேட்டோம்.

அது ஒரு பிரம்மரக்ஷஸு என்று சொன்னார்கள். அதை கோவிலுக்கு வெளியே இருக்கும்படி பெருமாள் பணித்ததாக செவி வழி செய்தி.

ஆனால் கேரளா முழுதும் இன்று கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை முதன் முதலில் இந்த ஊரில் தான் ஆரம்பிக்கப்பட்டது.பெருமாள் மாவலியை பாதாளத்தில் அழுத்தியபோது மாவலி மஹா ராஜா பெருமாளை வருஷத்தில் ஒரு நாள் தான் ஆண்ட ராஜ்யத்தை பார்த்து விட்டு செல்ல அனுமதிக்குமாறு வேண்ட, பெருமாளும் அனுமதி தந்தாராம். அதைத்தான் ஓணம் பண்டிகையாக கொண்டாடுகிறார்கள் . எட்டு யானைகள் பத்து நாட்களும் உற்சவத்தில் கலந்து கொள்ளும். அந்த போட்டோவை இதில் காட்டியுள்ளேன்

இங்கே நடந்த தினசரி சீவேலியில்,
நீ கூட, ஒருநாள் ராத்திரி கலந்துகொண்டு எனக்கு போன் செய்தாயே ஞாபகம் இருக்கிறதா? என்று வாசுவை கேட்டேன். ஆமாம் அதை கூட ஞாபகம் வைத்திருக்கிறாயே?

“நினைவில் வைத்திருக்கிறேனா?  நீ அவர்களுடன் கூடவே  வந்து கொண்டு போன் செய்து பெருமாள் ஆஸ்தானம் எழுந்தருளும் வரை ‘ரிளே’ பண்ணிய போது நான் திருவல்லிகேணியில் மொபைல் போனை காதில் வைத்துக்
கொண்டு கேட்டது  எனக்கு இன்னும் நன்றாக ஞாபகம் உள்ளது அதற்காக அந்தோ போட்டோவையும் போட்டுள்ளேன்..
கோவிலை பூட்ட ஆரம்பித்தார்கள். மணி 11-ஐ நெருங்கி கொண்டிருந்தது.
திருக்காட்கரை யூனிவர்சிட்டி பக்கமிருந்து  எர்னாகுளம் செல்ல ஒரு பஸ் வந்துகொண்டிருந்தது. எங்களை பார்த்து டிரைவர் நிறுத்த நாங்கள் இருவரும் அதில்ஏறி சுமார்காலை 11-45க்கு EKM மேனகாவில் இறங்கி சண்முகம் ரோடு ஹோட்டலில் MEALS சாப்பிட்டு விட்டு லோட்ஜில் வந்து கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தோம். வாசு பேசஆரம்பித்தான்.” எஸ்.வி! இன்று கொஞ்சம் செம அலைச்சல் தான். ஆனாலும் பரவாயில்லை ரெண்டு திவ்ய தேசம் காலை சேவித்து விட்டோம்.. மாலை என்ன ப்ரோக்ராம்?

“இன்றைக்கு என்ன அலைச்சல்? காலை திருமூழிக்களம் சேவித்து விட்டு
நம்ம வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி கட்டியுள்ள ஸ்ரீ குலசேகர ஆழ்வார் அவதார ஸ்தல சன்னதியை செவிக்கனும்னு இருந்தேன். அங்கேயிருந்து கொஞ்சம் பக்கம். தான். “மாலா” என்ற ஊர் வழியாக போய் முடித்திருக்கலாம். கொடுங்களூர் மற்றும் இரிஞ்சாலகுட பக்கம். அந்த இடத்திற்கு .TKS புரம் என்று பெயர். ஆனால் திருக்காட்கரைக்கு 11 மணிக்குள் வந்திருக்க முடியாது. ஒரு தடவை இந்த ஆழ்வார் சாற்றுமுறைக்கே வரணும் என்று இருக்கிறேன். அதனால் இந்தமுறை கைவிடப்பட்டது.

6- திவ்ய தேசம் -. திருக்கடித்தானம்

சரி இப்போ மாலை ப்ரோகிராம் சொல்கிறேன்.
“நாம் காபி சாப்பிட்டுவிட்டு ஜங்ஷன் –க்கு போய் மாலை 2-3௦ மணிக்கு எர்னாகுளம் கொல்லம் மேமு வில் CHANGANNACHERRY போகிறோம்.
“அதென்ன மேமு?

“இது தெரியாதா? MEMU-ன் சொன்னா MAINLINE ELECTRIC MULTIBLE UNIT நம்ம தாம்பரம் பீச் வண்டி மாதிரி எலெக்ட்ரிக் டிரெயின்.
“4-3௦ மணிக்கு CHENGANACHERRY போகும்.அங்கே ஜஸ்ட் ஓரு நைட் தங்கறா மாதிரி ஒரு LODGE எடுத்துட்டு உடனே திருகடித்தானம் சேவிக்க போறோம்
“என்னப்ப ஒரு மணி நேரம் தான் ரெஸ்டா அப்போ?”
“வந்து ரெண்டு நாள்லேயே சோர்ந்தா எப்படி? ஒருவாரதுக்குள்ள முடிக்க வேண்டாமா?”
“நேற்று ராத்திரி காயப்போட்ட துணியெல்லாம் காய்ந்திடுத்து. பரவாயில்லை”“மூணு செட் வேஷ்டி உத்தரியம் இருக்கு. சமாளிக்களாம்.”

அதன்படி ரூ.2௦/-க்கு ரெண்டு டிக்கெட் வாங்கிண்டு EKM ஜங்ஷன்-ளே ஏறி சென்கன்னாசேரி 4-4௦ க்கு போய்ச் சேர்ந்து ஸ்டேஷன் பக்கத்திலே ஒரு LODGE சீப்பா பிடிச்சோம்.  இங்கேருந்து எட்டு  கிலோ மீட்டர்-ருக்கு உள்ளத் தான்
திருக்கடித்தானம்  ஒரு ஆட்டோவில போனா சீக்கிரம் வந்துடலாம். சென்னைய விட இங்கெல்லாம் ஆட்டோ சீப்பாத்தான் இருக்குது.. ரூ.75/- கேட்டான். ஏறிப் போனோம். ஆறு மணிக்கெல்லாம் திருக்கொடித்தானம் போயாச்சு. உத்தரியத்தை சுற்றிக்கொண்டு,  சொக்காயை மடித்து கைப்பையில் போட்டுகொண்டு  எப்பவும் போல் புஷ்பாஞ்சலி டிக்கெட் வாங்கிண்டு அம்பலத்துள்ளே போனோம்..  

உள்ளே நுழைந்ததும் வழக்கம்போல் அங்கிருந்த போத்திமார் “மெட்ராஸ் தானே? வாங்கோ” என்று அழைத்து வழக்கம்போல் “உங்கள் ஆழ்வார் இந்த பெருமாளை பாடியிருக்கார்” என்று சொல்லிக்கொண்டே அர்ச்சனையை பண்ணி கையில் சந்தனம் விருச்சி பூ பிரசாதத்தை வாழை இலை சிப்பியில் தந்தார். பெற்றுக்கொண்டோம்.

எல்லியும்காலையும் தன்னை நினந்தெழ
நல்லவருள்கள் நமக்கே தந்தருள்செய்வான்
அல்லியந்தண்ணந்துழாய்முடி அப்பனூர்
செல்வர்கள் வாழும் திருக்கடித்தானமே

இதோ இந்த போட்டோவில் தான் கற்பகிருஹத்துக்கு முன்பாக நமஸ்கர
மண்டபம் நன்றாக தெரிகிறது. இந்த திவ்ய தேச பெருமாள் போட்டோ கிடைக்கவில்லை. ஆனாலும் கையால் அவரை பார்த்து வரைந்த சித்திரம் கிடைத்தது அதைத்தான் மேலே பாசுரம் பக்கத்தில் காட்டியுள்ளேன்

ஆகையால் இந்த மண்டபத்தில் உட்கார்ந்து திருவாய்மொழி எட்டாம் பத்து ஆறாம் பதிகம் சேவிக்க ஆரம்பித்தோம்

சேவித்து முடித்துவிட்டு ஒரு பிரதக்ஷணம் வந்தோம். அதற்குள் அவசரம் நம் வாசுவிற்கு. ”SV, இங்கே ஒருத்தரும் இந்த பாடல்களை இங்கு எழுதலையான்னு நம்மைக் கேட்கலியே.”

“ஒருவேளை இங்கே ஏற்கனேவே எழுதி வச்சிருக்காளோ என்னவோ?”
என்று சுற்றி பார்த்தபோது சித்திரங்கள் தான் எழுதி DISPLAY பண்ணியிருந்தது. கோவிலை விட்டு வெளியே வந்து ஷர்ட்–ஐ போட்டுக்கொண்டு செங்கண்ணாசேரிக்கு பஸ் பிடித்து திரும்பினோம். வேஷ்டி உத்தரியங்களை துவைத்து ரூமில் கொடி கட்டி FAN அடியில் காயப்போட்டோம்.
       தொடரும்

1 comment:

  1. அடியேன் தாசன். மலைநாடு திவ்ய தேசங்கள் சேவிக்க விரும்புகிறோம். பயண தூரம் தங்கும் விடுதி வசதி, உணவு மற்றும் தேவையான விபரங்களை தெரியப்படுத்தவும்.🙏

    ReplyDelete