கிசுகிசு (சிறுகதைகள் சீ2 – 62)
#ganeshamarkalam
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் கண்டுபிடிச்சுடலாம். ஆனால் அழகர் மலை அழகா இல்லை சிலை அழகான்னு கண்டுபிடிக்கரது கஷ்டம். மல்லிகைப்பூ நடிகையும், ஜெயிச்சு காமிச்ச டைரெக்டரும் நேத்து ஆரம்பிச்ச சீரியல் கதாநாயகியை கூட்டி வச்சிண்டு இந்தப் புதிருக்கு விடை தேடினான்னு பட்சி சொல்லித்து.
புரியலையா? புரிஞ்சா மாதிரி இருக்கா? என்னவோன்னு மட்டும் தெரியரது, தெளிவாச் சொல்லித் தொலைக்க மாட்டானோன்னு இருக்குமே! அதான் கிசு கிசு. அதில் நான் நிபுணன்.
ஒரு நல்ல பத்திரிகை எழுத்தாளனா வரணும்னு ஆசை. அதுக்குன்னே பயிற்சி எடுத்துண்டு பல பத்திரிகை ஆபீஸா ஏறி இறங்கினேன். ஒரு வாரப் பத்திரிகையில் “தசரதா, ஏதாவது நல்லதா எழுதிண்டு வா, பிரசுரிக்கரோம், நிஜமாவே நீ எழுதிண்டு வரது பிடிச்சா சம்பளத்துக்கு வச்சுக்கரோம்”னா. எப்படியாவது சாதிச்சுக் காட்டிடணுமே? சரின்னுட்டேன்.
நிறைய எழுதினேன். ஊரில் ஏதாவது நிகழ்ச்சி நடந்தால் அதைக் கவர் செய்வேன். சங்கீத சீசனில் விவரணை. சபா நிகழ்வுகள், சபா கான்டீன் நடப்புகள், அப்புரம் டூரிஸம் பத்தி, ஊரில் இருக்கிர ரெஸ்டுரான்ட்ஸ் பத்தி தொடர் இப்படீன்னு. கடைசீலே நான் நின்னது சினிமா செய்திகளில்தான். என்னமோ தெரியலை சினிமாக்காராளைப் பத்தி போட்டுட்டா மட்டும் விழுந்து விழுந்து படிக்கரா, சிலாகிச்சு விமர்சனம். ஸோ எடிட்டர் அதையே பிடிச்சிண்டு எழுதுன்னுட்டர். ரெண்டு மாசமா வாரம் 10 கிசுகிசுன்னு ஆரம்பிச்சு பேஷாப்போரது.
கிசுகிசு எழுதரச்சே சொந்தப் பெயரில் எழுதப்பிடாது. அதுக்குன்னு குருவின்னு பேர் வச்சிண்டேன். நல்ல காசு. இந்தக் “குருவி” யார்னு எனக்கும் எடிட்டருக்கும் மட்டுமே தெரிந்த சீக்ரெட். நிறைய பாராட்டை அள்ளினாலும் என் எழுத்துக்களை என்னோடதுன்னு சொல்லிக்க முடியலை, அவரும் தன்னோட ஸ்டார் எழுத்தாளன் இவன்தான்னு பிரகடனப் படுத்தலை. மாட்டிண்டா வினையாகும்னு தெரியும். அதான். ஆனால் நாங்க போட்டது அத்தனை ஈஸியா யாரைப்பத்தினு புரியாது. சிலசமயம் நன்னாவே புரியும். அதான்னு கேட்டா, “அது இல்லை வேர”ன்னு சொல்லுவோம்.
மல்லிகைப்பூ நடிகை 3 பேரைச் சொல்லலாமே. ஜெயிச்சு காமிச்ச டைரெக்டர் நான் இல்லைன்னு எந்த டைரெக்டரும் சொல்லமாட்டான். எல்லாரும் ஜெயிச்சதாத்தான் பேசிக்கரா. இதில் மூணாவதா சொல்லப்பட்டவள் யாரா வேணும்னாலும் இருக்கலாம். ஊர்லே 30 சேனல், எல்லாத்துலேயும் சீரியல், கதாநாயகிக்கா பஞ்சம்? மேட்டர் என்னன்னா இவாளுக்கு மேட்டர்பண்ண ரெண்டு பேர் போராதா, மூணாவதா அவளை ஏன் கூட்டி வச்சுக்கணும்? அதான் புதிர்! மூணுபேரும் ஒரே ரூமில் என்ன பண்ணியிருப்பான்னு படிக்கரவாளை யோசிக்க வச்சாச்சு. அதான் கிசுகிசுவோட சுவாரஸ்யம்.
ஹோட்டல், ரூம்னு போடவேயில்லை. படிக்க்கரவா மனம் அப்படித்தான் யோசிக்கும். மதுரை கிட்டக்க அழகர்கோவில் போர வழீலே எல்லா ஹோட்டலையும் சந்தேகமா பாப்பா.
சித்தே கழிஞ்சு, அழகர்கோவில்னாலே கள்ளழகருக்கு பதிலா மல்லிகைப் பூக்காரிதான் ஞாபகத்துக்கு வரும்.
சினி ஃபீல்டில் இருக்கரவா இப்படி கிசுகிசுக்களை வரவேற்கரான்னுதான் சொல்லணும். ந்யூஜில் இருந்துண்டே இருக்கணும். அப்போதான் அவா நடிச்ச படம் வெளியாரச்சே, எல்லாரும் ஆசையா காசுகொடுத்து பாப்பா, ஹோட்டலில் ஜல்ஸா செஞ்சவன் டைரக்ட் செஞ்ச படம்னு காசு அள்ளும்.
இண்டஸ்ட்ரியில் எடுபிடியா இருக்கரவா எங்களுக்கு சுவாரஸ்யமான செய்தி கொடுப்பா.
நாளைக்கு ஊட்டியில் ஷூட்டிங்க். ஆனால் நடிகை நித்யாஸ்ரீ இந்தத்தடவை அவ அம்மா கூட வரலை. கதாநாயகன் ராம்பிரஸாதும் இவளும் ஒரே ஹோட்டலில் தங்கப்போராளாம். என்னை மாதிரி எழுத்தாளனுக்கு இப்படிப்பட்ட செய்திகள் ஆவக்கா மாதிரி. இப்போ அந்த நடிகையை பத்தி எழுதலாம், இல்லை ஊட்டிக்கு போகாம ஹைதராபாத்தில் தனியா இருக்கும் நடிகையின் அம்மாவைப் பத்தியும் கிசுகிசு எழுதலாம். எதை ஜனங்கள் படிப்பாங்கிரதுதான் முக்கியம். இந்த விஷயத்தில் நடிகையைவிட அவள் அம்மாதான் ஃபேமஸ். எழுதினேனே! யாரு, என்ன மேட்டர்னு கேட்டு தெரிஞ்சுக்க 300 கால் வந்தது மாளலைன்னான் எடிட்டர்.
எல்லா கிசுகிசுவும் இப்படி ஆண் பெண் மேட்டராத்தான் இருக்கணுமான்னா தேவையில்லை. கதையை திருடி படம் எடுத்த பிரபல நடிகர்மேல் கேஸ் போட திருநெல்வேலிச் சீமைக்காரா தீவிரமா யொசிக்கரான்னு போட்டுட்டு, எந்த சினிமா, எந்த நடிகர்னு எல்லாரையும் சுத்த விடலாம். நெல்லைச் சீமைக்காரன் யாருன்னு குழம்புவா. சினிமா சார்ந்ததாத்தான் கிசுகிசு இருக்கணுமான்னா கிடையாது. கிசுகிசுவில் பெசப்படரவா பிரபலமா இருக்கணும். இப்போ டிவி ஆங்கர், தொழிலதிபர்கள், பெரீய சூப்பர் ஸ்டோர் வச்சு நடத்தர முதலாளிகள்னு எல்லாரையும் பத்தி கிசுகிசு வேணும்கரா.
மூன்றெழுத்து கம்பேனி முதலாளி அவர் புது தொழிற்சாலை கட்டடத்துக்கு தோண்டரச்சே கிடெச்ச ஐம்பொன் சிலையை வச்சு அங்கேயே கோவில் கட்டணும்னு முடிவு செய்ய, அதுக்கு தொல் பொருள் ஆராய்ச்சியிலேந்து அப்ஜெக்ஷணாம். ஆயிரம் கோடி புழங்கர இடத்தில் இன்னும் புழங்கணும்னு சிலபல கோடி கைம்மார, கோவில் எழும்ப அனுமதி தந்தாளாம்னு போடுவேன். இதுக்கெல்லாம் தோண்டணும், சிலை கிடைக்கணும்னு இல்லை, சுவாரஸ்யமா இருக்கணும், அவ்வளவுதான்.
அதாவது எங்காத்து பக்கத்துலே இருக்கிர பிள்ளையார் கோவில் குருக்களைத்தவிர யாரைப்பத்தி வேணும்னாலும் எழுதலாம். மாங்குமாங்குன்னு படிக்குங்கள். இன்னும் சில வருஷங்கள் போச்சுன்னா, குருக்களையும் விடமாட்டான்னு தோணரது. வேதம் படிச்ச வித்தகர் சங்கத்தமிழ் மூன்றும் கொடுப்பவருக்கு நித்தம் பூஜை செய்பவர் சதிர் தேங்காய் உடைக்க வந்தவரோட வாக்குவாதம். வீபூதி பிரசாதம் கொடுக்க மறுத்ததால் கலகலப்பு. வட்டத்தட்டில் காசு விழலை, வச்சதும் சண்டை முடிந்ததாம். இது எப்படியிருக்கு?
தங்களைப்பத்தி கிசுகிசு வந்ததுன்னா தான் பிரபலம் ஆகிட்டோம்னு நினெச்சுக்கரா.
அன்னைக்கு அப்படித்தான் முன்னெ பின்னே தெரியாத நம்பர்லேந்து ஒரு போன். அழகான பொண் வாயிஸ். “நீங்க பிரபல வாரப் பத்திரிகையில் எழுதரவங்கன்னு கேள்விபட்டேன், என்னை வந்து பார்க்க முடியுமா”ன்னு கேக்க, நீங்க யார், என்ன செய்யரேள், என்ன விஷயமா நேரில் வந்து பாக்கணும்னுகூட விசாரிக்காம அட்ரெஸ் வாங்கிண்டு “இன்னைக்கு சாயங்காலமே வரேன்”னுட்டு போரேன். இப்படிப்பட்ட சந்திப்புகளில்தான் ஏதாவது விசேஷமா நடக்கும், தொழிலுக்கு நல்லது.
வலசரவாக்கம் போனதும்தான் தெரிஞ்சது பீரபல டிவி சீரியலில் மாட்டுப்பொண்ணு ரோலில் வில்லியா நடிக்கர பிரபாவதின்னு தெரிஞ்சது. இவள் சீரியலில் கொடி மரம் நட்டாச்சு, கொடி ஏத்தி பறக்கவிட வேண்டியதுதான் பாக்கி ரெண்டு சீரியல் புக்காகியிருக்கு, ஒன்ணு 125 எபிசோட் பொயிண்டு. தெலுங்கு தேசத்துலேந்து தமிழ்நாட்டுக்கு வந்து செட்டிலானவா.
வாங்கோன்னு கூப்பிட்டு உபசரணையெல்லாம் பலமா. “என்ன தரட்டும், ஹாட்டா, கோல்டா?”ன்னா, நான் ஃப்ரெஷ் ஃப்ரூட் ஜூஸ்னுட்டேன். அவளுக்கு அதில் சித்தே மன வருத்தம். “வேறொண்ணும் எனக்கு பழக்கம் இல்லை”. “அடுத்த தடவை வரச்சே கூச்சப்படாம குடிக்கணும், எங்கிட்டே எல்லாமே இருக்கு.” இன்னொரு தடவை வரணுமான்னு ஆச்சர்யப்பட்டேன். அதுக்கு முன்னாடி அந்த பழக்கத்தையும் ஏற்படுத்திக்கணுமோ?
மூணாவதா வரவேண்டி இருந்துதுன்னா? இப்போவே சொன்னா அதுக்கும் ரெடியாயிடலாமேன்னு யோசிக்கரச்சே எனக்கு எதுத்தாப்புலெ சோபாவில் ஒய்யாரமா உக்காந்து என்னையெ தீர்க்கமா பார்த்தா – நான் அதுக்கு சரிப்பட்டு வருவேனா மாட்டேனான்னு யோசிக்கராளோ! “பாக்கணும்னு சொல்லி கூப்பிடீங்க, என்ன விஷயம்?” மெல்ல ஆரம்பிச்சேன்
“உங்க கிசுகிசுக்களை ஆர்வமா படிப்பேன். சுவாரஸ்யமா இருக்கும். எங்கிட்டேயே பல விஷயங்கள் இருக்கு. என்னைப் பத்தியும் சில. அதையெல்லாம் சொல்லி உங்களை போடச் சொல்லலாமேன்னு.” சரிதான் வாழ்க்கையில் படுவேகமா முன்னேறிடுறதுன்னு கங்கணம் கட்டிண்டு, அதுக்கு உதவினா, நமக்கு பல விஷயங்கள் அலையாம இவ கிட்டேந்தே கிடெச்சுடும்னு தோணித்து.
“ஒரு சாம்பிள் கொடுங்கோ, உபயோகப் படுத்த முடியுமான்னு பாக்கலாம்.” நன்னா சாஞ்சு உக்காந்துக்கரேன்.
முதல்ல அவள் சொன்னது ராம்பிரஸாத் நித்யாஸ்ரீ மேட்டர். முன்னாடியே தெரிஞ்சு எழுதி அச்சுக்கு போயாச்சு இன்னைக்கு சாயங்காலம் பிரசுரமாகும். இவளுக்கும் தெரிஞ்சிருக்கு அப்படீன்னா பலபேரோட டச்சில் இருக்கான்னு ஊர்ஜிதமாச்சு. “சரி, மேலே சொல்லுங்கோ”ன்னு கேக்க, மட மடன்னு அடுக்கினா பாருங்கோ. சொல்லச்சொல்ல எனக்கு மண்டையே சுத்தராமாதிரி ஆச்சு. அவள் ஒரு தகவல் களஞ்சியம். “கிசுகிசு புதையல்”னு பட்டம் கொடுக்க ஏற்பாடு செய்யணும், அத்தனை வச்சிருக்கா. இவள் துறையையும் தாண்டி எல்லாத்துறையிலும், யாரப்பத்தி வேணும்னாலும் சொல்லுவா போலேயிருந்தது
மட மடன்னு குறிச்சிண்டேன். மூணுவாரத்துக்கு மசாலா சேர்ந்தது. கிளம்பரச்சே “உங்களுக்கு என்ன வேணும்?” ஆதாயமில்லாம எதையும் இந்த இண்டஸ்ட்ரீலே செய்யமாட்டாளே? இவள் என்ன எதிர்பாக்கரா? “தசரதன், நாம அடுத்த தடவைமீட் செய்யரச்சே சொல்ரேன் அப்போ தயங்காம தரணும். இப்போ ஒண்ணும் வேண்டாம். இப்போதைக்கு என்னைப்பத்தியும் என் சீரியல் டைரக்டர் பத்தியும் உங்களுக்கு பிடிச்சாப்போல எழுதுங்கோ. நான் கோவிச்சுண்டு மறுப்பு சொல்ராமாதிரி சொல்வேன், கண்டுக்க வேண்டாம்”னுட்டா. “சரி வர வாரத்துலே எங்க மலர் பிரசுரம் ஆனதும் பிரிச்சா நீங்கதான் இருப்பீங்க”ன்னுட்டு கிலம்பினேன்.
அதுக்கப்புரம் இவள் நடிக்கர சீரியலையும் சித்தே கவனமா பாக்க ஆரம்பிச்சேன். ஸ்க்ரீனில் பாக்க நன்னாத்தான் இருக்கா. வில்லிதான், அனால் ஹீரோயின் ரேஞ்சுக்கு இவளுக்கும் காஸ்ட்யூம்ஸ், நகை நட்டெல்லாம். இவளுக்கு நிறைய குளோசப் ஷாட்ஸ் வச்சு. அன்னைக்கு கிட்டக்க நான் பாத்த முகப்பருக்கூட என் ரூம் சின்ன டிவியில் பெருசா தெரிஞ்சது.
அடுத்த மூணுவாரமும் பிர்ச்சனையில்லாம போகவே, இன்னும் எழுதணும்னா இவளையே போய் பார்த்தாத்தான் என்னன்னு தோணித்து. போன் செய்யலாமான்னு தோண்ரச்சே எடிட்டர் கூப்பிட்டான். “தசரதன், இது என்ன செஞ்சிருக்கீங்க?” கோவமா ஒரு பத்திரிகையை தூக்கி என் முன்னாடி கடாசினான். அது எங்களொட போட்டி பத்திரிக்கை. “என்ன? என்ன ஆச்சு?”ன்னு பார்த்தா அதில் ஒரு கிசுகிசுவில் “சமீபத்தில் பிரபலமான வதியான சின்னத்திரை நடிகை பறந்த குருவியை கூட்டிவச்சு நடுவீட்டில் நர்த்தனமாம். ஆடி முடிச்சதும் எழுதவேண்டிய விஷயம் அம்பலமாம்.”னு போட்டிருந்தது. சரியாப்போச்சு, என்னையும் பிரபாவதியையும் இணைச்சு கிசுகிசு.
“அக்கவுன்ட்ஸில் போய் பணம் செட்டில் செஞ்சுண்டு கிளம்புங்க, இனிமேல் உங்களுக்கு இங்கே வேலையில்லை”. கிசுகிசு எழுதரவா கிசுகிசுலே வரப்ப்பிடாதுன்னு எழுதப்படாத சட்டம்.
நேரே பிரபாவதி வீட்டுக்கு பைக்கை விரட்டிண்டு போரேன். இருப்பாளா? இருக்கணும். ரெண்டுலெ ஒன்ணு நாக்கைப் பிடிங்கிக்கராமாதிரி கேக்கணும். “அடடே, நீங்க எப்படி இங்கே, நல்லவேளை இன்னைக்கு ஷூட்டிங்க் இல்லை. வாங்க”ன்னு எப்பவும்போல. “இன்னைக்கு அவசியம் நான் விருப்பட்டதை செய்யணும்.” ஞாபகப்படுத்தரா. வந்த விஷயந்தை சொல்லி, “ஏன் இப்படி செஞ்சீங்க”ன்னு கேட்டா, வேர எதுவும் சொல்லாம, “என்னை கல்யாணம் செஞ்சுக்கரீங்களா?” அதிர்ச்சியா இருந்தது. நல்ல பணக்காரி, பாந்தமா இருக்கா, எனக்கோ கல்யாண வயசு, பொண் கிடைக்கரது கஷ்டமா இருக்கப்போ இப்படி ஒரு கேள்வியை யாராவது இத்தனை அழகோட கேட்டா? சரின்னுட்டேன்.
“ராஜமுந்திரியில் எங்கப்பா அம்மாகிட்டே வந்து உங்கவீட்டுலே பேசச்சொல்லுங்க, நேரத்தை கடத்தாம.” சிரிச்சா.
மூணுவாரத்தில் எங்க கல்யாணம் நல்லபடியா பெரியவா சம்மதத்துடன் நடந்தேறியது. தேநிலவு சிங்கப்பூரில். 2வாரம் கழிச்சு திரும்பினதும் நம்மூர் நாட்டுநடப்பு எப்படீன்னு தெரிஞ்சுக்க பத்திரிகைகளை புரட்ட, நான் முன்பு வேலை செஞ்ச பத்திரிகையில் கழுகுன்னு ஒருத்தன் கிசுகிசு எழுத ஆரம்பிச்சிருக்கான். படிக்க ஆரம்பிச்சேன்.
அதில் ஒரு கிசுகிசு.
“சூரியனைப்போல் ஜொலிக்கும், செல்வமும் தைரியமும் சேர்ந்த பெயர்கொண்ட நடிகை தனக்குப் கல்யானம் ஆகாமலே பிறக்கப்போகும் குழந்தைக்கு பெயர் வைக்க அவசரமாய் ஒரு பக்ஷியை பிடிச்சு தகப்பனாக்க மாலையிட்டாளாம். அந்த குருவிக்குத் தெரியுமா கிடெச்சது பேக்கேஜ் டீல்னு?”
No comments:
Post a Comment