புடவூர் திருஎஸ் விஜயராகவன் ஸ்வாமிகள் வழங்கும் மலை நாட்டு திவ்யதேச யாத்திரை பகுதி 5
நான்கு –திவ்ய தேசம் திருமூழிக்களம்
உத்தரியத்துக்கு மாற்றிகொண்டு, உள்ளே சென்று இரண்டு அர்ச்சனை டிக்கெட் வாங்கிக்கொண்டு வழக்கம்போல் அர்ச்சனை முடித்துக்கொண்டு ஒரு பிரதக்ஷணம் வந்தோம். சன்னதி முன்னால் இருந்த மண்டபத்தில் அமர்ந்து நம்மாழ்வார் பாடியுள்ள திருவாய்மொழி ஒன்பதாம் பத்து ஏழாம் பதிகத்தை சேவித்தோம்.
எங்கானலகங்கழிவாய், இரை தேர்ந்திங்கினிதமரும்
செங்காலமடநாராய், திருமூழிக்களத்துறையும்
கொங்கார் பூந்த்துழாய்முடி எங்குடக்கூத்தர்க்கு என்தூதாய்
நுங்கால்கலென் தலைமேல், கெழுமீரோநுமாரோடே
இங்கும் ஒருமலையாளி கைகூப்பி காதால் கேட்டுக் கொண்டிருந்தவர் “இவ்விடத்தே எல்லாரும் பறையனுண்டு. ஈசேத்திரம் பாடல் பெற்ற ஸ்தலமானும்னு, பட்சே ஞான் கேட்டதில்ல. இதானும் ஆத்யம் கேட்டது. இவ்விடத்து போர்டிலே எழுதிவைக்கான் பற்றோ?”
“அது தேவஸ்வத்தோட பணியானும், எங்களால் கொறைச்சு மலையாளம் சம்ஸாரிக்க்கான் மாத்திரமே அறியும். வாய்கானாயிட்டு அறியில்ல. ஞான் வேனுமாங்கில் ஒரு XEROX COPY எடுத்தாய்க்க்கான் இவ்விடத்து தேவஸ்வம் ஆபீஸ்க்கு. போரே” என்று கூறி விடை பெற்றோம். பக்கத்திலே கோவிலை ஒட்டி பாரதப்புழா நதி ஓடிக்கொண்டு இருந்தது. அம்பலம் ரம்யமாயிருந்தது.
“வாசு ஒரு விஷயம் சொல்லுகிறேன் கேள்! இந்த திவ்ய தேசத்திற்கு நான் என் மாமனாருடனும், வேதாவுடனும் 197௦-ம் வருஷம் சாயங்காலம் 6-3௦ மணிக்கு வந்தேன். ஆலுவாயிலிருந்து பஸ் ஏறியபோது அஞ்சரை மணி. நல்ல வெளிச்சம். பாதி வழி வரும்போது நல்ல இருட்டுடன் சரியான மழை. சுற்றுப்புறம் ஒன்றும் தெரியவில்லை பஸ் ஜன்னல்களை தார்பாலின் திரை மறைத்திருந்தது.
மாமனாருக்கோ பயம். வழியில் எங்காவது பஸ் ஸ்டாண்டில் இறங்கிகொள்ளலாமா? என்றார். நான் கண்டக்டரை கேட்டேன். “ஏய், அதொண்ணும் பேடிக்கேண்டா கேட்டோ. ஞான் அம்பலத்து புறத்தே ஸ்டாப் செய்யான். குடை உண்டோ? ஈனாட்டிலே எப்போவும் கையில் குட வேணும் கேட்டோ., அது சாரமில்லே, இப்போ மழை நிக்கும்.” என்று கூறி விடவே நானும் “மணி ஆறு கூட ஆகவில்லை. என்ன பயம். மழை இருட்டிக்கொண்டு பேய்கிறது. இதெல்லாம் இங்கே சகஜம்தான்” என்று அவர் பயத்தை போக்கினேன். வண்டி கோவில் வாசல் பக்கத்திலேயே நிறுத்தினான். வாசலில் இருந்தோர் “வேகம் போய்கோ தீபாராதன ஆவுன்ன சமயமானும்” என்று உள்ளே செல்ல வேகப்படுத்தினர். மழை கொஞ்சம் நின்று பிசு, பிசு வென்று தூறல் போட்டுக்கொண்டிருந்தது. நாங்கள் உள்ளேசென்று பெருமாளை சேவித்தோம். நங்கள் போனபிறகு தீபாராதனை ஆயிற்று.. பிறகு அந்த நம்பூத்ரி அர்ச்சகர் “மெட்ராசா? என் இவ்வளவு லேட்டாக வந்தீர்கள்?” என்று கேட்டார். நான் “நாங்கள் மெட்ராஸ் தான் ஆனால் எர்ணகுளத்திலானும் பணி” என்றேன். அவர் உடனே “ஒ, நீங்கள் எர்ணகுலமானும்?! நீங்கள் திரும்பி போகானாயிட்டு பஸ் இல்ல கேட்டோ?. பஸ் கேரனமாங்கில் நீங்கள் குருமாசேரி வேகமாயிட்டு போகணும். ஒரு மைல் நடக்கணும் அவ்விடத்து கூட் ரோடில் அலுவா போகுன்ன பஸ் கரெக்ட்டாயிட்டு ஏழரை மணிக்கு தன்னே வரும். நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். நான் சொன்னேன்
வேதா உன்னால் முடியுமா? இருட்டிவிட்டது. தெரு விளக்கு தவிர வேறொன்னும் இல்லை. மழை வலுத்தால் என்ன செய்வது. ஒதுங்ககூட வீடுகளில்லை. குடையும் கொண்டு வரவில்லை.” என்றேன். மாமனார் அப்படியே கோவில் திண்ணை ஒன்றில் அமர்ந்து விட்டார். “ஆட்டோ எதான்கில் கிட்டுமோ?” என்று கேட்டதற்கு நம்பூத்ரி சொன்னார்
அதொண்ணும் பரயான் பாடில்ல. வேனுமாங்கில் நம்ம வீட்டில் தங்கி காலை உதயம் பெருமாளை அஞ்சு மணிக்கு தர்ஷனம் செய்துவிட்டு போகான்” 6 மணிக்கு பஸ் உண்டு.
“இல்லை பொய் விடலாம் பேசிகொண்டேயிருந்தால் நேரமாய் விடும் என்று கூறி நடக்க ஆரம்பித்தோம். நானும் அவரும் ஸஹஷ்ராநாமம் சொல்லிக்கொண்டே வேகமாக நடந்தோம். வேதா ஸ்ரீமதியை உண்டாயிருந்தாள்.ஆறு மாசம் அதுதான் என் கவலை. மெதுவாவே வா. பார்க்கலாம். இன்னும் அரை மணிக்கு மேல் உள்ளது. நல்ல இருட்டு. மழை பன்னீர் போல் தூறிக்கொண்டு இருந்தது. வழியில் ஒரு இடத்தில் பாம்பு ஒன்று ரோடை கிராஸ் பண்ணி ஓடியது. எப்படியோ நாங்கள் குருமாசேரி வரவும் ஐந்து நிமிஷத்தில் பஸ் வரவும் சரியாக இருந்தது. அதுவரை மழையும் இல்லை. திருமூழிக்களத்து பெருமாள் மட்டும் கஷ்டப்பட்டுதான் சேவை சாதிப்பார் போலுள்ளது என்றேன். வாசு கேட்டான்”அது எப்படி/” நம் அண்ணன்கரசாரியார் கூட ஒரு 7௦ வருஷத்துக்கு முந்தி வந்த போது வழிதவறி ராத்திரி இருட்டு வேலையில் வயலில் வேலை செய்துகொண்டு இருந்த ஒருவன் HARICANE விளக்கு காட்டி வழி காட்டி வர கோயில் வந்து பெருமாள் செவித்ததாக எழுதி உள்ளார்./“சித்தியா ரொம்ப இண்டரஸ்ட்டான கதை எல்லாம் சொல்கிறாய். அதிருக்கட்டும் அடுத்த ப்ரோக்ராம்என்ன?” என்றான். அடுத்து ஆளுவா பஸ்ஸில் போகிறோம். அரை மணியில் கொண்டு தள்ளி விடுவான். மணி இப்போ எட்டரை. ஆலுவாயில் இருந்து வேறொரு பஸ் பிடித்து எடப்பள்ளியில் இறங்குகிறோம். எடபள்ளியிலிருந்து ஆட்டோ பிடித்து ( ரூ.5௦/-ஆகும்) 1௦-15 மணிக்கு திருகாட்கரை கோவிலுக்கு சென்று பெருமாளை சேவிக்கிறோம்
[23:13, 29/07/2020] +91 90439 96350: ஆலுவாவில் தங்கி நாளை காலை 1௦-15 மணிக்கு கோவிலுக்குள் சென்று பெருமாளை சேவித்தோம்.
என திருத்திப்படிக்கவும்
No comments:
Post a Comment