Wednesday, July 29, 2020

அனுஷ தெய்வம் ஸ்ரீ மஹா பெரியவா

அனுஷ தெய்வம் ஸ்ரீ மஹா பெரியவா

ஸ்ரீ மகா பெரியவாளை பார்த்தவர்களும்.... பார்க்காதவர்க ளும்.... உடனிருந்து கைங்கரியம் செய்தவர்களும்...... தரிசனம் மட்டும் செய்தவர்களும்.... இன்னமும் அவருக்கு செய்திருக்கலாமே என்று ஏங்குபவர்களும்.... அந்தக் கொடுப்பினை நமக்கு இல்லையே என்று ஆதங்கப் படுபவர்களும் ..... வெளிநாடுகளில் வாழ்வதால் இப்படிப்பட்ட பெரியவாளுடைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடிவதில்லையே என்று வருத்தப்படுகிறவர்களும் .....
ஸ்ரீ மஹா பெரியவா என்ற உடனேயே பக்தியில் உருகு பவர்களும்.....,.

இதில் ஏதாவது ஒருவராக நீங்கள் இருந்தால் மேலே படியுங்கள்.

 ஸ்ரீ மகா பெரியவாளின் கருணையினால் தாயுமான மகான் புத்தகத்தில், ஸ்ரீ பெரிய வாளுடன் இருந்த அணுக்க தொண்டர்களின் மூலம் அறிந்த வித்தியாசமான அனுபவங்களை எழுதுபவர் திருமதி ரேவதி குமார்.

அந்தப் புத்தகங்களை  விற்று வந்த பணத்தில் கோயில்களுக்கும், வேத பாடசாலைகளுக்கும், கோசாலை களுக்கும் கைங்கரியம்  தொடர்ந்து செய்துவருகிறார்.

ஒரு நாள் ரேவதி குமார் அவர்களின் கனவில் ஸ்ரீ பெரியவாள் வந்து 45 ஆயிரத்து 160 ரூபாய் கோயிலுக்கு கொடு என்று உத்தரவிட்டார்.

எந்தக் கோயிலுக்கு

எந்த திருப்பணிக்கு

ஒன்றுமே புரியவில்லை மனதில் கலக்கம் அடுத்த அரை மணி நேரத்தில் நடுக்காவேரி விநாயகர் கோயிலிலிருந்து தொலைபேசி மூலமாக கும்பாபிஷேகத்திற்கு இன்னும் 45 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது என்று விண்ணப்பித்தனர்.

உடனே அடுத்த நாள் பணம் கொடுக்கப்பட்டது.

அடுத்தது வேதபாடசாலை

சிறுகமணி வேதபாடசாலை, திருவிடைமருதூர் வேதபாடசாலை மற்றும் சென்னையில் ஒரு  வேதபாடசாலை   என மாதந்தோறும் ஒவ்வொரு பாடசாலைகளுக்கு மளிகை சாமான்களும், வஸ்திரங்களும் கொடுத்து  வருகிறோம்

மற்றும் கோ சாலைகளுக்கும் சென்று மாட்டு தீவனங்கள் வாங்கி அவைகளுக்கு கொடுத்து இப்படியாக கைங்கரியங்கள் வளர்பிறையாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

தாயுமான மகான் புத்தகமும் நான்கு பாகங்கள் விற்பனை ஆகி
 ஐந்தாவது புத்தகம் வெளி வந்துள்ளது.

 அதில்

ஸ்ரீ பெரியவாள் எவ்வளவு சொல்லியும் அவர் உத்தரவை முதலில் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் இறுதியில் பெரியவா வாக்கை பல ஆயிரம் பேர்களுக்கு அருள் மழையாக இன்றும் மணி மாமா வழங்கிக் கொண்டிருக்கிறார்.

ஸ்ரீ மஹா பெரியவரின் கருணையினால் மட்டுமே வாழ்க்கையில் வசந்தங்களை உணர ஆரம்பித்த ஸ்ரீ வீரபத்திரன்.....

93 வயது முதிர்ந்த மங்களாம்பிகை பாட்டியின் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகளும்.......

முழுவதுமாக தெரிந்து கொள்ளஅந்தப் புத்தகத்தை  வாங்கி  அதில் விடை தேடுங்கள்.

இன்று  இந்த அனுஷ  நாளில் ஒரு பிரதிக்னையுடன் திருமதி ரேவதி குமார் அவர்களை தொடர்புகொண்டு பேசி  தாயுமான மகான் புத்தகத்தை வாங்கி வருகின்ற புனிதமான ஆடி வெள்ளிக்கிழமைகளிலும் மற்றும் வருகின்ற சுப தினங்களிலும் மற்றவர்களுக்கு வாங்கி கொடுத்து இந்த புனிதமான  கைங்கரியத்தில் பங்குகொண்டு ஜென்ம சாபல்யமும்,  ஏழு தலைமுறைகளுக்கு புண்ணியமும் சேர்த்துக் கொள்ளுங்கள்

ரேவதி குமார் தொடர்புக்கு
978 9082 269
புத்தகத்தின் விலை ரூபாய் 150/_

ஸ்ரீ பெரியவா திருப்பணியே தினப்பணி கைங்கரியத்தில் 
சங்கர் திருவேதி
944 500 4908

No comments:

Post a Comment