Sunday, February 21, 2021

MADRAS MEALS

 MADRAS MEALS

.கோடம்பாக்கத்தில் ஒரு டெலிபோன் கம்பெனியில் உத்தியோகம் ஒத்துக்கொண்ட சந்தோஷத்தில் லிபர்டி தியேட்டர் அருகில் உள்ள ஒரு பெரிய ஹோட்டலில் உள்ளே நுழைந்தேன் 

கும்பகோணத்தில் ஹோட்டல் என்றாலே சர்வர்களின் ஓங்கிய வெண்கல குரல்கள் மாஸ்டருக்கு ஆர்டர் பிறப்பித்துக் கொண்டே இருக்கும் 

ஆனால் இங்கோ மயான அமைதியாக இருந்தது காலியாக இருந்த இடம் தேடி ஒரு மூலையில அருந்தேன் தலைக்கு மேலே AC இருந்ததால் ஏதோ ICU ல் நுழைந்த நினைப்பு 

அத்தனை ஜில்லிலும் அடியேனுக்கு அத்தனை செல்லும் அமானுஷ்யமாய் வியர்த்தது

அவர்கள் அனைவருமே கல்யாண ரிசப்ஷன் மாப்பிள்ளை போல டிப் டாப்பாக இருந்தார்கள் யாரைக் கூப்பிடுவது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது வயதான ஒரு டிப்டாப் அருகில் வந்தார் நான் என்ன இருக்கு என்று கேட்பதற்குள் 

அவர் ஒரு புத்தகத்தை என் கையில் திணித்தார் அது ஒரு விலைப்பட்டியல் நம்மிடம்தான் தேவையான பணம் இருக்கிறது 

இதை எதற்கு பிரட்ட வேண்டும் என்கிற தொனியில் ஒரு மீல்ஸ் என்கிறேன் உடனே அவர் பாம்பே மீல்ஸ் மெட்ராஸ் மீல்ஸ் என மிரட்ட பார்வையாலே  மெட்ராஸ் மீம்ஸ் என்று சொன்னேன்

20 நிமிடங்கள் கழித்து சாப்பாடு வரும் என்று எதிர்பார்த்த எனக்கு பெரிய ஏமாற்றம் 

நாய்க்குட்டிக்கு சாதம் வைப்பது போன்ற ஒரு பெரிய கிண்ணத்தில் ஏதோ ஒரு கஞ்சி போல கொண்டு வந்து வைத்துவிட்டு சென்றுவிட்டார் ஒருவேளை தப்பாக ஆர்டர் சென்று விட்டதோ? என குழம்பி 

யோசித்து யோசித்து இன்னொரு பத்து நிமிடங்கள் கழிந்த பின்

 அந்த வயதான டிப்டாப் கண்ணில் பட அவரை கண்களாலேயே கெஞ்சி அன்பாக அழைத்து ஹஸ்கி வாய்ஸில்

 சார் ........நான் இது ஆர்டர் பண்ணவே இல்லை 

வேறு ஏதோ கொடுத்தீர்கள் என்று சொன்னவுடன் தம்பி ஊருக்கு புதுசா என்றவுடன் ஒப்புக் கொண்டேன்

இது சூப்தம்பி சாப்பாடு ஆர்டர் பண்ணா இதுவும் கொடுப்போம் என்று வயிற்றில் பால் வார்க்க

 அந்த ஆறிப்போன கஞ்சியை இல்லை இல்லை சூப்பை ருசித்துப் பார்த்ததில் உப்பும் இல்லை உரப்பும் இல்லை நல்லவேளை டேபிளில் உப்பு இருந்தது இதென்ன இன்னுமொரு டப்பா இருக்கிறதே என்று முகர்ந்து பார்க்க தொடர் தும்மல் மிளகு உபயம் ஒருவழியாக கஞ்சி குடித்து முடிக்கவும்

 வாழை இலையில் சாப்பாடு எதிர்பார்த்த என தலையில் இடி

 ஆம் ஏதோ திவசத்திற்கு வைப்பதுபோல எட்டு சிறிய கிண்ணங்களில் ஒவ்வொரு பதார்த்தமும் கண் சிமிட்டியது நடுவே ஜெயிலில் கொடுக்கப்படும் உண்டக்கட்டி போல கப் சாதம் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தது ஊரில் அன்லிமிட்டட் மீல்சை அமர்க்களமாக சாப்பிட்ட எனக்கு இது ஏனோ யானை பெரிய யானை பசிக்கு சோள பொரி தந்தது போல இருந்தது வெறுப்புடன் சாப்பிட்டு முடிக்கும் முன்பு 

அந்த வயதான டிப்டாப் மேலும் ஒரு கிண்ணத்தில் இரண்டு எலுமிச்சை துண்டுகள் மிதக்க ஏதோ ஒரு சமாச்சாரத்தை கொண்டுவந்து பல்யமாக வைக்க

 இது ஏதோ ஹாட் லெமன் ஜூஸ் போல இருக்கிறது என்று கர்ம சிரத்தையாக எடுத்து குடித்ததை பார்த்து யாரும் சிரிக்கவே இல்லை என்று சொன்னால் நீங்கள் ஒத்துக் கொள்ளவா போகிறீர்கள்?

No comments:

Post a Comment