ஆந்திரா,ஒரிஸ்ஸா ஆன்மீகப்பயணம்
பகுதி 3
கடைசியாக இஸ்க்கான் (ISKCON) கோயில் முக்கிய ஆன்மீக வழிப்பாட்டுத்தலமாகவும் பொழுதுபோக்குத்தலமாகவும் ராஜமுந்திரி நகரத்தில் பிரசித்தமாக அறியப்படுகிறது. கௌதமி காட் என்ற பெயரிலும் இது அழைக்கப்படுகிறது.
இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோயில் நாட்டிலுள்ள இஸ்க்கான் கோயில்களிலேயே இரண்டாவது பெரிய கோயில் எனும் புகழைப்பெற்றுள்ளது. (முதல் பெரிய இஸ்கான் கோயில்பெங்களூர் நகரத்தில் உள்ளது )குறிப்பிடத்தக்கது. இஸ்க்கான் (ISKCON) எனப்படும் ‘இண்டர்நேஷனல் சொசைட்டி ஃபார் கிருஷ்ணா கான்சியஸ்னஸ்’ எனும் பிரசித்தமான ஆன்மீக அறக்கட்டளை அமைப்பானது கோதாவரி ஆற்றின் கரையிலேயே இந்த கோயிலை கட்டியுள்ளது.
ஸ்ரீ சைதயன்ய குருவும் ராமானந்த ராயா எனும் யோகியும் இங்கு சந்தித்து உரையாடியதன் நினைவாக இந்த மடாலயம் ‘ராமானந்த ராய கௌடியா மடம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
வரலாற்றுக்குறிப்புகளின்படி ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாபிரபு எனும் யோகி இந்த ஸ்தலத்தில் 500 ஆண்டுகளுக்கு முன்னர் கிருஷ்ண பஹவானின் அவதாரமாகவே வணங்கப்பட்டுள்ளார் என்பதாக சொல்லப்படுகிறது.
ராஜ முந்திரியிலிருந்து பஸ் கிளம்பி 80 கிமீ தூரத்துல அன்னாவரம் போய் சேரறோம்.
ரத்னகிரி மலையின் மீது அமர்ந்து அருள்பாலிக்கிறார
ஸ்ரீ வீர வேங்கட சத்யநாராயண சுவாமி.
(சங்கராபரணம் திரைப்படத்தில் வருவது இந்தக் கோயில் தான்..பெரும்பாலும் கே.விஸ்வநாத் படங்களில் வரும்..)
அனின வரம் (கேட்ட வரம்) கொடுத்து பக்தர்களைக் காக்கும் சாமி இருக்கும் இடம் தான் "அன்னவரம்" ஆனது.
ஆந்திராவில் திருப்பதிக்கு அடுத்ததாக மிக பெருமையும், சிறப்பும், செல்வமும் பெற்ற ஆலயமாக அன்னாவரம் திகழ்கிறது. முற்காலத்தில் இவ்வூரில் எப்பொழுதும் தடையின்றி அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் இதற்கு அன்னாவரம் என்ற பெயர் ஏற்பட்டதாகவும், இங்கு அருள்புரியும் ஸ்ரீ சத்ய நாராயணர் 'அனைன வரம்', அதாவது தன்னை வணங்கியவரின் விருப்பமான வரங்களைத் தருபவர் என்பதாலும் அன்னாவரம் என்ற பெயர் பெற்றதாகக் கூறப் படுகிறது.
இவ்வாலயம் அமைந்த வரலாறு ஸ்கந்தபுரானத்தில் ரேவாகாண்டத்தில் காணப்படுகிறது.இறைவன் கோயில் கொண்டிருக்கும் இம்மலை 'ரத்னகிரி' என்று அழைக்கப் படுகிறது. இம்மலை மேருமலையின் மகனாக புராணம் உரைக்கிறது. மேருமலையும், அதன் மனைவி மேனகையும் வரம் செய்து மகாவிஷ்ணுவின் அருளால் ரத்தினாகரா, பத்ரா என்ற இரு மகன்களைப் பெற்றனர். பத்ரா விஷ்ணுவை நோக்கித் தவம் செய்து பத்ராசலம் என்ற மலையாகி தன்னிடம் விஷ்ணுவின் அவதாரமாகிய ஸ்ரீராமபிரானைத் தாங்கிப் புகழ் பெற்றது.
ரத்னாகர மலையும் நாராயணரை நோக்கித் தவம் செய்து அவரையே தன்னிடத்தில் வந்து வாசம் செய்ய வேண்டும் என்ற வரத்தைக் கேட்க, விஷ்ணுவும் தானே வீர வேங்கட சத்ய நாராயண சுவாமி என்ற பெயரில் இங்கு கோயில் கொண்டார் என்கிறது தல வரலாறு. ரத்னாகர் மலை ரத்னகிரி என்ற பெயரைப் பெற்றது. இம்மலையைத் தொட்டவாறு புண்ணிய நதியான பம்பா சரோவர் என்ற ஆறு ஓடுகிறது.
No comments:
Post a Comment