ஶ்ரீராம காவியம்
~~~~
ராமர் கோவில்கள் -24
71)கூறைநாடு ராமர் கோயில்...
★கூறைநாடு ராமர் கோயில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம், கூறைநாடு என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இந்தத்
திருக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
★இக்கோயிலில் ராமர் சன்னதி உள்ளது.இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
இக்கோயிலில் ஒருகாலப் பூஜை நடக்கின்றது.
72) கப்பியாம்புலியூர் கோதண்டராமசுவாமி கோயில்...
★இந்த கோதண்டராமசுவாமி கோயில் தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் கப்பியாம்புலியூர் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
★இக்கோயிலில் கோதண்ட ராமசுவாமி சன்னதியும், துவாரகநாதர், கருடாழ்வார், அனுமன், சக்கரத்தாழ்வார் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற ஒரு வகைப்பாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
★இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. பங்குனி மாதம் ஸ்ரீராமநவமி முக்கிய திருவிழாவாக இங்கு நடை பெறுகிறது. வைகாசி மாதம் வைகாசி விசாகம் பெரிய திருவிழாவாக மிக சிறப்பாக நடைபெறுகிறது.
73) கருங்குளம் வில்லாயுதமுடையார் கோயில்...
★ வில்லாயுதமுடையார் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், கருங்குளம் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இக்கோயில் கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது
★இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற ஒருவன் வகைப்பாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மரபு சாராத அறங்காவலர் குழு அமைப்பால் இத்கோவில் நிர்வகிக்கப்படுகிறது.
இக்கோயிலில் ஒருகாலப் பூஜை நடக்கின்றது.
74)தேக்கம்பட்டி சங்கிலி ராமசாமி கோயில்...
★சங்கிலி ராமசாமி கோயில் தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டம், தேக்கம்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இந்த சங்கிலிராமர் திருக்கோயில் கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
★இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற ஒரு வகைப்பாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
★இக்கோயிலில் ஒருகாலப் பூஜை நடக்கின்றது. புரட்டாசி மாதம் 4 ம் சனி முக்கிய திருவிழாவாக சிறப்பாக நடைபெறுகிறது.
75)குன்னூர் கோதண்டராமர் கோயில்...
★குன்னூர் கோதண்டராமர் கோயில் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம், குன்னூர் என்னும் ஊரில் அமைந்துள்ளஶ்ரீ ராமர் கோயிலாகும். அருள்மிகு கோதண்டராமர் கோவில்,
மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
★இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற ஒரு வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஸ்ரீராம நவமி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.
நாளை....................
No comments:
Post a Comment