Sunday, February 21, 2021

ஆந்திரா,ஒரிஸ்ஸா ஆன்மீகப்பயணம் பகுதி 2

 ஆந்திரா,ஒரிஸ்ஸா ஆன்மீகப்பயணம்

பகுதி 2

அனைவரும் நீராடி உடை மாற்றி மண்டபத்தில் உலர்த்திய பின் பஸ் புறப்பட்டு மங்களகிரி புறப்படுகிறது...சுமார் 20 கிமீ...மலை மீது ஏற ஆறு பேருக்கு 100 ரூ ஆட்டோ ... பானக நரசிம்மரை தரிசனம் செய்கிறோம்...(விரிவாக முந்தைய பயணக்கட்டுரையில்.)

மீண்டும் மண்டபம் திரும்பிய உடன் சுடச்சுட பரிசாரகர்கள் சாம்பார் சாற்றமுது ,வடை மற்றும் பெரிய சைஸ் மைசூர் பாகு....என தயார் செய்து பரிமாறுகிறார்கள்...

மீண்டும் பஸ் கிளம்பி ட்ராபிக்கில் நீந்தி கனக துர்கா கோயில் வருகிறது... 

கனக துர்கா தரிசனம் முடிந்து கிளம்பும் பஸ் இரவு 9.00 க்கு ராஜ முந்திரியை அடைகிறது..

ராஜ முந்திரி

கிருஷ்ணா நதிகரை புண்ணிய பூமியிலிருந்து தற்போது கோதாவரி நதி தீரத்திற்கு வந்துள்ளோம்..

இரவாகிவிட்டபடியால் இறங்கி ஒரு மண்டபத்திற்கு அழைத்துச்சென்று தங்க வைக்கப்படுகிறோம்..வழக்கப்படி பரிசாரகர்கள் இரவு உணவை தயார் செய்ய சாப்பிட்டு சிரம பரிகாரம் செய்து கொள்கிறோம்..

மறு நாள் கோதாவரி நதியின் கௌரி காட்டின் படித்துறையில் நீராடி புண்ணியம் சேர்க்கிறோம்...

 வாசு தேவன் மாமா டூரில் எப்பவும் காலை காபி மட்டும்தான்..டிபன் கிடையாது. வெளியிலும் சாப்பிடக்கூடாது(கண்டதை சாப்பிட்டு வயிறு அப்செட் ஆனால் எல்லோருக்கும் ப்ரச்னையாம்.😳..) 

எனவே 12 மணிக்கு சாப்பாடு ரெடி ஆவதற்குள் ஊர் சுற்றிப்பார்த்து வரும்படி சொல்கிறார்..(அப்பத்தான் நல்லா பசி எடுத்து சாப்பாட்டை வீணாக்க மாட்டோமாம்..)தங்கி இருந்த மண்டபம் அருகிலேயே ஒரு பெருமாள் கோயில்...

நல்ல வேளையாக அங்கு விநியோகம் தருவதை காலை உணவாக சாப்பிட்டு ஊர் பார்க்க கிளம்பறோம்…

ராஜமகேந்திரவரம் என்ற இன்றைய ராஜமுந்திரியைக் கட்டியவன் ராஜராஜ நரேந்திரன். அவன் வெங்கியின் கீழைச் சாளுக்கிய மன்னன். தஞ்சாவூர் சோழர் பரம்பரையில் வந்தவன். தெலுங்கின் ஆதி கவியான நன்னயர் அவனது குரு. அவனது காலத்தில்தான் அவர் தெலுங்கு மகாபாரதத்தை எழுதினார்.

ராஜமுந்திரியில் கோதாவரிக்குக் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரு மைல் நீளமுள்ள பாலம் இந்தியாவின் மிக நீண்ட ரயில்வே பாலம். அதற்கு மேலே மோட்டார் வாகனங்கள் போகும் பாலம். ரயில் வண்டியிலிருந்து ஜன்னலின் வெளியே பார்த்தால், மேற்கே வெகு தூரத்தில் குன்றுகளின் கூட்டம். ஆற்றின் நடுவே இரு பக்கங்களிலும் பல தீவுகள். அவற்றில் பல குடிசைகள். கோதாவரி ஆற்றைக் கடப்பது ஓர் இனிய அனுபவம். நதிக்கரையில் கெüதமி காட், கோடிலிங்க காட், புஷ்கர் காட், ஆர்யசமாஜ் சிரத்தானந்தா காட், இஸ்கான் ராதாகிருஷ்ண மந்திர், மார்க்கண்டேய சிவாலயம் முதலியன உள்ளன. ஆந்திராவின் சீர்திருத்த இயக்கத்தின் தந்தை கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு தெலுங்கு மறுமலர்ச்சியின் முன்னோடிகளில் ஒருவர். பெண்களுக்கான கல்விக்கூடம் நிறுவியதுடன், விதவைகள் இல்லத்தையும் தொடங்கினார்.

அவர் வாழ்ந்த இல்லத்தில் நன்றியோடு ஆந்திர அரசு நிறுவியுள்ள கண்டு கூரி வீரேசலிங்கம் பந்துலு நினைவாலயத்தை தரிசித்தோம்..

பக்கத்தில் 40 கிமீல் திராட்சாராமா என்ற தலம்..போகும் வழி கோதாவரியின்

டெல்டா பகுதி. எங்கு பார்த்தாலும் கோதாவரியின் கிளை நதிகள், கால்வாய்கள், நீரோடைகள், நீண்ட பெரும் வயல்வெளிகள் எல்லாமாகப் பச்சைப் பசேலென்று கண்ணுக்குக் குளிர்ச்சியூட்டும் காட்சிகள்.

படங்கள் 

                          தொடர்வோம்




No comments:

Post a Comment