Sunday, February 21, 2021

ராமர் கோவில்கள் -26

 ஶ்ரீராம காவியம்

~~~~

ராமர் கோவில்கள் -26

77) புளியம்பட்டி அயோத்தி ராமசாமி கோயில்...

★இந்த அயோத்தி ராமசாமி கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், புளியம்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இந்த

அழகிய திருக்கோயிலானது கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

★இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற ஒரு வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.இங்கு

இக்கோயிலில் ஒருகாலப் பூஜை நடக்கின்றது. புரட்டாசி மாதம் 4 ம் சனி முக்கிய திருவிழாவாக சிறப்பாக நடைபெறுகிறது.


78)பொரசல்பட்டி கோதண்ட ராமசுவாமி கோயில்...

★இந்த கோதண்டராமசுவாமி கோயில் தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் பொரசல்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

★இக்கோயிலில் கோதண்ட ராமர் சன்னதி உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.இங்கு

இக்கோயிலில் ஒருகாலப் பூஜை திட்டத்தின் கீழ் பூஜை நடக்கின்றது.


79)நந்திமங்கலம் கோதண்ட ராமசாமி கோயில்...

★இநத கோதண்ட ராமசாமி கோயில் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம், நந்திமங்கலம் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

★இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.

இக்கோயிலில் ஒருகாலப் பூஜை நடக்கின்றது. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது


80)கீழ்புவனகிரி பட்டாபி ராமசுவாமி கோயில்...

★ பட்டாபிராமசுவாமி கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், கீழ்புவனகிரி என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இந்தத் திருக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

★இக்கோயிலில் ஶ்ரீபட்டாபி ராமர், சீதாதேவி சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத ஒரு  அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.

இக்கோயிலில் இரண்டு காலப் பூஜைகள் நடத்தப் படுகின்றன.

நாளை..................

No comments:

Post a Comment