Monday, February 15, 2021

தண்டனை

 தண்டனை

-வேதவன்-

ராமசாமி மேற்கு மாம்பலத்தில் ஃபார்மா கம்பனி ஒன்று நடத்துகிறார். சில நேரங்களில் ஆட்டோவிலும் போவார்.  கம்பனிக்கு வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்வதற்காக முனியன் ஆட்டோதான். முனியன் நல்லவன் என்று எப்போதும் நம்புவார். ராமசாமி.ஃபார்மா கம்பனியில் 7 பேர்கள் வேலை செய்கிறார்கள். அவருக்கு ஒரு பையன் அமெரிக்காவில் இருக்கான். 

அவருடையை பக்கத்து வீட்டு சின்ன பையன் ராஜா அவருடைய பேரனை போல் இருப்பதால் அவனிடம் எப்போதும் அன்பாக இருப்பார்.ராஜாவின் அப்பா சதாசிவம் பாண்டிச்சேரியில் பெரிய அரசாங்க மருத்துவமனையில் டீன். அவர் பொருப்பேற்று 3 மாதங்களில் அந்த மருத்துவமனையில் பலருடைய வெறுப்பை சம்பாதித்தார். அவர் பாண்டிசேரியிலிருந்து வாரதிற்கு ஒருநாள் தான் வீட்டிற்கு வருவார் மனைவி குழந்தை ராஜாவுடன் எங்கேயாவது உல்லாசமாக வெளியே சென்றுவிட்டு வருவார். திங்கட்கிழமை காலை காரை எடுத்துக்கொண்டு பாண்டிச்சேரி சென்று விடுவார்

 டீன் சதாசிவம் கண்டறிந்த உண்மைகள்:- அரசாங்க மருத்துவ மனையில் குறிப்பட்ட சில ஃபார்மா கடையிலிருந்து தான் மருத்துவமனைக்கு வேண்டிய மருந்துகள்வாங்கப்படவேண்டும் என்று எழுதப்படாத சட்டம். அந்த ஃபார்மா சப்ளையரின் ரேட் 5 மடங்கு அதிகமாக இருக்கிறதை கண்டு பிடித்தார், அந்த சப்ளையர் அனைவரையும் நிறுத்திவிட்டு நேரடியாக மருந்து தயாரிக்கும் கம்பனியுடன் தொடர்பு கொண்டு மருந்துகளை தங்கள் அரசாங்க மருத்துவமனைக்கு தருவித்தார். பல உயிர் காக்கும் மருந்துகளை மருத்துவமனைக்கு கிடையாது. வெளியே அருகிலுள்ள ஃபார்மசியில் தான் வாங்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துவார்கள். அது மாதிரி வாங்கும் மருந்துக்கள் அதிகமான விலைக்கு வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

இதனால் ஏழை மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். டீன் சதாசிவம்உயிர்

காக்கும் மருந்துகளையும் தானே பல மருந்துகளை நேரடியாக தயாரிப்பாள்ர் கம்பனியிலிருந்து தருவித்தார். 

 “ராமசாமி கம்பனியில் கண் ஆபரேஷனுக்கு வேண்டிய லேன்ஸை வெளிநாட்டிலிருந்து தருவிக்கிறார்கள் குறைந்த லாபத்தில் கொடுப்பதினால் அவருக்கு சதாசிவம் ஆர்டர் கொடுப்பார்”

அவரின் ஒழுக்கமான நடவடிக்கைகளில் அவருடைய மருத்துவ மனையில் மருந்துகள் இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை. 

லஞ்சம் வாங்கும் மருத்துவ பணியாட்களை தன் ரூமிற்கு கூப்பிட்டு அறிவுரை சொல்லி எச்சரிக்கையுடன் அனுப்புவார். அவருக்கு 36 வயது தான் ஆகிறது.

டாக். சந்துரு, டாக். சந்தோஷ்இருவரையும் டீன் சதாசிவம் தன் ரூமமுக்கு தனியாக அழைத்து “நீங்கள் ஏன் நம் மருத்துவ மனையின்  மருந்து ஸ்டாக் கொடௌனிலேயே ஏன் இருக்கிரீர்கள் நீங்கள் இருவரும் மருத்துவ படிப்பில் தேர்ச்சி பெறவில்லை எங்கின்ற அறிக்கை இருக்கிறது உங்கள் இருவரையும் இந்த மருத்துவ மனையில் எப்படி தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை.

நான் உங்களை போலி டாக்டர் என்று போலிஸை கூப்பிட்டு அவர்களிடம் ஒப்படைக்க போகிறேன். நாளை காலை நீங்களாக ஓய்வு பெறுவதாக எழுதிக் கொடுங்கள்” என்றார்.   

இரண்டு வாரமாக சதாசிவம் சென்னைக்கு வரவில்லை. இரவு மனைவிக்கு ஃபோன் பண்ணி வேலை அதிகமாக இருக்கு வரமுடியவில்லை என்று தன் 5 வயது ராஜாவிடம் சிறிது நேரம் கொஞ்சிவிட்டு மனைவியிடம் அடுத்த வாரம் வருவதாக சொல்லியிருக்கிறார்.

திடீர்ன்னு திங்கட்கிழமை சதாசிவம் ஆஃபிஸ் ரூமில் காலை 4 மணிக்கு தூக்கு மாட்டிக்கொண்டு இறந்ததாக மருத்துவமனையிலிருந்து செய்தி வந்தது. அவர் மனைவி அழுது கொண்டே குழந்தை ராஜாவை என் மனைவியிடம் கொடுத்துவிட்டு பாண்டிசேரிக்கு என்னை வர வேண்டும் என கேட்டுக்கொண்டாள். நானும் என் காரை எடுத்துக்கொண்டு அவளை அழைத்துக்கோண்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக பாண்டிச்சேரிக்கு காலை 8 மணி சென்றுவிட்டேன். 

போலிஸ் வந்து பார்த்து சதாசிவதின் உடலை இறந்த பின் பரிசோதனைக்கு அனுப்பியிருப்பதாக போலிஸ் இன்ஸ்பெக்டர் என்னிடம் கூறிவிட்டு” நீங்கள் தான் சதாசிவத்தின் தந்தையா?” என்று கேட்டார்.

“நான் இல்லை அவர் மனைவி வந்திருக்கிறாள் நான் அவர்கள் வீட்டிற்கு அடுத்த வீட்டில் இருக்கிறேன். சதாசிவத்திற்கும் அவர் மனைவிக்கும் தந்தை தாய் இல்லை” என்றார் ராமசாமி

போலிஸ் இன்ஸ்பெக்டர் சதாசிவத்தின் மனைவியை பார்த்து

“உங்கள் பெயர்”

“மீனாக்ஷி” என்றாள்

அவரை லவ் பண்ணி திருமணம் செய்து கொண்டீர்களா? வீட்டில் ஏதாவது அவருடன் மன்ஸ்தாபகள் இருந்ததா?” என்று கேட்டார் இன்ஸ்பெக்டெர்

மீனாக்ஷி” அரேஞ்சுடு மேரேஜ் தான் என் மாமா டில்லியில் இருக்கார்.அவருக்கு இவர்கள் குடும்பத்தை நன்றாக தெரியும். எங்களுக்குள் எந்த மனஸ்தாபமும் வந்ததில்லை” என்றாள். 

இன்ஸ்பெக்டர்”அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் எழுதிய கடிதத்தில் “என் தற்கொலைக்கு நான் தான் காரணம்” என்று எழுதி இருக்கிறார்

இதோ இது தான் அந்த கடிதம் இது அவர் கையெழுத்துதானா? என்று சொல்லுங்கள்”

மீனாக்ஷி”அழுது கொண்டே இருந்தாள் அவளை ராமசாமியும் இன்ஸ்பெக்

டரும் சமாதானம் செய்ய முடியாமல் சிறிது நேரம் அமைதியாக இருந்தனர்.

மீனாக்ஷி “அவர் தமிழ் பேசுவர் ஆனால் தமிழ் எழுதத்தெரியாது என்றாள்”

“இந்த கடிதம் ஆங்கிலத்தில் தான் இருக்கு “என்றார் இன்ஸ்பெக்டர்.

 லெட்டரை வாங்கிப்பார்த்த மீனாக்ஷி “அவர் எழுதிய கடிதமா இது என்று என்னால் சொல்ல முடியவில்லை” அவர் ஆஃபிஸ் ஃபைலில் அவர் எழுதிய லெட்டரை வைத்து கண்டுபிடிக்கலாமே” என்றாள்.

இன்ஸ்பெக்டெர்” நீங்கள் எங்கே வேலை செய்கிரீர்கள்”

“ஸ்டேட் பேங்க் தி நகர் கிளை” என்றாள்.

சென்னையில் எவ்வளவு வருஷமாக இருக்கிறீர்கள்?

“நான் சென்னையில் பிறந்து வளர்ந்தவள் தான் அவர் தான் டில்லியில் பிறந்து வளர்ந்தவர்.” என் மாமாவுக்கு தகவல் சொல்லி இருக்கிறேன் அவரும் டில்லியிலிருந்து வருவார்” என் மாமா இந்தியன் ஆர்மியில் கேப்டனாக இருந்து ஓய்வு பெற்றவர் அவர் மட்டும் வருகிறார்” என் மாமாவின் மகனும் போலிஸில் அதிகரியாக வேலை செய்கிறார்.என்றாள் மீனாக்ஷி

“தங்களிடம் இறப்பதற்கு முன்பு ஏதாவது பேசினாரா” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்.

“வேலை அதிகமாக இருக்கு அதனால் இந்த வாரம் வரமுடியவில்லை என்று குழந்தை ராஜாவிடம் மட்டும் கொஞ்ச நாழி பேசிக்கொண்டிருந்தார்.

நிச்சயமாக அவர் தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலையில் இல்லை” அவர் எங்களுடன் பேசும்போது நன்றாகத்தான் பேசினார்”என்றாள்.

 “யாராவது கொலை செய்திருப்பார் என்று நினைக்கிரீர்களா?” என்று கேட்டார் இன்ஸ்பெக்டெர்

“யாரோ நிச்சயமாக கொலை தான் செய்திருப்பார்கள். அவர் மிகவும் அன்பா

கவம் மெதுவாகவும் தான் பேசுவர். என்றும் பொருமையாகவும் இருப்பவர்.” 

என்று அழ ஆரம்பித்தாள்.

“உங்கள் மாமாவும் அவர் மகனும் வருகிறாரா?”

என் மாமா மட்டும் வருகிறார்” என்றாள் மீனாக்ஷி

இன்ஸ்பெக்டர் ராமசாமியிடமும் பல கேள்விகள் கேட்டார். 

ராமசாமி” நான் கோடம்பாக்கத்தில் தனிவீட்டில் வசிக்கிறோம். அந்த வீடு மிக பெரியவீடு அதை இரண்டு போர்ஷனாக பிரித்து என் பையனுக்கு தனியாக அதே இடத்தில் அமைத்து கொடுத்தேன். என் பையன் அமெரிக்கா சென்று 6 வருடமாகிறது. அந்த போர்ஷனில் என் மகன் தான் அவனுடைய நெருங்கிய நண்பனான சதாசிவத்தை வாடகைக்கு அமர்த்தினான். 6 வருடம் முன்பு சதாசிவம் ஜென்ரல் அரசாங்க மருத்துவமனையில் சர்ஜனாக இருந்தார்.அவர் என் மகனுக்கு நெருங்கிய நண்பன். இருவரும் ஜென்ரல் அரசாங்க மருத்துவ மனையில் ஒன்றாக பணி புரிந்தார்கள்.அதனால் சதாசிவம் குடும்பதினர் என்னுடைய பையன் வசித்து வந்த போர்ஷனையே வாடகைக்கு எடுத்துக்கொண்டதில் எங்களுக்கும் மகிழ்ச்சி, சதாசிவமும் எங்களுடைய மகனைப்போல் இருந்தார். 

மூன்று மாதம் முன்பு தான் இங்கு டீன் ஆக பதவி ஏற்றார். அதிகமாக பேசமாட்டார். என் மனைவிக்கு சர்க்கரை வியாதிக்கு பரிசோதனை செய்து மருந்து கொடுத்திருக்கிறார். சதாசிவம் மிக நல்ல மனிதர், எனக்கு தெரிந்துவரை அவர் கோவமாக பேசியதில்லை “என்றார்.

இன்ஸ்பெக்டர் எல்லாவற்றையும் ரெக்கார்டு பண்ணியதுடன் அவர்களிடமும் கையோப்பம் வாங்கிக்கொண்டார். 

இன்ஸ்பெக்டெர்” டாக்டர் சதாசிவத்தின் இறந்த உடல் கூறு ஆய்விற்கு பிறகுதான் கொலையா அல்லது தற்கொலையா என்று தெரியவரும். அனேகமாக நாளை பரிசோதனை அறிக்கை வந்துவிடும் அதற்கு பிறகு இறந்த உடலை நீங்கள் எடுத்து செல்லலாம் ஆனால் இந்த உடலை எரிப்பதை விட புதைப்பது தான் நல்லது. இந்த மருத்துவ மனையில் அவர் உயர் அதிகாரியாக இருந்ததால் அவருக்கு உரிய மரியாதையும் செய்வதற்கு அவர்கள் விரும்பியதால் நாளை காலை அனத்து அதிகரிகளும் வருவதாக சொல்லியிருக்கிறார்கள். இங்கு நீங்களும் மருத்துவ மனைக்கு வரவேண்டும்”என்றார்.

மறுநாள் காலை சதாசிவத்தின் உடலை உடல்கூறு பரிசோதனை அறிவிப்புடன் மருத்துவ மனையின் பிராதான அறையின் வெளியில் பொது மக்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையூரில்லாமல் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து சதாசிவத்தின் உடல் குளிர் சாதன பெட்டியில் வைக்கப்பட்டது

மீனாக்ஷியின் அழுகை சதாசிவத்தின் உடலை பார்த்து மிகவும் அதிகமாகியது. அங்கு வந்த பல அதிகாரிகள் சதாசிவம் மிக நல்லமனிதர், அவருடைய வேலை பளு அவரால் தாங்க முடியவில்லை அதனால் தான் அவர் தற்கோலை செய்து இறந்துவிட்டார். உடல் கூறு அறிக்கையும் மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இது தற்கொலை தான் என்று உறுதி படுத்தியுள்ளது சதாசிவதின் உடலில் எந்த காயமும் இல்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

மீனாக்ஷியும் அவருடைய மாமாவும் சேர்ந்து சதாசிவம் தற்கொலை செய்து கொள்ளும் சூழ் நிலையில் இல்லை என்று கூறி பார்த்தும் அந்த சூழ்நிலையில் அவர்களால் எதுவும் செய்யமுடியவில்லை. அதில் இரண்டு அதிகாரிகள் சதாசிவத்தின் உடலை சென்னைக்கு எடுத்து செல்ல எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு அதனுடன் சொக்கலிங்கமும் ராமநாதன் என்ற அதிகாரிகள் மீனக்ஷியையும் அவர்களை சார்ந்த அனைவரிடமும் நிதானமாக பேசி நீங்கள் கோர்ட்டில் கேஸ் போடலாம் என்ற ஆலோசனை கூறி அவர்களும் சென்னைக்கு சதாசிவத்தின் சவ ஊர்தியின் பின்னால் காரில் வந்தார்கள்.

அவர்கள் மத சடங்குகள் படி எரிக்க வேண்டும் என்பதினால் சதாசிவத்தின் உடல் எரிக்கப்பட்டது. 

மீனாக்ஷியும் அவள் மாமாவும் கோர்டில் கேஸ் போட்டு ஒரு உபயோகமும் இல்லை.  எப்போதும் வாய்தா வாங்கிக்கொண்டே 8 மாதம் வரை இழுத்துக்கொண்டே சென்றது, காலம் விரையமானது தான் மிச்சம் கடைசியில் தீர்ப்பு சதாசிவம் மன அழுத்ததில் உள்ள ஒரு நோயாளி என்பதற்கு ஆதாரமாக அவர் யாருக்கும் தெரியாமல் மன அழுத்தத்திற்கு உள்ள மாத்திரைகள் சாப்பிட்டிக்கொண்டு வந்தது அவர் டைரியிலிருந்து கண்டிபிடிக்கப்பட்டதை மருத்துவ மனையில் ஆதாரத்துடன் நிரூபித்து விட்டதால் கோர்டில் சதாசிவம் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்திருக்கிறார் என்று தீர்ப்பு சொல்லப்பட்டது. தீர்பின் அறிவிப்பு இரு தரப்பினர்களுக்கும் கோர்ட்டில் கோடுக்கப்பட்டது. இந்த கோர்ட் நீதியை எதிர்த்து மேல் கோர்ட்டில் அப்பீல் செய்ய உங்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மீனாக்ஷியும், அவள் மாமா மற்றும் ராமசாமியும் இனி அப்பீல் செய்வதில் எந்த பிரோயஜனும் இல்லை. என்று நினைத்து அந்த எண்ணத்தை கைவிட்டார்கள்.

பாண்டிசேரியில் பெரிய அரசாங்க மருத்துவ மனையில் டீன் சதாசிவம் இறந்த பிறகு டாக்டர் சொக்கலிங்கமும் டாக்டர் ராமனதனும் அந்த வேலையை தற்காலிக பொருப்பில் அமர்த்தப்பட்டனர். மீண்டும் மருந்துகள் மிக அதிக விலையிலேயே தருவிக்கப்பட்டது. சதாசிவம் 5 சப்ளையர்களை அங்க்கீகரிக்கக்கூடாது என்று எழுதி வைத்தது காற்றில் பறக்கவிடப்பட்டது. சில உயிர் காக்கும் மருந்துகள் மருத்துவ மனையில் கிடைக்காமல் வெளியில் வாங்கவேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டது. பல பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவதற்கு மிகவும் பாடுபட்டார்கள். வார்டு பணியாளர்கள் பலர் லஞ்சம் வாங்குவது என்பது மிக சாதாரண விஷயமாகவும், பல மருத்துவ பணியாளர்கள் தங்களுடைய பணிகளை செய்வது மிகக்குறைவு. சிலர் மருத்துவ மனைக்கு வந்து வரிகை படிவத்தில் கையொப்பமிட்டவுடன் எங்கு செல்கிறார்கள் என்பது தெரியாது.

டாக்டர் சதசிவம் இறந்து ஒரு வருடம் ஆகிறது. பாண்டிசேரியில் அரசாங்க பெரிய மருத்துவமனை சரியான கண்கணிப்புயின்றி இருப்பதைப்பற்றி பலர் புகாரின் அடிப்படையில் புதிய மருத்துவ மனைக்கு 37 வயதுடைய ஒரு மருத்துவ பேராசிரியராக அமெரிக்காவில் பணியாற்றிய திருநாவுக்கரசு என்பவரை மத்திய அமைச்சகம் தேர்ந்தெடுத்து பணியமற்றப்பட்டார்.அவர் யார் என்று பலருக்கு தெரியாது. 

பாண்டிசேரியில் புதிய துணைஆளுனராக நேஹா சூரி பெண் பதவி ஏற்றார்.

ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியும் ஆவார். நேஹா சூரி என்பவர் 1972 ஆம்ஆண்டுசேர்ந்த முதல் பெண் அதிகாரியாவார்

இவர் தில்லி, கோவா மற்றும் மிசோரம் ஆகிய இடங்களில் பணியாற்றி உள்ளார். 1971 ஆம் ஆண்டில் ஆசிய பெண்கள் டென்னிசு போட்டியில் வெற்றி பெற்றார். 1993 இல் இவர் தில்லி சிறைச்சாலைகளுக்கு பொது ஆய்வாளராக இருந்தபோது திகார் சிறைகளில் இவராற்றிய சீர்திருத்தங்கள் பலரின் பாராட்டைப் பெற்றதோடு, 1994 ஆம் ஆண்டிற்கான ரமோன் மக்சேசே விருது  பெற ஏதுவாய் இருந்தது. 2007 ஆம் ஆண்டு இவர் விருப்பப்பணி ஓய்வு பெற்றார். 2011 இல் நடந்த இந்திய லஞ்ச ஒழிப்பு இயக்கத்தில் இவர் குறிக்கத்தக்க பங்கு வகித்தார். 

நேஹா சூரி பெண் பதவி ஏற்றவுடன் தனக்கு திகார் சிறையில் மிகவும் உதவியாக இருந்த திரு குமார் அவர்களை பாண்டிசேரி போலிஸ் டைரக்டர் ஜெனெரல் பதவியை கொடுத்து பாண்டிசேரிக்கு பதவி மாற்றம் செய்தார்.

இப்படி ஒரு வருடத்தில் பல மாற்றங்கள் பாண்டிசேரியில் வரவேற்க தக்கதாக அமைந்தது.

புதிய துணை ஆளுனர் முக்கிய பதவியில் இருப்பவரை சந்திப்பதற்கு ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தார். அதில் பெரிய அரசாங்க மருத்துவ மனை டீன் திருநாவுக்கரசும், போலிஸ் டைரக்டர் ஜெனெரல் குமாரும் மற்றும் பல அரசியல் வாதிகளும் வந்தனர்.அந்த சந்திப்பு எல்லோரையும் புதிய துணை ஆளுனரின் அருமையான உரையுடன் விருந்தும் அனைவருக்கும் பரிமாரப்பட்டதுடன் முடிந்தது. விருந்தின் போது பலர் விருந்தை சுவைத்ததுடன், அரசியல்வாதிகள் முதல்மந்திரிக்கு மரியாதை கொடுப்பதிலேயே கவனமாக இருந்தனர்.

 குமார் “உங்களை எங்கயோ பார்த்தது போன்று இருக்கிறது ஆனால் எங்கு என்று சரியாக நினைவுக்கு வரவில்லை” என்று திருநாவுக்கரசை பார்த்துக் கேட்டார்.நான் தான் இந்த பாண்டிசேரி போலிஸில் உயர் அதிகாரியாக மேடம் துணைஆளுனர்அவர்கள்பணிஅமர்த்திருக்கிறார்கள்.நான்டெல்லியில்அவர்களுடன் பணியாற்றியுள்ளேன் என்பது ஒரு நல்ல அனுபவமும் மிக பெருமையாகவும் இருக்கிறது”.

 திருநாவு “நான் ஏழு வருடத்திற்கு முன்பு சென்னையில்தான் ஜெனெரல் மருத்துவமனையில் சர்ஜனாக இருந்தேன் என் தந்தையுடன் கோடம்பாக்கத்தில் இருந்தேன். எங்கள் வீடு தனி பங்களா நான் என் மனைவியுடன் தனி போர்ஷனில் இருந்தேன் எனக்கு அமெரிக்காவில் மிக பெரிய பதவி கிடைத்ததால் நான் என் நெருங்கிய நண்பன் சதாசிவத்திற்கு எங்கள் பங்களாவில் நான் வசித்துவந்த போர்ஷனையிலேயே குடி அமர்த்தினேன். 1 வருடம் 4 மாதத்திற்கு முன்பு இந்த பாண்டிசேரி மருத்துவமனையில் எனக்கு முன்பு என் நண்பன் தான் டீன் பதவியில் இருந்தான்.  அவனை அநியாயமாக கொலை செய்து விட்டார்கள். யார் என்பது கண்டுபிடிக்கமுடியாமல் அவன் தற்கொலை செய்து இறந்தான் என்று கோர்ட் தீர்ப்பும் கூறபட்டது மிகவும் வேதனைக்குறியது. இந்த டீன் பதவிக்கு நான் அமெரிக்காவிலிருந்து முயற்சி செய்தேன் எனக்கு இந்த பதவி அளிக்கப்பட்டது. நான் இங்கு வந்ததிற்கு காரணம் என் நண்பனை கொலை செய்தவர்களை சட்டதின் முன் நிறுத்தபடவேண்டும்.” என்றார்.

குமார்”நீங்கள் கூறியது அனைத்தையும் கேட்டேன் ஒரு வகையில் நாம் இருவரும் ஒரே நோக்கத்தில் தான் வந்திருக்கிறோம்.   சதாசிவம் எனக்கு உறவு காரர் சதாசிவத்தின் மனைவி மீனாக்ஷியின் மாமா தான் என் தந்தை” என்றார்.

திருநாவு “இந்த சந்தர்ப்பத்தில் நான் உங்களை பார்த்தது ரொம்ப சந்தோஷம்.

நான் நாளை தான் பதவி ஏற்கிறேன்” இது வரை நான் உங்களை பார்த்ததாக நினைவில்லை, நான் டெல்லிக்கு சில கான்ஃபெரென்ஸ்க்கு வந்திருக்கிறேன்” என்றார்.

குமார்” போன பிறவியில் நாம் ஒன்றாக இருந்திருக்கலாம். நான் இரண்டு மூன்று நாட்களில் என் திட்டத்தை கூறுகிறேன் அதுவரை நீங்கள் மருத்துவமனையில் புதிய மாற்றம் எதையும் கொண்டு வராதீர்கள்.

திருநாவ்” நான் முதலில் யார் என்ன வேலை செய்கிறர்கள் என்பதை ஏழு நாட்களுக்கு கண்காணித்து கொண்டு அவர்களின் பின் இயக்கும் சக்தி யார் இருக்கிறார்கள் என்ற விவரத்தை தெரிந்துக்கொண்டு தான் என் செயலில் ஈடுபடுவேன். உங்கள் திட்டத்தையும் தெரிவியுங்கள், நாம் சந்தித்து பேசுகிறோம் என்று மருத்துவமனையில் முக்கியமாக யாருக்கும் தெரியவேண்டாம்.

  குமார்” உங்கள் நம்பர் வாட்ஸ் அப் இருக்கிறது என்று நினைக்கிறேன் நாம் நம் தொடர்புகளை வாட்ஸ் அப் மூலமாக வைத்திகொவோம் “என்றார். நான் எந்த திட்டத்தையும் வாட்ஸ் அப்பில் அனுப்பமாட்டேன். எங்கு நாம் சந்திக்கலாம் என்ற தகவல் மட்டும் தான் அனுப்புவேன். நிங்களும் ஒரு திட்டத்தையும் வாட்ஸ் அப்பில் அனுப்பாதீர்கள். 

திருநாவ் “நான் மிகவும் கவனமாக இருப்பேன் வாட்ஸ் அப்பில் உங்கள் பேரே இருக்காது தோஸ்த் 11 என்று ஹிந்தியில் தான் சேவ் சேய்திருக்கிறேன். என் ஃபோனை யாராலும் என் கைரேகை இல்லாமல் ஓப்பனே பண்ண முடியாது.”என்றார்.

குமார்” நீங்கள் அதி புத்திசாலி தான் இல்லாவிட்டால் நீங்கள் அமெரிக்காவின் டாக்டர் வேலையை உதறி தள்ளிவிட்டு நம் நாட்டில் உங்கள் நண்பனுக்காக வந்திருப்பது என்பது உங்கள் வைராக்யத்தை காண்பிக்கிறது. நம்பர் 11 என்பது “K” வை குறிக்கிறது சரியா” என்று கூறி சிரித்துக்கொண்டார்.

திருநாவ்”நீங்கள் போலிஸில் பெரிய அதிகாரி இந்த மாதிரி கோடெல்லாம் உங்களுக்கு தெரியாத இருக்குமா?” என்று இருவரும் சிறித்துக்கொண்டே பிரிந்து சென்றனர். 

துணை ஆளுனரிடமிருந்து ஓர் அறிக்கை:- “பொது மக்கள் தங்களுடைய குறைகளை அளுனர் மாளிகையில் வைத்திருக்கும் புகார் பெட்டியில் போடும்படி கேட்டுக்கொள்கிறேன். பொது மக்கள் இ-மெயில் மூலமாகவும் அனுப்பலாம்” இதே போன்று புதியதாக உயர் பதவியில் இருக்கும் போலீஸ் டைரெக்டர் ஜென்ரலுக்கும் மருத்துவ மனை புகார்களும் அந்தந்த துறைக்கும் அனுப்பலாம். நீங்கள் அனுப்பியகடிதம் மிக ரகசியமாக அந்தந்த அதிகாரிகளால் பாதுகாக்கப்படும்” என்பதுதான் அந்த அறிக்கை.

புகார் பெட்டியில் போட்ட மனுக்கள் பல ஓய்வு ஊதியம் கிடைக்காதவர்

களாகத்தான் இருந்தது. துணை ஆளுனர் அலுவகத்திலிருந்துஅனைவருக்கும்

அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்வதாக உறுதியுடன் பதில் அனுப்பப்பட்டது

திருநாவு பதவி ஏற்று ஒரு வாரம் முடிந்தவுடன் தன் அலுவகதில் மேல்அதிகாரி

களை கூப்பிட்டு தான் ஒரு வாரமாக கண்காணித்ததில் யார் யார் எந்த பொருப்பு ஏற்க வேண்டும் என்பதை குறிப்பிட்டார்.

ராமநாதனும் சொக்கலிங்கமும் தாங்கள் தான் சீனியராகிருப்பதால் மருத்துவ மனையில் மருந்துகள் தறுவிப்பதை தங்களுக்கு தரவேண்டும் என்று கேட்டனர்.

திருநாவ்” நான் தான் மருந்துக்கள் தறுவிக்கும் பொருப்பும் உயிர் காக்கும் மருந்துகளை வெளி நாட்டிலும் தறுவிப்பதையும் எடுத்து கொள்வேன்” இதுவரை நீங்கள் பார்த்து வந்திருக்கிறீர்கள் யாரிடம் வாங்கினீர்கள் என்ற விவரத்தையும் தெரிவியுங்கள்” என்றார்.

டாக்டர்.ராமநாதன்” உயிர் காக்கும் மருந்துகள் நமக்கு தேவையானவைகளை நான் தான் கவனித்து வருகிறேன், அத்துடன் அமெரிக்காவிலிருந்து தறுவிப்பதில் சில மருந்துகள் கிடைப்பதில்லை அதன் வவரங்களையும் நாளை காலை தரலாமா? என்றார்.

திருநாவ் “நீங்கள் எல்லா விவரங்களையும் சிஸ்டத்தில் தானே வைத்திருக்கிரீர்கள் இல்லையா? ஓகே நாளை எனக்கு அனுப்புங்கள்”என்றார்.

திருநாவ்”நேரம் என்பது டாக்டர்களுக்கு கிடையாது. நீங்கள் அனைவரும் உங்களின் பொருப்புகள் அடங்கிய வேலைகளும் சேர்ந்து நாளை அனுப்பலாம்” என்றார்.

“நன்றி” அனைவரும் சேர்ந்து சொன்னார்கள். திருநாவும் அனைவருக்கும் நன்றி சொன்னார்.

திருநாவ் கோட் மொழியில் குமாருக்கு அனுப்பினார். குமார் தன் பாணியில் திருநாவுக்கு பதில் அனுப்பியதை பார்த்து திருநாவ் ஆச்சரியப்பட்டார்.

அதன் பொருள் என்ன வென்றால் உங்கள் ரூமில் ஒரு ரகசிய ரெகார்டெர் ஸிஸிடிவி கேமேரா இரண்டு இடத்தில் இருக்கிறது அதை 24 அணி நேரம் கண்காணிக்கப்படுகிறது. அதே போன்று முக்கிய இடம் உங்கள் வீட்டிலேயும் இருக்கிறது. நீங்கள் பேசியதை முழுமையாக கேட்டாச்சு. இப்போது மணி சாயங்காலம் மணி 6. அந்த 5 முக்கிய மேல் அதிகாரி டாக்டர்கள் மஹாத்மா காந்தி ரோட் சாலையில் ரெசிடென்ஸி 5 ஸ்டார் ஹோட்டலில் “ரூ சஃப்ரான்” எங்கின்ற ஃப்ரென்ச் பணக்காரரும் பாண்டிசேரி எம்.எல்.ஏ ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கின்றனர். நம்முடைய போலீஸ் அதிகாரி அவர்கள் உட்கார்ந்துக்கொண்டிருக்கும் டேபிலில் ரகசிய ரெகார்டர் வைத்திருக்கிறார். அதை நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொருவரும் பிராண்டி, விஸ்கி ஆர்டர் செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் இரண்டு மணி நேரத்தில் நாளை நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுகிறேன். நாம் முன்பு சந்திச்ச ஒரு மிக சாதாரண ஹோட்டலில் அழுக்கு வேஷ்டி உடையில் இன்னும் அரை மணி அதாவது 7 மணிக்கு சந்திக்கலாமா?” என்றார்

திருநாவ்” நான் ரெடி வருகிறேன்”

குமார்” நாளை காலை உங்கள் பழைய சதாசிவத்தின் ரூம் அதில் அவர்களின் பழைய ஃபைல்ஸ் எல்லாம் சேர்ந்து ரூமை கொளுத்துவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள், இதற்கு உங்கள் ஆக்ஷன் என்ன?” என்றார்.

திருநாவ்“இது எப்பவோ எதிர்பார்த்தேன் அந்த ரூமிலிருக்கும் முக்கிய டாக்குமென்ட்ஸ் எல்லாம் எங்க வீட்டில் வைத்திருக்கிறேன்.” பலருடைய ஃபோடொஸ் இருக்கிறது. எல்லாவற்றையும் டிஜிடலைஸ் செய்துவிட்டேன்.என் வீட்டில் உங்கள் செக்யூரிடி இருக்கிறார்கள்

தே ஆர் குட்” என்றார்

குமார்” எக்ஸலென்ட், நீங்கள் மிகவும் ஜாக்கரதையாக இருக்க வேண்டும் என்பதற்காக - 4- பேர் அந்த மருத்துவ மனையில் வேலைக்கு அமர்த்திருக்கி

றோம், அதில் முருகன் என்பவன் மேல் அந்த பழியைப் போட்டு முருகனை வேலையை விட்டு நீக்க டாக்டர் சொக்கலிங்கம் திட்டம் போட்டிருக்கார். ராமநாதனின் உறவுக்காரர் கோவிந்தன் என்பவன் போலிஸ் இன்ஃபார்மர் (இந்த விஷயம் ராமநாதனுக்கு தெரியாது). ராமநாதன் அந்த கோவிந்தனை சிபாரிசு செய்வார். நீங்கள் கோவிந்தனை தற்காலிகமாக வேலைக்கு அமர்த்த சரி என்று சொல்லுங்கள்” 

குடி போதையில் உங்கள் மருத்துவமனை டாக்டர் மோஹன் தன் காருக்கு பதிலாக வேறு ஒரு காரில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அந்த கார் உரிமையாளர் ஒரு பெண், அவர் புகார் கொடுத்ததால் அவரை போலிஸ் ஸ்டேஷனில் வைத்துள்ளோம். நீங்கள் வீட்டிற்கு சென்று இன்னும் அரை மணி கழித்து நீங்கள் அந்த போலிஸ் ஸ்டேஷனுக்கு போய் கூட்டிக்கொண்டு போகலாம் ஃப்.ஐ.ஆர். போடவேண்டம் என்று நான் சொல்லியிருக்கிறேன்   என்றார். 

இருவரும் அந்த அழுக்கு வேஷ்டியுடன் காஃபி சாப்பிட்டுவிட்டு கிளபினார்கள். 

இரவு 8 மணிக்கு திருநாவ் குமார் சொன்ன போலிஸ் ஸ்டேஷனுக்கு சென்று டாக்டர் மோஹனை பார்த்தார். டாக்டர் மோஹன் அழாத குறையாக திருநாவிடம் கெஞ்சினார். திருநாவை பார்த்த இன்ஸ்பெக்டர் திருநாவிடம் “உங்கள் மீது மதிப்பு வைத்து நீங்கள் சொன்னதிற்காக ஃப்.ஐ.ஆர் போடவில்லை” என்று சொல்லி டாக்டர் மோஹனை எச்சரிக்கை செய்து திருநாவுடன் அனுப்பி வைத்தார். 

டாக்டர் மோஹனுக்கு திருநாவின் மீது மதிப்பு அதிகமாகியது. போலிஸ் இன்ஸ்பெக்டர் டாக்டர் மோஹனின் காரை ஸ்டேஷனில் கொண்டுவந்ததற்கு டாக்டர் மோஹன் நன்றி சொல்லிவிட்டு திருநாவுடன் சென்றார். மோஹன் திருநாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். 

திருநாவ் “நீங்கள் பொருப்புள்ள ஒரு நல்ல டாக்டர் என்று போலிஸிடம் சொல்லி 

ஃப்.ஐ.ஆர் உங்கள் மேல் போடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன்” என்றார். 

மோஹன் “இனி இது மாதிரி தவறு செய்ய மாட்டேன் உங்களுக்கு மிக நல்ல மனது நான் உங்களை தனியாக சந்திக்க வேண்டும்.பல சதி வேலை உங்களுக்கு எதிராக சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள். என்னையும் அதில் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். டாக்டர் சதாசிவம் இறந்ததுற்கு நான் தான் காரணம் என்று தங்களிடம் ஆதாரம் வைத்திருப்பதாக என்னை அடிக்கடி மிரட்டுகிறார்கள். எனக்கு அளவுக்கு அதிகமாக விஸ்கியை குடிக்க வைத்தார்கள். எனக்கு பாதுகாப்பு வேண்டும் டாக்டர்”. நான் நெட்டப்பாக்கத்தில் என் சொந்தமான தனி வீட்டில் வசிக்கிறேன்”. என்றார்.  நெட்டப்பாக்கம் புதுச்சேரி நகரத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது. இது புதுச்சேரி-மடுக்கரை நெடும் பாதை வழியாகப் புதுச்சேரி நகரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது  

திருநாவ்”நீங்கள் கவலை படவேண்டாம் உங்கள் காரை நீங்கள் எடுத்துக் கொண்டு நீங்கள் வீட்டிற்கு செல்லுங்கள் உங்கள் பாதுகாப்பிற்கு நான் இப்போதே ஏற்பாடு செய்கிறேன்”. என்றார் 

திருநாவு குமாருக்கு விஷயத்தை சொன்னார். பிறகு தானே டாக்டர் மோஹன் காரை பின் தொடர்ந்து தன் காரை ஓட்டிச் சென்றார். டாக்டர் மோஹன் வீட்டை அடைந்தவுடன் திருநாவ் தன் வீட்டிற்கு சென்றார்.

 “நீங்கள் எங்கள் குடும்பதை காப்பாற்றியதற்கு நன்றி நானும் எங்கள் குடும்பமும் உங்களுக்கு என்றும் கடமை பட்டுள்ளோம்” என்று கூறினார்.

காலை மருத்துவமனையில் சதாசிவத்தின் ரூம் எரிந்துக்கொண்டிருக்கும் என்று டாக்டர் சொக்கலிங்கமும், டாக்டர் ராமநாதனும் எதிர் பார்த்தது நடக்கவில்லை ஆனால் டாக்டர் ராமநாதனை எதிர் பார்த்து கோவிந்தன் என்பவர் மருத்துவமனையில் கேட் அருகில் உட்கார்ந்து கொண்டிருந்தார்.

டாக்டர் ராமநாதன் கோவிந்தனை தன் ரூமுக்கு வரவழைத்தார். டாக்டர் திருநாவுக்கரசுவிடம் கோவிந்தனைப்பற்றி சொல்லிவிட்டு அவனை மார்சுரி யில் இருக்கும் முருகனுக்கு உதவி ஆளாக பணியில் அமர்த்த வேண்டும்” என்றார்

திருநாவ்”நீங்கள் சொல்வது சரி தற்காலிகமாக பணியில் வைத்துக் கொள்ளுங்கள்” டாக்டர் சொக்கலிங்கம், டாக்டர் மோஹன் இங்கு என் ரூமில் இருக்கிறார்கள், நீங்களும் இங்கே 15 நிமிடம் வரமுடியுமா?” என்றார்.

டாக்டர் திருநாவ் ரூமில் 5 டாக்டர்கள் இருந்தார்கள். 

 திருநாவ்” நம்முடைய மருத்துவ மனையில் இதுவரை சில மெடிகல் ஃபார்மாவிலிருந்து வாங்கிக்கொண்டிருக்கிறோம். அதனை இன்றிலிருந்து நிறுத்தப்படும். டாக்டர் மோஹன் இனிமேல் நேரடியாக தயாரிக்கும் கம்பனியிலிருந்து தருவித்தால் ஒரு மாதத்திற்கு ஒரு கோடிக்கு மேல் நம் மருத்துவ மனையில் சேமிக்கமுடியும் என்று இறந்து போன டாக்டர் சதாசிவம் அவ்ர்களின் அறிக்கையை காண்பித்தார். அதனால் இனி நம் மருந்து கட்டுப்பாடுகள் டாக்டர் மோஹன் அவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும். ஊயிர் காக்கும் மருந்துகள் இன்று நம்மிடையே இலவசமாக தருவித்துள்ளேன்.

டாக்டர் மோஹன் அவர்கள் பல கம்பனியுடன் பேசி ஆர்டரும் கொடுத்துவிட்டர் அதனால் நம் மருத்துவ மனையில் சிஸ்டம் சரியாக இருக்க வேண்டும் அதற்கு டாக்டர் மோஹனுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறி இத்துடன் இந்த சந்திப்பு முடிவடைகிறது”.

என்றார். எல்லா டாக்டர்களும் சென்றனர்.

திருநாவ் அன்று மருத்துவ மனையில் 6 மைனர் சர்ஜெரியும் ஒரு மேஜர் இருதய அறுவை சிகிச்சையையும் வெற்றிகரமாக முடித்தார்.  

“யாராவது நோயாளிகளை கடுமையான வார்த்தைகளலோ அல்லது லஞ்சம் வாங்குவது புகார் செய்யப்பட்டாலோ அவர்கள் உடனே பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பு பலகைகள் பல இடத்தில் வைக்கப்பட்டதுடன்- இப்படிக்கு டாக்டர் மோஹன் என்று எழுதப்பட்டுள்ளது.

மருத்துவமனை தரத்தில் மிகவும் உச்சத்தை அடைந்தது. பல பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் நல்ல சிகிச்சை பெற்றார்கள் என்பதினால் பலர் அரசாங்க மருத்துவமனைக்கு வர ஆரம்பித்ததால் டாக்டர்கள் எண்ணிக்கையும் அதிகமானது. புதிய டாக்டர்கள் 30 வயதுக்குள் இருப்பவர்கள் மிக அதிகமாக பதவியில் அமர்த்தினார் டாக்டர் திருநாவ். 

ரெஸிடென்ஸி ஹோட்டலில் கான்ஃபெரன்ஸ் ஹால் டாக்டர் சொக்கலிங்கம், டாக். ராமநாதன் டாக். சந்துரு டாக்டர்.சந்தோஷ், பாண்டிசேரி எம்.எல்.ஏ, 

ரூ சஃப்ரான்” எங்கின்ற ஃப்ரென்ச் பணக்காரர் ஒருவருடன் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. டாக்டர் மோஹன் இந்த கூட்டத்தில் சேர்க்கவில்லை. ரெசிடன்ஸி ஹோட்டலில் சில போலிஸ் ஸி.ஐ.டி.கள் தற்கால பணியில் அமர்த்தியிருக்கிறார் பாண்டிசேரி போலிஸ் டைரக்டர் ஜெனெரல் குமார்.

 டாக். சொக்கலிங்கம்”நம்மையெல்லாம் மோஹன் காட்டிக்கொடுத்திருக் கிறார். இனிமேல் நாம் என்ன செய்வது? என்றார்.

டாக் ராமநாதன் “மோஹன் முன்பு சதாசிவத்தை அவர் தான் கொலை செய்தார் என்று நாம் மாட்டிவிட வேண்டியது தான்”

பாண்டிசேரி எம். எல். ஏ “டாக் மோஹனை மாட்டிவிடுவதற்கு ஏதாவது தகவல் கொடுத்தால், நாமும் சேர்ந்து மாட்டுவோம், காவல் நிலையத்தில் அந்த ஃபைலை மூடி சுமாராக இரண்டு வருடம் கடந்தது. இப்போது அதை கிளறினால் சரியாக இருக்காது.டாக். சந்துருவும், டாக் சந்தோஷும் அலோபதிக் டாக்டர் இல்லை என்ற உண்மையை சதாசிவம் எழுதி வைத்திருக்கிறார்” அதேல்லாம் வெளியே வரும் “என்றார்.

சொக்கலிங்கம்” அவரை நம் கோவிந்தனையும் அவன் ஆட்களைவிட்டு கடத்த முடியுமா?” என்றார்.

ராமநாதன்” கோவிந்தனுக்கு பல இடங்களில் ஆட்கள் இருக்கிறார்கள், அவன் சரியான ஆள் தான்.” என்றார். டாக். சந்துருவும், டாக். சந்தோஷும் அதை ஆமோதித்தார்கள். 

பாண்டிசேரி எம். எல். ஏ “நெட்டப்பாக்கத்தில் அவர் ஒரு தனி பங்களாவில் தான் இருக்கிறார். அதனால் அவரை கடத்தி பணம் 2 கோடி கேட்க சொல்லலாம். ஆனால் கோவிந்தன் என்பவன் நமக்கு சாதகமாக நடக்கமாட்டான். அவன் டாக். ராமநாதனுக்கு தெரிந்தவன் ஆனால் அவனைப் பற்றி ராமநாதனுக்கு த்தெரியாது.  நிச்சயமாக அவன் போலிஸ் இன்ஃபார்மர்.

அதனால் ரூ சஃப்ரான் அவர்கள் ஃப்ரான்ஸிலிருந்து ஆளை வரவழித்துத்து தான் டாக் மோஹனை கடத்தி நமக்கு கிடைக்கவேண்டிய பணம் மருந்தில் தான் வரவேண்டும் என்று இல்லை நமக்கு பணம் வரவண்டும். இந்த கடத்தலுக்குப்பின் டாக்டர் திருநாவுக்கும் பயம் ஏற்படும்” என்றார்.

 ரூ சஃப்ரான்” எனக்கு நம்பகமான ஆட்கள் இருக்கிறார்கள். ஃப்ரன்ஸில் நானும் மில்டரியில் இருந்து ஓய்வு பெற்றவன். டூயல் சிடிசன்ஷிப் என்னிடம் இருக்கிறது. இந்தியாவிலும் நான் இருக்கலாம். ஃப்ரென்ச் ஆர்மியிலிருந்து ஓய்வு பெற்றவர்களில் இருவர் 40 வயதுக்குள் இருக்கிறார்கள் மிகவும் கொடுர

மானவர்கள் பலரை கொலை செய்திருக்கிறார்கள். அவர்கள் ஆர்மியில் என்னிடம் வேலை செய்தவர்கள் ஆனால் ஃப்ரென்ச் போலிஸால் இவர்கள் செய்த கொலையில் ஒரு கேசில் கூட நிருபிக்க முடியவில்லை. பலரை வெற்றிகரமாக கடத்தியிருக்கிறார்கள் அவர்களிடமிருந்து பணமும் கறந்திருக்கிறார்கள். போலிஸில் இவர்கள் மீது சந்தேக பார்வை எப்போதும் உண்டு. நானும் அவர்களை இங்கே கூப்பிடவேண்டும் என்று நினைத்தேன்.

அவர்களை நாளை இங்கு வரவழிக்கிறேன். அவர்கள் டாக். மோஹன் வீட்டை நன்றாகப்பார்த்துக்கொள்வார்கள் சமயம் பார்த்து இந்த வாரத்தில் முடித்து விடுவார்கள்.” என்றார்.

மறுநாள் ரூ சஃப்ரான்” சொன்னபடி ஃப்ரென்ச் ஆர்மி ஆசாமிகளை வரவழிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டது அவர்களும் மறுநாள்காலை ஃப்லைடில் கிளம்பி சாயங்காலம் அநேகமாக வருவார்கள் என்று ரூ சஃப்ரான் அவ்ர்கள் எல்லோருக்கும் தெரிவித்துவிட்டார்.

 போலிஸ் டைரெக்டர் ஜெனரல் குமாருக்கு அவர்களின் பேச்சுக்கள் முழுவதும்   

விவரமாக சென்றது. 

குமார் டாக்டர் திருநாவைக்கூப்பிட்டு ஒரு வாரம் மோஹனுக்கு பதிலாக அவருடைய உருவத்தில் நான் இருப்பேன். டாக்டர் மோஹன் குடும்பத்துடன் நாளை காலை 4 மணிக்கு அவருடைய ஊர் தஞ்சாவூருக்கு போகவேண்டும். அவர்களுடைய வீட்டில் இருக்கும் மொபைல் ஃபோன் என்னிடம் இருக்கும். 

டாக்டர் மோஹன் வீட்டிற்கு குமாரும், திருநாவும் சென்று விவரங்களை டாக்டர் மோஹனிடம் தெரிவித்து விட்டு குமாரின் திட்டபடி மோஹன் தன் பங்களாவின் சாவியையும் அவர்களிடம் இருக்கும் மொபைல்களும் போலிஸ் டைரெக்டர் ஜெனரல் குமாருக்கு சென்றது. பல போலிஸ் அந்த பங்களாவிற்கு வந்துவிட்டார்கள்.

டாக்டர் மோஹன் எங்கின்ற குமார் டாக் சொக்கலிங்கம், ராமநாதன், டாக். சந்துரு, டாக். சந்தோஷ் முதிர்ந்த டாக்டர்களை மட்டும்   டாக்.திருநாவ் கான்ஃபரன்ஸ் ரூம்மில் கூப்பிட்டார். 

அந்த ஐவரும் வந்தவுடன் டாக்.திருநாவ் பெரிய குண்டை போட்டார். “டாக். சந்துரு, டாக். சந்தோஷ் இருவரும் எம்.பி.பி.எஸ் முடிவுகளில் தேர்ச்சி அடையவில்லை ஆனால் இத்தனை வருடம் இவர்கள் நம் அரசு மருத்துவமனையில் எப்படி பணி புரியலாம். இதை பற்றி முன்பே டாக். சதாசிவம் எழுதி இருக்கிறார். நான் இப்போது தான் அவருடைய லெட்டரை பார்த்தேன். அவருடைய பழைய ரூம் ஏன் பூட்டி டாக். ராமநதன் சாவி வைத்திருப்பதாக அந்த ருமை பராமரிக்கும் கோவிந்தன் சொன்னார். நான் தான் அந்த ரூம் பூட்டை உடைக்க சொன்னேன். இந்த விஷயம் டாக். சொக்கலிங்கத்திற்கு தெரியும், ஏன் சொல்லவில்லை. இன்று முதல் அவர்கள் இருவரும் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள். அவர்கள் தங்களுடை தகுதிகளை நிருபணம் செய்ய வேண்டும். அவர்களினால் நம் அரசு மருத்துவமனைக்கு பெரிய அவமானம். இது போலிஸுக்கு தெரிந்தால் அவர்களை கைதி செய்வார்கள். 

இன்றிலிருந்து அவர்கள் பொருப்புகளிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். அவர்கள் இதுநாள் வரை மருந்துகள் ஸ்டாக் செய்வதில் தான் இருந்தார்கள்.

அந்த இருவரும் ஒரு நோயாளியையும் பரிசோதனை செய்ததாக ஒரு அறிக்கை இல்லை. 

டாக். மோஹன் எங்கின்ற குமார் “நான் இதைப்பற்றி குறிப்பு கொடுத்திருக்கிறேன். அதற்கு பிறகு தான் டாக். சதாசிவம் செயலில் இறங்கினார்கள். அதற்குள் அவர் இறந்தது வருத்தமளிக்கிறது என்றார்.

டாக். திருநாவ்” உங்கள் குறிப்பும் உள்ளது, நான் அந்த இரு போலி டாக்டர்கள்  

வேலையை ராஜினாமா செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் அல்லது அவர்கள் போலிஸில் ஒப்படைக்கப்படுவார்கள். இத்துடன் இந்த கூட்டம் முடிவடைந்தது. எல்லோரும் எழுந்து சென்றார்கள்.

சொக்கலிங்கத்திற்கும், ராமநாதனுக்கும் ஒரு பெரிய இடி விழுந்தது போல் இருந்தது. அவர்கள் என்ன செய்வது என்று உடனே புரியவில்லை.

டாக். சந்துரு, டாக். சந்தோஷ் வேலயை ராஜிநாமா செய்துவிட்டு அந்த எம்.எல்.ஏ. பொன்னுசாமியிடம் சென்று நாங்கள்.”டாக். மோஹனையும் டாக் திருநாவையும் கொலை செய்வோம்” என்று பொன்னுசாமியிடம் முறையிட்டார்கள். பொன்னுசாமி அவர்களை அமைதிபடுத்திவிட்டு “நீங்கள் கவலை படாதீர்கள் ஃப்ரான்ஸிலிருந்து அந்த இருவரும் வந்துவிட்டார்கள் என்று ரூ சஃப்ரான் இப்போது தான் ஃபோன் செய்தார். நீங்கள் அந்த டாக். மோஹன் பங்களாவிற்கு அருகில் தானே இருக்கிரீர்கள். இப்போது அவர் எப்போது வருகிறார் என்று பார்த்து வையுங்கள். நாளை காலை நாம் 

ரூ சஃப்ரான் அவர்களை சந்தித்து அமைதியாக திட்டமிட்டு செயலில் இறங்கலாம்” என்றார். 

டாம் சாயர்,   விக்டர் ஹியூகொ இருவரும் ஃப்ரன்ஸிலிருந்து ரூ சஃப்ரான் வீட்டில் தங்கியிருந்தனர். ரூசஃப்ரான் கோரிமேடு பகுதியில் தனி பங்களாவில் வசித்து வருகிறார். அவர் வீட்டில். பெரிய நீச்சல் குளம் அதன் அருகில் டென்னீஸ் கோர்ட், வாக்கிங்க் டிரக், 4 பெரிய வெளிநாட்டு நாய்களுக்கு சிறப்பாக கட்டப்பட்ட சிறிய வீடுகள் என்பது போன்ற பல வசதிகள் உண்டு.  . ரூசஃப்ரான் தன்னுடை தனி பங்களாவிற்கு ஞாயிற்றுகிழமை டாக். சொக்கலிங்கம், டாக். ராமநாதன், டாக். சந்துரு, டாக். சந்தோஷ் அவர்கள் மாலை 3 மணிக்கு வந்தார்கள். 

டாக். சந்துரு, டாக். சந்தோஷ் இருவரும் கூட்டம் ஆரம்பிக்கும் முன்பே தங்களை பணிநீக்கம் செய்ததைப் பற்றி கூறினார்கள். 

ரூசஃப்ரான் சிரித்துக்கொண்டே டாம் சாயர்,   விக்டர் ஹியூகொ இருவரையும் பற்றி எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். “இவர்கள் நேற்று சாயங் 

காலம் ஃப்ரான்ஸிலிருந்து வந்தார்கள் “, என்றார்.  இருவரும் சுமார் 6 அடி உயரம் இருந்தனர். 10 பேரை சண்டையில் எளிதில் வீழ்த்துவார்கள் என்பது போன்று அவர்களின் உடல் கட்டை பார்த்தால் தெரிகிறது. தமிழ் ரூசஃப்ரான் பேசும் அளவிற்கு அவர்களால் பேசமுடியவில்லை ஆனால் ஓரளவு தமிழ் நன்றக புரிந்துக்கொள்கிறார்கள். “நாம் ஹோட்டலில் பேசியதை எல்லாம் அநேகமாக போலிஸ் கேட்டுக்கொண்டிருக்கலாம். அல்லது யாராவது போலிஸ் இன்ஃபார்மர் இருக்கலாம் என்ற சந்தேகத்தினால்தான் என் வீட்டிற்கு உங்களை அழைத்தேன்” என்றார்.

சொக்கலிங்கம்”அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? எங்களால் டாக். சந்துருவையும் டாக். சந்தோஷையும் பணி நீக்கம் செய்ததற்கு ஒன்றும் செய்யமுடியவில்லை. டாக் திருநாவ் உடனே பதவி நீக்கம் செய்வார் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. இது அநேகமாக அந்த டாக். மோஹனின் தூண்டுதல்தான் என்று தெரிகிறது. அவர் புதியதாக மருத்துவ மனைக்கு தேவையான மருந்துகளை தருவிக்கும் கட்டுப்பாடு என்ற பொருப்புகள் கொடுத்ததினால் அவருக்கு ஏதாவது புதியதாக பல யோசனைகளை டீன் ஆகிய டாக். திருநாவிடம் சொல்லி நல்ல பெயர் வாங்கிக் கொள்கிறார். இதை தடுக்க வேண்டும்.” என்றார். 

ராமநாதன் “டாக் மோஹனையும், டாக். திருநாவையும் கடத்தி பணம் கறக்கவேண்டியது தான், பணம் வந்தவுடன் இருவரையும் மேல் லோகத்துக்கு அனுப்ப வேண்டும்” என்றார்.

ரூசஃப்ரான் டாக்டர்கள் கூறியதை டாம் சாயர், விக்டர் ஹியூகொ என்ற ஃப்ரென்ச்காரர்களிடம் விளக்கிக் கூறினார். இதை முழுவதும் கேட்டு அறிந்த அந்த இரு ஃப்ரென்ச்காரர்கள். “செயலில் இறங்க தாங்கள் தயாராக இருக்கிறோம்.  இன்று இரவு நாங்கள் அந்த டாக். மொஹன் வீட்டையும்   அந்த டீன் திருநாவின் விட்டையும் அடையாளம் காண்பியுங்கள். மீதி திட்டங்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். ஆட்களை கடத்தி பாதுகாப்பான இடம் எங்கே என்று சொல்லுங்கள் செவ்வாய்கிழமை அந்த இருவரையும் கடத்திவிடுவோம், முன் பணமாக 25 லட்சம் கொடுக்கவேண்டும் என்றனர்.

உடனே 25 லட்சம் கேஷ் கொடுக்கப்பட்டது.

இரவு 8 மணிக்கு டாக். சந்துருவையும் டாக். சந்தோஷையும் ரூசஃப்ரானுக்காக

நெட்டப்பாக்கத்தில் குறிப்பிட்ட டாக். சந்தோஷ் வீட்டில் காத்துக்கொண்டிருந்தனர். சரியாக 8 மணிக்கு டாம் சாயர், விக்டர் ஹியூகொவுடன் ரூசஃப்ரானுடைய கார் சந்தோஷ் பங்களாவில் நுழைந்தது.

நெட்டப்பாக்கம் போலிஸ் இன்ஸ்பெக்டர் இரண்டு கான்ஸ்டேபிளுடன் சந்தோஷ் வீட்டிற்கு எதிரில் பெரிய ஃபிளாட்டின் 4வது மாடியிலிருந்து, கார் நுழைந்ததை கண்காணித்தனர் இவர்களின் நடவடிக்கைகளை பற்றி டாக். மோஹனின் உருவத்தில் இருக்கும் குமாருக்கு அனுப்பப்பட்டது.

டாக் சந்தோஷ் எல்லோரையும் வரவேற்றார். எல்லோருக்கும் இளநீர்கொடுக்கப்பட்டது. 

சந்தோஷ்”ஒரு முக்கியமான விஷயம் மோஹன் மிக பயந்த சுபாவம் கொண்டவர் இன்றே அவரை கடத்திச் சென்று மணலிபட்டு எங்கின்ற கிராமத்தில் எனக்கு சொந்தமான பண்ணை வீடு இருக்கிறது அங்கு எல்லா வசதியும் இருக்கிறது. மிகப்பெரிய வீடு அதில் ஒருவரும் வரமுடியாது. அங்கு அவரை அடைத்துவைத்து 2 கோடி வரை நிச்சயமாக வாங்கமுடியும்”என்றார்.

சந்தோஷ் சொல்வதை கேட்டு ரூசஃப்ரான் “டாக் மோஹன் வீடு எங்கு இருக்கிறது என்று டாம் சாயரரும், விக்டர் ஹியூகொவும் கேட்கிறார்கள் அதை பார்த்துவிட்டுதான் முடிவெடுப்பார்கள் “என்றார்

இங்கிருந்து நடந்து போகும் தூரம்தான் என்று சொல்லிக்கொண்டே அவருடைய மேல் மாடிக்கு எல்லோரையும் அழைத்துச்சென்று எதிரில் இருக்கும் தனி பங்களாவை காண்பித்தார் டாக் சந்தோஷ். 

இவ்வளவு கிட்டே இருக்கிறது அன்று ரூசஃப்ரான் அப்படியென்றால் அவரை இப்பொதே கடத்தலாம் என்று அந்த இரு ஃப்ரென்ச் காரர்களும் செயலில் இறங்க ஆரம்பித்தார்கள். ஆர்வ கோளாரினாலும் மோஹன் மேல் இருக்கும் ஆத்திரத்தினாலும் டாக்.சந்துருவும், டாக்.சந்தோஷும் “நாங்களும் வருகிறோம்” என்று அந்த ஃப்ரென்ச் வீரரிடம் சொன்னார்க்ள்

 அங்கு இருக்கும் ஒரு காவலாளி மட்டும் பார்ப்பதற்கு மிகவும் வயதானவன் போல் இருந்தார்.ஆனால் அந்த ஃப்ரென்ச் வீரர் இருவரும் “இப்போது தூரத்திலிருந்து பார்க்கலாம் இன்று நாம் எதுவும் செய்யக்கூடாது. அடுத்ததாக நாம் டாக் திருநாவு வீட்டை பார்க்கவேண்டும். அவர்களுக்கு நிச்சயம் போலிஸ் பாதுகாப்பு இருக்கும் நீங்கள் உங்கள் அவசரத்தையும் ஆத்திரத்தை காண்பிப்பதால் நாம் எல்லோரும் மாட்டுவோம்.” என்றார் டாம்

சந்தோஷ் வழிகாட்ட டாக். திருநாவ் வீட்டின் அருகே ஒரு டீ கடையில் டீ சாப்பிட்டுக்கொண்டே டாக். திருநாவுக்கு அரசாங்கத்தால் கொடுத்த தனி வீடு. அதில் அவர் வீட்டில் வாச்மென் இருவர் இருக்கிறார்கள், என்பதையையும் எல்லோரும் பார்த்தார்கள்.

டாம்:-”டாக்.திருநாவை வீட்டில் கடத்துவது மிகவும் கஷ்டம். அவரை அவருடைய ஆஃபிஸிலிருந்து வெளியே போகும் போது தான் கடத்தமுடியும். அவர் எப்போது வெளியே போவார் என்பதை தெரிந்து கொண்டு எளிதில் கடத்த முடியும்” என்றார்.

அன்று இரவு எல்லோரும் விடை பெற்றனர். டாம் சாயர், விக்டர் ஹியூகொவுடன் ரூசஃப்ரானுடன் சென்றார்கள்.

மறுநாள் பாண்டிசேரி அரசாங்க மருத்துவ மனை மிக சுறுசுறுப்பாக இயங்கியது. திடீர் விஜயமாக பாண்டிசேரி மாநில துணைநிலை ஆளுநர் நேஹா சூரி அவர்கள் அரசாங்க மருத்துவமனையில் வந்தார்.  அங்கு வந்த பல நோயாளிகளிடம் அவர்களுடய உடல் நலம் பற்றி நேரடியாக விஜாரித்தார்.

அவர்களிடம் மிக அன்பாக ஏதாவது குறைகள் இருக்கிறதா? உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்கிறார்களா? என்று விஜாரித்தது ஏழை நோயாளிகள் எல்லோரும் ஆச்சரியமடைந்தார்கள். 

துணை ஆளுநர் அவர்கள் அறுவை சிகிச்சை செய்யும் இடத்திற்கு சென்று பார்வையிட்டார். டாக்டர்கள் அனைவரையும் கான்ஃபெரென்ஸ் ஹாலில் 10 நிமிடங்கள் இன்னும் எந்த அளவில் நம் மருத்துவ மனையை முன்னேற்றலாம்

என்பதைப்பற்றி கேட்டு அறிந்து கொண்டார்கள். பிறகு துணை ஆளுநர் அரசாங்கம் பல வகையில் இந்த மருத்துவ மனையின் முன்னேற்றத்திற்கு பாடுபடும் என்பதை தெரிவித்துக்கொண்டு விடை பெற்றார்கள்.

மறுநாள் காலை 6 மணிக்கு டாக். சொக்கலிங்கமும் டாக். ராமநாதனும் சந்தோஷயையும், சந்துருவையும் கூட்டிக்கொண்டு ரூசஃப்ரான் வீட்டிற்கு சென்றார்கள். ரூசஃப்ரான் அனைவரையும் வரவேற்று அவர்களை பெரிய ஹாலுக்கு அழைத்து சென்றார். டாம்மும் ஹ்யூகோவும் உடல் பயிற்சி செய்து முடித்துக்கொண்டு அவர்களும் வந்து அமர்ந்தார்கள். 

டாக் சொக்கலிங்கம்: நான் எலும்பு சம்பந்தமான அனுபவமுள்ள டாக்டர் என் துறையில் எந்த சர்ஜரியாக இருந்தாலும் நான் தான் செய்வேன். இப்போது எங்கள் இருவரையும் எந்த ஒரு முக்கிய பொருப்பிலிருந்து விலக்கிவிட்டார்கள் நாங்கள் இப்போது தனியாக ஒதுக்கப்பட்டவர்களானோம். எங்கள் இருவரையும் இப்போது டாக். திருநாவும் டாக். மோஹனும் சேர்ந்து நாங்கள் மருத்துவமனையில் மருந்து வாங்கியதில் ஊழல் நடந்திருக்கிறது என்று கூறுகிறார்கள்.” டாக். மோஹனையும், டாக். திருநாவையும் கடத்திவிடுவோம் என்று சொல்லி 3 நாட்கள் கடந்துவிட்டது இதுவரை என்ன செய்தீர்கள் என்றுதெரியவில்லை.” என்றார்.

ரூசஃப்ரான்:- நிங்கள் கேட்பது ஞாயம் தான் அந்த ஃப்ரென்ச் வீரர்கள் இருவரும் அதற்காக திட்டம் தீட்டி இருக்கிறார்கள். டாக். மோஹன் வீட்டிலும் டாக். திருநாவு வீட்டிலேயும் போலிஸ் கண்காணிப்பு அதிகமாக இருக்கிறது. தற்போது அவர்கள் வெளியூருக்கு போவதாகவோ அல்லது ஏதாவது நோயாளியை அவர்கள் வீட்டிற்கு சென்று பார்க்கும்படி நீங்கள் ஏற்பாடு செய்தால் நாங்கள் இருவரையும் கடத்திவிடலாம். எம். எல். ஏ. பொன்னுசாமியிடம் இதை ஏற்பாடு செய்யமுடியுமா? என்று கேட்கிறார்க்ள். இன்னும் இரண்டு நட்களில் இரண்டு டாக்டர்களையும் கடத்திவிடுவோம்” என்று கூறுகிறார்கள்.

ராமநாதன்” தினமும் எங்களை பார்த்து ஊழல் நாங்கள் செய்ததற்கு பல சாக்ஷிகள் இருப்பதாக சொல்லுகிறார்கள். நாங்களும் முடிந்தவரை சமாளித்துக்கொண்டுதான் இருக்கிறோம். இன்னும் இரண்டு நாட்களுக்குள் அந்த இரு டாக்டர்களையும் கடத்திதான் ஆகவேண்டும்” என்று கூறிவிட்டு அனைவரும் பிரிந்து சென்றார்கள்.  

திடிரென்று சந்தேககதின் பேரில் திரு. ரூசஃப்ரான் வீட்டிற்குள் நுழைந்த அமுலாக்கப்பிரிவு அதிகாரிகள் பல பிரிவாக சோதனை செய்ததில் மூன்று (3) கோடியே எண்பது லக்ஷம் கணக்கில் வராத பணத்துடன் 1 கோடி மதிப்புள்ள கஞ்சாவும் பிடிக்கப்பட்டிருந்ததால் திரு. ரூசஃப்ரான் கைதி செய்யப்பட்டார்.

அவருடன் தங்கியிருந்த இரண்டு ஃப்ரென்ச் நாட்டு ப்ரஜைகள் திரு. டாம்

திரு. ஹ்யூகோ இருவரும் பிடிபட்டார்கள். திரு. ரூசஃப்ரான் நடத்தும் கல்லுரியிலும் வருமானத்தில் காண்பிக்கபடாமல் 1 கோடியே 25 லக்ஷம் இந்திய மதிப்புள்ள அமெரிக்க டாலர் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த செய்தி அன்று செய்தித்தாளின் தலைப்பு செய்தியாக வந்தது. இதில் கல்லுரியில் பங்குதாரரான எம்.எல்.ஏ. பொன்னுசாமி அவர்களையும் அமுலாக்கப் பிறிவினர் தீவிரமாக விஜாரித்து வருகிறார்கள்.

இந்த செய்தி டாக். சொக்கலிங்கம், டாக். ராமநாதன், டாக் சந்தோஷ்,டாக். சந்துரு அவர்களுக்கு பெரிய இடி விழுந்தது போன்று ஆகிவிட்டது. தங்களையும் விஜாரணை வளையதில் கொண்டு வருவார்களோ என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டது. 

தஞ்சாவூருக்கு சென்ற டாக். மோஹன் அவர்கள் திரும்பி வந்துவிட்டார். டாக். மோஹன் வேடத்தில் இருக்கும் போலிஸ் டைரக்டர் ஜெனரல் குமார் கைதி செய்தவர்களை துருவி துருவி போலிஸ் பாணியில் கேட்டதில் பல உண்மைகள் வெளிவந்தது. குமாருக்கு ஃப்ரென்ச் மொழி நன்றாக பேச தெரிந்ததால் ஃப்ரன்சிலிருந்து வந்த அந்த இருவரையும் விஜாரணையில் அவர்கள் வாயால் யார் யார் சம்பந்த பட்டியிருக்கிறார்கள் என்பது தெரியவந்ததுடன் அவர்கள் வீட்டிலேயும் அவர்கள் நடத்தும் நிருவங்களிலும் சோதனை அமுலாக்கபிரிவினறால் நடத்தப்பட்டது. 

டாக். சொக்கலிங்கம் வீட்டில் 2 கோடியும். அவருடைய பண்ணை வீட்டில் 1கோடியே 15 லக்ஷமும் வருமானவரியில் காண்பிக்கபடாமல் இருந்த தோகை பிடிபட்டது.

டாக். ராமநாதனின், டாக். சந்துரு, டாக் சந்தோஷ் வீட்டிலும் அவர்களுடைய பினாமியால் நடத்தப்படும் ஃபார்மசிகளிலும் கணக்கில் வராத பல கோடிகள் சிக்கியது. 

சொக்கலிங்கம், ராமநாதன், சந்துரு, சந்தோஷ் இந்த நால்வர் டாக். சதாசிவத்தை விஷவாயுவை டாக்.சதாசிவம் தூங்கிக்கொண்டிருக்கும் அறையின் குளிர்சாதன பெட்டியின் வழியாக செலுத்தியதால் அவர் விஷத்தன்மையினால் அவரே மயங்கிவிழுந்துவிட்டார் பிறகு நால்வரும் சதாசிவம் வீட்டில் உள்ளே சென்று அவர் கழுத்தில் துண்டை போட்டு இருக்கி யதால் அவர் இறந்தார் என்று   கொலை செய்ததை அவர்களே வாக்குமுலம் கொடுத்தார்கள்.

No comments:

Post a Comment