மஹா பெரியவர் கூறியுள்ள ஏழு சுலோகங்களுக்கு விசேஷமான மந்த்ரசக்தி !
இலங்கையில் இராம-இராவண யுத்தம் நடந்து ொண்டிருக்கிறது இராவணன் பக்கத்தில், முக்கிய மானவர்கள் எல்லோரும் வீழ்ந்து விட்டார்கள் என்றாலும்,அவன் பணிய மறுத்தான். மேலும் ஆக்ரோஷத்துடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தான்.
இராமனுக்கே மனம் சோர்ந்து விட்டது. இவனை எப்படிப் பணிய வைப்பது? வழி தெரிய வில்லையே? என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் போது அகத்திய முனிவர் வந்தார்.
"ஆதித்ய ஹ்ருதயம்-னு ஒரு ஸ்தோத்ரம்-சூரியனைப் போற்றிப் பிரர்த்திக்கிற சுலோகங்கள்.அதை ராமனுக்கு உபதேசம் பண்ணினார்.
ராமனும்,அதன்படியே சூரிய பகவானை வழிபட்டு தைரியம் அடைந்தான்;ஜெயித்தான்- என்கிறது வால்மீகி ராமாயணம்
-- இவ்வளவும்,டாக்டர் ஸி.பி.ராமஸ்வாமி அய்யர்அவர்களின் புதல்வர் திரு ஸி.ஆர்.பட்டாபி ராமனிடம் மகாப்பெரியவா கூறிக் கொண்டிருந்த புராணச் சொற்பொழிவு.
யுத்த காண்டத்திலே அந்த ஸர்க்கம் வருகிறது. முப்பத்தோரு சுலோகங்கள்.அதிலே நக்ஷத்ர க்ரஹ தாரணாம்- என்று ஆரம்பித்து,ரவயே லோக ஸாக்ஷிணே-என்று முடியும் சுலோகம் வரையிலான ஏழு சுலோகங்களுக்கு விசேஷமான மந்த்ரசக்தி உண்டு.
பெரியவா,இந்த விஷயத்தை இத்துடன் நிறுத்திவிட்டு, வேறு விஷயங்களைப் பற்றிப் பேசத் தொடங்கினார்கள்.
ஆனால், பட்டாபிராமன் அங்கேயே நின்றுவிட்டார். பெரியவா சொன்னது காற்றோடு போகிற விஷயமில்லை. திரேதாயுகத்தில்,தசரதராமனுக்கு அகஸ்திய முனிவர் செய்த உபதேசத்தை, இந்தக் கலியுகத்தில், பட்டாபி ராமனுக்கு,காஞ்சி முனிவர் உபதேசித்திருக்கிறார்.!..
இந்த ஏழு சுலோகங்களையும் நான் ஏழு ஜென்மத்துக்கும் மறக்கக் கூடாது என்று உறுதி எடுத்துக் கொண்டார், காஞ்சிபுரம் ராமஸ்வாமி அய்யர் பட்டாபிராமன்
மகாப்பெரியவாள் சுட்டிக்காட்டிய மந்திரசக்தி,அந்த நிமிஷத்தோடு போய்விடவில்லை; *அந்த சீடருக்கு மட்டுமே உரியது என்று கருத வேண்டியதில்லை
மந்திர சக்தியைப் பெற்று, சூரிய பகவான் அருளினால் எல்லோருமே உடல் வலிமையுடன் இருக்கலாமே?
"யுத்தகாண்டம் 107வது ஸர்க்கம் ஆதித்ய ஹ்ருதயத்தில் ,,,,,,,,,, மகா பெரியவாள் குறிப்பிட்ட சுலோகங்கள் கீழே...
தேஜஸாமபி தேஜஸ்வி த்வாதசாத்மன் நமோஸ்துதே !!
ஜ்யோதிர்-கணானாம் பதயே தினாதி பதயே நம: || 16||
நமோ நம: ஸஹஸ்ராம் சோ ஆதித்யாய நமோ நம: || 17||
நம: பத்ம ப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம: || 18||
பாஸ்வதே ஸர்வ புக்ஷாய ரௌத்ராய வபுஷே நம: || 19||
க்ருதக்னக்னாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம: || 20||
நமஸ்த மோபி-நிக்நாய ரவயே லோகசாக்ஷிணே || 21|
மஹா பெரியவா குறிப்பிட்ட மிக முக்கியமான ரத்தினங்கள் இவை ! இவைகளை குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி தீபத்தின் முன் தினமும் சொல்லி வர வர வாழ்வில் பல நல்ல மாற்றங்களை காணலாம்
No comments:
Post a Comment