Sunday, February 21, 2021

துவையல் வகைகள்

 துவையல் வகைகள்


1.  இஞ்சி தொக்கு

100. கிராம் இஞ்சி தோல் சீவி துறுவி வைத்து கொள்ளவும்

எலுமிச்சம் பழம் அளவு புளி ஊறவைத்து கரைத்து வடிகட்டி வைத்து கொள்ளவும்

வானலியில் 2 ஸ்பூன் கடுகு அரை ஸ்பூன் வெந்தயம் போட்டு வறுத்து ஆறியதும் பொடி செய்து கொள்ளவும்

வானலியில் 2 கரண்டி நல்லெண்ணை ஊற்றி காய்ந்ததும் ஒரு ஸ்பூன் கடுகு, பெருங்காயம், 2 ஸ்பூன் கடலை பருப்பு, கொஞ்சம் கருவேப்பிலை போட்டு பொறிந்ததும்    இஞ்சி துறுவலை போட்டு அதனுடன் 5-6 ஸ்பூன்  மிளகாய் காரப்பொடி  கடுகு வெந்தய பொடி போட்டு நன்றாக வதக்கி, கரைத்த புளி கரரைசலை ஊற்றி ஒரு துண்டு  வெல்லம்  போட்டு எண்ணை பிரிந்து வரும் வரை வதக்கி இறக்கினால் சூப்பரான இஞ்சி தொக்கு ரெடி

2.  பாவற்காய் ஸ்வீட் கார பச்சடி 

நான்கு (4)  ஜான் அளவுள்ள பாவற்காயை எடுத்து நீள வாக்கில் நறுக்கி விதைகளை நீக்கி மிகவும்  பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும்  . 

கடாயில் ஒரு குழம்பு கரண்டி அளவு எண்ணை ஊற்றி கடுகு, பெருங்காயம் தாளித்து சிறிதளவு கடலை பருப்பு, கருவேப்பிலை சிறிதளவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் (4)  சிறிதளவு சாம்பார் பொடி சேர்த்து அதனுடன் பாவற்காயையும்   சேர்த்து  நன்றாக கிளறி  10 நிமிடம. மூடி வைக்கவும்  

பிறகு அதனுடன் கொஞ்சம் கெட்டியான புளி தண்ணீர், உப்பு, 50 கிராம் அளவு வெல்லம சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக சுண்டியவுடன் இறக்கி பறிமாறவும்

3.கொத்தமல்லி தொக்கு

2 கட்டு பச்சை கொத்தமல்லியை வேரை நீக்கி பொடியாக நறுக்கி நன்றாக அலம்பி உலர வைக்கவும்

வானலியில் 2 ஸ்பூன் நல்லெண்ணை ஊற்றி காய்ந்ததும் அரை கையளவு உளுத்தம் பருப்பு 15-20 மிளகாய் வத்தல், ஒரு கோலி அளவு பெருங்காய கட்டி   5-10 வெந்தயம்  கொஞ்சம் கடுகு போட்டு சிவக்க வருத்து ஆறவைத்து மிக்ஸியில் போட்டு அதனுடன் உலர வைத்த கொத்துமல்லி , எலுமிச்சம் பழம் அளவு புளியை நன்றாக துண்டுகளாக பிச்சு போட்டு,  ஒரு சிறிய கட்டி வெல்லம் ( Optional ) கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி கர கர வென்று அரைத்து கொள்ளவும்

வானலியில் ஒரு கரண்டி நல்லெண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு தாளித்து அரைத்த கொத்துமல்லி விழுதை போட்டு, தேவையான உப்பு சேர்த்து எண்ணை பிரிந்து வரும் வரை வதக்கி இறக்கினால் சூப்பரான கொத்தமல்லி தொக்கு ரெடி

4.  இஞ்சி தக்காளி தொக்கு

இஞ்சி  100g, தோல் சீவி துறுவவும்,  3 தக்காளி பொடியாக நறுக்கவும்,   3 பச்சை மிளகாய், 3 வர மிளகாய்,  புளி நெல்லிக்காய் அளவு, வெல்லம் சிறிய கட்டி, உப்பு  மஞ்சள் தூள், இஞ்சி மிளகாய் தக்காளி வதக்கவும், ஆறிய பின்பு மற்றவை எல்லாம் போட்டு அரைக்கவும், வாணலியில் ஒரு கரண்டி நல்லெண்ணை ஊற்றி  அரைத்ததை போட்டு சுருள வதக்கி தேவையான உப்பு சேர்க்கவும்,  கலந்து இறக்கினால்

சூப்பரான தக்காளி இஞ்சி தொக்கு ரெடி

தயிர் சாதம் இட்லி தோசை எல்லாத்துக்கும் தொட்டுக்கலாம் ஜீரணமமும் ஈஸியாக ஆகும்

5.  பருப்பு துவையல்

வானலியில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி ஓரு கப் துவரம் பருப்பு, 7-8 மிளகு, 2 மிளகாய் போட்டு நன்றாக சிவக்க வறுத்து ஆறியதும் அதனுடன் ஒரு கப் துறுவிய தேங்காய், தேவையான உப்பு சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைத்ததால் சுவையான பருப்பு துவையல் ரெடி

6.  வெங்காய துவையல்

வானலியில் 3 ஸ்பூன் எண்ணை ஊற்றி காய்ந்ததும்  4 ஸ்பூன் உளுத்தம் பருப்பு,  ஒரு ஸ்பூன் கடலை பருப்பு போட்டு, பாதி வறுக்கும் போது  5-6 மிளகாய்   போட்டு சிவக்க வறுத்து தனியே வைக்காவும்

அதே வானலியில் அரை கரண்டி எண்ணை ஊற்றி காய்ந்ததும் 3 பெரிய வெங்காயத்தை ஒரளவு துண்டுகளாக்கி போட்டு நன்றாக வதக்கி சிவக்கும் முன் இறக்கி ஆற வைக்கவும்

இரண்டையும் மிக்ஸியில் போட்டு சின்ன நெல்லிக்காய் அளவு ஊற வைத்த புளி, தேவையான உப்பு, அரை கப் தண்ணீர் ஊற்றி வழுமூன அரைக்காமல் கொஞ்சம் கற கறவென்று அரைத்தால் சுவையாள கார சாரமான வெங்காய துவையல் ரெடி

இதை சூடான சாதத்தில் போட்டு, ஒரு ஸ்பூன் நல்லெண்ணை ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் நிச்சயமாக இரண்டாவது தடவையும்  சாப்பிடுவார்கள்

7.  தேங்காய் துவையல்

வானலியில் 3 ஸ்பூன் எண்ணை ஊற்றி காய்ந்ததும் ஒரு கை பிடி உளுத்தம் பருப்பு போட்டு, பாதி வறுக்கும் போது  5-6 மிளகாய் , ஒரு சின்ன கட்டி பெருங்காயம் போட்டு சிவக்க வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அதனுடன் ஒரு பெரிய மூடி தேங்காய் துறுவல், சின்ன நெல்லிக்காய் அளவு  உறவைத்தபுளி, தேவையான உப்பு, அரை கப் தண்ணீர் ஊற்றி வழுமூன அரைக்காமல் கொஞ்சம் கற கறவென்று அரைத்தால் சுவையாள கார சாரமான தேங்காய் துவையல் ரெடி

8.  புதினா கொத்தமல்லி துவையல்

வானலியில் 4 ஸ்பூன் எண்ணை ஊற்றி காய்ந்ததும் ஒரு கை பிடி உளுத்தம் பருப்பு போட்டு, பாதி வறுக்கும் போது  5-6 மிளகாய் , ஒரு சின்ன துண்டு இஞ்சிபோட்டு வறுத்து அதோடு நெல்லிக்காய் அளவு புளி   ஒரு கட்டு சுத்த படுத்திய புதினா  ஒரு கட்டு சுத்த படுத்திய கொத்துமல்லி போட்டு நன்றாக வாசனை வரும் வரை  வதக்கி  தேவையான உப்பு போட்டு  ஆற வைத்து மிக்ஸியில் போட்டு  அரை கப் தண்ணீர் ஊற்றி அரைத்து இறக்கி அதில்   கடகு  கருவேப்பிலை தாளித்தால் சுவையாள கார சாரமான புதினா கொத்தமல்லி  துவையல் ரெடி

9.கருவேப்பிலை துவையல்

வானலியில் 3 ஸ்பூன் எண்ணை ஊற்றி காய்ந்ததும்  3 ஸ்பூன் உளுத்தம் பருப்பு போட்டு, பாதி வறுக்கும் போது  5-6 மிளகாய் , ஒரு சின்ன கட்டி பெருங்காயம், நெல்லிக்காய் அளவு புளி, சின்ன துண்டு இஞ்சி, ஒரு கை பிடி உறுவி சுத்தபடுத்திய கருவேப்பிலை போட்டு சிவக்க வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அதனுடன் ஒரு அரை மூடி தேங்காய் துறுவல்,தேவையான உப்பு, அரை கப் தண்ணீர் ஊற்றி வழுமூன அரைத்தால் சுவையாள கார சாரமான. கருவேப்பிலை துவையல் ரெடி

10.  சௌசௌ தோல் துவையல்

வானலியில் 2-3 ஸ்பூன் எண்ணை ஊற்றி,   2 இளம் சௌசௌ தோலை மட்டும் சீவி எடுத்து போட்டு நன்றாக வதக்கி மிக்ஸியில் போட்டு   அதனுடன் 4-5 ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 5-6 வத்த மிளகாய், அரை ஸ்பூன் பெருங்காயம் சிவக்க வறுத்து போட்டு கொட்டை பாக்கு அளவு புளி, கொஞ்சம் துறுவிய தேங்காய், தேவையான உப்பு போட்டு கொஞ்சமாக தண்ணி சேர்த்து அரைத்தால் சுவையான சௌசௌ தோல் துவையல் ரெடி

11.  கத்திரிக்காய் துவையல்

நல்ல பிங்க் கலரில் இருக்கும் ஒரு பெரிய ( சுமார் அரை கிலோ எடை இருக்கும்  ) கத்திரிக்காயை கேஸ் அடுப்பிலேயே அடுப்பை சிம்மில் வைத்து சுற்றி சுற்றி தோல் நன்றாக கருப்பாகும் வரை சுட்டு நன்றாக ஆறியதும் மேல் தோலை உரித்தது விழுதை தனியாக வைக்கவும்

வானலியில் 3-4 ஸ்பூன் எண்ணை ஊற்றி 4 ஸ்பூன் உளுத்தம் பருப்பு , 6-7 மிளகாய், சின்ன கட்டி பெருங்காயம், நெல்லிக்காய் அளவு புளியை பிச்சு போட்டு நன்றாக வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு 2 சுத்து சுத்தி, அதனுடன் கத்திரிக்காய், அரை கைபிடி சுத்தமான கொத்தமல்லி, தேவையான உப்பு  போட்டு விட்டு விட்டு நற நறவென்று அரைத்தது பாத்திரத்தில் எடுத்து கடுகு, பெருங்காம், 2-3 நீட்டு மிளகாயை பிச்சு போட்டு தாளித்து கலந்தால் சூப்பரான சுவையான கத்திரிக்காய் துவையல் ரெடி

12.  பீர்க்கங்காய் துவையல்

நல்ல 2 பெரிய பீர்க்கங்காயை நரம்பு  பகுதி  தோலை மற்றும் சீவி துண்டுகளாக போட்டு,  வானலியில் 2 ஸ்பூன் எண்ணை ஊற்றி பீர்க்கங்காயை போட்டு நன்றாக வதக்கி வைக்கவும்

வானலியில் 3-4 ஸ்பூன் எண்ணை ஊற்றி 4 ஸ்பூன் உளுத்தம் பருப்பு , 6-7 மிளகாய், சின்ன கட்டி பெருங்காயம், நெல்லிக்காய் அளவு புளியை பிச்சு போட்டு நன்றாக வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு 2 சுத்து சுத்தி, அதனுடன் பீர்க்கங்காய், அரை கைபிடி தேங்காய் துறுவல், தேவையான உப்பு  போட்டு விட்டு விட்டு நற நறவென்று அரைத்தது பாத்திரத்தில் எடுத்து கடுகு, பெருங்காம், 2-3 நீட்டு மிளகாயை பிச்சு போட்டு தாளித்து கலந்தால் சூப்பரான சுவையான. பீர்க்காங்காய் துவையல் ரெடி

No comments:

Post a Comment