Wednesday, February 24, 2021

முடவாட்டுக்கால் கிழங்கு

 மூட்டுவாதம் வந்து நடக்க முடியாமல் முடங்கிப் போனவர்களையும் மீண்டும் எழுந்து நடக்க வைக்கும் முடவாட்டுக்கால் கிழங்கு என்ற ஆட்டுக்கால் கிழங்கு- Mudavattukal Rhizome

(பல இணைய தள முகவரிகளில் படித்த தகவல்களை  பகிர்ந்துள்ளேன்)

 ஆகாயராஜன்" என்கிற கற்பமூலிகைக்கு மற்ற பெயர் முடவாட்டு கிழங்கு(அ) ஆட்டுக்கால் கிழங்கு என்பதாகும்.

கடல் மட்டத்தில் இருந்து 3800 அடிக்கு மேல் உள்ள மலை பகுதி பாறைகளில் விளையும் இந்த கிழங்கிற்கு வேர்கள் கிடையாது .

சித்தர்கள் கண்டறிந்த மகத்துவம் மிக்க காயகற்ப மூலிகைகளில் ஒன்றுதான் முடவாட்டுக்கால் மூலிகை ஆகும்.

இந்த கற்ப மூலிகையின் கிழங்கு பகுதியில் மட்டுமே அபூர்வ மருத்துவ குணம் அடங்கியுள்ளது.

இது கொல்லிமலை, மற்றும் சதுரகிரி மலைப்பகுதிகளில் கிடைக்கின்றது.நாட்டு மருந்து கடைகளிலும் விற்பனை செய்யபடுகிறது.

இம்மூலிகை கிழங்கு செம்மறி ஆட்டின் கால்களைப் போன்ற தோற்றத்துடன் இரண்டடி நீளம் வரை வளரும்.

பாறைகளில் உள்ள உலோக சத்துக்களலான செம்பு தங்கம் இரும்பு கால்சியம் குறிப்பாக பாறைகளில் உள்ள சிலிகாவை உறிஞ்சும் தன்மை இந்த முடவாட்டு கால் கிழங்கிற்கு உண்டு.

சிலிகா அயனி கற்பமருந்து என்பது சித்த மருத்துவம் படித்தவர்களை தவிர நம்மில் அநேகம்பேருக்கு தெரியாது.

இந்த கிழங்கானது பாறையில் உள்ள இன்னும் பிற முக்கிய உலோக உப்புகளை உறிஞ்சி தன்னகத்தே கொண்டுள்ளது.

இந்த கிழங்கில் இருந்து தங்கத்தை(அயனியை)பிரிக்க இயலும்.

காலங்கிநாதர் ,போகர்,வள்ளலார் போன்ற ஞான சித்தர்கள் இந்த கற்ப மூலிகை கிழங்கினை ஆகாயராஜன் எனவும்,முடவாட்டுகால் கிழங்கு என்றும் கூறியுள்ளனர்.

மூட்டுவாதம் வந்து நடக்க முடியாமல் முடங்கிப் போனவர்களை மீண்டும் எழுந்து நடக்க வைக்கும் முடம் நீக்கும் கிழங்கு என்பது மருவி முடவாட்டுக்கால் கிழங்கு ஆனது.

இந்த முடவாட்டுக்கால் கிழங்கினை 48நாட்கள் தொடர்ந்து உண்டால் வாத,பித்த,கப சம்மந்தப்பட்ட 4448 நோய்களை நீக்கி உடம்பானது காயகல்பம் அடையும் என்பது மெய் ஞானிகளான சித்தர்களின் வாக்கு.

வள்ளலார் இதனை மிக முக்கியமான மூலிகை மருந்தாக குறிப்பிடுகிறார்.

இதில் தாய் பாலுக்கு நிகரான (லாரிக் அமிலமும் உள்ளன)நோய் எதிர்ப்பு சக்தி உள்ளன.

4448 நோய் நல்லாகுதோ இல்லையோ தெரியாது மூட்டுவலி இடுப்புவலி நிச்சயமாக சரியாகிவிடும்.

குறிப்பாக மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிக்கு சிறந்த உணவு மருந்து.

கால்சியம் குறைபாட்டுக்கு அலோபதி மாத்திரைகளுக்கு பதில் இந்த கிழங்கினை சூப் வைத்து சாப்பிட்டு பாருங்கள் உங்கள் உடலில் ஏற்பட்டுள்ள கால்சியம் குறைபாடு நீங்கி முன்னேற்றத்தை உணர்வீர்கள் 

குறிப்பாக குழந்தை பேறு முடிந்ததும் உடலில் உருவாகும் பெரும் குறைபாடு சுண்ணாம்பு சத்து பற்றாக்குறையும் அதற்காக ஆங்கில மருத்துவத்தை நாடுபவர்களுக்கு இது மிகச்சிறந்த Food supplements ஆகும்.

நீங்கள் அடிக்கடி கோப படுபவர்களா?மன சஞ்சலத்திற்கு ஆட்படுபவர்களா? அப்படியென்றால் இதை கட்டாயம் சாப்பிடவும்.

இந்த முடவாட்டு கிழங்கு சாப்பிடும் காலங்களில் கோபமோ மனசஞ்சலமோ சிறிதும் வரவே வராதாம்.இது பல பேர் சாப்பிட்டு  அனுபவத்தில் உணர்ந்த்துள்ளனர்.

உடல் புத்துணர்ச்சிக்கு அத்தியாவசிய தேவை மூளைக்கு கிடைக்கும் மிகையான சத்துக்கள் மற்றும் ஆக்சிசன் தான் என்பதை எல்லா மருத்துவமும் கூறுகிறது.

உடல்,மனம்,புத்தி,அகியவை புத்துணர்ச்சி அடைவது என்பது உடலில் உள்ள உள்ளுறுப்புககளுக்கு உண்டான நுண் சத்துக்கள் கிடைக்க பெறும் போது நடைபெறும் ஓர் நிகழ்வாகும்.

முடவாட்டுகால் கிழங்கில் உள்ள நுண்ணூட்டச்சத்துக்கள் இதற்கு காரணமாக அமைகின்றதால் உடல்,மனம்,புத்தி,அகியவை புத்துணர்ச்சி அடைந்து இயற்கையான முறையில் கோபம் மற்றும் மனசஞ்சலத்திற்கு ஆளாவதை இது தடுக்கிறது.

ஆரோக்கியமான குழந்தை பெற விரும்புபவர்கள் இந்த கிழங்குகளை மூன்று மாதம் தொடந்து எடுத்துகொண்ட பின்பு குழந்தை பேறுக்காக முயற்சி செய்தால் சுகப்பிரசவம் நிகழ்வது உறுதி.

மேலும் இந்த கிழங்கில் இயற்கையாகவே உள்ள தாது உப்புகள் சிலிகா தங்கம் மெக்னீசியம் இரும்பு கால்சியம் ஆகியவை ஆண்களின் விந்துவை அடர்த்தியாக மாற்றி அதனால் தாம்பத்தியம் நீண்ட நேரம் நீடிக்கவும் நல்ல ஆரோக்கிமான கரு உறபத்தியாக உதவுகிறது.

இதனால் பிறக்கும் குழந்தைக்கு ஆரோக்கியம் மற்றும் புத்தி கூர்மை மிகவும் சிறப்பாக இருக்கும்.

மூட்டுவாதம் வந்து முடங்கிப் போனவர்களுக்கு இக் கிழங்கின் மூலமாக கசாயம் [ சூப் ] செய்து கொடுத்தால் மூட்டுவலி,

முடக்கு வாதம்  [ Arthritis ] நீங்கி குணமடைவார்கள்.  

சிறு வயது குழந்தைகளுக்கு வரும் வாதநோய்களுக்கு முடவாட்டுக் கால் கிழங்கை கொதிக்கும் நீரில் போட்டு வைத்து இளம் சூட்டில் உடலில் ஊற்றி தினம் குளித்து வர இரண்டு,மூன்று மாதத்தில் வாத நோய்கள் குணமாகும்.

முடவாட்டுக்கால் [மூலிகை] சூப் செய்முறை :

முடவாட்டுக்கால் கிழங்கு     - 50 - கிராம் 
மிளகு                                    - 20 - No
சீரகம்                                  - 1/4-டீஸ்பூன் 
பூண்டு                                   - 3  பல் 
தக்காளி                                 - 1
தோல் நீக்கிய இஞ்சி சிறியது-1 துண்டு.
கசகசா ஒரு டீ ஸ்பூன்
தேங்காய் துறுவல் சிறிதளவு.
சின்ன வெங்காயம் -2
லவங்க பட்டை சிறிய துண்டு - 1                     

50 கிராம் முடவாட்டுக்கால் கிழங்கை நன்கு கழுவி, சுத்தம் செய்து, மேற்தோலிலுள்ள ரோமங்களையும், புறணியையும் நீக்கி, இரண்டு, மூன்று துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், கசகசா, தேங்காய் துருவல் ஆகியவற்றை மைய அரைத்துக் கொள்ள வேண்டும். சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி, அத்துடன் லவங்கப்பட்டை சேர்த்து, லேசாக எண்ணெய் விட்டு வதக்க வேண்டும்.

சுத்தம் செய்யபட்ட முடவாட்டுக்கால், அரைத்த மசாலா, வதக்கிய தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை அரை லிட்டர் நீரில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து, 300 மிலி அளவு கொதித்து வற்றியவுடன் பின் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும்

இதை வடிகட்டி சிறிது உப்பு,சிறிது வெண்ணெய் சேர்த்து இளம் சூட்டில் குடிக்க சுவையாக இருக்கும்.

இந்த சூப்பை தினம் ஒரு வேளை வீதம், 10 நாட்கள் தொடர்ந்து குடித்துவர, கடுமையான முழங்கால் வலி, குதிகால் வலி, முழங்கால் சவ்வு பலவீனம், தசை பிறழ்ச்சி ஆகியன நீங்கும்.

குளிர்காலத்தில் தோன்றும் கெண்டைக்கால் சதை இழுத்தல், உடல் முழுவதும் தோன்றும் வலி, அசதி மற்றும் பலவகையான தசைபிடிப்பு நீங்க இதை அனைவரும் குடித்துவரலாம், 

2006 ம் வருடத்தில் தோன்றிய சிக்குன் குனியா என்னும் மூட்டுவாத காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் பலர்  முடவாட்டுக்கால் [சூப்] கசாயத்தினால் எளிதில் குணமடைந்துள்ளனர்.

முடவாட்டுகால் கிழங்கு தேவை தொடர்பு கொள்ள வேண்டிய எண் 9788014577

2 comments:

  1. 9788014577-இவரிடம் ஏதேனும் பொருட்களை ஆர்டர் செய்தால், அவர் பொருட்களை டெலிவரி செய்ய மாட்டார். எனக்கு மோசமான அனுபவம் உண்டு

    ReplyDelete
  2. Yes. This guy is cheater, he won't deliver the products. His name is Sivakumar, cheater lives in Ooty.

    ReplyDelete