Sunday, February 21, 2021

ராமர் கோவில்கள் -21

ஶ்ரீராம காவியம்

~~~~

ராமர் கோவில்கள் -21

61)நேமூர் பட்டாபிராமசுவாமி கோயில்...

★நேமூர் பட்டாபிராமசுவாமி கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், நேமூர் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும்.இந்தக் கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

★இக்கோயிலில் பட்டாபிராம சுவாமி, ஸ்ரீபூதேவி நாச்சியார், ஸ்ரீதேவி நாச்சியார் சன்னதி தனியாக  உள்ளன. இந்தக் கோயில் ஆனது முதன்மைத் திருக்கோயில் என்ற  ஒரு வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.

★இக்கோயிலில் ஒருகாலப் பூஜை நடக்கின்றது. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

62)பட்டிவீரன்பட்டி ராமர் கோயில்...

★பட்டிவீரன்பட்டி இராமர் கோயில் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இக்கோயில் கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

★இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற  ஒரு வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.இந்தக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.

63)திருவங்கரணை பட்டாபிராமர் கோயில்...

★திருவங்கரணை பட்டாபி ராமர் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், திருவங்கரணை என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும்.  இக்கோயில் கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

★இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற பிரிவின்கீழ் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிர்வாகியால் இக்கோவில் நிர்வகிக்கப்படுகிறது.இங்கு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.

64)புளியமரத்துக்கோட்டை ஜெயராமர் கோயில்...

★புளியமரத்துக்கோட்டை ஜெயராமர் கோயில் என்பது தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிற்றூர் புளியமரத்துக்கோட்டை என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும்.இந்தக்

கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும் 

★இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.இங்கு

இக்கோயிலில் ஒருகாலப் பூஜை நடக்கின்றது.

65)கள்ளப்பள்ளி வெங்கட்ராமசுவாமி கோயில்...

★கள்ளப்பள்ளி வெங்கட்ராம சுவாமி கோயில் தமிழ்நாட்டில் கரூர் மாவட்டம், கள்ளப்பள்ளி என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும்.இந்தக்

கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

★இக்கோயிலில் ஒரு உயர்ந்த கோபுரம் உள்ளது. இந்தக் கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.இங்கு

இக்கோயிலில் ஒருகாலப் பூஜை நடக்கின்றது.

நாளை................. 

No comments:

Post a Comment