Monday, February 15, 2021

90 வயது காரரின் புலம்பல்

 90 வயது காரரின் புலம்பல்

-வேதவன்-

என்ன யழவோ ஒண்ணும் புரியலை இந்த ரகு வந்து ஏதொ எனக்கு பேங்கு டெபிட் கார்டு வாங்கிக்கொடுத்துவிட்டு பணம் எடுத்துக்கொள்வது எப்படி ன்னு சொல்லிக்கொடுத்தான். அடுத்த நாள் அவன் ஆஸ்த்திரேலியா குடும்பத் துடன் போய் சேர்ந்தான்.

நானும் அந்த டெபிட் கார்டை வைத்துக்கொண்டு பணத்தை ஆன்லைனி

லேயே டெலிஃபொனுக்கும் மருந்துக்கும் கொடுதுடலாம் என்று சொன்னான்.

நானும் அந்த டெபிட் கார்டு (மாஸ்டர் கார்டை) வைத்துக்கொண்டு கூகுலில் பார்த்தேன்முதலில் பி ஸ் என் எல் சைட்டுக்கு போனேன் அவன் கேட்ட தேல்லாம்  ஃபில்லப் பண்ணேன்.கடைசியாக 3டி செக்யூடி ஸ்க்ரீன்லே பாஸ்வேர்ட் கேட்டது நானும் வழக்கமாக உபயோகிக்கும் பாஸ்வேர்டை போட்டேன். திருப்பி அதே 3டி செக்யூடி ஸ்க்ரீன் வந்து என்னை பார்த்து சிரிப்பது போல நிக்கறது. எவ்வளவு தரம் ஃபில்லப் பண்ணாலும் அதே ஸ்க்ரீன் தான். ரகுக்கு ஃபோன் பண்ணி கேட்டால் அவனுக்கு நான் சொல்வது ஒண்ணும் புரியலை என்றான்.”அந்தமாதிரியெல்லாம் வராதே பா நீ பேங்க்லே போய் கேளுப்பா” என்றான் பேங்கில் எல்லோரும் ரொம்ப பிஸி இருந்தாலும் நானும் விடாம அங்கேயே இருந்து கேட்டேன் எனக்கு  அவர்களிடம் விவரமாக சொல்லத்தெரியலை அவர்களும் உங்க கணக்குகள் சரியாக இருக்கு,  கார்டும் ஆக்டிவேட் ஆகிவிட்டது நீங்கள் இந்தடோல் ஃப்ரீ நம்பருக்கு ஃபோன் பண்ணி   அவர்களை கேளுங்கள் என்று என்னை ஆஃப் பண்ணிவிட்டார்கள்.

வீட்டிற்கு வந்தால் மனைவி “எதுக்கு இந்த வயதில் அலையரீர்கள் தெரியலைன்னா போய்தொலையட்டம் அடுத்த ஜன்மத்தில் தெரிஞ்சிட்டா போச்சு” எங்கிறாள்.ஏன்ன எழவு கிண்டலோ என்று மனதில் நினைத்தேன்

 அந்த டோல்ஃப்ரீ நம்பர் கிடைப்பதே கஷ்டம் கடைசியாக அந்த நம்பரை ஏண்டா பண்ணோம் என்று ஆகிவிட்டது.1 அழுததினால் இங்கிலிஷ், 2 அழுத்தினால் தமிழ், 3 அழுத்தினால் ஹிந்தி சரி இங்கிலிஷை எடுத்து தொலைத்தேன். கம்ப்ளைன்டாக இருந்தல் 1 அழுத்தவும் பிறகு 10 பேங்கு பேரை சொல்லி எந்த பேங்கு தேவை இந்த கேள்விக்கும் நம்பர் அழுத்தினேன் அதிலிருந்து கஸ்டமர் கேருக்கு 5 அழுத்தவும் அதை அழுத்தும்போது, அவன் என் ஜாதகத்தையே கேட்டான் நானும் பொருமையாக பதில் சொன்னேன், அவன் கேட்டதேல்லாம் முடிசவுடன் உங்கள் கணக்குகள் சரியாக இருக்கு என்று சர்ட்ஃபிகேட் கொடுக்காத குறைதான். நானும் 3டி ஸ்க்ரீனை பற்றி கேட்டே அலுத்து போயிட்டேன். அவனுக்கு என்னெழவு கோவமோ லைனை கட்பண்ணிட்டான். இதையே முன்று முறை பண்ணிபார்த்தேன் ஒண்ணும் பண்ணமுடியலை எனக்கு வேண்டியது தெரியலை.  என்ன எழவோ கணக்கு என் பேங்கில் சேஃபா இருக்கு. ரகு வருவான் எப்போ?

No comments:

Post a Comment