ஆந்திரா,ஒரிஸ்ஸா ஆன்மீகப்பயணம்
பகுதி 5
அன்னாவரத்திலிருந்து கிளம்பிய பஸ் விசாகப்பட்டினம் வழியாக தாண்டி சிம்மாசலம் நோக்கி போகிறது. விசாகப்பட்டிணத்தில் தங்குமிடம் காஸ்ட்லி என்பதால் சிம்மாசலத்துக்கு முன்னதாக ஒரு கிராமத்தில் சந்து போன்ற லேன் அருகே ஒரு வீட்டை வாசு மாமா ஏற்பாடு செய்து இருக்கார் .அங்கு ஒரு ஃபேமிலிக்கு ஒரு ரூம் .லக்கேஜை வைத்து விட்டு சிம்மாசலம் மலைக்கு ஒரு தனி பஸ்ஸில் செல்கிறோம்.
வடக்கு ஆந்திர மாநில கடற்கரைப் பிரதேசமான விசாகப்பட்டினத்திலிருந்து 15 கி.மீ., தூரத்தில் உள்ளது 244 மீட்டர் உயரமுள்ள சிம்மாசலம் என்ற குன்று. இதன் மீது வராக நரசிம்மர் கோயில் பெரிய அளவில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் வராக நரசிம்மர் வருடம் முழுவதும் கெட்டியான சந்தனத்தால் காப்பிடப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறார். இவர் உக்கிர நரசிம்மராக இருப்பதால் தான் வருடம் முழுவதும் சந்தனக் காப்பு சாற்றப்படுகிறது. மடக்கிய கால்கள், காட்டுப் பன்றி முகம், சிங்க வால், மனித உடலுடன் காட்சியளிக்கும் இவர், இரணியனை மடக்கிய முன்காலில் கிடத்தி அவன் வயிற்றைத் தன் இரு கரங்களால் கிழிக்கும் நிலையிலும், மேலிரு கரங்களில் சங்கு சக்கரம் தாங்கியும் உள்ளார்.
இக்கோயில் கருவறை சுற்றுச்சுவரில் ஒரு பிறை மாடத்தில் மூலவர் வராக நரசிம்மரின் முழு உருவமும் சிற்ப வடிவில் காணப்படுகிறது. இவரும் மூலவரைப் போலவே அமைந்திருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் அட்சய திரிதியை அன்று ஒருநாள் மட்டும் மூலவர் மீதுள்ள சந்தனக் காப்பு முழுவதும் அகற்றப்பட்டு நிஜ ஸ்வரூபத்துடன் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார் வராக நரசிம்மர். அன்றைய தினம் இத்தலத்திற்கு வரும் ஏராளமான பக்தர்கள் இங்குள்ள காந்தாரா நீர் வீழ்ச்சியுடன் கூடிய புஷ்கரணியில் நீராடி விட்டு கோயிலுக்கு வந்து வராக நரசிம்மரைத் தரிசிக்கிறார்கள். இவ்வாறு தரிசிப்பதால் மன பயம் அகன்று மன தைரியம் வருகிறது. நினைவாற்றல் அதிகரிக்கிறது. சகல பாவங்களும் தீர்ந்து புண்ணியங்கள் கிடைக்கிறது என பக்தர்கள் நம்புகிறார்கள். ஆந்திர மாநில திவ்ய ஷேத்திரங்களில் இந்தக் கோயிலும் ஒன்று. இக்கோயிலுக்குச் செல்ல விசாகப்பட்டினத்திலிருந்து அனைத்து வசதிகளும் உண்டு.
சிம்மாசலத்தின் சிறப்பு என்னவென்றால் மலையில் வீற்றிருக்கும் நரசிம்ம மாலின் தலம் அது. சிம்ஹாத்ரி என்றும் இதை அழைப்பார்கள். இப்போது ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இருந்து பத்து மைல் தொலைவில் இருக்கிறது, இந்த கவின்மிகு மால் மலை. ராஜமுந்திரியில் இருந்தும் செல்லலாம். கடல் மட்டத்தில் இருந்து 800 மீட்டர் உயத்தில் இருக்கும் இந்தத் தலத்தில் திருமால் நரசிம்ம ரூபத்தில் காட்சி தருகிறார்.
பெரிய கோயில்கள் வழக்கப்படி காமிரா ,செல்போன்களை வெளியில் டெபாசிட் செய்து உள் நுழைகிறோம். பெரிய க்யூ.. வாசு மாமா 100 ரூ ஒருவருக்கு தந்தால் குறுக்கு வழியில் அழைத்துச்செல்வார் என்று ஒருவரைக்காட்ட என்னைத்தவிர அனைவரும் தங்களிடம் உள்ள வாட்டர் பாட்டில்களை என்னிடம் தந்து விட்டு உள்ளே நுழைந்து விட்டார்கள்.
நான் தூஊரத்திலிருந்து நமஸ்கரித்து விட்டு கோயிலை சுற்றிப்பார்க்கிறேன்
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஆலயத்தின் விமானம் ஒரிய பாணியில் பளபளக்கிறது. பெருமாளின் திவ்யத் தலங்களில் முக்கியச் சிறப்பு வாய்ந்தது. இங்கே பெருமாள் வராஹமூர்த்தியாகவும், நரசிம்மராகவும் இரண்டு அவதார நிலைகளில் எழுந்தருளியிருக்கிறார். அது மட்டுமல்ல; வராஹம், சிம்மம், மனிதன் என மூன்று உருவங்களைக் கொண்டவராக சேவை சாதிக்கிறார்.
இதற்குக் காரணம் என்ன?
No comments:
Post a Comment