Saturday, February 13, 2021

கொலையா இது

 கொலையா இது

-வேதவன்-

“ராகவன் கொஞ்சம் நில்லும் உம்மிடம் பேச வேண்டும்”. என்றார் திருநவுக்கரசு, சைக்கிளில் சென்று கொண்டிருந்த ராகவன் ஓரமாக நின்றார்.

திருநாவ் தன் ஜாவா மோட்டர் பைக்கை பக்கத்தில் நிறுத்திவிட்டு. “நீர் எங்கு போய்க்கொண்டிருக்கிரீர் என்று தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டார். திருநாவ்

ராகவன்:”போலிஸ் ஸ்டேஷனுக்கு தான் போய்க்கொண்டிருக்கிறேன்”. என்றார் பிறகு ராகவன் திருநாவ் கையை பிடித்துக்கொண்டு தான் எதற்காக போலிஸுக்கு கம்பளைன்ட் கொடுப்பதை பற்றி சொல்ல ஆரம்பித்தார், அதற்குள் திருநாவ் “இந்த நடு ரோடில் நாம் எதுவும் பேச வேண்டாம் என் ஆஃபிஸ் பக்கத்தில் தான் இருக்கு தயவு செய்து கொஞ்சம் வரவேண்டும்” என்றார் 

ராகவன், திருநாவ் ஆஃபிஸுக்கு சென்றார், ராகவன் திருநாவ் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிறார் திருநாவ் மனைவியும் ராகவன் மனைவியும் மிக நெருங்கிய நண்பர்கள். 

ராகவனும் திருநாவும் நல்ல நண்பர்கள் இருவருக்கும் சுமார் 46 வயதை கடந்தவர்கள்.திருநாவ் மெக்கானிகல் எஞ்சினியர் அவர் போல்ட்ஸ் நட்ஸ் மிஷினுக்கு வேண்டிய கியர் மேலும் 4 லேத் மிஷின் வைத்துக் கொண்டிருப்பதால் அவருக்கு பல வாடிக்கையாள்ர்கள் உள்ளார்கள். பேங்கிலிருந்து கடன் வாங்கி தான் இந்த ஃபேக்டரி உருவானது.

திருநாவ் தன்ஃபேக்டரி அருகில் வரும்போது ஹாரன் அடித்தார்   திருநாவின் பைக் சப்தத்தை கேட்கும் போதே   வாச்மேன் பெரிய இரும்பு கதவை திறந்து விட்டு சல்லுயூட்டுடன் நின்றான். திருநாவ் ஜாவாமோட்டர் பைக்கை தன்னுடைய ஷெட்டில் நிறுத்திவிட்டு ராகவனை தன் ரூம்முக்கு அழைத்து போனார். அந்த ரூம் சுமாராக 15 அடி சதுரவடிவில் இருந்தது. சந்தன சென்ட் நறுமணம் ரூம் முழுவதும் வீசியது, நடுவில் ஒரு பெரிய மேஜை அதன் மேல் ஒரு இன்ச் தடிமனுக்கு ஒரு ட்ரன்ஸ்பெரன்ட் கண்ணாடி மேஜை பரப்பு முழுவதும் வ்யாபித்திருந்தது. மேஜையின் மேல் இங்கம்- டக்ஸ் ஃபையில் இருந்தது.

திருநாவ், ராகவனை உட்கார சொல்லிவிட்டு ஒரு ப்ளேட்டில் காஃபி யை தானே தயார் செய்து இரண்டு கப் கொண்டு வந்தார். ராகவனிடம் காஃபியை கொடுத்துவிட்டு “எதாவது டிஃபன் வேணுமா?” என்று கேட்டார்”   ராகவன் “காஃபி போதும், எதற்காக இங்கு கூட்டி வந்தீர்” என்றார். திருநாவ் உடனே தன் லேப்டாப் பேக்கை திறந்து அதிலிருந்து ஒரு சின்ன நீல கலர் பாக்ஸை எடுத்து அதனுள் இருக்கும் தங்க செயினை எடுத்து ராகவனிடம் கொடுத்தார்.  ராகவன் “திருநாவ் இது எப்படி உங்களிடம் வந்தது, நான் இந்த தங்க செயின் திருட்டு போய்விட்டது என்று போலிஸில் கம்ப்ளைன்ட் கொடுக்கத்தான் போய் கொண்டிருந்தேன்” என்றார் 

“ராகவன் என்னை மன்னித்து விட்டேன் என்று தயவு செய்து சொல்லுங்கள்” என்றார் திருநாவ்

 ராகவனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை மௌனமாக சிறிது நேரம் இருந்துவிட்டு “திருநாவ் இது எப்படி நடந்தது என்பதை கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்” என்றார்.  

திருநாவ்: “என் மனைவியும் தங்கள் மனைவியும் நெருங்கிய நண்பர்கள் என் மனைவிக்கு சிறிது காலமாக ஒரு கெட்ட பழக்கம் வந்து விட்டது, அதன்

பெயர் “கிளெட்டொமெனியா” என்கிறார்கள். டாக்டரிடம் சென்று அதற்கு வேண்டிய ட்ரிட்மென்ட் செய்து கொண்டிருக்கிறேன். அவள் நேற்று உங்கள் வீட்டிற்கு வந்தாள் உங்கள் மனைவி கிச்சனில் இருந்துகொண்டு என் மனைவியை சோஃபாவில் உட்காரவைத்துவிட்டு காஃபி கலந்து கொண்டுவர போயிருக்கிறாள், உங்கள் வீட்டில் யாருமில்லை என் மனைவி இந்த சின்ன நீல பாக்ஸை பார்த்து ஏதோ ஒரு ஆவல் என்னவென்று தெரியவில்லை மெதுவாக எடுத்து புடவையில் மறைத்துக் கொண்டுவிட்டாள். பிறகு உங்கள் மனைவியிடம் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தாள். உங்கள் பெண், என் பெண்ணும் ஸ்கூலிலிருந்து வந்தவுடன் என் மனைவியும் உங்கள் மனைவியிடம் விடை பெற்றுகொண்டு அந்த சின்ன நீல பாக்ஸை எங்கள் வீட்டில் என் டேபில் மேலே வைத்துவிட்டு எங்கள் பெண்ணுக்கு ஹார்லிக்ஸ் கலந்து கொடுத்துவிட்டு சிறிது நேரம் தூங்க்கிவிட்டாள்.

நான் வந்தவுடன் இந்த அழகான நீல பாக்ஸை பார்த்தவுடன் என் மனைவியை பார்த்து “ஏது இந்த நீல பாக்ஸ்?” என்று கேட்டதற்கு அவள் ஒன்றும் தெரியாதது மாதிரி என்னை பார்த்து”எனக்கு என்ன தெரியும் உங்கள் டேபிளில் இருக்கு”ஏன்றாள். “நீ எங்கே போயிருந்தாய்” என்று கேட்டதற்கு “ஜானகி ராகவ் வீட்டிற்கு தான் போனேன்” என்று சொன்னாள்.

நான் உடனே உங்கள் வீட்டிற்கு வந்தேன் ஆனால் உங்கள் வீடு பூட்டி இருந்தது. 

“ஆமாம் நேற்று நாங்கள் கோவிவிலுக்கு போயிருந்தோம் என் மனைவி வெள்ளிக்கிழைமையாக இருக்கே என்று இந்த தங்க செயின் போட்டுக்கலாம் என்று பார்த்தாள் எங்கும் காணவில்லை தேடினாள் கிடைக்கவில்லை. பிறகு பார்த்துக்கலாம் என்று கோவிலுக்கு போனோம்”என்றார் ராகவ் 

“ராகவன் தயவு செய்து இதை வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம், நீங்களும் என் மனைவியிடம் எதுவும் கேட்கவேண்டாம். என் மனைவி உங்கள் வீட்டிற்கு வந்தால் தயவு செய்து எப்போதும் போல் சாதாரணமாக பழக சொல்லவும்.” என்றார் திருநாவ். 

ராகவன் “ஒண்ணும் கவலை படாதீர்கள் இந்த விஷயம் இதோடு மறந்து விடலாம்” என்று சொல்லி எழுந்தார்.   

திருநாவ், உடனே, நான் என் டிரைவரை அனுப்புகிறேன் டெலிவரி வேனில் உங்கள் சைக்கிளையும் வேனிலேயே ஏற்றி கொண்டு உங்களை உங்கள் வீட்டில் கொண்டு விடசொல்லியிருக்கேன் தயவு செய்து வேனில் போகலாம்

என்று சொல்லிவிட்டு டிரைவரைக்கூப்பிட்டு “சாரை வீட்டில் கொண்டுவிட்டு விட்டு வரசொன்னார். 

 ராகவனுக்கு ரொம்ப சந்தோஷம் “நல்ல வேளை நான் போலிஸுக்கு போகாமல் என்னை தடுத்ததற்கு ரொம்ப நன்றி” என்றார்., உடனே திருநாவ் “நன்றி’நான் சொல்லவேண்டியதை நீங்கள் சொல்லுகிரீர்” என்று சொன்னார். 

திருநாவ் சொன்னபடி ராகவன் வேனில் அமர்ந்து வீட்டிற்கு சென்றார்.

மனைவிக்கு தெரியாமல் இந்த தங்க செயின் பாக்ஸை பீரோவின் உள் அறையில் வைத்துவிட்டு சமையல் ரூமில் இருக்கும் மனைவிடம் வந்து நின்று “ஜானகி இன்னிக்கு ஆஃபிஸுக்கு லீவு சொல்லிவிட்டேன், போலிஸ் இன்ஸ்பெக்டர் இந்த புகாரை நீங்கள் இப்பெழுது என்னிடம் கொடுக்காதீர்கள், தயவு செய்து வீட்டில் இன்னும் நன்றாக தேடி பாருங்கள் என்று அட்வைஸ் பண்ணார். நானும் கம்ப்ளைன்டை கொடுக்காமல் எடுத்து வந்துவிட்டேன். நீயும் நானும் நன்றாக தேடி பார்ப்போம்” என்றார் ராகவன் 

ஜானகி உடனே நான் நன்றாக தேடி பார்த்தேன் நேற்று வெள்ளிக்கிழமை வீட்டிற்கு வந்தது பக்கத்து வீட்டு வடிவுக்கரசி தான் வந்தாள், அவா அப்படி எடுக்க மாட்டாள் ரொம்ப பெரிய மனுஷாள்”.என்றாள் 

“நீ பீரொ முழுவதும் தேடிப்பார் நானும் அந்த ரூம் அலமாரி மேஜை ட்ராயரெல்லாம் தேடி பார்க்கிறேன் யாரையும் தெரியாமல் சந்தேக படக்கூடாது” என்றார் ராகவன்

ஜானகி பீரோவின் உள்ளே தனி அறையில் பார்க்கும் போது அவள் மிக சந்தோஷத்துடன் அந்த நீல சின்ன பாக்ஸை எடுத்துக்கொண்டு தன் புருஷனிடம் காண்பித்தாள்.  அதனுள் பத்திரமாக செயின் இருந்ததை காண்பித்தாள். 

“இது என் பாட்டி காலத்திலிருந்தே இருக்கிறது இந்த செயின் என் பாட்டியே எனக்கு சின்னவயசிலேயே என் கழுத்தில் போட்டு அழகு பார்ப்பாளாம், எத்தனை வருஷம் இருக்கும் ன்னு எனக்கு தெரியாது. எவ்வளவு பவுன் என்றும் ஞாபகமில்லை. இது இப்போ கிடைசிடுத்து பிள்ளையாருக்கு தேங்கா உடைக்கிறதாக வேண்டிக் கொண்டேன், சாயந்தரமாக கோவிலுக்கு போகவேண்டும்” என்றாள்.

ராகவன் தன் மனைவிக்கு திருநாவிடம் போனது, அவர் மனைவிக்கு க்ளெப்டொமேனியா என்ற வியாதி என்பதை பற்றி முழுவதும் மறைத்து விட்டார். உடனே ராகவன் “சாயந்தரமா பிள்ளயாருக்கு தேங்காய் உடைக்க வேண்டியது தான், நானும் வருகிறேன்” என்றார். 

திருநாவ் மனதில் தான் மட்டும் மிக கஷ்டபட்டு இரவு யாருக்கும் தெரியாமல் அந்த தங்க செயினிலிருந்து 10 கிராம் அளவிற்கு லிங்கை கட் செய்யும்போது யாரும் பார்க்கவில்லை என்பது உறுதியாக தெரிந்தாலும் முதன் முதலில் இப்போது தான் யாருக்கும் சந்தேகமில்லாது திருடியது ஒரு தெளிவை ஏற்படுத்தியது.   அந்த சங்கிலியை எடை போட்டு பார்த்தால் ஒரு வேளை நம்மை சந்தேகபடுவாரோ? என்று நினைத்தார்.

“என்னங்க ஏதொ எனக்கு மனசு சரில்லை நான் பிள்லையார் கோவிலுக்கு போக போகிறேன் நாளைக்கு தான் உங்க ஆஃபிஸ் லீவு தானே நீங்களும் வாருங்கள்” என்று திருநாவை கூப்பிட்டாள் வடிவு. 

திருநாவும் உடனே “நானும் வருகிறேன் என்று திருநாவ் தன்

பெண்ணையும் கூட்டிக் கொண்டு வீட்டை பூட்டிக் கொண்டு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு நடந்தே சென்றார்கள்.

கோவிலில் ராகவனை அவர் மனைவி, பெண்ணுடன் பூ வாங்கிக் கொண்டிருப்பதை திருநாவ் மனைவி வடிவும் திருநாவும் பார்த்து விட்டார்கள்.

திருநாவ் மெதுவாக வேறு ஒரு கோவிலுக்கு போகலாமா? என்று நினைத்தார்

ஆனால் அதற்குள் “ஜானகி” என்று திருநாவ் மனைவி வடிவு கூப்பிட்டவுடன்

ராகவன் மனைவி “வாங்க கோவிலுக்கு தான் வரீங்களா” என்று திருநாவ் மனைவியின் கையை பிடித்துக்கொண்டாள்.

திருநாவ் ராகவனை ப் பார்த்து “பராவாயில்லையே கோவிலில் உங்களை மீட் பண்ணுவதில் சந்தோஷம்” என்றார் ஆனாலும் திருநாவுக்கு செயின் எடை குறைந்து இருப்பதைப்பற்றி பேசுவார் என்ற பயம் இருந்தது

ராகவன் மிக சந்தோஷத்துடன் மெதுவான குரலில் “என் மனைவியிடம் நான் தங்களை பார்த்ததாக சொல்லவில்லை நீங்கள் எதுவும் என் மனைவியிடம் சொல்லவேண்டாம்” என்றார்.

திருநாவுக்கு சந்தோஷம் ராகவன் நாம் திருடியதை தெரிந்துக் கொள்ளவில்லை என்பதினால், யாருக்கும் துளிகூட சந்தேகம் வராமல் எடுத்துக் கொண்டால் அது திருட்டாகாது என்ற புதிய தத்துவத்தை பிள்ளையாரை கும்பிடும்போது நினைத்தார். 

பிள்ளையாரை கும்பிட்டு விட்டு அனைவரும் நடந்தே சந்தோஷத்துடன் வீடு திரும்பினார்கள்.  

திருநாவ் நாம் இனி ஏதாவது நன்றாக ப்ளான் பண்ணி நாம் மாட்டிக்கொள்ளாமல் திருடவேண்டும். திருடினால் தப்பில்லை மாட்டிக்கொண்டால் தான் தப்பு என்ற தத்துவம் திருநாவுகக்கு உதித்தது.

திருநாவ் வாழ்க்கையில் தன் சிறிய வயதில் தந்தையை இழந்தவர் தாய் பேங்கில் வேலை செய்து கொண்டிருந்ததாள் தன் ஒரே பிள்ளையை நன்றாக படிக்கவைத்தாள்.   ஸ்கூல் படிப்பு முடித்தவுன் இஞ்சினியரிங் காலேஜில் மிக ஸ்ரமத்துடன் சேர்த்தாள்.” திருநாவக்கரசு நன்றாக படிக்கவேண்டும்” அப்போதுதான் உன்னிடம் நிறையா பணம் இருந்துக் கொண்டே இருக்கும்” என்று அடிக்கடி சொல்லுவாள். தன் தாய்.   தன் தாய் பேங்கில் சாதாரண பூயூன் க்ரேடில்தான் இருந்தாள். மாதாந்திர செலவுக்கு கஷ்டபட்டு கொண்டிருந்தாள். தானும் படித்துக் கொண்டே எதாவது வேலை செய்தால் தான் குடும்பத்தில் அப்பா வைத்துவிட்டு ப் போன கடனையும் கழிக்கலாம் என்ற எண்ணத்தில் தங்கமாளிகை கடையில் பார்ட் டைம் வேலையில் சேர்ந்தது ஒரு லக், படிபடியாக தங்கத்தில்செயின் டிசைன் வித வித மாக கம்ப்யூடரில் செய்வதை நன்றாக திறமையாக செய்தது, தங்கமாளிகை முதலாளி யிடம் நல்ல பெயர் வாங்கியதுடன், அதிகமாக ஊதியமும் கிடைத்தது. நல்ல அனுபவம், அத்துடன் ஒரு சங்கிலியின் வடிவம் துளியும் மாறாமல் துல்லியமாக அந்த சங்கிலியிலிருந்து 2 அல்லது 3 கிராம் வரை தங்கத்தை பிரித்து எடுப்பதில் கைதேர்ந்தவனாக விளங்கினான். 


தன் தாய்க்கு கேன்சர் மிக முற்றிய நிலையில் இறக்கும் தறுவாயில் என் தாயின் கட்டளைபடி தன் திருமணம் தாயின் அண்ணனின் பெண்ணையே மனைவியாக்கி கொள்வது என்பது தான், தானும் சம்மதித்ததில் வடிவுக்கரசி மனைவியாக அமைந்தது என்ற பழைய எண்ண ஓட்டங்கள் திருநாவ் மனதில் வந்தது.

 

தங்கமாளிகயில் தான் வேலை செய்ததில் ஏற்பட்ட அந்த அனுபவ திறமை தான் ராகவ் வீட்டு தங்க செயினிலிருந்து வடிவம் மாறாமல் தங்கத்தை துல்லியம்மாக 10 கிராம் மிக எளிதில் எடுக்க முடிந்தது. இந்த நம் ஃபேக்டரி நடத்துவதில் சுமாரான அளவுக்குதான் பணம் கிடைத்தது ஆனால் அதிகமாக ஊதியம் கிடக்கவில்லை. இந்த செயினிலிருந்து கிடைத்த பணம் ஒரு பெரிய வழியை காண்பித்ததுடன் தன் திறமையயை தான் எந்த வழியிலும் மாட்டிக்காமல் திருடுவதற்கு நல்ல ப்ளானை சிந்தித்து அடுத்த ப்ளானை அருமையாக தயார் செய்தார் திருநாவ் 


திருநாவின் அடுத்த ப்ளான் தங்க சங்கிலி அல்லது தங்க பொருள் மேல் கடன் கொடுப்பது. வரும் கஸ்டமர்கள் திருநாவ் நன்றாக விசாரித்து விட்டு தங்க பொருளை எங்கேயாவது அடமானம் வைக்கப்பட்ட விவரங்கள் அறிந்து கொண்டுதான் கஸ்டமரிடமிருந்து தங்கத்தை வாங்கி எடை போடுவார். தன்னுடைய எடை போடும் தராசில் 2, 3, 5 கிராம் குறைவாக காண்பிக்கும் படி ஒரு ஏற்பாடு செய்து வைத்திருந்தார்.இந்த தன் எண்ணங்களை உடனடியாக நடைமுறை படுத்திவிட்டார்  

திருநாவுக்கு சிறு குறு தொழிலதிபர்களின் நட்பு அதிகமாக இருப்பதினால் திருநாவ் மிக சீக்கிரமாக பணம் சேர்த்துவிட்டார். ஆனால் பல மணி நேரம் மிக கவனாமாகவும், தன்னுடைய திட்டம் செயல்பட அதிக நேரம் உழைக்கவேண்டும் ஒரு உதவியாளரை கூட சேர்க்க வில்லை. ஒரு முறை கடன் கொடுத்தவர்களுக்கு மறுமறை கடன் கொடுக்க மாட்டார். 


தன் மகள் மஞ்சு டாக்டர் படிப்பதில் ஆசை பட்டதினால், ஆந்திராவில் தன் மனைவியின் தங்கை வீட்டில் இருந்துகொண்டு நீட் தேர்வு எழுதி நல்ல மார்க் வாங்கி தேர்ச்சி பெற்றாள் அவர்களுக்கு குழந்தை இல்லாததினால் மஞ்சுவை அங்கேயே படிக்கவேண்டும் என்று இருவரும் மற்றும் என் மனைவியும் சேர்ந்து சொன்னதால், அங்கு மஞ்சு படிப்பதற்கு ஏற்பாடு செய்தேன்.

இந்த தங்கத்தை வைத்துக்கொண்டு கடன் கொடுப்பதில் பல பெரிய கம்பனிகளும் வட்டியுடன் முதலுமாக இரண்டு மாதத்திலேயே கொடுத்து விடுவார்கள், இதனால் திருநாவிடம் பல லக்ஷம் பேங்க் அகௌண்டில் சேர்ந்தது, ஆனால் மிக கடுமையாக உழைப்பதில் பல நாட்கள் தூக்கம் இன்றி தவித்தார். யாருக்காவது நன்மை செய்யவேண்டும் என்று நினைத்தாலும் அதற்கு நேரமில்லை.தன் பெண் மஞ்சு, படிப்பில் மிக ஆர்வமுடன் இருப்பது திருநாவுக்கு மிகவும் சந்தோஷம்.  

தன் வியாபாரத்திற்கு ஒரு வாரம் லீவு போட்டுவிட்டு ஆந்திராவிற்கு தானும் தன் வீட்டை பூட்டிவிட்டு சென்றார்.

அங்கு ஒரு பண்ணை வீடு ஒரு 15 ஏக்கரில் விலைக்கு வந்திருப்பதை கேள்விபட்டார், என் மனைவி வடிவு அந்த பண்ணை வீட்டை வாங்கவேண்டும் என்றாள். என் மனைவியின் தங்கையும் வந்து அந்த பண்ணை நிலம் மிக குறைந்த விலையில் கிடைப்பதாக கூறினாள். நானும் என் சகலை சம்பந்தத்திடம் அந்த பண்ணை வீட்டை பற்றி கேட்டேன். . என் சகலை ஆந்திரா கவர்ன்மென்ட் ரெவினுயூ அதிகாரியாக வேலையில் 25 வருஷமாக இருப்பதால் அவருக்கு ஏலத்திற்கு விடப்படும் சொத்து விவரங்கள் அதை எப்படி மலிவாக வாங்கலாம் என்ற முறை தெரிந்ததினால் திருநாவுக்கு அந்த பண்ணைவீடு மிக மலிவு விலையில் கிடைத்தது. 

தன் பேரிலும் தன் மனைவியின் பெயரிலும் அந்த பண்ணை வீட்டை ரிஜிஸ்டர்செய்துவிட்டார்.  அந்த பண்ணை வீடு பீமாவரம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. 

சென்னையிலிருந்து 550 கிலோ மீட்டர் தொலைவில் தான் உள்ளது

திருநாவ் “சம்பந்தம் நீங்கள் இல்லாவிட்டால் என்னால் நிச்சயமாக அந்த பண்ணை வீட்டை வாங்கியிருக்கமுடியாது” என்று நன்றியுடன் விடைபெற்றுக்கொண்டு தனக்கு ஃபேக்டரியில் அதிகமாக வேலை இருப்பதால் நீங்களே இந்த பண்ணை வீட்டை பார்த்துக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார், வேறு ஒரு நல்ல நாள் பார்த்து அந்த பண்ணை வீட்டில் பூஜை செய்து ஒரு விழாவிற்கே ஏற்பாடு செய்யலாம் என்று சொல்லிவிட்டு மனைவியயையும் மஞ்சுவையும்

பார்த்து “நான் போய்விட்டு வருகிறேன்” என்றார் திருநாவ். வடிவு உடனே

 “நான் ஜானகியிடம் டெலிஃபோன் செய்திருக்கிறேன் நான் அங்கு அடுத்த வாரம் வருகிறேன் நான் வரும் வரையில் நீங்கள் அவர்கள் வீட்டிலேயே லஞ்ச் டின்னர் சாப்பிடலாம்” என்றாள்

“அவர்களை ஏன் தொந்தரவு செஞ்சை நான் எதாவது ஓட்டலில் சாப்பிடுவேன்” என்று தன் காரில் ஏறிக்கொண்டு சென்னை வந்து சேர்ந்தார். 

 திடீர் என்று ஒரு நாள் ராகவன் அந்த தங்க செயினை திருநாவிடம் கொடுத்துவிட்டு “என் பெண் கீதா இஞ்சினீரிங் படிக்க ஆசை படுகிறாள் தயவு செய்து இதை அடமானமாக வைத்துக்கொண்டு இஞ்சினீரிங் படிப்புக்கு வேண்டிய பணம் தரமுடியுமா?”என்று கேட்டார்.   திருநாவ் அந்த தங்க செயினை ராகவனிடம் திருப்பி கொடுத்துவிட்டு “உங்களுக்கு இரண்டு லக்ஷ்ம் பணம் தருகிறேன் கவலைவேண்டாம்.  ஒரு வட்டியும் வேண்டாம். எப்போது உங்களுக்கு முடியுமோ அப்போது கொடுத்தால் போதும், அல்லது மாதாமாதம் நீங்கள் என் அகௌன்ட்டில் போட்டு விட்டாலும் சரி”என்று சொன்னார்.  ராகவனுக்கு சந்தோஷம் தாங்கமுடியவ்லை.  ராகவன் “உங்கள் அகௌன்டில் மாதா மாதம் கட்டிவிடுவேன்” என்றார்

 திருநாவ் “ராகவ்” தினமும் காலை டிஃபனிலிருந்து இரவு சாப்பாடு வரை உங்கள் வீட்டு சாப்பாடு ரொம்ப நன்றாக இருக்கு உங்க மனைவிக்கு நன்றி சொல்லுங்கள் தயவு செய்து உங்கள் மனைவியிடம் எனக்காக ஸ்ரம படவேண்டாம் என்று சொல்லுங்கள்” என்றார்.

ராகவ்” இதில் என்ன ஸ்ரமம் இருக்கு சும்மா இருங்க சார் உங்க புண்யத்தில் எனக்கும் நல்ல சாப்பாடு” என்றார். இருவரும் சிரித்தார்கள்   

திருநாவுக்கு ராகவ் பெண் கீதாவை படிக்க வைப்பதற்கு நாம் பணம் கொடுக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததில் சந்தோஷமும் மன நிறைவு அடைந்தார். 

சிறுது நாட் களில் சிறு குறு மிடியம் தொழிலதிபர்கள் மீட்டிங் நடந்தது அதில் தொழிலதிபர்கள், திருநாவ் தங்களுக்கு பல விதத்தில் உதவிபுரிந்ததை மிகவும் பாராட்டியதோடு அவரை ஏக மனதாக தென்னிந்தியாவிற்கு பிரசிடென்ட் போஸ்ட்டுக்கு பரிந்துரை செய்தார்கள். திருநாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எல்லோரும் திருநாவை ப்ரசிடென்ட் போஸ்ட் பரிந்துரைக்கு சம்மதம் தெரிவிக்க பேச அழைத்தார்கள்

திருநாவ் தனக்கு கிடைக்க போகும் பதவியில் என்ன பொருப்புகள் என்பதைப்பற்றி தெரிந்து கொண்டு தான் முழு மனதுடன் சம்மதம் தெரிவித்தார்.

இரண்டு மூன்று நாட்களில் தென்னிந்திய தொழிலதிபர்கள் சங்கத்தின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதை இந்திய தொழிலகத்திலிருந்து திருநாவுக்கு கடிதம் வந்தது. 

திருநாவுக்கு பெரிய மனிதர்களின் நட்பு மட்டும் அல்லாது பலரின் தங்கதின் மேல் கடன் கொடுப்பதும் ஒரே மாதத்திலேயே பல லக்ஷ்ம் பணவரவு மிக அதிகமானதுடன் ஒரு புகழ்பெற்ற கிருமினல் லாயர் நடரஜனின் நட்பு கிடைத்தது. நடராஜன் மிகவும் புத்திசாலியான வக்கீல் பல பெரிய மனிதர்களின் அந்தரங்க ரகசியம் தெரிந்து க் கொண்டு அதை சொல்லியே பணம் கரபதில் மிக கை தேர்ந்த மனிதர். அதே சமயதில் நடராஜனுக்கு ஒரு மிக பெரிய வாடிக்கையானபழக்கம் குடி பழக்கம் மட்டும்தான். 

திருநாவு தங்கத்தின் மேல் கடன் கொடுப்பதை கேள்விபட்டார் தன் கிருமினல் அறிவினால் திருநாவ் எப்படியும் இதில் பல லக்ஷம் சம்பதிக்கிறார் என்றால் இதன் பின்னணியை ஆராய்ந்ததில் திருநாவு தங்க எடை போடும் தராசு நிச்சயம் குறைவான எடையை காண்பிப்பாரோ என்று இதற்கு ஒரு சரியான ஆதாரத்தை காண்பித்தால் திருநாவை போலிஸில் பிடித்து கொடுப்பேன் என்று சொன்னால் போதும் அவரிடம் பணம் கரக்கவேண்டியது தான் என்று நடராஜன் நினைத்துக்கொண்டு செயலில் இறங்கினார்.

திருநாவ் மொபைல் ஃபோனை காதில் வைத்துக்கொண்டு என்ன சகலை சம்பந்தம் எப்படி இருக்கீர்கள்? மஞ்சு மிக நன்றாக படிக்கிறாளா? ஏதாவது செய்தி இருக்கா?” என்று கேட்டார். 

சம்பந்தம் “உங்களுடன் தான் பேச முடியவில்லை நீங்கள் ரொம்ப பிசியாக இருப்பதாக வடிவு சொல்லுவாள், மஞ்சு நன்றாக படிக்கறாள், நீங்கள் பண்ணை வீடு வாங்கி ஆறு மாதம் ஆகிவிட்டது, அங்கே நான், என் மனைவி, மஞ்சு வாரத்தில் ஒரு நாள் போய்விட்டு வருகிறோம், ஏக்கருக்கு சராசரியா 70 மூட்டை அளவுக்கு நெல் மகசூலாகுது. சுமார் 1000 நெல் மூட்டை நாங்கள் விற்றுவிட்டோம் செலவேல்லாம் போக ₹30,000/= கேஷாக என்னிடம் இருக்கிறது. பண்ணை வீட்டின் இரண்டாவது மாடி மொட்டை மாடிதான்அதில் கைபிடி சுவர் திடமாக இல்லை ஆனால் அது ரிப்பேர் செய்வதற்கு அவசியமில்லை. அங்கு நாங்கள் போய் நல்ல காத்து வாங்கிக் கொண்டு வருவோம். பில்டிங் அஸ்திவாரம் நன்றாக உள்ளதால் கவலையில்லை. நீங்கள் வடிவை கூட்டிக்கொண்டு இங்கு வந்தால் பூஜையுடன் ஒரு விழாவாக கொண்டாடலாம் என்று நினைக்கிறோம்”என்றார்.

திருநாவ்.” ஒரு வாரத்தில் வடிவை கூட்டிக்கொண்டு வருகிறேன் பணம் எதுவும் இங்கு அனுப்பவேண்டாம்” பிறகு பேசுகிறேன்” என்றார்.

நடராஜன் திருநாவை மொபைலில் கூப்பிட்டார்” திருநாவ் என் ஆஃபிஸுக்கு வரமுடியுமா? உங்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும்” என்றார்

திருநாவ் “ஒரு மணி நேரம் கழித்து வரலாமா?” என்றார் அதற்கு நடராஜன்” ஓகே” என்று சொல்லிவிட்டு லைனை கட் பண்ணினார்.

திருநாவ் நடராஜன் ஆஃபிஸுக்கு சென்றார். நடராஜனுக்கு53 வயது இருக்கும்

பெரிய வக்கில் அவர் தான் திருநாவை தெனிந்திய தொழில் அதிபர் சங்கத்தில் தலைவராக்குவதற்கு பல வகையில் உதவி புரிந்தார்.

அங்கு நடராஜன் ரொம்ப பிசியாக இருந்தார் அவர் க்ளைன்ட் பலர் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள் .நடராஜன் பிஏ ஸ்ரீனிவாசன் திருநாவை பார்த்தவுடன் “சார் உங்களை உள்ளே வரசொன்னார்” என்று சொல்லி நடராஜன் ரூம் கதவை தட்டிவிட்டு திருநாவ் உள்ளே சென்றார். நடராஜன் எழுந்து நின்று திருநாவை வரவேற்று உட்கார வைத்து விட்டு நடராஜன் “இதோஒருநிமிடத்தில் வருகிறேன்” என்று வெளியே சென்றார் .அந்த ரூம் டேபில் மிக பெரியதாக இருந்தது ‘இன்’ பாக்ஸில் பல கேஸ் கட்டுகள் இருந்தது. அவர் சேர் பின்புரம் மரத்தினால் ஆன பெரிய பீரோவினுள் சட்ட புத்தகங்கள் அடுக்கி இருப்பதை காண முடிந்தது பிறகு அவர் வலது பக்க சுவற்றில் தங்கத்தினால் செய்யப்பட்ட தராசு அதற்கென்று செய்யப்பட்ட ஒரு மர பீரோவினுள் இருந்தது, ‘ஃப்ரம் ப்ரிட்டிஷ் கவர்ன்மென்ட்’ என்று எழுத்துக்கள் பொறிக்க ப்பட்டிருந்ததை திருநாவ் மிக ஆர்வத்துடன் பார்த்தார்.

உள்ளே வந்த நடராஜன் ஃபாரின் விஸ்கியை மேஜை மேல் வைத்தார். “திருநாவ் நான் வெளியில் உள்ள எல்லா க்ளைன்டையும் அனுப்பிவிட்டேன். பிஏஸ்ரீனிவாஸ்னையும் அனுப்பிவிட்டேன்” இப்போது நாம் இருவர் தான் இருக்கிறோம்” நீங்கள் விஸ்கி, ரம்மெல்லாம் குடிக்க மாட்டீர் என்று தெரியும் அதனால் தான் நானே போட்ட காஃபி இந்தாருங்கள்” என்றார். திருநாவ் எதிரில் காஃபியை ட்ரேயுடன் வைத்தார்.

திருநாவு “ஆர்வத்துடன் “என்னை எதற்கு கூப்பிட்டீர் என்று தெரிந்து கொள்ளலாமா? “என்றார்.

நடராஜன் ஒரு சின்னபெக் விஸ்கியை குடித்துக்கொண்டே” மூன்று நாட்களுக்கு முன்பு வாசுகி ஃபேக்டரி ஓனர் உங்களிடம் வந்து நான்கு லக்ஷம் கேட்டார் உடனே கொடுத்தீர்கள் என்று சொன்னார் முதலில் அதற்கு உங்களை அப்ரிஷியேட் பண்ணவேண்டும். அவருக்கு பெரிய கம்பனி இரண்டு கோடி தரவில்லை அந்த கேஸை நான் தான் நடத்தி கொண்டிருக்கிறேன்” என்றார்.

திருநாவுக்கு தன்னை பெரிய வக்கீல் பாராட்டிகிறார் என்றவுடன் “மிக்க நன்றி” என்று சொல்லுவதோடு நிறுத்திக்காமல் வாசுகி ஓனர் தங்க சங்கிலியை கொடுத்து விட்டு அடமானமாகத்தான் கேட்டார் சார் ஆனால் மூன்று நாட்களில் 4 லக்ஷத்தையும் கொடுத்து விட்டு வட்டி எவ்வளவு தர வேண்டும் என்றார் நான் “வட்டி வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்”என்றார். 

நடராஜன் உடனே “அப்படியா? வெரி நைஸ்” அந்த செயின் எவ்வளவு கிராம் இருக்கும்” என்றார் 

திருநாவ் “அந்த செயின் 52 கிராம் இருந்தது” அவர் மூன்று நாளில் எல்லா பணமும் கொடுத்துவிடுவேன் என்று சொன்னார் அதனால் தான் அவர் கேட்ட நான்கு லக்ஷமும் கொடுத்து விட்டேன்” என்றார்.”

 நீங்கள் நல்ல சந்தர்ப்பத்தில் உதவி இருக்கீரீர்கள்.அவருக்கு ஒரு நல்ல பெரிய கம்பனியிலிருந்து பெரிய ஆர்டர் வந்திருப்பதாகவும் இரண்டு நாளில் அட்வான்ஸாக 5 லக்ஷம் கிரண்ட் ஆகிவிடும் என்று என்னிடம் கேட்டார். நான் தான் என் தங்கசெயினை கொடுத்து உங்களிடம் பணம் வாங்கிக்க சொன்னேன்.

 தன் மேஜை ட்ராயரை திறந்து ஒரு தங்க செயினை மேஜை மேல் வைத்துவிட்டு “எனக்கும் நேரடியாக பிசின்ஸ் பேசிதான் வழக்கம்” என்றார் நடராஜன். 

அங்கு சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு நடராஜன் “திருநாவ் நீங்கள் இந்த தங்க செயினை வாசுகி ஓனர் ராமசாமி யிடம் கொடுக்கும்போது அந்த செயினிலேயே உங்கள் கம்பனி எடைபோட்டு ரசிதையும் கொடுத்துள்ளீர் ஆனால் அந்த ரசீதை திருப்பி வாங்க மறந்துவிட்டீர், என்னிடம் அந்த நீர் கொடுத்த ரசீதையும் கொடுத்து விட்டு சென்றுவிட்டார் ராமசாமி”. என்றார்.

ஒரு நிமிடம் திருநாவ் பயந்து அந்த ரூம் ஏசியில் வேர்க்க ஆரம்பித்தது. 

நடராஜன் “திருநாவ் நான் தெனிந்தியாவில் மிக சிறந்த அட்வகேட், நீர் இந்த செயினிலிருந்து 8 கிராம் திருடி இருப்பதை என்னால் ப்ரூவ் பண்ண முடியும், நீர் இது போன்று பல தொழிலதிபர்களை ஏமாற்றி கொண்டு வருகிரீர்” என்றார்.

திருநாவ் எதுவும் பேசாமல் தான் செய்த தப்பை ஒத்துக்கொண்டு “தன்னை மன்னிக்க வேண்டும் “என்றார். 

இந்தவிஷயம் ராமசாமிக்கும் தெரியாது என்று நடராஜன் கூறயதோடு மிக மெல்லியகுரலில் “இந்த விஷயம் எனக்கு மட்டும் தெரியும் வெளியில் தெரிந்தால் என்ன ஆகும்? நான் நிச்சயமாக உங்களை மன்னிக்க முடியாது” என்றார்.

 அமைதியாக திருநாவ் “நான் அந்த 8 கிராம் தங்கத்தை திருப்பி தந்துவிடுகிறேன் அல்லது நீங்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் வாங்கிக்கொள்கிறேன் என்று சனிஸ்வரன் அவர் வாயில் புகுந்து சொல்லவைத்தது. 

“மிஸ்டர் திருநாவ் அவர்களே இதைத்தான் நான் எதிர் பார்த்தேன் எனக்கு 8 கிராம் தங்கம் வேண்டாம் நீங்கள் இன்னும் இரண்டு நாட்களில் 5 லக்ஷம் கேஷாக கொடுக்க வேண்டியது. இந்த விஷயம் நமக்குள் தான் இருக்க வேண்டியது. இப்போதிக்கு இது போதும் இது தான் நான் தங்களுக்கு கொடுக்கும் தண்டனை” என்றார். 

திருநாவ் “சரி சார்” என்று சொல்லிக்கொண்டே எழுந்து சென்றுவிட்டார்.

பிறகு ஃபேக்டரியில் யாருடனும் பேசவில்லை மேனேஜர் திருநாவிடம் “ஸார்

 ஸ் ர் பி டூல்ஸ் கம்பனி ஆர்டருக்கு ₹ 50,000/= ரா மெட்டிரியல் வாங்கவேண்டும் சப்பளைர்க்கு நீங்கள் வந்தவுடன் செக்கில்கையெழுத்து வாங்கிதருவதாக சொல்லி ரா மெட்டிரியல் வாங்கிவிட்டேன்”. என்றார்.  திருநாவ் அவர் நீட்டிய

செக்கில் கையெழுத்து போட்டு விட்டு சீக்கரமே வீட்டிற்கு சென்று விட்டார்.

வீட்டிலேயும் மனைவியுடன் பேசாமல் தன் ரூம் கதவை சாத்திக் கொண்டார். ரொம்ப நாழியாக வெளியேவே வரவில்லை காஃபி கூட சாப்பிட வரவில்லை 

மனைவி வடிவு மிகவும் பயந்து போய் திருநாவ் ரூம் கதவை தட்டிவிட்டு “டின்னருக்கு வரவே இல்லையே மணி 10 ஆகிறது” என்று வெளியே இருந்து அழுதாள். பெண் அழுகை பெரிய ஆயுதம் அதனால் “இதோ வருகிறேன்” என்று திருநாவு குரல் கேட்டவுடன் வடிவு அமைதியானாள். 

அடுத்த நாள் காலை திருநாவ் தன் மனைவியுடன் பேசவில்லை குளித்துவிட்டு நடராஜனுக்கு ஃபோன் செய்தார். “சார் நீங்கள் கேட்டதை இன்று காலை 10 மணிக்கு கொண்டு வரலாமா?” என்று மிக அடக்கமாகக் கேட்டார்.

நடராஜன் “நான் கேட்டதை உடனே கொண்டு வருவதில் மிக்க நன்றி, நீங்கள் 10 மணிக்கு என் வீட்டிற்கு வந்து விடுங்கள். என், பி ஏ லேட்டாக வருவதாக சொன்னார் நானும் என் ஆஃபிஸுக்கு லேட்டாகத்தான் போவேன் என் வீடு உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்” என்றார். 

திருநாவு “நன்றாக தெரியும் ஸார் நான் சரியாக 10 மணிக்கு வந்துவிடுவேன்” என்று சொல்லி ஃபொனை கட் பண்ணி விட்டார்

10 மணிக்கு திருநாவின் கார் நுங்கம்பாக்கத்தில் உள்ள அட்வகேட் வீட்டு காம்பௌண்டின் வாயிலில் வந்தவுடன், காரை ஸ்லோ டௌன் செய்தார், வாச்மேன் ஷெட்டுக்கு வழியை காண்பித்தார். திருநாவ் காரை ஷெட்டில் நிருத்திவிட்டு கார் கதவை திறந்து கொண்டு சூட் கேஸை கையில் எடுத்துக்கொண்டு நடந்தார். தனி பங்களா டைப் பெரிய வீடு, வாச்மேன் என்டரன்ஸை காண்பித்தார். நடராஜன் அன்போடு வரவேற்றார். பெரிய அல்சேஷன் நாய் கட்டப்பட்டிருந்தது, திருநாவை பார்த்து குரைத்தது. நடராஜன்” ஜானி” என்ற குரல் கேட்டவுடன் அடங்கி ஒடுங்கி உட்கார்ந்தது.  நடராஜன் வராந்தாவை தாண்டி அவர் ரூமுக்கு திருநாவை அழைத்து போனார். திருநாவை உட்கார சொன்னார்.சமையல் கார பெண் இரண்டு கப் காஃபி டேபில் மேல் வைத்தாள். அவள் உடனே கதவை சாத்திக்கொண்டு சென்றுவிட்டாள். 

நடராஜன் “திருநாவ் ஏன் டென்ஷனாக இருக்கிரீர், ரிலாக்ஸ் இதோ உங்களுடைய பில் ராமசாமியிடம் அந்த தங்கசெயினுடன் கொடுத்த டேக் நான் ஞாயமானவன்” என்று இரண்டையும் கொடுத்துவிட்டார் .திருநாவ் அந்த பில் டேக்குடன் வாங்கிக்கொண்டு “நான் டென்ஷனாகவில்லை சார்” நீங்கள் பணம் கவுண்டிங் மிஷின் வைத்திருக்கிறேர்களே அதில் கவுண்ட் பண்ணவேண்டுமா?” என்றார். 

நடராஜன் “அதல்லாம் வேண்டாம் திருநாவ், .பீமாவரதுக்கு பக்கத்தில் நீங்கள் ஒரு பண்ணை வீடு வாங்கியிருப்பதாக கேள்விபட்டேன் உங்கள் நண்பன் ராமசாமி தான் சொன்னார் நீர் ஃபங்ஷன் அனேகமாக10 நாட்களில் செய்யப் போகதாகவும் சொன்னார். எனக்கு பீமாவரம் சிவன் கோவில் தான் குல தெய்வம் அதனால் நீங்கள் பண்ணை வீட்டு விசேஷத்திற்கு என்னை கூப்பிட்டால் போதும் நான் வந்துவிடுவேன்”என்றார்.

திருநாவ்” சார் நிச்சயமாக உங்களை கூப்பிடுவேன் எனக்கும் ரொம்ப சந்தோஷம்” நல்ல நாள் பார்த்து இந்த மாதத்தில் மூன்று நாள் சிவன் கோவில் ஃபங்க்ஷன் முழுசெலவையும் நான்தான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன்” நீங்கள் தங்குவதற்கு வசதியாக தனியாக ஓட்டல் புக் பண்ணிவிடுவேன்” என்று மிக பவ்யமாக சொன்னார்.

நடராஜன் “வெரி நைஸ் திருநாவ் அந்த கோவில் ஃபங்ஷனுக்கு நிச்சயமாக வருகிறேன்” என்றார். 

“நான் வருகிறேன் சார்” என்று திருநாவ் விடை பெற்றுக்கொண்டார்.

திருநாவ் தன் ஆஃபிஸ் மேனேஜர் ரவியை மொபையில் கூப்பிட்டு” இரண்டு நாள் நான் ஊரில் இருக்க மாட்டேன் நீங்கள் ஃபேக்டரியை பார்த்துக்

கொள்ளவேண்டும்”.என்றார். 

திருநாவ் தன் சகலை சம்மந்தத்தை மொபைலில் கூப்பிட்டு “நாளை காலை 5 மணிக்கு நானும் வடிவும் உங்கள் வீட்டிற்கு வருவோம்“என்றார்.

“வடிவு, நாம் இன்று இரவு 9 மணிக்கு கிளம்பி பீமாவரம் உன் தங்கை வீட்டிற்கு போய், பண்ணை வீட்டிற்கு பூஜை போடுவதற்கு நல்ல நாள் பார்த்து விட்டு அந்த சிவன் கோவிலில் 3 நாட்களுக்கு பூஜைக்கும் ஏற்பாடு செய்துவிட்டு நான் மட்டும் திரும்பி சென்னை வருகிறேன் எனக்கு ஆஃபிஸ் வேலை அதிகம் நீ அவர்கள் வீட்டிலேயே இரு நான் பூஜை அன்று வந்துவிட்டு பூஜை முடிந்தவுடன் நாம் இருவரும் சென்னை வந்துவிடலாம்” என்றார். 

கார் ட்ரைவர் சரியா 9 மணிக்கு வந்து விட்டார்.இருவரும் வீட்டை பூட்டிக்கொண்டு கிளம்பி விட்டார்கள்.இரவு நேரம் அதனால் அதிகமாக ட்ராஃபிக் இல்லாததால் காலை 5 மணிக்கு முன்பாகவே சம்பந்தம் வீட்டை அடைந்தார்கள்.

அவர்கள் வீட்டிலிருவரும் உள்ளே நுழையும் போது எல்லோருக்கும் சந்தோஷம்.

திருநாவ் மிக சுறுசுறுப்பாக டிரைவரை கூப்பிட்டு கார் சாவியை வாங்கிக்கொண்டு ட்ரைவரை களைப்பு நீங்க சாப்பிட்டுவிட்டு தூங்க சொன்னார். சம்பந்தத்தை கூப்பிட்டுகொண்டு பண்ணைவீட்டுக்கு சென்றார்.

பண்ணை வீடு சுமார் 4000 சதுராடியில் கட்டப்பட்டது.  சம்பந்தம் அங்கு 200 பேர்க்கு மேல் உட்கார வசதியாக இருப்பதையும் காண்பித்தார். “சுவற்றிற்கு பெயின்ட் கலர் ரொம்ப நன்றாக இருக்கிறது” என்றார் திருநாவ். 

சம்பந்தம் “நீங்கள் 2 லக்ஷ்ம் பேங்க் ட்ரன்ஸ்ஃபர் பண்ணயதில் ஒரு லக்ஷ்ம் செலவு போக மீதி என் அகௌண்டில் இருக்கிறது”என்றார்.

இருவரும் இரண்டாவது மொட்டை மாடிக்கு சென்றனர் அங்கு கைபிடிசுவர் தடுப்பு சுவர் சில இடத்தில் உடைந்து இருந்தது. 

சம்பந்தம் “குரங்குகள் இங்கு அடிக்கடி வருகிறது அதனால் ஒரு கல் சுவர் வைத்து சிவப்பு பெயின்ட் அடிக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். சுவர் கெட்டியாக இருக்கும் ஆனால் கால் வைதால் வழுக்கி விழுந்து விடுவார்கள்.  டேபிள் சுவர் ஓரமாக இருக்கிறது. அந்த புளிய மரம் சரியாக அந்த டேபில் மேல் ஏறி நின்றால் அந்த மரத்தின் கிளையை பிடிக்கலாம், நீங்கள் சொன்ன விஸ்கி பாட்டிலை வாங்கி அங்கு நீங்கள் ஃபங்ஷன் ஆரம்பிக்கும் முன் அந்த மரக்கிளையில் கட்டிவிடுகிறேன் எல்லாம் நீங்கள் குடுத்த அறிவுரைதான். சரியாக இருக்கிறதா? என்று கேட்டார் சம்பந்தம்

திருநாவ் சம்பந்ததை பார்த்து “ரொம்ப கரக்ட்டாக செய்திருக்கிரீர்கள்” என்றார்.

மிக்க மனநிம்மதியுடன் அன்று இரவு டின்னர் சாப்பிட்டுவிட்டு சென்னைக்கு திரும்பி அதிகாலை 4 மணிக்கே வந்துவிட்டார்.

காலை 5 மணிக்கே திருநாவ் தன் ஃபேக்டரிக்கு வந்தார். தன் ரூம் வழியாக தன்னுடைய தங்கம் பிரிக்கும் ரூமை திறந்தார் பல தொழிலதிபர்கள் கொடுத்த தங்க செயினிலிருந்து பிறித்தெடுத்த தங்கத்தை எடை போட்டால்

100 கிராம் இருந்தது.  இது 2 மாதததில் சேர்ந்தது. அதை தங்க பிஸ்கெட்களை போல் அழகாக செய்தார். அதை வாட்ச்அப்பில் தன் பழைய தங்க மாளிகை முதலாளி சந்தர சேகருக்கு அனுப்பினார். அவர் உடனே மொபைலில் கூப்பிட்டு “திருநாவ் தயவுசெய்து சாய்ங்காலம் 4 மணிக்கு நேரில் என்னை வந்து பார்” என்றார்.

திருநாவ் அந்த தங்க பிஸ்கெட்டுகளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார், அங்கு ராகவன் ஒரு டிஃபன் கேரியரில் லஞ்சுடன் வந்தார். திருநாவுக்கு நல்ல பசி ராகவனை பார்த்து “ராகவ் ரொம்ப தேங்க்ஸ் எனக்கு பசி தான் அதிகம்” என்று சொல்லி எல்லாவற்றையும் சாப்பிட்டார். காலி டிஃபன் பக்ஸை எடுத்துக்கொண்டு ராகவ் தன் வீட்டுக்கு சென்றார்.

திருநாவ் நடராஜனுக்கு ஃபோன் செய்து “சார் பீமாவரம் பண்ணை வீட்டில் இந்த வெள்ளிக்கிழமை ஃபங்க்ஷன் வைத்திருக்கிறேன் தாங்கள் அவசியம் வரவேண்டும். உங்களுக்கு முதல் இன்விடேஷ்னுடன் கொடுக்க வந்து கொண்டிருக்கிறேன்”என்றார். நடராஜன்உடனே “நீங்கள் வரவேண்டாம், எனக்கு அதிகமாக வேலை இருக்கு வாட்ச் அப்பில் இன்விடேஷனை அனுப்பிவிடும். பிறகு இன்னும் அன்று கொடுத்தது போல் நாளையே வேண்டும்” என்றார். “தருகிறேன் சார் உங்கள் வீட்டில் காலை 10 மணிக்கு வரலாமா அத்துடன் இன்விடேஷனயும் கொடுத்து விடுகிறேன்” என்றார். “நடராஜன் நானும் அந்த டைம் தான் நினைத்தேன் நாளை சந்திக்கலாம் என் வீட்டில்” என்றார்

.திருநாவ் தன் பழைய முதலாளி சந்தரசேகரை சரியாக 4 மணிக்கு சந்திக்க சென்றார். சந்திரசேகர் திருநாவு கொடுத்த தங்க பிஸ்கேட்டுகளை வாங்கி எடை போட்டார் “இதன் மதிப்பு 43.57 லக்ஷ்ம்” என்றார்.

“திருநாவ் இதுவரை நான் கொடுக்க வேண்டியது 1 கோடியே 18 லக்ஷம் தரவேண்டியது. இப்போது வாங்கிக்கொள்கிறாயா? உன் ஃப். டி. யில் சேர்த்து

ரெசிப்ட் எல்லாம் வழக்கம் போல் என் டிராயரில் வைத்துக் கொள்ளவா? இந்த அமௌண்டு 15 லக்ஷ்ம் உன்னிடம் கொடுத்த கேஷ் கழித்துதான் சொல்லியிருக்கேன்” என்றார்.

திருநாவ் “சரி ஸார் நீங்களே வழக்கம் போல் வைத்துக்கொள்ளுங்கள், சார் நான் ஒரு பண்னை வீடு பீமாவரத்தில் வாங்கியிருக்கேன்

 வர வெள்ளிக்கிழமை ஃபங்ஷன் வைத்திருக்கிறேன் நீங்கள் அவசியம் வரவேண்டும்”என்றார்.

மறுநாள் சரியாக 10 மணிக்கு திருநாவ் நடராஜன் வீட்டிற்கு சென்று அவர் கேட்ட பணத்தையும் கொடுத்துவிட்டு பீமாவரத்தில் நடக்கவிருக்கும் ஃப்ங்ஷனுக்கு அழைப்பிதழையும் கொடுத்து நேரில் அழைத்தார்.

வெள்ளிக்கிழமை பீமாவரத்தில் தடபுடலாக ஃபங்ஷன் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது, பல பெரிய மனிதர்கள் வந்து கொண்டிருந்தார்கள். திருநாவும் அவர் மனைவி சகலை சம்பந்தமும் எல்லோரையும் வரவேற்றார்கள்.பூஜையில் அமரும் நேரத்தில் நடராஜன் வந்துவிட்டார். திருநாவ் அவரை வரவேற்று தன் உறவுகாரர்கள் அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தார்.  வீட்டை சுற்றி காண்பித்தார். நடராஜனின் அருகில் சென்று”இரண்டாவது மாடி மொட்டை மாடி சார் அங்கே உங்களுக்கு காத்து வாங்க வசதியாக இருக்கும் ஜானிவாக்கர் ஜின் யாருக்கும் தெரியாமல் அங்கே ஓரமாக வைத்துள்ளேன்”. என்றார்.   “திருநாவ் நீங்கள் பூஜையில் உட்காருங்கள் நானும் சிறிது நேரம் எல்லோரிடம் பேசிக்கொண்டு நல்ல சமையம் பார்த்து மாடிக்கு செல்கிறேன்”என்றார் நடராஜன்

இரண்டு மணிநேரம் பூஜை நன்றாகநடந்தது பிறகு எல்லோரும் “மேல் மாடியில் லஞ்ச் சாப்பிட வசதியாக இருக்கிறது” ஏன் அங்கு சாப்பிட ஏற்பாடு செய்யவில்லை” என்றார். திருநாவ்”கட்ட சுவர் அவ்வளவு திடமாக இல்லை யாராவது உட்கார்ந்தால் வழுக்கும், அதனால் தான் அங்கு வேண்டாம்” என்றார். “ஜாக்கிரதை” போர்டும் இருக்கிறது. நடராஜனின் போராத காலம் அவர் அதை காதில் வாங்கவில்லை. எல்லோரும் சாப்பிட உட்கார்ந்து விட்டார்கள். நடராஜன் “எனக்கு டிஃபன் அதிகமாக சாப்பிட்டதால் நான் மேல் மாடிக்கு சென்று காத்து வாங்கிக்கொண்டிருக்கிறேன்”என்றார். அந்த நேரத்தில் திருநாவு, மனைவி,பெண் சம்பந்தம் குடும்பம் சிவன் கோவிலுக்கு சென்றார்கள், அங்கு பலருக்கு. அன்னதானம்செய்கிறார்கள்

நடராஜன் ஜானிவாக்கர் ஜின் என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும் ஆதலால் யாரும் இல்லாத சமையத்தில் மொட்டை மாடிக்கு வந்தார் டேபிள் கட்டசுவர் அருகில் போடப்பட்டிருந்தது.சிறிது தள்ளி புளிய மரக்கிளையில் ஜானிவாக்கர் ஜின் கட்டி வைக்கப்பட்டிருந்தது..நடராஜன் தன்னையும் அறியாமல் ஒரு ஆசையினால்கட்ட தடுப்பு சுவரில் ஒரு கால் வைத்து டேபிளில் ஒரு கால் வைத்து அந்த ஜானிவாக்கரை பிடித்தார் இழுத்து மூடியை கழட்டி விட்டு ஜின்னை வாயில் ஊற்றிக்கொண்டார்,

ஆனால் கால் வழுகியது நேரே மேலேயிருந்து கீழே ஒரு பாறையில் விழுந்தார்.தலையில் பலமான அடி பட்டு ஜானிவாக்கர் பாட்டிலுடன் விழுந்து கிடந்தார்   பண்ணைவீட்டில் எல்லோரும் சாப்பிட்டுவிட்டு கைஅலம்பும் சமையத்தில் பெரிய சத்தம் கேட்டது. எல்லோரும் சென்று பார்த்தார்கள். நடராஜன் ரத்தவெள்ளத்தில் கிடந்தார். திருநாவ் கோவிலின் பூஜை முடிந்து வீட்டில் நுழையும்போது இந்த சம்பவம் கேட்டு அவரை அப்படியே ஹாஸ்பிடலுக்கு எடுத்து சென்றார். அங்கு முடிந்தவரை சிகிச்சை செய்து பலனில்லை என்று ஹாஸ்பிடல் தெரிவித்து பாடியை திருநாவவிடம் ஒப்படைத்தார்.

போலிஸில் பலரையும் கேள்வி கேட்டர்கள் கடைசியில் குடியின் மிகுதியால் யாருக்கும் சொல்லமல் தற்கொலை செய்து கொண்டதாக போலிஸ் கேசை க்ளொஸ் செய்தது. திருநாவ் சென்னைக்கு நடராஜ்னின் பாடியுடன்ஏடுத்து சென்றார். அங்கு அவர் உறவினர்கள் அவருக்கு குடிபழக்கம் முன்பே இருந்த்தாக கூறினார்கள். அவர் மனைவி இந்த குடி பழக்கத்தினால் அவருடன் குடிதனம் பண்ண முடியாமல் அவள் தாய் வீட்டிற்குசென்றுவிட்டாள்.

ஆனால் அங்கு அருகிலிருக்கும் விநாயகர், சிவன் கோவிலுக்கு 5 லக்ஷம் கும்பபிஷேகத்திற்கு கொடுத்ததாக கோவிலிலிருந்து மாலை வந்தது.

அதேபோல் திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலிலிருந்தும் மாலை மரியாதை செய்ததை திருநாவ் பார்த்தார்.

No comments:

Post a Comment