Sunday, February 21, 2021

இறப்பு முடிவல்ல

 இறப்பு முடிவல்ல

-வேதவன்-

ஐ. பி ஸ். ஆஃபிஸர் ராகவ் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார் இந்த கேசில் ஒரு துப்பும் கிடைக்கவில்லை. ராகவ் நல்ல போலிஸ் ஆஃபிஸர் மிகவும் ஞாயமாக நடந்துக்கொள்வார். நல்ல உடல் கட்டுடன் இருப்பவர். சுமார் 6அடி உயரம் இருப்பார், யாரையும் உடனே நம்பமாட்டார். ஆனால் அவர்கள் சொல்வதை முழுவதையும் கேட்பார். அவர் கேட்கும் போது ஒரு போதும் தன் உணர்ச்சிகளை காண்பிக்கமாட்டார். எல்லாவற்றையும் அலசி ஆராய்வார். கரத்தே, கும்ஃபு இவைகளில் பயிற்சி பெற்று போலிஸில் பலருக்கு பயிற்சி அளிக்கிறார். அவருக்கு சுமார் 29 வயது தான் ஆகிறது இந்த வயதில் இவ்வளவு பொருப்புள்ள ஆஃபிஸரை பார்க்கமுடியாது.இதனால் எப்போதும் இவருக்கு  தீர்வு கிடைக்காத  கேஸ் தான் கொடுக்கப்படும். 

ஆழ்வார்பெட் பெரிய தொழில் அதிபர் கொலை கேஸா அல்லது குடும்பமே காணாத போய் விட்டார்களா? இதைப்பற்றி சில டீ வீ சேனலில் விவாதம் ஆனால் அதில் எந்த உருப்படியான துப்பும் கிடைக்கவில்லை. இதைப்  பற்றிதான் சிந்தனை, அந்த கேஸ் மூன்று வருடத்திற்கு முன்பு நடந்தது. அந்த பெரிய தொழில் அதிபர் குடும்பத்தில் அனைவரும் காணாமல் போய்விட்டார்களா?  நிச்சயமாக அனைவரையும் கொலை செய்துவிட்டு  ஒரு தடையமும் இல்லாமல் மறைக்கப்பட்டிருக்கிறது.  அவர் இறப்பதற்கு முன்பு அவர் காரில் குடும்பத்துடன் பெங்களூருக்கு பயணம் செய்துக் கொண்டிருப்பதற்கான சாட்சிகள் இருக்கிறார்கள். அவர் காருடன் காணவில்லை என்பதுதான் இந்த கேஸ். கடவுளின் கிருபையால் அந்த தொழில் அதிபர் ராம்சந்தின் மகள் மட்டும் அமெரிக்காவில் மாஸ்டர் ஆஃப் கம்ப்யூட்டர் சையன்ஸ் கடைசி வருடம் படித்து கொண்டிருந்ததால் அவள் அந்த காரில் செல்லவில்லை. அவள் பெயர் விநொதினி வயது 23 ஆகிறது. திருமணம் ஆகவில்லை.அந்த பெண் தான் இப்போழுது தந்தையின் கம்பனி யான ஸாத்தியம் &கொ. வை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால்அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்துவிட்டாள். அவளுக்கு ராகவ் போலிஸ் பாது காப்புக்கு உடனே எற்பாடு செய்தார்.

அவளுடைய வாக்குமூலம்:    அப்பாவின் பெயர் ராம்சந்த் காம்போஜ்

பூர்வீகம் : ஹரியானா ஆனால் 25 வருடமாக சென்னையில் தான் இருக்கிறோம்

அங்கு ஒரு குடும்ப சொத்துக்களும் இல்லை

அப்பா : சாஃப்ட்வேர் இங்ஜீனீயர், ஐ ஐ டி டெல்லியில் படித்தவர்.கோல்ட் மெடலிஸ்ட்.  

அப்பாவின் வயது  50

அவர் பேங்களூருக்கு சென்ற காரணம்: அங்கு எங்களுக்கு20 வருடத்திற்கு முன்பு பழைய வீட்டை வாங்கியதை புதுப்பித்து கட்டவேண்டும் 

பங்களூருக்கு புறப்பட்ட தேதி 25 ஜுன், 2013 நேரம் இரவு 11.30

கார் :இன்னவா

காரில் சென்றவர்கள்: டிரைவர் ( என் மாமா என் அம்மாவின் தம்பி) மோஹன், என் அம்மா அர்சனா ,அப்பா, தம்பி:விக்ரம்

கார் நெம்பர் TN 6789

“நான் அமெரிக்காவில் வர்ஜினியாவில் யுனிவெர்சிடடி அருகாமையில் என் தோழியுடன் ஒரு இரண்டு அரையுள்ள ஃப்ளாட்டில் தங்கியிருந்தேன்.

“அவர்கள் சென்னையை விட்டு கிளம்பும் போது நான் அமெரிக்காவிலிருந்து அம்மாவுடன் மொபைலில் பேசிக்கொண்டே இருந்தேன். அம்மா இரவு ஒரு மணிவரை பேசிக் கொண்டிருந்தார்கள்.அம்மா தூங்க ஆரம்பித்ததால் நான் அப்பாவிடம் சிறிது நேரம் பேசினேன் அப்பா தமிழ், ஹிந்தி, கன்னடம்,ஆங்கிலம், மலையாளம் மொழிகளில்  நன்றாக பேசுவார். அப்பா எப்போதும் இண்டிமேட் சென்ட் உபயோகிப்பார் நானும் அவரை கிண்டலாக “அப்பா, உன் இண்டிமேட் சென்ட் வாசனை யு ஸில் என் மூக்கை துளைக்கிறது”   என்றேன். அவரும்  பலமாக சிரித்தார். காரில் சென்றுகொண்டே கம்ப்யூடரில் எதோ வேலை செய்து கொண்டே இருந்ததார், “பூந்தமல்லி வழியாகபோகிறோம்” என்று அப்பா சொன்னார் நானும் அவரை தொந்திரவு செய்யாமல் காலையில் கூப்பிடுகிறேன் என்று சொல்லிவிட்டு லைனை கட் பண்ணிவிட்டேன்”

இரவு ஒரு மணிக்கு மேல் கார் பூந்தமல்லி தாண்டியிருக்கலாம் என்று நினைக்கிறேன்

.“அதற்கு பிறகு இந்தியாவின் காலை நேரம் 5 மணிக்கு என்மொபைல் மூலமாக அம்மா மொபைல் ஸ்விச் ஆஃப் ஆகியிருப்பதால் அப்பா மொபைலில் முயற்சி செய்து கொண்டே இருந்தேன் ரிங்க் டோனெ கேட்கவில்லை . மோஹன் மாமாவின் செல் ஃபோன் ரிங்க் டொனே கேட்கவில்லை. பங்களூரில் ஜெய நகர் பிளாக் நம்பர் 9- 37- கிராஸ் தெருவில் தான் எங்கள் பழைய வீடு, அந்த வீட்டிற்கு அடுத்த வீட்டில் வசிப்பவர் பசவப்பா என் அப்பாவின் நல்ல நண்பர் மிகவும் நல்ல மனிதர், அவர் ஒரு சிவில் இஞ்சினீயர் அவர்தான் என் அப்பாவிற்கு அந்த பழைய வீட்டை புதியதாக கட்டுவதற்கு பொருப்பு எடுத்துக்கொண்டு பிளான் அப்ரூவலையும் வாங்கி அப்பாவிடம் கொடுத்துவிட்டார்.அவரிடம் காலை சுமார் 6 மணிக்கு ஃபோன் பண்ணி கேட்டேன், அப்பா அவரிடம் தன் குடும்பத்துடன் வருவதாக சொன்னாராம். அவர்களுக்காக நாங்களும் காத்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறினார். “காலை 9 மணிவரை வரவில்லை என்றவுடன் நான்சென்னைபோலிஸில் ஒரு புகார் கொடுத்தேன். பசவப்பா அவர்களும் பங்களூர் ஜெயநகர் போலிஸில் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.

சென்னை போலிஸும் பங்களூர் போலிஸும் இணந்து செயல் பட்டார்கள் அவர்களால் ஒரு சின்ன துப்பும் கண்டு பிடிக்கவில்லை. இரவு 1 மணிக்கு மேல் தான் அந்த கார் கடத்தப் பட்டிருக்க வேண்டும். வேலூர் வழியாக கௌண்டின்யா காட்டு பாதையின் வழியாக யாராவது கடத்திருக்கலாம் என்ற கோணத்தில் போலிஸ் சல்லடை போட்டு தேடிவிட்டார்கள் ஒரு சின்ன க்ளு கிடைக்கவில்லை. காட்டில் ஒரு வேளை காட்டு விலங்குகள் அடித்திருக்

கலாம் என்பதினால் ஃபாரெஸ்ட் ஆஃபிஸருடன் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. கார் எங்கேயாவது அந்த காட்டில் இருக்கலாம் என்று பல இடங்களில் காட்டிலாகாதுணையுடன் தேடினார்கள். ஒரு தடையமும் கிடைக்கவில்லை. இரண்டு மாநில போலிஸும் திணறினார்கள். 

வினொதினிக்கு என்ன காரணத்தினால் அப்பாவை கடத்தி கொலை செய்திருக்கும் அளவிற்குஅவர் யாருக்கும் எந்த தீங்கும் செய்ய வில்லையே என்று அழுதாள். அன்று காரில் செல்லும் போது அப்பா கம்ப்யூடரில் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது தெரிந்தால் ஓரளவு இந்த கேசில் தேளிவு கிடைக்கலாம் ஆனால் அதற்கு என்ன வழி என்று புலப்படவில்லை. அந்த கம்ப்யூட்டர் வழியாக மெயில் அனுப்பியிருந்தாலும் கண்டுபிடிக்கலாம். அந்த கோணத்தில் அவருடைய நண்பர்கள் பலரின் ஈ மெயிலில் அனுப்பிய விஷயங்களை எல்லாம் ஆராய்ந்து பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் தன் பிசினஸைப்பற்றி யாருக்கும் எதுவும் எழுதப்படவில்லை. நான்கு வருடத்திற்கு முன்பு   அரசாங்கத்திற்கு சாஃப்ட்வேர் க்வேடேஷன் அனுப்பி

இருக்கிறார் .அந்த வேலை சுமார் 200 கோடி மதிப்பாகும். அந்தவேலையும் போன ஆறு மாதத்திற்கு முன்பு தான்அவர் மகள் வினோதினியின் திறமையினால் வெற்றிகரமாக முடித்து விட்டார்கள். அரசாங்க டெண்டர் எது வந்தாலும் சரியான மதிப்பிட்டுடன்அவர் க்வேட்டேஷன் அனுப்பினால் அவருக்கு கிடைப்பதற்கு வேண்டிய வழியை எப்படியோ தெரிந்து திறமையுடன் செயல்படுவார். கடைசியாக அவர் டாடா கன்சல்டன்சி யில் 50 கோடி மதிப்பீட்டில் க்வேட்டேஷன் கொடுத்தது அவர் கம்பனி யாகிய ஸாத்தியம் அண்ட் கம்பனிக்கேக் கிடைத்து விட்டது. எந்த விதமான போட்டி விரோதமும் இல்லை. 

ராகவுக்கு எந்த விதத்திலும் ஒரு க்ளுவும் கிடைக்காத சமையத்தில் ஒரு விசேஷமானா ஒரு செய்தி ஹரியானாவில் நடந்ததை டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் படித்தார். “

3 வயது நிரம்பாத சிறுவன் “தன்னை கொலை செய்துவிட்டார்கள்” என்று கத்திக்கொண்டே மயக்கம் அடைந்துவிடுகிறான். இதே போன்று 6 மாதமாக

அவன் சித்த ப்ரம்மை பிடித்தது போன்று இருப்பதால் பல மந்திர வாதிகளால் குணப்படுத்த முடியாமல் இருப்பதை அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ராகவ் உடனே ஹரியானாவில் இருக்கும் ரிப்போர்டருடன் தொடர்பு கொண்டு அந்த சிறுவன் தங்கி இருக்கும் அட்ர்ஸை கண்டுபிடித்தது ராகவ் டீம்.  ராகவின் டீமில் 2 ரகஸியபோலிஸ் மேலும் டாக்டர் ருத்ரன் என்ற பிரபலமான மனோ தத்துவ நிபுணர். ராகவும் நன்றாக ஹிந்தி பேசுபவர். அந்த குடும்பதில் அந்த சிறுவனின் தந்தை தாயுடன் ராகவ் வும் டாக்டர் ருத்ரனும் சாதுர்யமாக பேசி அந்த சிறுவனின் தாய் தந்தையுடன் ஆகாயவிமானத்தில் சென்னைக்கு கொண்டு வந்தார்கள். 

அந்த ரூம் குளிரூட்டும் கருவியுடன் கூடியது 10அடிக்கு 15 அடி அகலம் கொண்டது. அந்த அரையில் மங்கலான விளக்கு எரிந்து கொண்டிருந்தது அந்த சிறுவனை மட்டும் மனோ தத்துவ நிபுணர் கார் சீட் மாதிரியான ஒரு சோஃபாவில்  உட்கார வைத்தார். பையனின் பெயரை கேட்டார் “சார்விக்” என்று சொன்னான் அவனை தன் கண்ணை பார்க்க சொன்னார்.அவன் சிறிது நேரம் பார்த்துக்கொண்டே இருந்தான். பிறகு டாக்டர் அந்த சிறுவனிடம் போலிஸ் ஆஃபிஸ்ர்கள் எல்லோரும் இங்கு இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு ரொம்ப அமைதியான நேரத்தில் இன்டிமேட் சென்ட் வாசனையை  டாக்டர் ருத்ரன் அந்த சிறுவனின்மேல் அடித்தவுடன் மெலிதான குரலில் வினொதினி குரலில் ராகவ் வைத்துக்கொண்டிருந்த ஆடியோவிலிருந்து “அப்பா, உன் இண்டிமேட் சென்ட் வாசனை யூ ஸில் என் மூக்கை துளைக்கிறது” இந்த வார்த்தையை அந்த சிறுவன்கேட்டவுடன், ஸார்விக் அப்படியே பெரியவர்கள் மாதிரியான குரலில் “பை வினொ” என்று சொல்லிவிட்டு சிறிது நேரம் மௌனம் டாக்டர் ருத்ரன்மிக மெதுவான குரலில் “ராம்சந்த் என்ன நடக்கிறது” என்றார். “மோஹன் கார் எங்கு செல்கிறது காரின் ப்ரகாசமான லைட்டை ஆன் பண்ணு” என்ன ஆச்சு இந்த இடம் இருட்டாக இருக்கு கார் ஆகாயத்தில் பறப்பது போல் இருக்கிறது”. “கார் இஞ்ஜின் தானாக ஆஃப் ஆகிவிட்டதா?” என்று அந்த சிறுவன், பெரியவர்கள் மாதிரியான குரலில் சத்தமாக கத்தினான். 

டாக்டர் உடனே மெல்லிய குரலில் ஹெலிகாப்டரில் “நம் காரை அப்படியே தூக்குகிறார்கள்” என்றார். உடனே “யாரது .ஆமாம் “என்றான் அந்த சிறுவன் தமிழில் பேசியது எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சிறிது நேரம் மௌனம் நிலவியது. மெல்லிய குரலில் டாக்டர் “யார் இவர்கள்” மௌனம்”கார் ஹெலிகாப்டரில் வந்துவிட்டது,” என்ன செய்ய போகிறீர்கள்” அந்த பெரிய குரலில் சப்தமான  கத்தல். பிறகு மௌனம்.. நான் போலிஸுக்கு ஃபோன் பண்ணப்போரேன் எதற்காக என் காருடன் இந்த ஹெலிகாப்டரில் கடத்துகிறீர்கள் உங்களுக்கு என்ன வேண்டும்” கட்டை குரலில் சிறுவனின் சத்தமான பேச்சு எல்லோருக்கும் ஆச்சரியம்

பெரிய மௌனம் ….தொடர்ந்தது அதே குரலில் “நான் கம்ப்யூடரில் ₹,400 கோடிக்கு க்வேடேஷன்   டெல்லி metro ஸ்டேஷன்களுக்கு ஆட்டொ சாஃப்ட்வேர் சிக்னலுக்கு வேண்டிய எல்லா வழிகளும் இந்த கம்ப்யூடரில் சேவ் பண்ணி இருக்கேன்.ஹார்ட்வேரில் அதிர்வலைகளை நுணுக்கமான முறையில் கண்டறியும் ப்ரொக்ராம் சாஃப்ட்வேர் ப்ரொக்ராமுடன் இணைத்து வைத்துள்ளேன், இதனால் ஒரே ரயில்வே டிராக்கில் எதிரே ஒரு ரயில் வண்டி வந்தால் இரண்டு வண்டியும் 200 மீட்டர் அருகில் நின்றுவிடும் அதனால் விபத்தை தவிற்க முடியும். யாராவது ஓடிக்கொண்டிருக்கும் ரயில் வண்டியில் தற்கொலைக்கொ அல்லது எதாவது கனமான பொருள் தண்டவாளத்தின் மேல் இருந்தலோ,  வண்டியின் முன் பகுதியில் இருக்கும் ஸ்பேடு போன்ற ஒரு கனமான கருவி மிக துரிதமாக இயங்கி அந்த பொருளை தூக்குவதுடன் 100 மீட்டர் தூரம் சென்று வண்டி நின்றுவிடும் இதற்கு வேண்டிய ப்ரோக்ராமும் ஆடொ ஆபரேஷன் யும் விளக்கமாக கொடுத்துள்ளேன். 200 மீட்டர் தூரத்தில் தண்டவாளத்தில் பிளவாக இருந்தாலும் அந்தவண்டியில் அதிவலையின் மூலம் கண்டறிந்து வண்டி ஆட்டோ ஸ்டாப்புக்கு வந்துவிடும்.      இன்னும் நான் அந்த டெண்டருக்கு ரிப்ளை அனுப்பவில்லை. நீங்களே எடுத்து கொள்ளுங்கள். எங்களை விட்டுவிடுங்கள் அனுராக் தீக்ஷித் ஜி. நீங்கள் சொல்லுவதை கேட்கிறேன். 2009 ல் நான் உங்களுக்காக ஆன் லைன் கேம்ப்ளிங்காக வழிமுறை சரியான முறையில் தான் கொடுத்தேன். நீங்கள் 2010ல் உங்கள் பேரசையினால் நீங்கள் செய்த தவறு , போலிஸில் மாட்டியது என் தவறு அல்ல என்று ராம்சந்த் குரலில் அந்த சிறுவன் ஹிந்தியில் பேசியது ஆச்சரியமாக இருந்தது . சிறிது நேரம் மௌனம் பிறகு பெரிய சப்தத்துடன்” தீக்ஷீத்” நீ எல்லோரையும் நன்றி இல்லாமல் கொலை செய்துவிட்டாயே துரோகி” என்னையும் உன் பண்ணை வீட்டில் காருடன் புதைத்து விட்டாயே நான்  நிச்சயமாக உன்னை விடமாட்டேன்”. நான்  மறுபிறவி எடுத்து உன்னை கொல்வேன் எல்லோரையும் கொலை செய்து விட்டாயே “ ….(டாக்டர் ருத்ரன் மெதுவான குரலில் “நாங்கள் தீக்ஷித்தை பிடித்து விடுவோம் நாங்கள் போலிஸ்” என்று சொன்னவுடன் அந்த சிறுவன் மயக்கம் அடைகிறான். சிறுவனின் முழு விவரங்களும் விடியோவில் பதிவு செய்யப்பட்டது. அந்த சிறுவன் அந்த ரூமிலிருந்துவெளியே அமர்ந்திருக்கும் அவன் தாய் தந்தையிடம் கொண்டுவந்துவிட்டார்கள். அவனுக்கு சித்த பிரம்மை நீங்கிவிட்டதாக டாக்டர் ருத்ரன் கூறிவிட்டு சாதாரண தூக்க மாத்திரையை கொடுத்து விட்டு இரண்டு நாட்கள்சிறுவன் இரவு தூங்குவதற்கு முன் கொடுங்கள். சிறுவன் ஸார்விக் நன்றாக குணமாகி விடுவான் என்று சொல்லி அந்த குடும்பத்தை ஹரியானாவில் விடுவதற்கு ராகவ் மூலம் ஆகாய விமானத்தில் மிகவும் மரியாதையுடன் அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டார். 

ராகவ் தனக்கு இந்த கேசின் முழு விவரமும் தெரிந்துவிட்டது நாம் உடனே அனுராக் திக்ஷித்தை கைது செய்தால் முழு விவரமும் கிடைக்கும் என்று செயல் பட ஆரம்பித்தார். அனுராக் திக்ஷித்தை கைதி செய்வது அவ்வளவு எளிதல்ல. முதலில் அந்த பண்ணை வீடு எங்கே இருக்கிறது? அதில் எந்த இடத்தில் காருடன் புதைக்கப்பட்டிருப்பதை நிருபிக்க வேண்டும். சென்னையிலிருந்து ராகவ் தலைமையில் ஹரியானாபோலிஸுடன் இணைந்து செயல் பட்டதில் அனுராக் அவர் 2010ல் ஆன்லைனில் மோசடியான சூதாட்டம் ஆடினதில் பலர் தங்களின் பணத்தை இழந்தது தெரிந்து போலிஸ் அவரை கைது செய்தார்கள்.ஒரு வருடத்தில் அவர் வக்கீல் வாதடி தண்டனை குறைக்கப்பட்டது. அவர் ஐ. ஐ டி டெல்லியில் படித்தவர் அதனால் சிறையிலும் அவருக்கு முதல் வகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டுள்ளது. 2011ல் அவர் சிறையிலிருந்து வெளியே வந்து ஏர் ஃபோர்ஸில் அவருக்கு ஆஃபீஸ்ராக ஒருவருடம் பணிபுரிந்தார். தற்சமயம்அனுராக் தீக்ஷித்   நிஜம் அண்ட் கம்பனி யின் சி.ஈ.ஓ. ரயில்வே மெட்ரொவில் பல எலெக்ட்ரானிக் சாஃப்ட்வேர் இணைப்புகள் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு ஹரியானாவில் ஹிஸார் என்ற இடத்தில் ஒரு பண்ணை வீடு இருப்பதாக ஹரியானா போலிஸின் அறிக்கையை ராகவ் படித்தார். ஹரியானா போலிஸுடன் அந்த பண்ணை வீட்டில் திடிர் என்று போலிஸ் நாயிடன் சென்றதில், நாய்கள் ஒரு இடத்தில் சிமெண்ட்டால் பெரிய கான்ஃபெரன்ஸ் ஹாலில் நின்று குலைத்துக் கொண்டே இருந்தது. அந்த இடத்தை 10 அடிக்கு தோண்டியதில் இன்னவா காருடன் 4 சடலங்கள் மீட்கப்பட்டதை பார்த்தவுடன் அனுராக் தீக்ஷித்தை கைது செய்து ராகவ் தன்னுடைய பாணியில் விஜாரித்ததில் 2009 ம் வருடத்திலிருந்து ராம்சந்தும் தீக்ஷித்துடன் ஆன்லின் சூதாட்டத்தில் மிக சாமர்த்தியமாக தீக்ஷித்தை ராம்சந்த் மாட்டிவிட்டதில் ராம்சந்தை ஒழிப்பதற்கு அமைதியாக சரியான நேரத்தில்  அந்த குடும்பத்தையே கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தூக்கு மேடைதான் தீர்ப்பு என்பதை தீக்ஷித் தீர்மானித்துக்கொண்டார்.


“படித்தவர் பாவம் செய்தால் ஐயோவென்று போவான்”- பாரதியார்

No comments:

Post a Comment