Sunday, February 21, 2021

சுஹாசினி மாமி வெர்சஸ் மஹாதேவன் மாமா

 To enjoy this day....

இதைப் படிச்சுட்டா அப்பறம் நமாத்துல எந்த ஆம்பளையும் அதிகாரம் பண்ண மாட்டா... பாத்திரம் மட்டும் சித்த தேச்சுத் தரேளான்னு கேட்டா போதும்...

🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️ போயிடுவா...

Read this👇🏻

படித்ததில் பிடித்தது

சுஹாசினி மாமி வெர்சஸ் மஹாதேவன் மாமா. இனி இவர்கள் மஹா மற்றும் சுஹா என்று அழைக்கப்படுவார்கள்..

(disky: இது உங்க வீட்டு சிங்க்கா என்று கேட்பவர்கள் ஒரு வார காலம் மூன்று வேளையும் பாத்திரம் தேய்க்கக் கடவார்கள்)

சுஹா: ஏன்னா காலம்பறலேர்ந்து தளிகை பண்ணினது ரொம்ப டயர்டா இருக்கு, ஒரு பத்தே பத்து பாத்திரம் சிங்க்ல போட்டிருக்கேன், கொஞ்சம் தேச்சு தர்றேளா…

மஹா: அதுக்கென்னடி சுஹா.. தேச்சுட்டா போச்சு…

உள்ளே சென்றவர், மஹா: டீ சுஹா… ஏண்டி பத்தே பத்து பாத்திரம்னியே, பத்து நாள் பாத்திரம்னா கெடக்கற மாதிரியிருக்கு

சுஹா: ஏன் சொல்லமாட்டேள்… ஒரு நாள் தேக்க சொன்னா ஒடம்பு நோகறதா? நானெல்லாம் தெனம் தேய்க்கறேனே…..

மஹா: இதென்னடி சாதத்துக்கே இத்தனை பாத்திரம்….?

சுஹா: ஆமா, காலம்பற ஆபீஸ் கிளம்பறவாளுக்கு கைக்கு கலந்த சாதம் கட்ட கொஞ்சம் உதிர் உதிரா வடிக்க வேண்டியிருக்கு, உங்களாண்ட கொடுத்தா என்னடி இது அக்ஷதை தட்டை எதுக்கு என்கிட்ட தர்றேன்னு ஒரு நக்கல் வரும். உங்களுக்கு ரெண்டாம் சாதம் குழைவா வடிக்கணும். அப்படியே குக்கரோட கொண்டு வந்து வச்சா, ஏண்டி இப்படியா குக்கரோட வைப்பா, ஒரு டைனிங்டேபிள் டீசன்ஸியே இல்லியேம்பேள், அதனால அதை ஹாட்பேக்ல மாத்த வேண்டியிருக்கே… அத்தோட விட்டுதா, சாயந்திரம் வரை அதிலயே வச்சா தண்ணி விட்டுக்கும். அதான் சின்ன பாத்திரத்துல மாத்திட்டு தேய்க்கப் போட்டேன்

மஹா: சரிடி ! குழம்பு பாத்திரமே மூணு இருக்கே…

சுஹா: ஆமா . குக்கர்லயே எல்லாத்தையும் கொட்டி குழம்பு பண்ணினா என்னடி இது கேவலமா இருக்கேன்னு நாக்க நன்னா நொட்டாங்கடிப்பேள். காய் குழைஞ்சு போயிடுத்தும்பேள். காயைத் தனியா வாணலில வதக்கி குழம்பை இருப்புச்சட்டில கொதிக்க வச்சு அப்புறமா ரெண்டையும் கலக்க வேண்டியிருக்கே. அத்தோட விடுவேளா, இப்படி இலுப்பச்சட்டியோட குழம்பைக் கொண்டு வந்து வப்பாளோன்னு ஒரு வக்கணை வேற., அதான் அதை மாத்தி கொண்டு வந்து வைக்க ஒரு பாத்திரம், இத்தனூண்டு குழம்பை இம்மாம்பெரிய பாத்திரத்திலேயே வப்பாளோ? சாயந்திரம் பாத்திரத்துல காஞ்ச குழம்பெல்லாம் ஒட்டிண்டு கன்றாவின்னு உங்கம்மா நொடிச்சுப்பா! அதான் சின்ன டபரால மாத்திட்டு தேய்க்கப்போட்டிருக்கேன்

மஹா: சரிடி, அது எதுக்கு இத்தனை பேசின்? ஒரு காய் தானே பண்றே?

சுஹா: அதான் இலுப்பச்சட்டியோட கொண்டுவந்து வச்சு, உங்க ஆபீஸ் ப்ரெண்ட் சூடா இருக்குன்னு தெரியாம, வாவ் பேபி ஆலு ரோஸ்ட் அப்படின்னு இலுப்பச்சட்டியோட தூக்கி கையைச் சுட்டுண்டு தைதைன்னு ஒரு தில்லானா ஆடித்தே,,, அதுலேர்ந்து பேசின்ல மாத்தி தானே வைக்க வேண்டியிருக்கு.

மஹா: சரி, ஒரு காய் தானே பண்றே? இங்க நாலு பேசின்னா இருக்கு,

சுஹா: ஆமா , பெரியவனுக்கு சாம்பார் சாதம் பிசைஞ்சேன், சின்னவன், அதிலயே போட்டு பிசையாதே, ரசம் சாதத்தை வேற பாத்திரத்துல பிசைஞ்சு வைன்னான், உங்க பேரன் இருக்கே, நாக்கை முழ நீளத்துக்கு வளத்து வச்சிருக்கா உங்க அருமை மாட்டுப்பொண்ணு, குழம்பு சாப்பிட்டதில் தயிர் சாதம் சாப்பிடாது. இன்னொரு பாத்திரத்துல தனியா பிசைஞ்சாதான் சாப்பிடறது!

மஹா: சரிடி, லைட்டா கையோட கை அலம்பிண்டு அதிலயே பிசையக்கூடாதா?

சுஹா: ஏஞ்சொல்லமாட்டேள்? அப்படியே பெரிய மாடுலர் கிச்சன் பாருங்கோ, ரயில்வே கக்கூஸாட்டம் இத்தனூண்டு எடம். ஒருத்தர் தான் அடுப்புக்கிட்ட நிக்கலாம்.. இந்த இடுக்குல பைப்பை தொறந்தா சிங்க்ல பட்டு அடுப்புல தெரிக்கறது.. போன தரம் பூரணி கருவடாம் பொறிக்கச்ச, இந்த லெட்சுமி பாத்திரம் தேய்க்க பைப்பைத் தொறந்தப்போ எல்லாம்

எண்ணெய்ல தெரிச்சு, படபடன்னு வெடிச்சு செவுரெல்லாம் தைலாபிஷேகம் ஆச்சே, மறந்துருத்தா.,,,, ஹூம் அதெல்லாம் எப்படி ஞாபகம் இருக்கும். கருவடாத்தை கண்ணுல பாத்தா மத்ததெல்லாம் மறந்துருமே…..

மஹா: சரிடி , அதை விடு, இங்க பாரு எத்தனை டம்ளர் டபரா. இருக்கற ஆறு பேருக்கு ரெண்டு டஜன் டம்ளரா?

சுஹா: இப்பவாவது கேக்க தோணித்தே! கார்த்தால டம்ளர்ல ஆத்தி கொடுத்தா,, கோமியம் மாதிரி இருக்கு, சூடா கொடுக்கலன்னு கத்துவேள். கொதிக்க கொதிக்க கொடுத்தா, நானென்ன நெருப்புக்கோழியா, அப்படியே வாய்ல சாச்சுக்கணுமான்னு அதுக்கொரு டபரா…

, சட்னியை தட்டுல கொட்டாதே , இட்லியோட டேஸ்டே போறதுன்னு உங்க செல்லப் பையன் டபராலதான் வாங்கிப்பான். ரெண்டாம் தரம் காப்பிக்கு காலம்பற பால்ல போடாதேன்னு சொல்லிட்டு இன்னொரு பாக்கெட்டைப் பிரிச்சு உங்களுக்குன்னு கொஞ்சமா காச்சிக்க தெரியறதோன்னோ, அதை டபரால தானே காச்சியாறது? அந்த டபராலயே காப்பியை ஆத்திக்க வேண்டியதுதானே, கேட்டா அதில் ஏடு படிஞ்சிருக்குன்னு இன்னொரு டபராவை எடுக்க வேண்டியது

மஹா: சரி சரி அதை விடு. இங்க பாரு,,, இதென்ன கரண்டிக் கடையா? இல்ல கடலா? பண்றது நாலு அயிட்டம். அதுக்கு நாப்பத்தெட்டு கரண்டியா?

சுஹா: ஓ அப்படி வர்றேளா? நாளைலேர்ந்து குழம்பு, ரசம் எல்லாத்துக்கும் ஒரே கரண்டியைப் போட்டுடறேன். கீரை, கறி, சாலட் எல்லாத்துக்கும் ஒரே ஸ்பூன் தான் . ஊசிப் போனா என்னைய ஒண்ணும் சொல்லப்படாது….

மஹா: அவா அவா சாப்பிடற தட்டை அவா அவா அலம்பிடறோம். அப்படியிருந்தும் இத்தனை மூடி என்னத்துக்கு?

சுஹா: பெரிய மூடியை தெரியாத்தனமா சின்ன பாத்திரத்துல இருந்த பாலை மூடி வச்சேன், அது தெரியாம நீர் மூடியப் பிடிச்சு தூக்கி ப்ரிட்ஜுக்கு பாலாபிஷேகம் பன்ணினேளே மறந்துடுத்தா, அன்னிக்கு வடைமாவை மூடுங்கோன்னு சொன்னேன், சின்ன தட்டை போட்டு மூடி அது மாவுக்குள்ள விழுந்து, ஓ இதுதான் தட்டு வடையா மன்னின்னு உங்க தங்கைஜோக்கடிச்சதுமில்லாம வாட்ஸப்புல போட்டு மானத்த வாங்கினாளே,,, ஞாபகமில்லையா?

அந்தந்த பாத்திரத்துக்கு அந்தந்த தட்டு, சின்னதுல மாத்தும்போது அதுக்கேத்த தட்டு……..

மஹா: தட்டுமுட்டுன்னு கேள்விப்பட்டிருக்கேன், ஒரு தட்டுக்கு இத்தனை முட்டு கொடுக்கறாளே! இன்னிக்கு ஒம்பது மணிக்கு அதைப் பத்தி எழுதிரணும். அது என்னடி இத்தனை மாவு பாத்திரம்? ஒரே தோசையைத் தானே தினம் போடறே?

சுஹா: அரைக்கும்போது பெரிய பாத்திரத்துல எடுத்தாதான் கலக்க முடியறது. அம்மாம் பெரிய பாத்திரத்தை அப்படியே ப்ரிட்ஜுக்குள்ள நுழைக்க முடியுமா? பாதி மாவை புளிக்காம இருக்க உள்ள வச்சுட்டு சாயந்திரத்துக்கு வெளில வைக்கவேண்டியிருக்கு. மிச்ச மாவை அப்படியே வச்சா காஞ்சு போச்சு ப்ரிட்ஜ் முழுக்க உதிர்ந்து உதிர்ந்து கோலம் போட்டுடறது. அதனால இட்லி வார்த்தது போக மிச்ச மாவை சின்ன பாத்திரத்துல மாத்தி வச்சிருக்கேன். சரி சரி இப்படியே பேசிப் பேசி பொழுதை ஓட்டாம சட்டுபுட்டுனு தேச்சு கவிருங்கோ, நாலே நாலு பாத்திரம் தேய்க்க நான் நாளெல்லாம் லெக்சர் கொடுக்க வேண்டியிருக்குடி யம்மா!

மஹா: சுஹா! எல்லாத்தையும் ஒண்ணுவிடாம தேச்சுக்கவுத்துட்டேன்… ரொம்ப டயர்டா இருக்கு. டீ போடறியா?

சுஹா: இந்தாங்கோ………. டீ , அடைக்கு நனைச்சேன்,, உங்களுக்கு குணுக்கு பிடிக்குமேன்னு தோணித்து. டீயோட சாப்பிடுவேளேன்னு கொஞ்சமா போட்டேன்,,,, ஒரேயொரு ஹெல்ப் பண்றேளா? இன்னிக்கு பிரதோஷம் , அப்படியே கோவிலுக்கு போய்ட்டு வந்துடறேன்,,

மத்தவாளுக்கெல்லாம் குணுக்கு போடல, அடைதான்,,, நீங்க சட்டுபுட்டுனு குணுக்கை சாப்பிட்டுட்டு அந்த இலுப்பச்சட்டியை மட்டும் அலம்பி வச்சுடறேளா?

மஹா: எனக்காக ஆசையா பண்றே! இதென்னடி பிரமாதம்! ஒரு இலுப்பச்சட்டிதானேன்னு உள்ள நுழைஞ்சார்,,,,

சுஹாஆஆஆஆ! இப்போதானே வண்டி பாத்திரம் தேய்ச்சேன், அதுக்குள்ள மறுபடி சிங்க்கை ரொம்பி வச்சிருக்கியே!

சுஹா: ஏன் அலர்றேள்! டீ போட்ட பாத்திரம், பால் காய்ச்சின பாத்திரம், வடிகட்டி, அப்புறம் ரெண்டு செட் டபரா டம்ளர், அடைக்கு அரைச்ச கிரண்டர் பாத்திரம், இந்த பாழாப்போன கிரைண்டர்ல பச்சைமிளகாய் இஞ்சில்லாம் அரைபடாது, அதனால அதை மட்டும் மிக்ஸில அரைச்சேன், அப்புறம் தேங்காய் துருவின சின்ன முறம், குணுக்கு போடறதுக்காக மாவை சின்ன பாத்திரத்துல எடுத்தேன், வெங்காயம் நறுக்கின வெஜிடபிள் கட்டர், வடிதட்டும் , பொத்தக்கரண்டியும் குணுக்கு போட்ட இலுப்பச்சட்டியும் தானே போட்டிருக்கேன்…

சட்டுபுட்டுனு அலம்பி கவுருங்கோ. வந்து அடையும் அவியலும் பண்ணித்தரேன்… நாலுபாத்திரம் தேய்க்க நசநசன்னு எக்ஸ்ப்ளனேஷன். நாக்கு மட்டும் முழ நீளம். ஹூம்  நகருங்கோ……….

டிவியில் அம்போ மஹாதேவான்னு பாட்டு கேக்கறது அவருக்கு மட்டும்தானா………………

No comments:

Post a Comment