Sunday, February 21, 2021

ராமர் கோவில்கள் -23

 ஶ்ரீராம காவியம்

~~~~

ராமர் கோவில்கள் -23

67)படுதேபள்ளி ராமதேவர் கோயில்...

★படுதேபள்ளி ராமதேவர் கோயில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், படுதேபள்ளி என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இக்கோயில் கடந்த  பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

★இக்கோயிலில் ராமதேவர், சீதை சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.மேலும்

இக்கோயிலில் ஒருகாலப் பூஜை நடக்கின்றது.

68) தேவராயபுரம் ராமர் கோயில்...

★இந்த ஶ்ரீராமர் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், தேவராயபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இந்தக் கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

★இக்கோயிலில் ராமர், பழனி ஆண்டவர் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத ஒரு அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.மேலும்

இக்கோயிலில் ஒருகாலப் பூஜை நடக்கின்றது.


69) மகேந்திரப்பள்ளி விஜயகோதண்டராமர் கோயில்...

★மகேந்திரப்பள்ளி விஜயகோதண்டராமர் கோயில் தமிழ்நாட்டில் நாகபட்டினம் மாவட்டம், மகேந்திரப்பள்ளி என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும்

★இக்கோயிலில் ஶ்ரீ விஜய கோதண்டராமர், சீதாதேவி சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற ஒரு வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.

70) மாலையகவுண்டன் பட்டி ஸ்ரீ ராமப்பெருமாள் கோயில்...

★மாலையகவுண்டன் பட்டி 

ஸ்ரீ ராமப்பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம், மாலையகவுண்டன் பட்டி என்னும் சிறிய ஊரில் அமைந்துள்ள  ஶ்ரீராமர் கோயிலாகும். இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

★இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற பிரிவின்கீழ் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிர்வாகியால் இக்கோயில் நிர்வகிக்கப்படுகிறது.

இக்கோயிலில் ஒருகாலப் பூஜை நடக்கின்றது.

குறிப்பு:- அன்பு நண்பர்களே!

நமது தமிழ்நாட்டில் மட்டும் நூற்றுக் கணக்கான ஶ்ரீராமர் கோவில்கள் உள்ளன. அவை அனைத்திற்கும் தலவரலாறு மற்றும் தலபெருமை போன்ற பல விபரங்களும் உள்ளன. இந்த விபரங்களுடன் நம் பாரதநாட்டில் உள்ள ஆயிரக் கணக்கான ஶ்ரீராமர் கோவில்களைப் பற்றி எழுதுவதென்றால் அதற்கு பலமாதங்களாகும்.ஆகவே காலத்தைக் கருதி நமது தமிழ்நாட்டில் உள்ள அநேகர் அறிந்திராத 108 ஶ்ரீராமர் கோவில்களைப் பற்றி மட்டும் சிறு குறிப்புகளாக இங்கு தந்துள்ளேன். அவற்றில் சில ஆலயங்களைப் பற்றி சற்று விரிவாக எழுதியிருக்கப் பட்டிருக்கும். நேரம் நன்கு அமைந்தால் இந்த "ஶ்ரீராம காவியம்" முடிந்த பின்னர் அனைத்து ஶ்ரீராமர் கோவில்கள் பற்றியும் எழுத அந்த ஶ்ரீராமர் அருள் புரிய வேண்டுகிறேன்.

நன்றியுடன்

நாக சுபராஜராவ்

9944110869.

No comments:

Post a Comment