வடை மோர்க் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும் செய்து பாருங்கள் நண்பர்களே 🙏🏼
தேவையான பொருட்கள்:
து.பருப்பு --2Tbsp
பச்சைமிளகாய்--தேவைக்கேற்ப
இஞ்சி--சின்ன துண்டு
கொத்தமல்லி--1Tbsp
சீரகம்--1/2tsp
உப்பு
மஞ்சள் தூள்--1/4 tsp
தேங்காய் துருவல்--4Tbsp
கடுகு---1/2tsp
காய்ந்த மிளகாய்--2
எண்ணெய்
உருட்டு உளுந்து--50கிராம்
செய்முறை:
உளுந்தை 1/2மணி நேரம் ஊறவைத்து இத்துடன் 1பச்சைமிளகாய்,சிறிது உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
தயிரை கடைந்து தேவையான அளவு மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.
து.பருப்பு முதல் தேங்காய் துருவல் வரை உள்ள மேற்கண்ட பொருட்களை அரைத்து தயிருடன் சேர்த்து கலக்கி அடுப்பில் வைத்து லேசாக பொங்கி வரும்போது இறக்கவும்.
கடுகு காய்ந்த மிளகாய் தாளித்து
தயிர் கலவையில் சேர்த்து அத்துடன் கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்க்கவும்.மோர் குழம்பு தயார்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த உளுந்தை வடையாக தட்டி பொறித்தெடுக்கவும்.
வடைகளை சூடான மோர் குழம்பில் சேர்க்கவும்.
சுவையான வடை மோர்க் குழம்பு தயார் ருசித்து சாப்பிடுங்கள் 🙏🏼
No comments:
Post a Comment