#தையல்இலைநினைவுகள் !..
=============================
“ கண்ணா..ஆத்துக்கு கெஸ்ட் வந்திருக்கா…சமையல் ஆயிடுத்து..டக்குனு மளிக கடைக்கு போய் தையல் எல வாங்கிட்டு வாப்பா…!” – னு சொல்லிட்டு என் கைல பத்து பைசாவ குடுப்பா , எங்க அம்மா !.
நானும் பக்கத்துல இருக்கற மளிக கடைக்கு போய் அந்த பத்து பைசாவ தந்துட்டு “ தையல் எல வேணும்…” ம்பேன்..கடைக்காரரும் பைசாவ வாங்கிட்டு அஞ்சு எலைங்கள குடுப்பார் !.
எத்தன எல ?
பத்து பைசாவுக்கு அஞ்சு எலைங்க !.
ஆச்சர்யமா இருக்குல்ல ?.
அந்த எலைங்களும் பார்க்கறத்துக்கு ரொம்ப அழகா இருக்கும் !.
குங்கிய எலை , மந்தார எலை – இதுல அந்தந்த சீசன்ல எது கெடைக்கறதோ அத வெச்சு – 6 – லேர்ந்து 8 எலைங்கள வட்ட வடிவ ஷேப்புல வெச்சு ஈர்க்குச்சிங்கள சின்ன சின்னதா நறுக்கி வெச்சிருப்பாங்க..அந்த குச்சிங்களால எலைங்கள கோர்த்து ஒரு வட்ட வடிவ ஷேப்பு கொண்டு வருவாங்க !.
சிவகாசி பட்டாசு தொழில் மாதிரி இந்த தையல் இலைங்க தயாரிப்பும் ஒரு குடிசைத் தொழில் தான் !.
அப்பல்லாம் அநேகமா எல்லா வீட்டுங்கள்லலாம் இந்த எலைங்கள வாங்கி யூஸ் பண்றது வழக்கமா இருந்துது !.
அந்த எலைல சூடா வடிச்ச சாதத்த அம்மா பரிமாற , அது மேல கொழம்போ , இல்லேன்னா ரசத்தயோ விட்டு பிசைஞ்சு சாப்பிடறச்ச அந்த எலையோட வாசமும் கலந்து ஒரு டேஸ்ட் கிடைக்கும் பாருங்க….
ஆஹா ! வெள்ளித் தட்ல சாப்பிடற சுகத்த விட இது ஏகாந்தமா , படு அமர்க்களமா திவ்யமா இருக்கும் !.
இப்பல்லாம் அந்த எலைங்கள் கெடக்கறதா தெரியல !.
உங்கள்ல இந்த தையல் எலைங்கள பார்த்த , சாப்ட்ட அனுபவசிச்சவங்களும் இருப்பீங்கதான ?.
அப்டி இருந்தா – “ அய்யோடா..அத சொன்னா என் வயசும் தெரிஞ்சுடுமே..” ங்கற சின்ன தயக்கத்தலாம் தூஊஊஊர கடாசிட்டு இங்க ஷேர் பண்ணுங்க பார்க்கலாம் !..
எலெக்ஷன் ரிசல்ட்ட பார்த்துட்டு கடுப்பா இருக்கற சூழ்நிலைலேர்ந்து கொஞ்ச நேரமாச்சும் இப்டி பழய நினைவுகள சொல்லிட்டு ஜாலியா இருக்கலாம்ல ?.
#Post_courtesy -- மடிப்பாக்கம் வெங்கட் sir.
No comments:
Post a Comment