Monday, February 15, 2021

திருச்செந்தூர் பன்னீர் இலை விபூதி

 அனுபவம்தத்துவம் 

🌸🌸🌸🌸🌸


திருச்செந்தூர் பன்னீர் இலை விபூதி நோய் தீர்க்கும் மாமருந்தாகும் பற்றி தகவல் 

நரம்பு சம்பந்தமான நோய்கள் நீங்க

 திருச்செந்தூர்.

   இங்குள்ள தலத்தின் தனிச்சிறப்பு பன்னீர் இலை விபூதி ஆகும்.

திருச்செந்தூர் கோவிலில் பன்னீர் இலை விபூதி மிக விசேஷமானது. மகத்துவம் வாய்ந்தது என்கிறார்கள்... 

மாமருந்தாகும் செந்தூர் பன்னீர் இலை விபூதி! 

ஆதி சங்கரரும் செந்திலாண்டவனின் நீறும் !

ஆதி சங்கரருடன் ஏற்பட்ட வாதங்களில் தோற்ற அபிநவ குப்தர் என்பவர் செய்வினை செய்து சங்கரருக்கு உடலை வருத்தும் நோய் உண்டாகச் செய்து விட்டார். 

அக்காலத்தில் அவர் வட கர்நாடகாவிலுள்ள கோகர்ணத் திருத்தலத்தில் தங்கி வழிபாடு செய்து வந்தார். ஒரு நாள் இரவு, இறைவன் அவர் கனவில் தோன்றி, "என் குமாரன் ஷண்முகன் குடியிருக்கும் புண்ணியத் தலமான செயந்திபுரம் எனும் திருச்செந்தூர் சென்று அவனைத் தரிசித்தால் உன் நோய் முற்றிலுமாக ...

நீங்கப் பெறுவாய்" என்று கூறினார்

உறங்கி எழுந்து சங்கரரின் அருகில் விபூதி இருந்தது

கோகர்ணேஸ்வரர் ஆணைப்படி செந்தூர் வந்தடைந்தார், ஆதி சங்கரர்

கடலில் நீராடி பின் இறைவன் சன்னதியில் மனமுருகி நின்றபோது, ஆதி சேஷனாகிய பாம்பு ஊர்ந்து ஊர்ந்து இறைவன் சன்னதியை அடைந்ததைக் கண்டார்

அதே நேரம் அவருக்கும் இறை தரிசனம் கிட்டியது

அவன் அருளாலே மடை திறந்த வெள்ளம் போல அவர் திருவாயிலிருந்தது சுலோகங்கள் வெளிவந்தன

வடமொழியில் பாம்பைப் புஜங்கம் என்பர்

வடமொழி இலக்கணப்படி, புஜங்க விருத்தமாக அமைந்தன பாடல்கள்

பாம்பு போன்று ஊர்ந்து செல்வதைப் போன்ற அமைப்புடன் சொற்றொடர்களை அமைத்துப் பாடும் வடமொழி யாப்பு இப்புஜங்கம்

பாடி முடித்து இலை விபூதியைப் பெற்று அணிந்து கொண்ட சங்கரருக்கு வெகு விரைவில் நோய் குணமாயிற்று

25வது பாடலில் இலை விபூதியின் மகிமை பற்றி பெருமை பட பாடினார்

சுப்பிரமண்யா! நின் இலை விபூதிகளை கண்டால் கால் கை வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலிய நோய்கள் நீங்கும்

பூதம், பிசாசு, தீவினை யாவும் விட்டு விடும் என்று சுப்பிரம்மண்ய புஜங்கத்தில் ஆதிசங்கரர் செல்லி இருக்கிறார்

பன்னீர் இலை என்பதற்கு அர்த்தம்

இலையில் மொத்தம் 12 நரம்புகள் இருக்கும். முருக பெருமான் தனது 12 கரங்களால் இந்த பிரசாதத்தை வழங்கியதால் இந்த பன்னீர் இலையில் முருக பெருமானின் பன்னிரு கைகள் போன்று இருக்கும். 

பன்னிரு இலை என்ற பெயர் காலப்போக்கில் மருவி பன்னீர் இலை என்று கூறப்படுகிறது.

தெய்வ அவதாரமாகக் கருதப்படும் ஆதி சங்கரர் நினைத்திருந்தால் தானே நோயை விரட்டி இருக்க முடியும்

ஆனால் மானுட அவதாரத்தில், அத்துயரை, தானே அனுபவித்து உலகோருக்குப் பத்ர பூதியின் பெருமையை வெளிப்படுத்த அவர் நிகழ்த்திய திருவிளையாடலே இது என்றும் கூறலாம்!

மகாதேவரின் திருகுமாரனே!
அழகிய மயிலேறும் செந்தில் வேலவனே!
மகாவாக்கியங்களின் சாரமாக விளங்குபவனே!
பேரழகுப் பொலிவுடன் கூடிய திவ்யத் திருமேனியை உடையவனே!
மாமுனிவர்களின் இதயத்தில் உறைந்தருள்பவனே!
நால்வேதத்தின் கருப்பொருளாய் விளங்குபவனே!
தாமே அண்டகோடிகள் அனைத்திற்கும் இறைவனாவீர்!

மூன்றாம் பாடல்:

மயூராதிரூடம் மஹாவாக்ய கூடம்
மனோஹாரிதேஹம் மஹத்சித்த கேஹம்
மஹீதேவதேவம் மஹாவேத பாவம்
மஹாதேவ பாலம் பஜே லோகபா லம்

 ஆடு, மாடுகள் நோய் கண்டால் நோய் நீங்க வழிபட்டுப் பன்னீர் இலை விபூதியினை மருந்தாகக் கொடுத்து நோய் நீங்கியதும் திருச்செந்தூர் முருகனுக்குக் காணிக்கையாக ஆடு மாடுகளைச் செலுத்திகிறார்கள்.

 பன்னீர் இலை விபூதியைப் பக்தர்கள் இல்லங்களுக்கு எடுத்துச் சென்று பூஜை அறைகளில் பத்திரப்படுத்தி வியாதிகள் வந்தால் செந்தில் முருகனை வேண்டி அணிந்து கொள்கிறார்கள்.

. திரு நீற்றைப்ப பன்னீர் இலையில் பத்திரமாக வைத்துக் கொள்வது செல்வத்தைச் சேமிப்பது போலாகும் என்று பக்தர்கள பன்னீர் இலை விபூதியைப் பக்தியுடன் பத்திரமாக வைத்துக் கொள்கிறார்கள்.

திருவாடுதுறை திருப்பனந்தாள் குரு மகா சந்நிதானங்கள் நடராஜப் பெருமானை வணங்குவோர்க்குப் பன்னீர் இலையில் விபூதிப் பிரசாதம் வழங்கி வருகிறார்கள்.

. இறைவனுடைய பூஜைக்குரியது துளசி வில்வ இலை, வன்னி இலை. அதே போல் இறைவனுடைய பூஜைக்குரியதாகப் பன்னீர் இலை உள்ளது.

 பன்னீர் இலையில் உள்ள 12 நரம்புகள் முருகப்பெருமானின் பன்னிரு திருக்கரங்களுச் சமம் என்று கூறுவர்.

முருக பெருமானை பூஜித்த தேவர்கள் அனைவரும் இந்த பன்னீர் மரங்களாக இருப்பதாகவும், அதில் இருந்து இருந்த பெறப்படும் பன்னீர் இலைகள் பிரசாதமாக வழங்கப்படுவதால் அதற்கு தனி மகத்துவம் இருப்பதாக கருதப்படுகிறது.

இந்த பன்னீர் இலை விபூதி பிரசாதம் தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின் போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக திருச்செந்தூர் கோவிலில் இந்த இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.

இந்த இலையை நேராக வைத்து பார்த்தால் முருக பெருமானின் வேல் போன்று காட்சி அளிக்கும்.

பன்னீர் இலையில் உள்ள பூவில் உள்ள சாந்த குண சக்தி நிறைவாக உள்ளது. அது நமது உடலுக்குச் சில நன்மைகளைத் தருகிறது என்று சித்த வைத்தியம் கூறுகிறது.

பன்னீர் இலை விபூதியினை மருந்தாகக் கொடுத்து நோய் நீங்கியதும் திருச்செந்தூர் முருகனுக்குக் காணிக்கையாக ஆடு மாடுகளைச் செலுத்துகிறார்கள். பன்னீர் இலையும் நற்சந்தனமும் பக்தர்களுக்கு வழங்கபபடுகிறது.

ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம்
சரவணபவ குஹா சரணம் சரணம்
குருகுகா சரணம் குருபரா சரணம்
சரண மடைந்திட்டேன் கந்தா சரணம்!!
நோய் தீர்க்கும் திருச்செந்தூர் 
இலை விபூதி :

திருச்செந்தூர் கோவிலில் பன்னீர் இலை விபூதி பிரசாதம் மிக விசேஷமானது. பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்பில் பூசிக்கொள்ள சந்தனத்துடன் பிரசாதமாக விபூதியை தருவார்கள். பன்னீர் இலையில் வைத்து தொடாமல் போடுவார்கள். 

முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது. பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள். இது தீராத நோய்களை தீர்க்கும் அருமருந்து

முருகனுக்கு ஒரு பக்கத்துக்கு 6 கரங்கள்

இருப்பக்கத்துக்கும் மொத்தம் 12 கரங்கள்

பன்னீர் மரத்தின் இலையில் 12 நரம்புகள் உள்ளன. பன்னீரு இலை என்பது மருவி பன்னீர் இலையானது இலையை நேராக பார்த்தால் முருகன் வேல் போல் இருக்கும்

இந்த இலைக்கு வேத மந்திர சக்கி உள்ளது

350 ஆண்டுகளுக்கு முன்பே திருவாடுதுறை ஆதினம் வந்தார். திருச்செந்தூர் மேல கோபுரத்தை நிர்மானித்தார். பொருள் பற்றாக்குறையால் கூலி தர இயலவில்லை

அவர்களுக்கு இலை விபூதியை கூலியாக கொடுத்தார். கோயியை தாண்டி சென்று பிரித்து பார்க்கும்படி கூறினார்

அப்படி திறந்தபோது வேலைக்குரிய கூலி இருந்தது. இந்த விபூதி பூசினால் கைகால் வலிப்பு நீங்கும். பூதம், பிசாசு தீவினைகள் விலகும். இதுபோல் பல சிறப்புகள் பெற்றது பன்னீர் இலை விபூதி.

விசுவாமித்திர மகரிஷி இங்கு வந்து தரிசித்தார். இலை விபூதி பிரசாதம் பெற்றார். அதைத் தரித்துக் கொண்டார். அவருடைய குன்ம நோய் நீங்கிற்று என்பது புராணம்.

வேதங்களே பன்னீர் இலைகள் என்பது ஐதீகம். முருகன்பெருமானே உன்னுடைய இலை விபூதிப் பிரசாத மகிமையை எப்படி எடுத்துரைப்பது? வலிப்பு, குஷ்டம், ஷயம், நீரழிவு, குன்மம் முதலிய கொடுமையான வியாதிகளும், பூத, பிரேத, பசாசங்கள் பற்றியதால் உண்டாகும் துன்பங்களும் உன்னுடைய இலை விபூதி பிரசாதத்தை பூசிக்கொண்ட மாத்திரத்தில் மறைந்து விடுமே என்கிறது ஆதிசங்கரர் அருளிய சுப்பிரமணிய புஜங்கத்தில் உள்ள ஒரு சுலோகம்

திருச்செந்தூர் முருகன் மகிமை!..

திருச்செந்தூரின் மகிமையை முனிவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

வசிஷ்டர்: இந்த பூமியில் போக 

மோட்சங்களைத் தரும் பல தலங்கள் இருந்தாலும் அவை யாவும் சந்தேகமின்றி திருச்செந்தூர் தலத்திற்கு அடுத்தவையே.

வாமதேவர்: பிரம்மஹத்தி செய்தவனும், வேதங்களை பழித்தவனும்கூட 

திருச்செந்தூரில் ஒருநாள் வசித்தால் பரிசுத்தவானாகிறான்.

ஜாபாலி: இத்தல தீர்த்த மகிமைக்கு ஈடானது எதுவுமில்லை.

விசுவாமித்திரர்: நூறு அஸ்வமேத யாகங்களின் பலனை திருச்செந்தூர் வாசத்தால் கோடி பங்கு அதிகமாகப் பெறலாம்.

காச்யபர்: ஒருவன் பிரயாகையில் வாழ்நாள் முழுவதும் நீராடும் பலனை கார்த்திகை நட்சத்திரத்தன்று ஒருமுறை இந்த தலத்தில் நீராடினால் அடைந்துவிடுகிறான்.

மார்க்கண்டேயர்: ரிஷிகள் காசியில் ஒரு வருடம் தவம்செய்து பெறும் புண்ணியத்தை திருச்செந்தூரில் ஒரே நாளில் அடைந்து விடலாம்.

மௌத்கல்யர்: பல நாட்கள் செய்துவரும் தவத்தை திருச்செந்தூர் தரிசனம் ஒன்றினாலேயே அடைந்துவிடலாம்.

குரு மகாதசை அல்லது குரு புக்தி குரூரமாக இருந்தால் அவர்கள் திருச்செந்தூர் வந்து ஆறுமுகனை தரிசித்து, ஸ்ரீஆதிசங்கரரின் சுப்ரமண்ய புஜங்கத்தையோ, குமரகுருபரரின் கந்தர் கலிவெண்பாவையோ ஒருமுறை பாராயணம் செய்தால் அனைத்து துன்பங்களும் நீங்கிவிடும். பூத, பிரேத, பைசாச உபாதைகளும் நீங்கி நலம்பெறலாம். 

இவ்வாறு முனிவர்களாலும், ஆச்சார்யர்களாலும் போற்றப்பட்ட திருச்செந்தூர் தலத்தை வாழ்வில் ஒருமுறையாவது தரிசித்தால் முருகன் அருளையும், குரு பகவானின் அருளையும் பெற்று சகல துக்கங்களிலிருந்தும் விடுபடலாம்.

ஓம் முருகா போற்றி...


🙏திருச்செந்தூர்🙏

🌟நம்முடைய தீவினைகளைத் 

தீர்க்கும் திருத்தலம்🌟


வந்த வினையும் வருகின்ற வல்வினையும்
கந்தனென்று சொல்லக் கலங்கிடுமே!
செந்தில்நகர் சேவகா என்று திருநீறு
அணிவார்க்கு மேவ வராதே வினை.

நோய் தீர்க்கும் திருச்செந்தூர் 

இலை விபூதி :

திருச்செந்தூர் கோவிலில் பன்னீர் இலை விபூதி பிரசாதம் மிக விசேஷமானது. பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்பில் பூசிக்கொள்ள சந்தனத்துடன் பிரசாதமாக விபூதியை தருவார்கள். பன்னீர் இலையில் வைத்து தொடாமல் போடுவார்கள். 

முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது. பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள். இது தீராத நோய்களை தீர்க்கும் அருமருந்து

முருகனுக்கு ஒரு பக்கத்துக்கு 6 கரங்கள்

இருப்பக்கத்துக்கும் மொத்தம் 12 கரங்கள்

பன்னீர் மரத்தின் இலையில் 12 நரம்புகள் உள்ளன. பன்னீரு இலை என்பது மருவி பன்னீர் இலையானது இலையை நேராக பார்த்தால் முருகன் வேல் போல் இருக்கும்

இந்த இலைக்கு வேத மந்திர சக்கி உள்ளது

350 ஆண்டுகளுக்கு முன்பே திருவாடுதுறை ஆதினம் வந்தார். திருச்செந்தூர் மேல கோபுரத்தை நிர்மானித்தார். பொருள் பற்றாக்குறையால் கூலி தர இயலவில்லை

அவர்களுக்கு இலை விபூதியை கூலியாக கொடுத்தார். கோயியை தாண்டி சென்று பிரித்து பார்க்கும்படி கூறினார்

அப்படி திறந்தபோது வேலைக்குரிய கூலி இருந்தது. இந்த விபூதி பூசினால் கைகால் வலிப்பு நீங்கும். பூதம், பிசாசு தீவினைகள் விலகும். இதுபோல் பல சிறப்புகள் பெற்றது பன்னீர் இலை விபூதி.

விசுவாமித்திர மகரிஷி இங்கு வந்து தரிசித்தார். இலை விபூதி பிரசாதம் பெற்றார். அதைத் தரித்துக் கொண்டார். அவருடைய குன்ம நோய் நீங்கிற்று என்பது புராணம்.

வேதங்களே பன்னீர் இலைகள் என்பது ஐதீகம். முருகன்பெருமானே உன்னுடைய இலை விபூதிப் பிரசாத மகிமையை எப்படி எடுத்துரைப்பது? வலிப்பு, குஷ்டம், ஷயம், நீரழிவு, குன்மம் முதலிய கொடுமையான வியாதிகளும், பூத, பிரேத, பசாசங்கள் பற்றியதால் உண்டாகும் துன்பங்களும் உன்னுடைய இலை விபூதி பிரசாதத்தை பூசிக்கொண்ட மாத்திரத்தில் மறைந்து விடுமே என்கிறது ஆதிசங்கரர் அருளிய சுப்பிரமணிய புஜங்கத்தில் உள்ள ஒரு சுலோகம்

#முருகாசரணம் 🐓🦚

 🙏 இதன் தெடர்ச்சி நாளை அனுபவிப்போம்



No comments:

Post a Comment