மாடியில் கூடுதலாய் ஒரு படி வைக்க கொத்தனாரை அழைத்தேன்.
இதே கிரானைட் வேணும்....சிமெண்ட்...ஜல்லி...
கிரானைட்டை அறுக்க மெஷின் ...
ஆள்.. இப்படி அடுக்கி....
ஒரு கொத்து...
ரெண்டு சித்து...
நாலுநாள் கழித்து வாரேன் என்று போனார்.
போனவர் போனதுதான்....
பாடாய் படுத்தி அழைத்தேன்.... சிமெண்டும் ஜல்லியும் வாங்கி வைத்துவிட்டு...மறுபடி கிரானைட் அறுக்க ஆள் அழைக்க போனவர் போனவர்தான்.........
ஆறுமாதம் ஆகிவிட்டது...ஆளைக்காணும்.
அருகே வீடுகட்டும் நண்பரிடம் உங்கள் வீடு கிரானைட் போடும் ஆளை கொஞ்சம் வரச்சொல்லுங்களேன் என்றேன்.
அவரும் நாளை என்றார்.
ஆனால் காலை எழுந்ததும் கண்விழித்ததே அவர் முகத்தில்.
#கங்காராம் காவிப்பல் தெரிய சிரித்தார்.
க்கர்...மே...உப்பர்...கிரானைட் ஹே..நீச்சா...கட் தேகோ...ஈ...ஓ...என டிவி சீரியலில் பார்த்த பாரத்மாதாகீ ஜே எல்லாத்தையும் சொன்னேன்.
"பாரிவளவன் அனுப்பினார்.கிரானைட் கட் செய்யணுமா?" என்றார்.
அடங்கொய்யால்களா!
அட்சரம்பிசகாத தமிழ் பேசுகின்றாயே!
நம்பள் நிம்பள்கூட.... சினிமாவில்தானா?
நேக்கா எங்கள் நாடியைப்பிடிக்கக் கற்றுக்கொண்டீர்!
மேலே சென்று படியை அளந்து...கிரானைட் கட்செய்து...
அதை கொண்டுவந்து...அவரே...படி அமைத்துவிட்டார்.
ஜல்லி...சிமெண்டு...ஜாவோ. ஆவோ ..எல்லாம்!!??
இதற்குமேல் சிமெண்ட் படி அமைத்து கிரானைட் ஒட்டினால் கேவலமாக இருக்கும்....
சாரல் தண்ணீர் இதைத்தாண்டி வந்துவிடாது.(நம்ப ஊரு மழை லட்சணம் தெரிஞ்சு போச்சு போல!)
இப்ப சீரியஸ் ஆவோம்.
எனது வருத்தம். ... வடநாட்டான். ..ஹிந்திக்காரன் ....என்று நானே கடைகளை கடந்துபோய் நம் ஆட்களிடம் வாங்குவேன் பொருட்களை.
அவன் ஒருவீடு வேலைக்குப் பிடித்தால்,
அங்கேயே டேரா....காலை....இரவு மட்டும் சாப்பாடு.
குடும்பம் முழுசும் கூடவே.
இதுவரை நம் ஆட்கள் இந்த கல் ஒட்டும் வேலையை கற்றுக்கொள்ளவே இல்லை.
அவனுக்குத்தெரிகிறது என் ஊரில் இதற்கான மெஷின் வாடகைக்கு எங்கு கிடைக்குமென!
ஒரு மணி நேர வாடகை...பசைக்குக்கூட காசு கேட்கவில்லை.
அவனுக்கான கூலி என தொள்ளாயிரம் ரூபாயும் ஒருமணிநேரமும்.
எப்பொழுதும் செல்லும் நேரத்திற்கு அவனது அன்றாட வேலையையும் தொடங்கியிருப்பான்.
நம்ப ஆளு....
சிமெண்ட் ஜல்லியை சோப்டி அடிக்கலாமா?
சித்தாளை கரக்ட் பண்ணலாமா?
டாண்ணு மூனுமணிக்கு வேலை முடிஞ்சதுன்னு ..... போலாமா ? .......
ரெடியாகலாமான்னு யோசிக்கயிலேயே.....
உனக்கான நாளைய பிழைப்பு உத்திரவாதமின்றி பறிபோய்க்கொண்டு.
வேலை விரைவாய் முடிந்ததே என சந்தோஷிக்கவா?
என் இனம் என் மக்கள் எதிர்காலம் என யோசிக்கவா?
இத்துறை என்று இல்லை.
பஞ்சுமிட்டாய்....பாப்கார்ன்....
குல்பி....ஜமுக்காளம்....டீக்கடை.... ஓட்டல்.... பார்பர் ஷாப்... கிராமத்தில் கதிர் அடிக்கும் மெஷினில் நெல் பிடிப்பது.. கரும்பு வயல் கவாத்து செய்வது ...... தென்னந்தோப்பில் தேங்காய் உரிப்பது....மண்டியில் மூடை லோடு அடிப்பது என எங்கு நோக்கினும் இவர்களாகவே....
என்ன செய்யப்போகிறீ்ர் என் சமுதாய நண்பர்களே?
(ஆம் .அப்படித்தான் உங்களை பாடப் புத்தகம் அறிமுகப்படுத்துகின்றது)
ஒன்று சொல்கிறேன்.
எதைக்குறித்தும் அக்கறையற்ற நீ திருமணம் செய்யாதே....
உண்டு குடித்து....உடன்பட்டவளைச் சுகித்து.....
செத்துப்போ...சுயநல சமுதாயமே....
பாட்டன் பூட்டன் கட்டிவைத்த கோவில் சுவர்களில் கப்பிக்கல் கொண்டு காதலி பெயரை கிறுக்கி விட்டு் போ...
வரலாற்றுச் சின்னங்களில்....
வரிசையாய் நாலு கெட்டவார்த்தையோ எழுது....
அதுதான் உனக்கினி....
சரியான கோபம் நிஜமான நிகழ்வுகளின் மீது....
இதைச் சொன்னால் நம் அரசியல் வா(வியா)திகள் தமிழின துரோகி என்பான்... வடவர் கைக்கூலி என்பான்...
இப்படி அரசியல் செய்து உணர்ச்சிகளைத் தூண்டி ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்து தமிழன்களையே ஏமாற்றி பல ஆயிரம் கோடிகள் குவித்து அடுத்த தேர்தலில் யாரை கரெக்ட் பண்ணி யாரோடு கூட்டு போட்டு எப்படி மீண்டும் ......
இதுவே தொழிலாக...
தமிழனை உழைக்கச் சொல்ல....
சரியாக பிழைக்கச் சொல்ல...
எவரும் முயல்வதில்லை..
அதனால்தான் இதுவெல்லாம்......smrgunasekar
No comments:
Post a Comment