Friday, August 14, 2020

மஞ்சள் காமாலைக்கு - இயற்கை வைத்தியம்

✍🏻 இயற்கை வாழ்வியல் முறை

🐡🐡🐡🐡🐡🐡
மஞ்சள் காமாலைக்கு  - இயற்கை வைத்தியம்
🐡🐡🐡🐡🐡🐡
மஞ்சள் காமாலை நோய்த் தொற்றானது பித்த அதிகரிப்பால் வருகிறது.  பித்தமானது பல காரணங்களால்  மிகுதியாகி  ரத்தத்தில் கலந்து விடுவதால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது.  உடல் உஷ்ணத்தாலும், இரவில் கண்விழித்து வேலை பார்ப்பதாலும் தூக்கமின்மையாலும் வயிற்றில் புளிப்புத்தன்மை ஏற்பட்டு சளி பிடித்து, ரத்தம் சூடேறி, காமாலைக் கிருமிகள் உண்டாகி, மஞ்சள் காமாலை நோயைத் தோற்றுவிக்கிறது.
🐡🐡🐡🐡🐡🐡
பித்தமானது நஞ்சுபோல் உடலில் எங்கும் வியாபிக்கக்கூடிய தன்மையுள்ளது. அதோடு மட்டுமல்லாமல், நவீன உலகத்தில் உணவுப் பழக்கங்களாலும், மிதமிஞ்சிய உணவுகளாலும், பாமாயில் கலக்கப்பட்ட எண்ணெய்களாலும் ஒருதடவை சமைத்த உணவை குளிர்சாதன பெட்டியில் வைத்து தேவைப்படும்போது மாறி மாறி சூடுபண்ணி பல நாட்கள் சாப்பிடுவதாலும், உண்ட உணவானது உடலில் புளிப்புத் தன்மையை உண்டாக்கி செரியாமை ஏற்பட்டு குடலின் பித்தமானது சளியோடு கலந்து ரத்தத்தில் சேர்ந்துவிடுகிறது.
🐡🐡🐡🐡🐡🐡
இப்படிப்பட்ட உணவுப் பழக்கங்களால், மஞ்சள்காமாலை நோய்த்தொற்று ஏற்படுகிறது. மேலும், தலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை மறந்ததாலும் நரம்புகள் சூடாகி பித்தம் அதிகரித்து மஞ்சள் காமாலை நோய் உண்டாகிறது.
🐡🐡🐡🐡🐡🐡
பித்தமானது அலர்ஜியாகும்போது காமாலை நோய்க் கிருமி தோன்றி, முதலில் கல்லீரலைப் பாதித்து, கண்களில் மஞ்சள் நிறம் தோற்று விக்கிறது.  சிறுநீர் மஞ்சளாக வெளியேறுகிறது.  
🐡🐡🐡🐡🐡🐡
பொதுவாக மஞ்சள்காமாலைக்கு பித்தம் அதிகரிப்புதான் முக்கிய காரணமாகிறது இனி இதற்குண்டான இயற்கை வைத்திய முறையை பார்ப்போம்
🐡🐡🐡🐡🐡🐡
1.   அவுரி இலைகளையரைத்து, கொட்டைபாக்களவு, வெள்ளாடடுப் பாலில், கொள்ள, மஞ்சள் காமாலை  தீரும்.
🐡🐡🐡🐡🐡🐡
2.   ஆமணக்கு,கீழாநெல்லி இலைகள் சம அளவரைத்து, எலுமிசசையளவு, காலையில் கொள்ள மஞ்சள் காமாலை தீரும்.
🐡🐡🐡🐡🐡🐡
3.   கரிசாலையிலைகளையரைத்து.கொட்டைபாக்களவு.தினம் 2வேளை, 200மிலி. மோரில் கொள்ள  மஞ்சள் காமாலை தீரும்.
🐡🐡🐡🐡🐡🐡
4.   கீழாநெல்லி இலைகளையரைதது,எலுமிச்சையளவு,250மிலி மோரில் சாப்பிட, மஞ்சள் காமாலை, நீரிழிவு குணமாகும்.
🐡🐡🐡🐡🐡🐡
5.   வில்வ இலைச்சூரணம் 1தேக்கரண்டி,மஞ்சள்கரிசாலைச்சாறு 1தேக்கரண்டி கலந்து காலையில் சாப்பிட மஞ்சள் காமாலை தீரும்.
 🐡🐡🐡🐡🐡🐡
6.   அன்னபேதிச்செந்தூரம்200மிகி,ஏலாதிசூரணம் 1கிராம் 5,10மிலி தேனில் தினம் 2 வேளை கொள்ள  மஞ்சள் காமாலை  தீரும்.
🐡🐡🐡🐡🐡🐡
7.   நிலவேம்பு இலைகளை குடிநீர் செய்து பருகிவர மஞ்சள் காமாலை கட்டுப்படும்.
🐡🐡🐡🐡🐡🐡
8.   சிற்றாமணக்கு கொழுந்திலைகளையரைத்து,மோரில் கொள்ள மஞ்சள் காமாலை குணமாகும்.
🐡🐡🐡🐡🐡🐡
9.   கரும்புச்சாறு 200மிலி காலையில் பருகிவர மஞ்சள்காமாலை கட்டுப்படும்.
🐡🐡🐡🐡🐡🐡
10.  பொன்னாவாரை இலையுடன் சமன் கீழாநெல்லியரைத்து, நெல்லிக் காயளவு, காலைமாலை மோரில் கொடுக்க மஞ்சள் காமாலை  தீரும்.
🐡🐡🐡🐡🐡🐡
11.  பச்சைதிராட்சை பழச்சாற்றை வெறும் வயிற்றில் அடிக்கடி சாப்பிட்டுவர காமாலை குணமாகும்.                                       
 🐡🐡🐡🐡🐡🐡                                       
12.    வேப்பங்கொழுந்தை அரைத்து நெல்லிக்காயளவு,எருமைதயிரில் காலை 3 நாள் சாப்பிட்டு உப்பில்லா பத்தியமிருக்க காமாலை குனமாகும்.
 🐡🐡🐡🐡🐡🐡
13.    முள்ளங்கி இலைச்சாற்றை சர்க்கரை கலந்து காலைமாலை சாப்பிட்டு வர காமாலை குணமாகும்.
🐡🐡🐡🐡🐡🐡
"14.    கீழாநெல்லி இலை, வேர் இரண்டையும் அரைத்து நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து பருக காமாலை குணமாகும்
🐡🐡🐡🐡🐡🐡
15.    அரை தேகரண்டி கடுக்காய்ப்பொடியை நீரில் கலந்து குடிக்க காமாலை குணமாகும்
🐡🐡🐡🐡🐡🐡
16.    அருநெல்லி இலையை அரைத்து சிறு நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து அருந்த காமாலை குணமாகும்
🐡🐡🐡🐡🐡🐡
17.    கொன்றைப் பூவையும், கொழுந்தையும் அரைத்து சுண்டைக்காய் அளவு மோரில் கலந்து பருக காமாலை குணமாகும்
🐡🐡🐡🐡🐡🐡
18.    சுரை இலை கைப்பிடி அளவு எடுத்து இரண்டு தம்ளர் நீர் சேர்த்து அரை தம்ளராக வற்றவைத்து சர்க்கரை கலந்து அருந்த காமாலை குணமாகும்
🐡🐡🐡🐡🐡🐡
19.    வில்வ இலைச் சாறு 30 மிலி எடுத்து மிளகுத் தூள், சர்க்கரை கலந்து பருக காமாலை குணமாகும்
🐡🐡🐡🐡🐡🐡
20.    வேம்பின் துளிர், முதிர்ந்த இலை இரண்டையும் பொடித்து இதற்கு அரை பங்கு ஒமம், உப்பு சேர்த்து, அரை தேகரண்டி உண்ண காமாலை குணமாகும்
🐡🐡🐡🐡🐡🐡
21.    நெல்லி வற்றல், மஞ்சள், புதினா சம அளவு பொடித்து அரை தேகரண்டி, நீரில் கலந்து அருந்த காமாலை குணமாகும்
🐡🐡🐡🐡🐡🐡
22.    15 மி.லி. கரிசலாங்கண்ணிச் சாறுடன், சர்க்கரை கலந்து பருக காமாலை குணமாகும்
🐡🐡🐡🐡🐡🐡
23.    ஒரு தேகரண்டி வெட்டிவேர்ப் பொடியில் அரை தம்ளர் நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து வடித்துப் பருக காமாலை குணமாகும்
🐡🐡🐡🐡🐡🐡
24.    சிற்றாமணக்கு இலையையும், கீழாநெல்லியையும் சமஅளவு எடுத்து அரைத்து மூன்று நாட்கள் காலையில், சிறு எலுமிச்சை அளவு உண்டு, பிறகு சிவதைப் பொடி அரை தேகரண்டி உண்ண காமாலை குணமாகும்
🐡🐡🐡🐡🐡🐡
25.    செங்கரும்பின் சாற்றை ஒரு தம்ளர் காலை மாலை அருந்த காமாலை குணமாகும்
🐡🐡🐡🐡🐡🐡
26.    சீரகத்தைக் கரிசாலைச் சாற்றில் ஊறவிட்டு பொடித்தப் பொடி நான்கு கிராம், சர்க்கரை இரண்டு கிராம், சுக்குப் பொடி இரண்டு கிராம் கலந்து அதில் ஒரு தேகரண்டி உண்ண காமாலை குணமாகும்
🐡🐡🐡🐡🐡🐡
27.    மிளகின் பழச்சாறு 15 மிலி எடுத்து மஞ்சள் பொடி கால் தேகரண்டி சேர்த்து அருந்த காமாலை குணமாகும்
🐡🐡🐡🐡🐡🐡
28.    அன்னாசிப் பழத்தை நன்கு பிழிந்து சாறு எடுத்து 30 மிலி அருந்த காமாலை குணமாகும்
🐡🐡🐡🐡🐡🐡
29.    நெருஞ்சில் இலைச்சாறு 30 மி.லி.யுடன் சர்க்கரை கலந்து பருக காமாலை குணமாகும்
🐡🐡🐡🐡🐡🐡
30.    பத்து கிராம் வேப்பம் பட்டை நசுக்கி, அதில் இரண்டு தம்ளர் நீர் விட்டு அரை தம்ளராக காய்ச்சி அருந்த காமாலை குணமாகும்
🐡🐡🐡🐡🐡🐡
31.    நெல்லிக்காய் வற்றல் 50 கிராம், சீரகம்50 கிராம் -பொடி செய்து ஒரு வாரம் காலை, மாலை சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை குணமாகும்
🐡🐡🐡🐡🐡🐡
பின்குறிப்பு மருத்துவர் ஆலோசனை பெற்றபின் பின்பற்றவும்
🐡🐡🐡🐡🐡🐡
🌷🌷🌷🌷🌷🌷
உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்
🦚🦚🦚🦚🦚🦚
உடலில் உள்ள 
  எல்லா உடல் நல குறைபாடுகளையும் 
 சரிசெய்ய 
 இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  
 ஆலோசனைகள் வழங்கபடும்
🌹🌹🌹🌹🌹🌹
நன்றி
வணக்கம்
 பெருசங்கர்

 🚍
 ஈரோடு  மாவட்டம் 
பவானி

(( செல் நம்பர்))
(( 6383487768))

(( வாட்ஸ் அப்))  (( 7598258480 ))
-----------------------------
🐡🐡🐡🐡🐡🐡
குரு வாழ்க குருவே துணை
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

No comments:

Post a Comment