Wednesday, August 12, 2020

ஷேர் ஆட்டோ

78. ஷேர் ஆட்டோ (சிசீ6) #ganeshamarkalam

எங்கூரில் அக்கம் பக்கம் போய்வர ஒண்ணுமில்ல. இப்படியேத்தே 15 வருசமா. அரசாங்கம் ஒண்ணும் செய்யக் காணம். ஆனா ரெண்டு ஷேர் ஆட்டோங்க; காலேல ஒண்ணு, மத்தியானத்துக்கு மேலே இன்னொண்ணு வரும். எங்கிட்டாச்சும் போணம், வியாபாரத்துக்கு இல்லை கடைத்தெருவுக்கு, மேலுக்கு முடியலைன்னு ஆஸ்பத்ரீக்கு, எல்லாத்துக்கும் இந்த ஷேர் ஆட்டோங்களை நம்பித்தே.

அதிக சனமில்லையாம்! ரெண்டு ட்ரிப்தான் அடிக்கான். யார் வூட்லேயாவது விளாவுக்குப் போராய்ங்க, கண்ணாலம் காட்சி, கோவிலுக்கு படையல்னா முழு ஆட்டோவும் அவிங்க வூட்டு விசேசத்துக்கு போயிடிம். வளக்கமா போய் வரவக பாடு திண்டாட்டந்தேன். எங்கிட்டும் போக வேண்டிய ஜோலி எனக்கு கிடையாது. தனிக்கட்ட. மத்தவக? ஆத்திரம் அவசரத்துக்கு கோடிவீட்டு குமார கூப்பிட்டு அவஞ்சைக்கிள்ல டபுள்ஸ். அவனும் இப்ப முடியாதுன்னு சண்டித்தனம் செய்வான். பாவம், கால் வலிக்குமில்ல? அதுலேயும் அந்த செங்கமலம் கூடையோட ஏறி உக்காருவா. வரப்ப கருவாடு கொண்டார, அவன் நாத்தம் பிடிக்காம மயங்கி வுளுந்திடிவான். ஒருக்கா கூடை கவிந்து கிடக்க, சைக்கிளச் சுத்தி மீனுங்க சிதறிப்போயி இவனை அவள் தன் மடீலே போட்டு விசிரிக்கிட்டிருக்க பாத்திருக்காய்ங்க. அப்பால ரைஸ்மில் ஓனரு டெம்போலெ எல்லாத்தையும் அள்ளிப் போட்டு ஊருக்கு வந்தாச்சி.

எங்கூரு அருவாடை. தனிக்கட்டைன்னு சொன்னமில்ல? வூட்டுக்காரி மகராசி போய்ச் சேர்ந்து 8 வருஷம் ஆவுது. எனக்கும் அடுத்தமாசம் 68. இருந்து என்னத்தை சாதிக்கரம்னு பட்ருச்சு. குளந்த குட்டி இல்லை. இருக்கர ஓட்டு வீடிம் அதில் இருக்கும் ஒரே ரூம்பும் என்னிதுன்னு சொல்லிக்கிடலாம். ரேசனில் போட்டத வாங்கி சமைச்சுகிடுதே. இந்த வயசிலும் அப்பப்ப வயலில் வேலை செஞ்சு என் சோத்துக்கு காசு கிடெச்சிடிம். எங்கூர் மாரியாத்தா எப்ப என்னை கூப்பிட்டுகிடிதோ? அதுக்குத்தே வெளிச்சம். செங்கமலத்தை சொல்லிபுட்டா கூட்டிட்டுப் போச்சு? என் 5ஆப்பு படிப்புக்கு ஒண்ணு மட்டும் தெலிவா தெரியும். கடைசீ வரைக்கும் யாரும் கூட வராட்டியிம் அந்த தெய்வத்தின் மேல் வச்ச நம்பிக்க துணை வரும்.

எங்கூரில் கூட்டிக் கழிச்சுப் பாத்தா 20 குடும்பங்க. ரெண்டு தெரு. மெயின்ரோட்லேந்து 8 மைல். இங்கிட்டிந்து அங்கே போக 40நிமிசம் நடக்கோணும். வயசானவங்களும் பொம்பிள பிள்ளங்களும் எப்படி? மினிபஸ் விடுவம்னு சொல்லி ஓட்டு கேட்டாக. போட்டு வச்சம். இன்னும் சின்னப் பசங்க சைக்கிள் டயரில்தான் பஸ் ஓட்டுதாக. ஆனா ஒண்ணு அத உருட்டிக்கிட்டே போரப்ப சிரமந் தெரியாது. டிக்கெட் வாங்க வேண்டாம். இதைத்தான் அன்னைக்கு சொல்லுதேன் சிரிக்காக. ஜோக் அடிக்குதேனாம். அப்படி ஒண்ணு இருக்குதா என்ன? ஊரின் சங்கடத்தை சொன்னா சிரிப்பு வருதாம்!

அன்னைக்கு மரக்காணம் பொயிட்டு திரும்ப வர ஷேர் ஆட்டோக்குத்தே நின்னிட்டிருக்கே. ரெம்ப நாளியா ஒண்ணுத்தையும் காணம். நான் நிக்கது இடம் முச்சந்தி. திண்டிவனம், பாண்டிச்சேரி, இங்கிட்டு சென்னைக்கு போக ரோட்டில் சந்திப்பு. இதுவரைக்கும் ஒரு மவராசன் சைக்கிளில் வச்சு கொண்டாந்து விட்டாரு. நான் ஒல்லியா இருந்ததால் சரியாப் போச்சு. இப்ப ஷேர் ஆட்டோ வரோணும், அதில் உக்கார இடம் கிடைக்கோணும். அப்பிரவு எங்கூர் போக 30 நிமிசம் ஆகிப்புடிம். இடமில்லைன்னாலும் ஒருகால உசக்க வச்சி வண்டியோட கூரைலே கயித்தை பிடிச்சிகிட்டா போயிட்டே இருக்கலாம். பளக்கமில்லை, வளீலே விளுந்துடுவீங்க. அன்னைக்கு அப்படித்தான் ஒரு பொம்பளை பாவம் நின்னுகிட்டே உள்ளே இருந்த சொந்தக்காரவுக கிட்டே வம்பளத்திட்டு ஒரு வளைவில் கை சரியாப் பிடிக்காம டபால்னு ரோட்டில் விழுந்திடிச்சு.

அடிகிடி ஒண்ணும் படல. குண்டும் குளியுமா இருந்த இடத்தில் வண்டி மொள்ளத்தான் போச்சு. விளுந்த வேகத்தில் கட்டியிருந்த சேலை இடுப்புக்கு மேல் உருண்டுகிட, உள்ளே ஒண்ணும் போடாம காத்தாட விட்ருக்கா எல்லாரும் பாத்துகிடுதாக. அதுக்குத்தே அம்புட்டு கோவம் வந்திச்சோ! ஷேர் ஆட்டோ டிரைவர் அம்மா அப்பரவுஅவன் பொஞ்சாதிய கெட்ட வார்த்தை சொல்லி வெசுப்புட்டு நடந்தே வதுகிடுதேனு சொல்லிப்பிடிச்சு. நாங்க வெரசா கிளம்ப ரென்ப தூரத்து வரைக்கும் இது நடந்துட்டே வந்ததை பாத்தம். கிராமத்துக் காரவக இந்த மாதிரி ஆனதை பெரிசா நினைக்கல. பாவம் பொம்பளப் பிள்ள அடிகிடி படாம தப்பிச்சிச்சுன்னு சந்தோசம்தே. இதே நகரமா இருந்துச்சுன்னா கையில் வச்சிருக்காகளே டெலிபோன் அதில் படம் பிடிச்சு நெட்டில் போட்டிருப்பாக. எல்லாருக்கும் இருப்பது தானே நாமளும் பாத்தம்னு நினைக்க மாட்டாக, காணாததை கண்டிட்டாப்புலே.

இன்னைக்கு எப்ப ஷேராட்டோ வரும் நாம எப்ப வூட்டுக்குப் போலாம்னு. கையில் சின்ன முடிப்பையில் 6 கத்திரிக்காய் வாங்கிக்கிட்டேன். அம்புட்டுதே. ஒரு வாரத்துக்கு சமைச்சுத் துண்ணலா. தூரக்க வண்டி வருது. கிட்டக்க வரவர அது பொடுத சத்தம் காதுக்கு இனிமயா. அப்பாடான்னு ஆய்ப் போச்சு. என்னப் பாத்ததிம் “ஒத்தை ஆளு அட்ஜெஸ்ட் செஞ்சுக் கிடுங்க!” எல்லாரண்டையும் ட்ரைவர் சொல்லுதா. என் சவாரிக்கு கிடைக்கும் காசு முக்கியம். நான் முக்கியமில்லைன்னு தெரியும். முன் சீட்டில் ட்ரைவர் கிட்டெ ரெண்டு பேர் இருக்காக. நடுச்சீட்டில் எதுரும் புதுருமா 8 பேர். சின்னப் பையனா இருந்தா அடக்கிக் கிடலாம். பின்னாடி வாரேன். அங்கே கந்தசாமியும் அவன் ரெண்டாம் தாரம் கனகாம்பரமும் இருக்க ஒரு இடம் காலியா இருக்கவே நகந்து இடம் கொடுக்காக.

கந்தன் எங்கூட ஸ்கூல் படிச்சவன். ஒரே நண்பன்னு வச்சுக்கிடலாம். நல்லவன். அவன் பக்கத்தில் கனகாம்பரம், அவன் ரெண்டாவது பொஞ்சாதி. என்ன? ரெண்டு சம்சாரமான்னு கேப்பீக. இல்ல. மொதல்ல கந்தன் கட்டிக்கிட்டது மல்லிகா. அவள் எம்பொஞ்சாதி செத்து ரெண்டு வருஷத்தில் மஞ்சக்காமால வந்து செத்துப் போனா. கனகாம்பரம் மல்லிகா தங்கை. மச்சினிச்சிய ரெண்டாம் தாரமா கட்டிக்கிட்டான். எங்கூரில் சகஜம். அவளும் நாதியில்லாம கிடக்க, வாள்வு கொடுத்தாப்புலே ஆச்சுது, இவனுக்கும் கடைசீ காலத்தில் துணையாச்சி. படிக்காதவக எல்லாத்துக்கும் காரணம் சொல்லிகிடுவாக. ரெண்டுபேரும் நான் ஏறப்ப இங்கிட்டும் அங்கிட்டும் தள்ளீன்னா உக்காந்துகிட்டு வந்தாக? எனக்காக இவன் நகந்து அவகிட்டே போனான். போனப்ப அவள் ஏதோ தீட்டு பட்டவன் பக்கத்தில் வந்துட்டாபுலே நெளிஞ்சு கிட்டாளே? ஆச்சர்யந்தே! என்ன விசயம்? இவனும் மூஞ்சியத் தொங்க வச்சுகிட்டு. நல்லாவேயில்லை. நண்பன் விசனப்பட்டா நமக்கு எப்படி ஆகும்?

கேட்டாச் சொல்லுவா. “பொஞ்சாதிக்கும் உனக்கும் நடூலெ பிர்ச்சனையா?” எப்படி கேக்க? சொல்லிபுட்டாலும் பூந்து நாம என்னத்தை செய்ய? பாப்பம்

நினச்சதுக்கு சரிபோல் எங்கூடவும் பெசலை. “நல்லா இருக்கியா”ன்னு கேக்க ஆமான்னு தலையாடிட்டான். அவளும் மின்னே என்னை பாத்தா “எப்படியிருக்கீக கொளுந்தனாரே”ம்பா. இன்னைக்கு அந்தப் பக்கம் முகத்தை திருப்பிகிட்டு. அருவாடைக்குப் போக சிறுவாடிகிட்டே இறங்கி நடக்கோணு. இந்த பிள்ள கனகாம்பரம் என்ன நினைச்சுதோ அசப்பூர் வந்துதுமே “அண்ணே வண்டிய நிருத்து”ன்னு கூவி இறங்கி அவளுக்கு மட்டும் காசைத் தந்துபுட்டு போயிடிச்சு. இவன் கந்தன் சும்மா உகாந்திட்டி. அசப்பூரில் கனகாம்பரத்து அத்தை வூடு இருக்குன்னு தெரியும். அப்ப அவ மட்டும்தான் அங்கே போகுதா, இவன் போலியா? அப்பரம் வந்து சேர்ந்து கிடுவாகளோ?

இப்ப பின்சீட்டில் இவனும் நானுந்தே. நண்பனின் தோளத் தொட்டுகிடுதேன். “என்ன ஒண்ணுனாலும் நீ எனக்கிருக்கே அதுபோல் உனக்கு ஒண்ணூன்னா நான் இருக்குதே” தொட்டதுக்கு அர்த்தம் அவனுக்கு புரிஞ்சிரிக்கும். தொங்கவிட்ருந்த கால் ரெண்டையி தூக்கி சப்பனமா வச்சுகிடுதா. இனிமேல் சவாரி ஏறாது. நல்ல வசதியா உக்காந்துகிடலாம். கேக்குதான் “எங்கே போயிட்டு வாரே?”. “மரக்காணந்தேன். பளய பாக்கி ஒண்ணு நிலுவையிலே. கிடெச்சா அடுத்த மாசத்து சிலவுக்காச்சுன்னு போயிருந்தேன். கடன் வாங்கினவக நான் வருவேன்னு தெரிஞ்சிருச்சுப் போல வெளியூர் போயிருக்காகன்னு அவன் பொண்ணு சொல்லீச்சு. வயசுப் பொண் தனியா வூட்டில் நானெப்படி அப்பா வரவரைக்கும் நிக்கேனு சொல்ல? வந்திட்டேன். நாட்டில் நாணயம் கெட்டுப் போச்சு கந்தா!”

“நீ ஏன் கடன் கொடுத்த சிவராசு? எத்தினி வாட்டி சொல்லுதே கடன் அன்பை முறிக்கும்”. “ஆனா அவுக கஸ்டத்துலே இருக்கப்போ உதவலீன்னாலும் அன்பு செத்துப் பொயிடுமேன்னு தந்தே”. “எம்புட்டு பாக்கி”. “500ரூ”. “நல்லாதாப் போச்சு பெரீய தொகையில்ல”. “எனக்கு பெரிசுதான் கந்தா. தனிக்கட்ட இவனுக்கு என்ன சிலவுன்னு ஊரில் பெசிக்கிடுதாக. 500ரூயில் ரெண்டு மாசம் இளுத்துப் பிடிச்சு காய் வாங்கிக்கிடுதே. அத விடு! என்ன விசயம் கனகாம்பரம் விசனமாப் போவுது? நீயும் அவளும் இறங்கப்ப ஒண்ணும் பெசிக்கிடலை?” சட்டுன்னு என்னைப் பாத்தவன் கண்ணில் பளபளப்பு. தான் அளப்போவதை எனக்கு காட்டக் கூடாதுன்னு முயற்சி செய்யுதா, முடியலை. ரெண்டு சொட்டு விழுந்திடுச்சு. துண்டில் துடைக்க “என்னிடம் சொல்லு. எதுவானாலும் பாரம் குறையிம்”.

“அவளுக்கு என்ன பிடிக்கலை சிவராசு!. ஆசையாத்தான் அக்கா இடத்தை நிரப்புதேன் என்னை கட்டிக்கிடுகன்னு சொலிட்டு வந்தா. ரெண்டு வருஷமா அக்கா இடத்த நிறப்பல, தனக்கின்னு ஒரு இடத்தையும் ஏற்படுத்திக்கல”. “என்ன பிர்சன? அவ வயசுப்பொண்ணு, உன்னை விட 12 வயசு சின்னது. அப்படி இப்படி இருக்க விரும்பிம். அவ ஆசைய கேட்டு செஞ்சுதரணும், செய்யலையா?” “செய்யாம என்ன சிவராசு? ஆனா போன 6 மாசமா கிட்டக்கயே வுடலை. புதுசு வாங்கிட்டு வந்தா கட்டாது. சொறு பண்ணி வச்சிட்டு எடுத்துத் துண்ணுக்கன்னு வாசல்ல போய் உக்காந்திடிம். என்னன்னு சொல்ல மாட்டேங்கிது. சொன்னாத்தானே புரிஞ்சிகிட்டு அவ மனசு கோணாம இருக்க?” இன்னும் சொல்லுதா

“இன்னைக்குப் பாரு! பிள்ளமேட்டுலே சந்தை. போயிட்டு வரலாம்னு கிளம்ப அவளும் பேசாம சேர்ந்துகிட்டா. அங்கே எதுநாச்சியும் வாங்கிக்கும்னு பாத்தா ஒண்ணும் செய்யல. சும்மா நின்னிகிட்டிருந்திட்டு பேசாம என்னொட திரும்பினவ வூட்டிக்கு நம்மோட வருவான்னு நினைக்கயிலே வளீலே இறங்கிப் போயிடிச்சி. இது எப்போ வரும், வருமான்னும் தெரியாம இப்படித்தான் பலநா களிச்சிருக்கே”. என்ன தோணிச்சோ, “கந்தா, விசனப் படாதே. நான் அதுகிட்டே பெசுதெ”.

ஆனா எனக்கு என்ன பெசப் போரம்னு தெரியலை. கனகாம்பரம் நல்ல புள்ள, இவனும் யோக்கியமான நண்பன். கெட்ட பளக்கமில்லை. காசு வச்சிருக்கா, கேட்டதை வாங்கித் தருவா. கொந்தநார் வேலை. இப்ப கொஞ்சம் டல்லுதே. இருந்தாலும் சிக்கனமா சேர்த்து வச்சி நல்லா கவனிச்சுக்கிடுவான் தெரியும். அந்த பிள்ள ஏன் இப்படி நடந்துகிடுது? வாள்கைக்கு என்ன தேவையோ எல்லாம் கொடுப்பான் என் நண்பன், அவன் மொதப் பொஞ்சாதிய எப்படிப் பாத்துகிட்டானு எனக்குத் தெரியும். மல்லிகா ஒருக்கா “அண்ணே, இவர்கிட்டச் சொல்லுங்க. எப்பப் பாத்தாலும் என்னையே சுத்தி வராரு, தேவைக்கதிகமா செலவு செய்யராரு, நாளைக்கு பிள்ள குட்டீன்னு வந்திச்சுன்னா கையில் காசு வேணிம்னு சொல்லி வைங்க”. இப்ப அவ தங்கை, இன்னும் சிருசு நோகும்படி எதுக்கும் ஏங்கும்படி வச்சுப்பானா என்ன? பெசித்தே பாக்கணும். நல்ல வேளையாப் பாத்து மடக்கிக் கேட்டா கொளுந்தனார்கிட்டே சொல்லாம மளுப்பீடுவாளா என்ன? சிறுவாடி வர இறங்கிக்கிடுதம். நடந்து அருவாடை வரப்ப சாயங்காலம் மணி 6.

10நா களிச்சு வருதே கனகாம்பரம். வரணுமேன்னு வந்தாப்புலே. கந்தசாமி “இன்னைக்கு திண்டிவனத்தில் மாடி வீடு கட்டராக நீயும் வரீயா?” கேட்டாப்பல. “நாளைக்கு சேர்ந்துகிடுதே, இன்னைக்கு உன் வாள்க பிர்ச்சனைக்கு வளி கிடைக்க ஒரு வேலை செய்யோணும்”. புரிஞ்சிகிட்டு “சரீ”ன்னான் நண்பன். 11 மணியிருக்கும் அவன் வீட்டுக்குப் போய் “கந்தா”ன்னு கூப்பிடுதேன். சித்தே புரவு மெதுவா வந்து கதவை தொறக்கா அவள். “நல்லா இருக்கீயா தங்கச்சி? கந்தன் இல்லையா?” “வேலைக்கு போயிருக்காக வாங்க, மோர் குடிச்சிட்டுப் போங்க”. கூப்பிடுதா.

தரையில் உக்காந்துகிடுதேன். ஏதோ பேசாமப் போமாட்டேன்னு புரிஞ்சிகிடிச்சு. மோரைக் கொடுத்திட்டு சொல்லுது “கொளுந்தனாரே! உங்கிட்டே முறையிடணும். கேட்டு நண்பருக்கு புத்தி சொல்வீங்களா?” “என்ன புள்ள?”

“உங்க நண்பர பிரியமாத்தே கண்ணாலம் கட்டிகிட்டே. தங்கமானவருதே. அக்காளும் இவர்மேல பாசமா இருந்திச்சி. மல்லிகான்னு உருகுவாரு. அப்பத்தா சொல்லும் புருசன் இப்படி அமையோணும்னு. ஆனா என்னக் கட்டிகிட்டு வந்ததுலேந்து எது செஞ்சாலும் எது சொல்ரதுன்னாலும் எப்பப்பாரு அக்காவைப் பத்தி அது அப்படி இருந்திச்சு இப்படி நடந்துகிச்சு, இப்படி சமயத்தில் அது இருந்திச்சுன்னா இப்படி செய்யும்னு புலம்பிட்டே. அக்கா இடத்தை நிரப்பத்தான் வந்தேன். நானும் பொம்பளதானே, இவர் என்னை கனகாம்பரமாத்தான் பாக்கோணும். அக்காவ எனக்கும் பிடிக்கும், இப்ப அது உசிரொட இல்லை. என்கிட்ட அவ பேரச் சொல்லிட்டே இருந்தா வாள்க எப்படி இனிக்கி?”

பிர்ச்சனை விளங்கிச்சி.

No comments:

Post a Comment